Monday, November 23, 2009
நமக்குத் தெரியாமல் எதுவும் நடக்காது! நடக்கவும் கூடாது! நாம் தான் எல்லாம்!
தொடங்கீட்டாங்கைய்யா! தொடங்கீட்டாங்க!
பேனையெடுத்தவங்க - ரைப் பண்ணுறவங்க - அதுதான் நம்ம ஊடகக்காரருங்க!உதாரணத்துக்கு அவங்க மட்டுமல்ல - பதிவர்களும்தான்! இதில் ஒரு சிறிய வேடிக்கை தம்மைத் தாமே பிரபலப் பதிவர் என தம்பட்டம் அடிப்பவர்கள் சிலரும்(இலங்கையில் அல்ல!) இருப்பதை குறிப்பிட வேண்டும்.
நமக்குத் தெரியாமல் எதுவும் நடக்காது! நடக்கவும் கூடாது!நாம் தான் எல்லாம் என்ற கிறுக்குப் பிடித்த ஊடகக்காரர்கள் குய்யோ முறையோ என்று குளறத் தொடங்கிவிட்டார்கள்!
உதாரணத்துக்கு கொஞ்ச நாளைக்கு முதல்ல இந்தப் பிரச்சனை இருக்கிறம் சஞ்சிகையின் சந்திப்பில நடந்திச்சு! இப்ப இங்க அரசியலில நடக்குது! யாரைக் குத்தம் சொல்லுறதெண்டு தெரியல!
அப்பாவிப் பொது மக்களைக் காக்க வேண்டிய அரசியல் தலைவர்களும் சமூக நலனில் அக்கறை கொண்ட பொது நிறுவனங்களும் ஏன் நியாயமாகச் சொல்லப் போனால் அரச நிர்வாகத்தினரும் தமது பணிகளை மன நிறைவோடு - நியாயமாகச் செய்கின்றார்களா?
ஆனால் செய்திகளைப் பிரசுரிக்கும் அல்லது வெளியிடும் ஊடகங்கள் அனைத்தும் தமது ஊடக தர்மத்தை பின்பற்றுகிறார்களா என்பதே எனது கேள்வி!
எனது பதிவில் பல தடவை இதுபற்றிக் குறிப்பிட்டிருக்கிறேன்!
திரும்பவும் அதை நினைவு படுத்துவது இன்றைய காலத்தின் கட்டாயமாகிறது!
ஒரு நல்ல பத்திரிகையாளனின் பணி ஆய்வில் ஈடுபடுவதல்ல. அதைச் செய்ய நிறையப் பேர் இருக்கிறார்கள். பத்திரிகையாளனின் பணி தான் மிக அருகே நின்று பார்த்தவற்றைப் பதிவுசெய்து வைப்பதே! பத்திரிகையாளனுக்குக் கிடைக்கும் அந்த அருமையான சந்தர்ப்பம் ஆய்வாளர்களுக்குக் கிடைப்பதில்லை.
இதை தமது தந்தை செல்வா என்ற ஓர் அரசியல் வாழ்க்கைச் சரிதையை எழுதிய மூத்த பத்திரிகையாளர் மதிப்புக்குரிய திரு. ரி. சபாரத்தினம் ஐயா அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்.
இன்றைக்கு ஈரஅனலில்(www.eeraanal.org/ வெளிவந்த செய்தியைப் பார்த்ததும் இதை எழுத வேண்டும் போல இருந்தது! அருமையாக தனது செய்தியில் குறிப்பிட்ட விடயங்கள் நிதானமாக சிந்திக்க வேண்டியவையே!(அப்படியே செய்தியை இணைத்துள்ளேன்! எனக்குப் பிடித்த அவரது எழுத்துக்களை நிறம்தீட்டியுள்ளேன்!)
சுவிற்ஸர்லாந்தின் ஷமஸ்டிக்குடியரசின் வெளிவிவகார
அமைச்சின் தலமையில் ஒன்றிணைக்கப்பட்ட இலங்கை
சிறுபான்மை கட்சி பிரமுகர்களின் பிரத்தியேகக் கூட்டம்
முக்கியமாக இக்கூட்டம் பற்றி „ஈரனல்“ எதையும் எழுதுவதாக இருக்கவில்லை. ஆனால் பல புலம் பெயர் ஊடகங்கள் பிழையான தகவல்களை மேற்கொண்டுவருவதாலும், கடந்தகாலத்தில் தலைவர் பிரபாகரன் இறக்கவில்லை என்ற மாயவலையில் இன்றும் பலர் சிக்கியுள்ள அப்பாவித் தமிழர்களை போல் நாளை எம்மினம் மேலும் பலதுன்பங்களுக்குள் தள்ளப்படக் கூடாதுஎன்ற நோக்கத்தில் மட்டும் இங்கு இவைகளை தொகுத்துவழங்கும் தமிழ் ஏடு ஆசிரியர்.
