அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Tuesday, August 4, 2009

தேனீ இனையத்தளம் - இணைத்தமைக்கு கிருத்தியம் தனது மனப்பூர்வமான நன்றியைத் தெரிவிக்கிறது!

அரசியல் சம்பந்தமாகவும் சமயசம்பந்தமாகவும் எழுதப்பட்ட கடிதங்கள் - கட்டுரைகள் முக்கிய குறிப்புக்கள் என்பவற்றை ஒரு தொகுப்பாக ஆவணப்படுத்த இறக்குவானை நிர்ஷனின் துணையுடன் கடந்த 2008 Julyஇலிருந்து அவரால் பெயரிட்டு ஆரம்பித்த என் வலைப் பதிவு தற்போது எனது மனத் திருப்திக்கு ஏற்றவாறு வீறு நடைபோடுகிறது என்றால் மிகையாகாது! பதிவுலகில் நான் புதியவன்! ஆனால் எனது பள்ளி வயதிலிருந்து எழுதவும் - பேசவும் - பாடவும் இறைவன் அளித்த கொடையை இன்று நாடுவிட்டு அகதியாக தனிமையில் இருக்கும் என் மன நிலைக்கு இந்த எழுத்துப் பணி ஒரு மனத் திருப்தியை அளிக்கிறது. மறுபிறப்பெடுத்த எனக்கு என் பழைய நினைவுகளையும் சம்பவங்களையும் பதிவு செய்யவும் புதிய அனுபவங்களைப் பகிரவும் இது ஒரு வாய்ப்பை அளிக்கிறது. இதனை தமது இணையத்தில் பதிவு செய்து என் எழுத்துக்கும் இடம் அளித்த தேனீ இணையத்தளத்தினருக்கு எனது மனம் நிறைந்த நன்றிகளைத் தெரிவிக்கின்றேன். இதற்கு என்றும் நான் அதன் ஆசிரியர் அவர்களுக்கு நன்றியுடையனாவேன்!

No comments: