அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Friday, November 27, 2009

அப்பாவி மக்களின் - நியாயமான - நீதியான வாழ்வுக்காகப் போராடி உயிர்நீத்த தியாகிகளுக்கு எமது நினைவஞ்சலிகள்!

ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா!
ஆபத்தில் காத்தவரே சரணம் ஐயப்பா!

ஆயதங்களையும் ஆயுதம் எடுத்தவர்களையும் ஒருபோதும் விரும்பாதவன் நான்! இந்தக் கணம் வரை! ஆனால் அப்பாவி மக்களின் - நியாயமான - நீதியான வாழ்வுக்காகப் போராடி உயிர்நீத்த தியாகிகளுக்கு மனிதாபிமான அடிப்படையில் அஞ்சலிகளைத் தெரிவிக்கவேண்டியவனாயிருக்கின்றேன். எனது பல பாடசாலை நண்பர்கள் சகோதரப் படுகொலைகளில் தமது உயிர்களை பலிகொடுத்துள்ளார்கள்! என் ஊரவர்கள் - உறவினர்கள் என பட்டியல் போடலாம்!

நியாயமான வழிகாட்டலும் - நீதியான போராட்டமும் எம்மிடத்தில் இருக்கிறதா
என்று ஒரு பட்டி மன்றம் வைத்தால் விடை நியாயமற்றது என்றே வரும்!

இயக்கங்களில் சேர்ந்தோர் -
தாம் நம்பிய - தறிகெட்ட தலைவர்களுக்காக -
சரியோ தவறோ என பகுத்தறியாமல் -
தம்முயிரை நாட்டுக்காக ஈந்தனர் -
எதிரியென தம் தலைவர்களால்
நீட்டப்பட்ட கரங்களை நோக்கி யுத்தம் புரிந்தனர் -
வீர மரணம் அடைந்தனர் -

இவர்களுக்குத் தெரியாது
எதிரியென சுட்டிக்காட்டியவர்களுடன்
பின்னர் உறவு கொண்டாடுவார்கள் என்று!

மா என்றால்
பெரிய -
அளவிட முடியாத -
அசைக்க முடியாத
என்ற பொருள்பட கருத்துண்டு!

மாவீரன்!
மாமனிதர்!
இந்தப் பட்டங்களை தம் வேட்டைப்பலிக்கு இரையானவர்களை (கொன்றபின்னர் அல்லது இறந்தபின்) கௌவரப் படுத்தும் மனித நேயமற்ற ஒரு அமைப்பின் ஏகோபித்த தலைவர் இன்று என்ன ஆனார்?
நாமெல்லாரும் மாமடையர் ஆனோம்!
வருவாரா? வரமாட்டாரா? என்ற ஆவலோடு
இந்த முட்டாள் தொண்டர்கள் - உறுப்பினர்கள்
காத்துக்கொண்டு இருக்கிறார்கள்!

பொங்கு தமிழ் பொங்கு தமிழ்
என ஈழம் முழுவதும் கொண்டாடினோம்!
ஏன் உலகெங்கும் ஆர்ப்பரித்தோம்!

பெரும்பானையையும் தூக்கிக்கொண்டு ஓடினோம்!
அலைகடலென திரண்டு அடித்தொண்டையால் கத்தினோம்!
இன்று வீட்டில் பொங்கி அரசி சமைக்க பானையும் இல்லை!
வாய்விட்டு எம் சோகத்தை தெரிவிக்க சக்தியற்ற நிலையில் முடங்கிக் கிடக்கிறோம்!
மாவீரர் நாள் நடத்திய ஆனையிறவும் கிளிநொச்சியும் சுடுகாடாய் -
அமைதியாக ஆரவாரம் ஏதுமின்றி இன்று கிடக்கிறது!

நாடுகேட்டுப் போராடும் நாம் மீண்டவர்களுக்காக
எழுப்பிய நினைவிடங்களும் அழிக்கப்பட்டன!
நியாயமாகப் பார்த்தால்
நாமே நம்மவரின் நினைவுகளையும் அழித்தது ஞாபகத்திற்கு வரலாம்!

பிறப்புண்டானால் இறப்புமுண்டு!
வெற்றியிருந்தால் தோல்வியுமுண்டு!