சுவிற்ஸர்லாந்தின் றைன்நதி ஒரத்தில் உள்ள உல்லாச விடுதியில் கடந்த மூன்று நாட்களாக இலங்கை சிறுபான்மைகள் ஒன்று கூடல் ஒன்று மிகவும் காத்திரமாமாகவே நடந்தது. இது சுவிற்ஸர்லாந்தின் வெளிவிவகார அமைச்சின் தலமையில் ஒழுங்கு செய்யப்பட்ட திட்டமாக இருந்த போதிலும் மற்றும் ஒருசிலநாடுகளின் உதவியோடு நடந்து இருக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் எமக்கு இல்லை. எனினும் இது ஒரு பரமசிதம்பர இரகசியக் கூட்டம்!
அங்கு எடுக்கப்பட்ட முடிவுகள் சிறுபான்மைக்கு சாதகமாக அமையவில்லை! இது பல ஏகாதிபத்திய மேலைய நாடுகளின் சூழ்ச்சி! புலிகளினால் மறைமுகமாக எடுத்துவரும் ஒரு கூட்டம்! மகிந்த அரசுக்கு எதிரான கூட்டம்! என்று பல புலம்பெயர் நாடுகளின் ஊடகங்கள் சித்தரித்தவருவது மனவேதனைக் குரியவிடையம். எனினும் ஊடகங்கள் அங்கு அனுமதிக்கப்படவில்லை, என்பது உண்மை தான். ஆனால், அத்தினங்களில் வந்த சிறுபான்மை பிரதிகளின் ஒருசில ஆதரவாளர்கள் அந்த அழகான விடுதியில் அநாகரீகமாக நடந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.
இதேசமயம் அங்கு வந்த பிரதிநிதிகளை யாரும் பார்க்கக்கூடாது என்ற எந்த ஒரு விதிமுறை களும் யாருக்கும், யாரும் வழங்கவில்லை!!! மேலும் அவர்களோடு தொடர்வுகளை அமைத்துக் கொள்ளும் முறையில் அங்கு தொலைபேசித்தொடர்புகள் துண்டிக்கப்படவில்லை.
இந்த நிலையில் எமது ஊடகசுதந்திரம் அங்கு எப்படி தடையாக இருந்தது??? என்ற கேள்விகள் ஐனறஞ்சித ஊடகங்களிடம் இருந்து எழுகின்றது.
சுவிற்ஸர்லாந்தின் ஷமஸ்டிக் குடியரசின் வெளிவிவகார அமைச் சின் தலமையில் ஒன்றிணைக் கப்பட்ட இலங்கை சிறுபான்மை கட்சிகள், நீண்ட இடைவெளிக்குப் பின் சிலதினங்கள் ஒரே மேசையில் தமது மனைதிறந்து கதைக்கும் வாய்ப்பைபும்! அவர்கள் மத்தியில் இருந்த „துரதிஷ்டவசமாக வளர்ந்த கசப்பான எண்ணங்கள்;“ மறைவதற்கான ஒருசந்தர்ப்பம் கிடைத்ததே சிறுபான்மை மக்களுக்கு கிடைத்த பெரும் வெற்றியாக அமைந்தது.
மூன்று நாள் சந்திப்பில் எந்த ஒரு அமர்வும்வெற்றியை அளித்து விடாது! அதுவும் இலங்கை சிறுபான் மைக் களுக்கு இடையில் இருக்கும் மந்தமான தொலை நோக்குதன்மை! எமது தலமைகளில் யுத்தி யற்ற அரசியல் நிலைகள்! மக்களை அடகு வைத்து நடத்தும் அரசியல்! தொழிளாலர்களை விற்று வாங்கும் அரசியல்! முடியாத ஒருவிடையத்திற்கு முடிச்சுப் போட்டு நகர்த்தும் அரசியல் நகர்வுகள்! இதனை விட பேரம்பேசி விட்டுக் கொடுக்க முடியாத முரண்பாடுகள்!!! இவைகளை யுத்தியாக வென்று எமது சிறுபான்மை பிரதிகளை ஒன்று இணைப்பது என்றால் அது சுலபமான விடையம் அல்ல. ஆனால் இந்த முதல் அமர்வு எந்த அசம்பாவங்களும் இன்றி அமைதியான முறையில் வெற்றிகரமாக நடந்தது.
