அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Saturday, August 1, 2009

என்கையில் ஏறிய மரக்குச்சி!

கடந்த 16.07.2009 வியாழக்கிழமை மாலை 3.45மணியளவில் இச் சம்பவம் இடம்பெற்றது. கையில் எந்தவிதமான பாதிப்பும் இல்லை! உண்மைதான்!
கழுத்துக்குக் கீழே மார்புக்கு மேலே புலிகளின் துப்பாக்கிக் குண்டுபாய்ந்தும் ஒன்றுமில்லை! உள்ளங் கையைத்துளைத்து மேற்பக்கத்தால் வெளியேறிய குச்சியும் ஒன்றும் செய்யவில்லை.வலது தொடைக் காலில் இந்திய இராணுவத்துடன் புலிகள் சண்டைதொடங்கிய 10.10.1987இல் குண்டடிபட்டவரைக் காப்பாற்றப் போய்ப் பட்ட ஷெல் துண்டும் ஒன்றும் செய்யவில்லை!
என் கையால் பூப்போட்டு 108 குடம் தண்ணீர் வார்த்த பழம் றோட் பிள்ளையாரும் இராஜேஸ்வரி அம்பிகையும் - நவராத்திரி பூசைகளை நிறைவேற்றிய இரத்தினபுரி காவத்தை ஹவுப்பைத் தோட்ட முத்துமாரித் தாயும் - சிவராத்திரி காலத்தில் தனியாகப் போய் அபிஷேகம் செய்த கீரிமலை காரைக்காலம்மையார் மடத்தருகே கடற்கரையிலிருக்கும் சிவலிங்கப் பெருமானும் - கோப்பாய் சுப்பிரமுனிய கோட்டத்தின் சாந்திலிங்கப் பெருமானும் - அளவெட்டி ஆச்சிரமத்தில் பணிபுரிந்த நாட்களில் தினமும் அபிஷேகம் செய்யும் தெய்வங்கள் எல்லாம் என்னருகே இருந்து எனைக் காத்து இரட்சிக்கின்றார்கள்!

No comments: