அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Sunday, November 8, 2009

இயற்கையின் எழில் - பனிக்காலம் - என் முதல் அனுபவ நினைவுகள்!





பனியைப் பற்றி கேள்விப் பட்டிருக்கிறேன். படங்களில் பார்த்திருக்கிறேன். பனிகொட்டும்போது அனுபவித்த அந்தக் கணத்தில்வரும் இதமான சுகங்கள் ஒருபோதும் மறக்க முடியாதவையே! 3ஆவது தடவை பனியை எதிர்கொள்ள நான் ஆவலோடு தயாராகிக் கொண்டிருக்கிறேன்!
2007 November மாதத்தில் ஒரு நாள். அன்று பிற்பகல் 2மணியிலிருந்து டொச் பாடம் நடந்து கொண்டிருந்தது – வெளியே யன்னலினூடாக பார்த்தேன் - நித்தியகல்யாணிப்பூவின் இதழ்களை யாரோ மேலிருந்து வீசுவதுபோல ஒரு பிரமை! பஞ்சு பறந்து சிந்துவதுபோல வெள்ளை நிற மலர்மாரி! தேவர்கள் பூமாரி பொழிவதை நேரில் கண்டேன்! மிக அற்புதமான காட்சி! வீழ்ந்த அந்த பனிப்பூக்களைக் காணவில்லை! வகுப்பு முடிந்ததும் அறைக்குள் சென்று என் பாடப் புத்தகங்களை வைத்துவிட்டு வெளியே சென்றால் அரை அடிக்கும் மேல் பனிபடந்திருந்தது! நானும் சில நண்பர்களும் ஓடிப் பிடித்து சறுக்கி விளையாடி விழுந்தெழும்பினோம். மரங்களிலும் வீடுகளின்மேலும் பட்டைபட்டையாக பனி விழுந்துகொண்டிருந்தது!

வெளியே செல்வதானால் ஒரு 5 கிலோ கிராம் நிறையுடைய அதிகப்படியான உடைகளை நாம் உடுத்துத்தான் வெளியேறவேண்டும். இதற்காக குறைந்தது 10 முதல் 15 நிமிடங்கள் செலவிட்டு உடையணிய வேண்டும்.

எதிர்வரும் மாதத்திலிருந்து இயற்கையை ரசிக்கும் எனக்கு ஒரே கொண்டாட்டம்தான்!

1 comment:

Jana said...

அப்ப எதிர்வரும் மாதத்தில் இருந்து மீண்டும் மொண்டசறிக்கு போய்விடுவீர்கள் (ஓடிப்பிடித்து விளையாட)