சுவிற்ஸர்லாந்தின் ஷமஸ்டிக்குடியரசின் வெளிவிவகார அமைச்சின் தலமையில் ஒன்றிணைக் கப்பட்ட இலங்கை சிறுபான்மை கட்சிகள், ஆரம்ப நாளான வியாழக்கிழமை கூட்டத்தில் தமிழ்க் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிறேமச்சந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ்க்கூட்டமைப்பின் கல்முனை மாநகரசபை எதிர்க்கட்சித் தலைவர் ஹென்றி மகேந்திரன், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி, ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, புளொட் தலைவர் த.சித்தார்த்தன், ஈ.பி.ஆர்.எல்.எவ் (பத்மநாபா) பொதுச்செயலர் தி.சிறீதரன், கிழக்கு முதல்வர் சி.சந்திரகாந்தன், ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோகணேசன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலர் ஹசன் அலி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச் செயலர் ஆறுமுகம் தொண்டமான், அமைச்சர் ரிசாத் பதியுதீன், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரசைச் சேர்ந்த கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் உள்ளிட்ட சகல கட்சிகளின் பிரதிநிதிகளும் மற்றும் ஒருசில முக்கியமான பிரமுகர்களும், தமிழ் பிரியர்களும், ஆர்வாளர்களும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
சுவிற்ஸர்லாந்தின் ஷமஸ்டிக்குடியரசின் வெளிவிவகார அமைச்சின் தலமையில் ஒன்றிணைக் கப்பட்ட இலங்கை சிறுபான்மை கட்சிகள் கூட்டம் புலிகளின் ஏற்பாட்டர்களால் நடத்தப் படுகின்றது என்ற ஒருவந்தியை முடுக்கிவிட்டு இக்கூட்டத்திற்கு சென்ற பிரமுகர்களை தடுக்க பலர் எத்தனித்த போதிலும் இது வெற்றிகரமாக அமைந்தது. இன்று இலங்கை மகிந்த அரசு வடக்கில் மேற்கொண்டு செல்லும் அபிவிருத்திகளுக்கு பலவழிகளில் வெளிநாட்டு அமைப்புக் கள் உதவிகள் செய்து வருகின்றார்கள். முக்கியமாக வடக்கில் அனேக அபிவிருத்திகளும் புனரமை;புக்கான வீடுகளும் வெளிநாட்டு அமைப்புக்களால் அமைத்து கொடுக்கப்படுகின்றது அதனை வழங்கும் திட்டம் மட்டும் ஒருசில அதிகாரிகளால் வழங்கப்படுகின்றது.
சிறுபான்மையின் அபிவிருத்திகளுக்கு பொருளாதார அமைப்புக்கள் முன்னெடுக்கும் இவ்வேளையில் ஆயுதக்கலாச்சாரம் அழிக்கப்பட்டவிட்டது! என்றாலும், மகிந்தரசில் இருக்கும் ஒருசில துரதிஷ்டவாதிகளால் கையாளபடும் அரசியல் யுத்திகள், மேலும் தமிழர்களை அழிவுக்குள் தள்ளிவிடும என்ற ஐயம் வடக்கில் எழுந்துள்ளது. இதனை போக்க மனிதயுரிமை மையம் அதிகவனம் எடுக்கவேண்டும். என்ற, முடுக்கள் மக்கள் மத்தியில் மறைமுகமாக அதிகரித்து வருகின்றது. அங்கு மீண்டும் துர்பாக்கிய நிலையாகவே காணப்படுகின்றது என்று சர்வதேசம் ஒருசில புகார்களை வெளிக்கொண்டு வருகின்றது.
இன்று பொருளாதாரத்தை முன்வைக்க வேண்டிய கட்டாயத்தில் இலங்கை அரசு பணிக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் துர்ப்பாக்கியமான செயல்கள் வடக்கில் உடனடியாக நிறுத்தத்தவறினால் மேலும் மகிந்த அரசுக்கு நெருக்கடிகளை ஏற்படுத்தும் நிலை உருவாகும்.
பலதரப்பட்ட சிறுபான்மைத் தலைவர்கள் ஒன்றிணைந்து தமது இதயசுத்தியோடு பல விடையங்களை மக்களுக்காக மனம் விட்டு கதைத்து, சேர்ந்து செயல்பட முன்வந்த முதல் கூட்டம் என்ற வகையில் இதனை சின்னாபின்னமாக்க எண்ணாது பொறுத்திருந்து அவர்களின் நடவடிக்கைகளை வரவேற்று, நாம் எல்லோரும் தெரிந்தும் தெரியாது விட்டபிழைகளை மன்னித்து “மனிதர்களாக“ ஒன்றிணைந்து மீண்டும் ஒரு ஆரோக்கிய அரசியலையும் வருங்காலத்து சமூகத்தையும் கட்டிக்காக்க ஊடகங்கள் தான் முன்வரவேண்டும். இதன்றி “செத்த மாட்டின் பல்லைப் பிடித்து பதம் பார்க்கும்“ ஊடகங்களின் கீழ்தரமான செயலை, நான் வலுமையாகக் கண்டிக்கின்றேன்.
