

























மத்திய சுவிற்சர்லாந்திலுள்ள முக்கிய புகையிரதச் சந்தி அமைந்த இடம் ஆர்த்கோல்டா(Arth-Goldau). இம் மாவட்டத்தின் பெயர் சுவிற்ச்(Schwyz). நான் இப்போது வாழும் இடத்தின் பெயர் ஆர்த்(Arth)! இந்த இடத்தைப் பிடித்திருந்தபடியால் - நானே கேட்டு வந்து வாழுகின்றேன். எதிர்வரும் 18-12-2009 அன்று நான் வந்து 2 வருடங்கள்! ஒருபுறம் ஏரி! இரு பக்கங்களிலும் மலைகள்!
ஏரியிலிருக்கும் விதவிதமான பறவைகள்தான் நான் அதிகம் நேசிக்கும் தற்போதைய நண்பர்கள் - ஒரு நாளைக்கு ஒருவேளையாவது அவர்களுடன் என் நேரத்தின் சிறுபகுதியை செலவிடுவது வழக்கம்.
தற்போது பனிக்காலம் தொடங்குவதால் பகல் பொழுது எமக்குக் குறைவு!
அதிகாலையில் 5.00 மணியளவில் எழுந்து 5.48 பேருந்து 6.11 புகையிரதம் மீண்டும் 6.29 பேருந்து பின்னர் 6.35க்கு 10 நிமிட நேர நடை என்று ஆரம்பித்து 7.00 - 4.15 வரை தற்போதைய வேலை போய்விடும். பின்னர் மீண்டும் 4.27க்கு பேருந்து 4.58 புகையிரதம் 5.15 பேருந்து என எனது அறைக்குத் திரும்ப 5.25 ஆகிவிடும். புறப்படும்போதும் வந்து சேரும்போதும் இருட்டிவிடுவதால் அவர்களைச் சந்திக்க முடியாது.
சனி - ஞாயிறு காலங்களில்தான் இப்போது பேச்சுவார்த்தை. நான் ஏரிக்கரைப் பக்கம் போனதும் தாமாகவே வந்துவிடுவார்கள்! எஞ்சிய உணவுகளையும் - அதில்லாத சமயங்களில் அரை இறாத்தல் பாண் அவர்களுக்காக எப்போதும் கொண்டு செல்வேன்!
4 comments:
வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் பதிவில் அதிகம் எதிர்பார்ப்பது இது போன்ற விசயங்களைத்தான். நான் போய் வாழ முடியாது. ஆனால் நீங்கள் உணர்த்திய படங்களும்விசயங்களும் நான் வாழ்ந்தது போல் மகிழ்ச்சி அளிக்கிறது.
இரண்டு வருடங்கள் முடிந்த காரணத்தால் விரைவில் உள்ளுர் மொழி உங்கள் மொழியாக மாற்றம் பெற வேண்டும்.
கவனமாய் முன்னேறுங்கள்.
இழப்புகள் அதிகம் பெற்றவர் நீங்கள்.
வாழ்க்கையின் வசந்தம் என்பது நீங்கள் காட்டிய படங்கள் போல் எதிர்கால உங்கள் தலைமுறைக்கு பாடமாக இருக்க வேண்டும்.
ஒரு முக்கியமான விடயம். உங்கள், என்னைப்போன்ற இயற்கையின் காதலர்கள், அந்த இயற்கையுடனும், பறவை, மிருக இனங்களுடனும் இலகித்துவிடுவோம், இயல்பானதே..
ஆனால் அவற்றை விட்டு ஒரு பிரிவு வந்துவிட்டால் அதை தாங்கிக்கொள்ளமுடியாது நண்பரே..மனிதர்களின் பரிவைவிட கொடியது அந்த பிரிவுத்துயர். நான் அனுபவித்திருக்கின்றேன்.
அழகான படங்கள் பகிர்வுக்கு நன்றிகள்
தொலைபேசியில் கூறும்போதே படங்களை எதிர்பார்த்தேன். நன்றி.
Post a Comment