அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Sunday, November 15, 2009

கார்த்திகை மாதம் வந்தாலே ஐயப்ப பக்தர்கள் உன்னோடு! நாளை கார்த்திகை மாதப்பிறப்பு!


கார்த்திகை பிறந்துவிட்டாலே எமக்கெல்லாம் ஒரே கொண்டாட்டம் - 2 மாதங்களுக்கு எந்தவிதமான சொகுசுமின்றி - துறவிபோல பற்றற்று வாழும் பாக்கியம் கிடைக்கும்! அதுவே நீயாகிறாய் - தத்வமஸி என்ற மகா வாக்கியம்!

எல்லா உயிர்களிடத்திலும் இறைவன் இருக்கிறான்! - அனைவரும் சமம் என்ற மனோபாவம் கிடைக்கும்.
பல்லாண்டு காலமாக 18 படிப்பாடல் பாடும்போது மேலதிகமாக அடியேன்

நாட்டில் அமைதி நிலைக்க வேண்டும் சரணம் பொன் ஐயப்பா
ஸ்வாமி பொன் ஐயப்பா
ஸ்வாமி இல்லாதொரு சரணம் பொன் ஐயப்பா!

லோக ஷேமம் செழிக்க வேண்டும் சரணம் பொன் ஐயப்பா
ஸ்வாமி பொன் ஐயப்பா
ஸ்வாமி இல்லாதொரு சரணம் பொன் ஐயப்பா!

தர்மம் எங்கும் ஓங்க வேண்டும் சரணம் பொன் ஐயப்பா
ஸ்வாமி பொன் ஐயப்பா
ஸ்வாமி இல்லாதொரு சரணம் பொன் ஐயப்பா!

மங்களங்கள் தந்திடுவாய் சரணம் பொன் ஐயப்பா
ஸ்வாமி பொன் ஐயப்பா
ஸ்வாமி இல்லாதொரு சரணம் பொன் ஐயப்பா!

மனநிறைவைத் தரவேண்டும் சரணம் பொன் ஐயப்பா
ஸ்வாமி பொன் ஐயப்பா
ஸ்வாமி இல்லாதொரு சரணம் பொன் ஐயப்பா! என்று பாடுவதுண்டு!

கடந்த வருடத்திலிருந்து முதல்வரி பாடுவதை நிறுத்திவிட்டேன்!

இலங்கையிலும் - இந்தியாவிலும் - சுவிசிலும் எடுக்கப்பட்ட சில மனதுக்கு சாந்தியான புகைப்படங்கள்.































1 comment:

பித்தனின் வாக்கு said...

சுவாமி சரணம், நானும் கார்த்திகைக்காக காத்து இருக்கும் ஒரு சராசரி அய்யப்ப பக்தன். நாளை செவ்வாய் மற்றும் பாட்டிமை ஆதலால் புதன் அன்று மாலையிடுகின்றேன். பதிணேராம் வருட யாத்திரைக்காய் மாலையிடுகின்றேன். என் வாழ்வில் அந்த அய்யன், மணிகண்டன் செய்த அற்புதங்கள் பல. நாளை முதல் என் வலையில் தொடர் பதிவாய் எழுத உள்ளேன். சமயம் கிடைக்கும்போது படியுங்கள். நன்றி.