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
சுவிஸ் கலந்ரையாடலும் ஊடகங்களும்
என்னுடைய பார்வை
http://eksaar.blogspot.com/2009/11/blog-post_23.html
தன் பதிவுகள் திருடப்படுவதாக ஒப்பாரி வைக்கும் ஒரு இலங்கைப்பதிவர் அடிக்கடி தன்னை பிரபல பதிவராக வர்ணித்துக்கொள்கிறார்.
//Anonymous said...
தன் பதிவுகள் திருடப்படுவதாக ஒப்பாரி வைக்கும் ஒரு இலங்கைப்பதிவர் அடிக்கடி தன்னை பிரபல பதிவராக வர்ணித்துக்கொள்கிறார்.//
இன்று இலங்கையிலே பதிவுத்திருட்டுப் பற்றி அதிகமாகப் பேசுவது நான்தான் வேறு யாருமல்ல. உண்மையாகவே என் பதிவுகள் உடனுக்குடன் திருடப்பட்டு வேறு வலைப்பதிவிலே போடப்படுகின்றன. இது தொடர்பாக நான் எனது வலைப்பதிவிலே பல தடவைகள் குறிப்பிட்டு இருக்கின்றேன்.
திருடி பதிவிடுபவரின் வலைப்பதிவு முகவரியை நான் எனது பதிவுகளில் நான் குறிப்பிடவில்லை. திருடுபவர் நாகரிகமில்லாமல் திருடுகின்றார் நானும் நாகரிகம் இல்லாமல் நடந்து கொள்வதை விரும்பவில்லை.
ஆனாலும் அந்த வலைப்பதிவின் முகவரியை பல நண்பர்களுக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப் படுத்தி இருக்கிறேன்.
நான் ஒருபோதும் என்னை பிரபல பதிவர் என்று சொன்னதில்லை. சொல்லவேண்டிய அவசியமுமில்லை. நான் எங்கே என்னை பிரபல பதிவராக குறிப்பிட்டு இருக்கிறேன் என்று சுட்டிக்காட்டி இருக்கலாமே குறிப்பிட்ட நபர். உண்மை தகவல்களை சொல்கிறிர்கள் என்றால் உங்கள் பெயரில் வந்து சொல்லலாம்தானே. நீங்கள் யார் என்பதும் எனக்கு தெரியும்.
எனது பதிவுகளை திருடி பதிவிடும் பதிவின் முகவரி இதோ..
//உதாரணத்துக்கு கொஞ்ச நாளைக்கு முதல்ல இந்தப் பிரச்சனை இருக்கிறம் சஞ்சிகையின் சந்திப்பில நடந்திச்சு! //
எனக்குத் தெரிந்தவரை இருக்கிறம் சம்பந்தமாக பதிவர்கள் யாரும் தம்மைத் தாமே பிரபலப்படுத்திக் கொள்ள முயலவில்லை.
பதிவர்கள் மீதான தனிப்பட்ட தாக்குதல் ஆரம்பித்த பின்னர் தான் நானும் யோ வொய்ஸ் ம் சென்று பதிலளித்தோம்.
பதிவர்கள் என்று குறிப்பிடுவது வருந்தத்தக்கது.
(இங்கு பதிவர்கள் என்று கூறப்பட்டது நானும், யோ வொய்ஸ் ம், இன்னுமொருவரும் தான்.... அங்கே சம்பந்தப்பட்டவர்கள் நாம் தான்.)
ஒரு சாதாரண சந்திப்புப் பற்றிய அவதானத்திலே இவ்வளவு குழப்பங்கள் இருக்கும்போது உலகம் முழுவதுமுள்ள செய்திகளை திரட்டும் ஊடகவியலாளர்கள் பிழை விடுவதில் வியப்பில்லையே?
//ஆனால் செய்திகளைப் பிரசுரிக்கும் அல்லது வெளியிடும் ஊடகங்கள் அனைத்தும் தமது ஊடக தர்மத்தை பின்பற்றுகிறார்களா என்பதே எனது கேள்வி!//
பதிவெழுதும் எமக்கே தர்மங்கள், பொறுப்புக்கள் இல்லாதபோது இன்னொருவரை குறைசொல்வது எந்தளவுக்கு சரியானது என்று தெரியவில்லை.
மற்றும்படி தமிழ் ஊடகங்களைப் பற்றிய உங்கள் கருத்தும் எனது கருத்தும் ஒன்றே.
ஆனால் இருக்கிறம் பற்றிய பிரச்சினைகள் தணிந்திருக்கும் சந்தர்ப்பத்தில் (பதிவர்கள் தாமாக விலகிக் கொண்ட பின்னர்) அதைக் குறிப்பிட்டுக் காட்டுவது எந்தளவுக்கு சரியானது என்பது விளங்கவில்லை....
நண்பரே சற்று பத்தி பிரித்து (Para graph) போடுங்களேன்.
Post a Comment