எம்மனம்
இந்த இருநிலை விவாதத்தை ஏற்க மறுக்கும்!
நாட்டைவிட்டு வெளியேறியோர் புத்திசாலிகள்!
நாட்டுக்குள்ளே இருந்து
நடக்கும் அநீதிகளைக் கண்டும் காணாததுபோல
நடிக்கும் புத்திசாலிகளை என் சொல்வேன்!

ஆண்டவரே! தமிழர்களை நீர்தான் காப்பாற்றும்!
என அன்று சொன்ன தந்தை செல்வாவின் வரிகள் தான் நினைவுக்கு வருகின்றன!

ஒருசிலர் நினைப்பதுபோல
ஏகனான எம் கடவுளான
(நான் சத்தியமாக ஒரு மனிதனாகவே
கணக்கெடுக்கவில்லை)

மரமண்டைக் கூட்டமொன்றின் தலைவரான
பிரபாகரன் வந்தாலும் சரி
பொட்டம்மான் வந்தாலும் சரி
போக்கற்ற மக்களுக்கு வழி சொல்ல
இந்த மாயமானவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது!
அங்கு நம் நாட்டில் இதெல்லாம் எடுபடாது!
மக்கள்முன் சென்றால் செருப்படிதான் கிடைக்கும்!
இங்குள்ள புலம்(ன்)பெயர்ந்த முட்டாள்களை
நினைக்கையிலே தலையை எங்காவது கொண்டுபோய்
முட்டலாம் போல இருக்கு!

கடவுளே! நல்ல புத்தியையும் -
ஒன்றுபடும் மனதையும்
இந்த மக்களுக்கு இவ்வளவு அழிவுகளுக்குப்
பின்பாவது கொடுத்து - நல்ல வழி காட்டப்பா!

ஐயப்பனுக்குப் பாடும் பாடல்கள் இரண்டில் வரும் சிலவரிகளை இங்கு சுட்டிக்காட்டுவது பொருத்தம் என நினைக்கிறேன்!

ஐயா சாமி மன்னிக்கணும் ஐயப்பசாமி மன்னிக்கணும்
கண்ணைத் திறந்து சுவாமியே காணிக்கையை ஏத்துக்கணும்!

மன்னிக்க மாட்டாயா ஐயப்பா மன்னிக்க மாட்டாயா?
மணிகண்ட சுவாமிகளே எங்களை மன்னிக்க மாட்டாயா?

சாமியெண்ட ஆசாமி செய்த பிழையை மன்னிக்கணும்!
குருநாதன் சொல் மறந்து நடந்த பிழையை மன்னிக்கணும்!
விரதவிதியை மறந்து நடந்து வழியை நீங்க மன்னிக்கணும்!
குறையும் பகையும் இருக்கும் மனசை புண்ணியவானே மன்னிக்கணும்!

விளையாட்டுப் பிள்ளைகளை ஐயனே நீ மாற்ற மாட்டாயா?
அறிந்தும் அறியாமலும் தெரிந்தும் தெரியாமலும் செய்த பிழை அத்தனையும் நீங்க பொறுக்கணும்!

கவனிக்க மாட்டாயா ஐயனே கவனிக்க மாட்டாயா?
கால்பிடித்துக் கதறுகிறோம் தெய்வமே பிழை பொறுக்க மாட்டாயா?
அறிந்தும் அறியாமலும் தெரிந்தும் தெரியாமலும் செய்த பிழை அத்தனையும் பொறுத்துக் காக்கணும்!

----

உன்னிடம் என்னிடம் ஓடும் ரத்தம் எல்லாம் ஒரு நிறம் தான்
இதைப் பார்வதி மகனும் பாத்திமா மகனும் காட்டிய இடம் இதுதான்!

மனிதனை தனிதன் வணங்கிட வேண்டும் செய்தவன் மணிகண்டன்தான்

அந்த அரபிக் கடலும் பம்பா நதியும் நீரால் ஒரு நிறம்தான் மனிதர்கள் ஒரு குலம் தான்! மனிதர்கள் ஒரு குலம் தான்!

1 comment:

ஜோதிஜி said...

உங்கள் வலியினால் உருவான கருத்துக்கள் என்றாலும் இந்த முறை மிகத் தெளிவாக நேர்த்தியாக படைபாக்கம் செய்துள்ளீர்கள்.