அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Thursday, November 19, 2009

உன் திருநாமத்தை சொல்லிய பேருக்கு துன்பங்கள் என்னைக்கும் தொடாது! - ஐயப்பன் பாடல்!டாக்டர் கே.ஜே.ஜேசுதாஸ் அவர்களுடைய பல ஐயப்பன் பாடல்களுள் - பிடித்த கருத்து நிறைந்த என் வாழ்வில் உண்மையாகிப்போன பாடல் இது!

ஆனை அலையுற நீலிமல! நம்ம ஐயப்பனோட சாமிமல!
ஏறிவருகிற தந்தானா தந்தானா
ஐயப்பமார்களை தந்தானா தந்தானா
ஏறிவருகிற ஐயப்பமார்களை ஏத்திவிடிற சபரிமல!
ஐயப்பன தொழுவோம்! கோயிலுக்கு வருவோம்!

சாமியப்பா சரணமப்பா பம்பா வாசனே சரணமப்பா!
சாமியப்பா சரணமப்பா பந்தள பாசனே சரணமப்பா!

வீட்டில நாட்டில காட்டில மேட்டில பாட்டில வாழும் பகவானே!
நல்ல தவத்தில உள்ள மனத்தில தோற்றி வணங்க வருவோனே!
கேட்ட வரங்களை நாட்டு நலங்களை காத்து இருந்து தருவோனே!

சாமி திந்தக்கத்தோம் - திந்தக்கத்தோம்!
ஐயப்பன் திந்தக்கத்தோம் - திந்தக்கத்தோம்!

உன்திரு நாமத்தை சொல்லிய பேருக்கு துன்பங்க என்னைக்கும் தொடாது!
பண்ணின பாவங்க பந்தள பாசனின் பார்வையில் பட படராது!
எண்ணின நன்மைங்க எப்போதும் தொலங்கும் என்னைக்குமே அது மாறாது!

சாமி திந்தக்கத்தோம் - திந்தக்கத்தோம்!
ஐயப்பன் திந்தக்கத்தோம் - திந்தக்கத்தோம்!


ரொம்ப நன்றி ரமேஸ்! நீர் சொல்லியபடி you tube இலிருந்து இதை எடுத்து இணைத்திருக்கிறேன்!(rmsundaram1948 அவர்களுடைய you tube இலிருந்த பாடல்)

8 comments:

ஈழவன் said...

ஐயப்பனைப் பற்றிய பதிவு அருமை.

ஆனை அலையுற நீலிமல.... பாடலையும் கேட்கக் கூடியவாறு அமைந்திருப்பின் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

தங்க முகுந்தன் said...

கருத்துக்கு நன்றிகள் ஈழவரே!
பாட்டிருக்கு! ஆனால் எனக்கு பாட்டை எப்படி பதிவிடுவது என்று இன்று வரை தெரியாதே!பதிவிடும் முறையை ஒருவர் சொல்லித் தருவதாகச் சொன்னார் - காத்திருக்கிறேன்!

ramesh-றமேஸ் said...

///ஆனால் எனக்கு பாட்டை எப்படி பதிவிடுவது என்று இன்று வரை தெரியாதே///

நானும் ஹெல்ப் பண்ணட்டுமா

வீடியோ பதிவுகளை யூடியுப் மூலம் என்றால்
இப்படி ட்ரை பண்ணுங்கள்
யூ டியுப்க்கு செல்லுங்கள் பிறகு அங்கே வலப்பக்க மேல் மூலையில் இருக்கும் "embed code" நீங்கள் இதை கொப்பி பண்ணி உங்கள் பதிவில் உள்நுழைந்து ஒட்டி கொள்ளுங்கள் இப்போ பாருங்கள் படம் தெரியுதா என்று
இதை ஆங்கிலத்திலே தருகிறேன்
go to the video in you tube..
then
u will see a "embed code" in right side top
copy the code and paste it in ur blog!!
it will display
இது கூட ஒரு பதிவுலக நண்பர்(அரூண்) சொன்னதே நன்றி அரூண்

தங்க முகுந்தன் said...

தம்பி ரமேஸா! என்னிடம் ஓடியோவில பாட்டு மட்டும் உள்ளது! வீடியோ அல்ல! மேலும் எனக்கு உந்த ரெக்னிக்கல் விளையாட்டெல்லாம் தெரியாதப்பா! மன்னிக்கவும்!

கவிக்கிழவன் said...

உங்கள் விரதம் நன்றாக அமைய இறைவன் அருள் புரிவாராக

தங்க முகுந்தன் said...

நன்றி கவிக்கிழவரே!

பித்தனின் வாக்கு said...

நல்ல பதிவு, நல்ல பாடல், நான் கூட அடிக்கடி முனுமுனுக்கும் பாடல்களில் இதுவும் ஒன்று. எனக்கு பிடித்த இரண்டு பாடல்கள், உன் ஆராதனை பொன் அலங்காரக் கோலம், மற்றும் காற்றினிலே வ்ரும் கீதம் உன் ஹரிஹாசனம் என்ற இரு பாடல்கள் தான். நன்றி.

ஜோதிஜி. தேவியர் இல்லம். said...

உங்கள் விரதம் நன்றாக அமைய இறைவன் அருள் புரிவாராக