அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Saturday, August 1, 2009

பதவிக்கு ஆசைப்பட்டவர்கள் சம்பந்தனும் மாவையும்தான்! ஈழவனின் பதிலுக்காக ஓர் உண்மை சொல்வேன்! நிதானமாகச் சிந்தியுங்கள்!

எனது 27.11.203 திகதியிட்ட சம்பந்தனுடைய கடிதத்துக்கு பதிவர் ஈழவன் இவ்வாறு ஒரு பதிலிட்டிருந்தார்!தலைவர் எனப்படுபவர் கட்சியின் கொள்கைக்கு இழுக்கின்றி தூர நோக்குச் சிந்தனையுடன் மக்கள் சேவையை இலக்காகக் கொண்டு முன்னோக்கிச் செல்பவராவார்.

ஆனால் இரா சம்பந்தன் சந்தற்பவாத அரசியல் அல்லவா செய்து வந்துள்ளார். அவருக்குத் தேவை பாராளுமன்ற ஆசனம். அதைப் பெறுவதற்கு எவ்வளவு கீழ் மட்டத்துக்குச் செல்ல முடியுமோ அவ்வளவு தூரத்துக்கும் செல்லக்கூடிய சுயநலவாதியல்லவா?

இதற்கு நான் ஒரு மறுமொழி போட்டேன் இப்படி!

உண்மைதான் ஈழவா! பாராளுமன்றத் தேர்தலில் திருமலையில் தோல்வியடைந்த பின்னர் மறைந்த அமரர்கள் தங்கத்துரை அவர்களையும் நீலன் திருச்செல்வத்தையும் படுத்தியபாடு எமக்கல்லவா தெரியும்! இது பற்றி விரிவாக எழுத இருக்கிறேன். எனது புதிய இடுகையில் நான் அவருக்கு எழுதிய கடிதத்தை இணைத்துள்ளேன். பாருங்கள்!
-------------------------------
இன்று மக்களை முட்கம்பி வேலிகளுக்குப் பின்னால் நிற்கச் செய்த பாவத்திற்குப் பரிகாரம் தேடாமல் மீண்டும் ஒரு தடவை வேதாளம் முருங்கைமரத்தில் ஏறிய கதையாக யாழ்ப்பாண மாநகர சபைக்கும் வவுனியா நகர சபைக்கும் இப்பதவியாசை பிடித்த பெருச்சாளிகள் கொடுக்குக் கட்டிக்கொண்டு வந்து தமக்குத்தான் வெற்றி கிட்டும் என்று கொக்கரிக்கின்றார்கள் மக்கள் படும் அவலம் இவர்களுக்குத் தெரியாது! காரணம் - இவர்கள் பழைய ஏகப் பிரதிநிதித்துவக் கொள்கையை விட்டு இன்னம் மீளாதது ஒரு புறம். முன்னைய பொதுத் தேர்தலில் மக்கள் பெருவாரியாக வாக்களித்ததுபோல இம்முறையும் வாக்களிப்பார்கள் என்று பகற்கனவு காண்பதுதான் பெரிய வேடிக்கை!
ஒவ்வொரு நாளும் பறந்துவரும் அமைச்சர்கள் வேறு யாழ்ப்பாணத்தை ஏதோ சுவர்க்கபுரி ஆக்க முயற்சி செய்வதுபோல மக்களை நம்பவைக்க - கொடி - குடை ஆலவட்டம் பிடிக்கும் எடுபிடிகளும் தமக்குத்தான் வெற்றியென்று கொக்கரிக்கிறார்கள். தமிழரை இனிமேலும் ஏமாற்ற முனையும் முட்டாள்களின் கொக்கரிப்புக்கு அமைதியாக இருந்துதான் சூடுபோடுவார்கள் வாக்காளர்கள்! என்பதை அறியாமல் பாவம் நம்பிக் கெடப்போகிறார்கள் இவர்கள்!
இட்ட தலைப்பைவிட்டு வேறெங்கோ போகாமல் 1994இல் நடந்த உண்மைச் சம்பவத்துக்கு வருகிறேன். 1994 பொதுத்தேர்தலின் பின் நடைபெறஇற கட்சியின் மத்திய குழுக் கூட்டத்திற்கு ஆதரவாளர்கள் புடைசூழ திருமலையிலிருந்த சம்பந்தனும் - அம்பாறையிலிருந்து சேனாதிராசாவும் வந்திருந்தார்கள். ஏற்கனவே வன்னியில் தோல்வியுற்ற நிலையில் கட்சித் தலைவர் திரு. சிவசிதம்பரமும் திரு. ஆனந்தசஙகரியும் யாரையும் இந்தப் பக்கம் வரக்கூடாது என்று உத்தரவு போட்டுவிட்டார்கள். ஏற்கனவே தேசியப்பட்டியலில் கலாநிதி நீலன் திருச்செல்வத்தின் பெயர் குறித்து அனுப்பப்பட்டிருந்ததால் இதை மாற்றும் முயற்சியாகவே இந்த இருவரும் தமது எடுபிடிகளை கட்சியின் கூட்டத்திற்கு வரவழைத்தார்கள். பலத்த கடுமையான உத்தரவு - மத்திய குழு உறுப்பினரல்லாதோர் கூட்டத்தில் பங்குகொள்ளமுடியாது என! விடுவார்களா? கூட்டத்தின் முன்னரே தனித்தனியாக அம்பாறை - திருமலை ஆதரவாளர்களைச் சந்தித்தது அரசியற்குழு! இதன் பின்னர் நடந்த கூட்டத்தில் அம்பாறையின் முக்கியத்துவம் குறித்து மாவையரும் திருமலையில் தனக்கு அநீதி நடைபெற்றுவிட்டது என சம்பந்தனும் பேசியபொழுதிலும் தலைவர் திரு. சிவசிதம்பரம் அவர்கள் ஆணித்தரமாக இந்த விடயத்தில் நடந்துகொண்டார். ஒரு கட்டத்தில் இதை எழுதவே எனக்கு ஒரு மாதிரியாக இருந்தாலும் இனிமேல் இந்த ஏமாற்றுக்காரர்களை விட்டுவைக்கக்கூடாது என்பதற்காக எழுதுகிறேன்! மறைந்த தலைவர்கள் என்னை மன்னிக்க வேண்டும்! கலாநிதி நீலன் அவர்கள் கண்களில் கண்ணீர் கசிந்தது! நான் கட்சியை விட்டு விலகுகிறேன் என்றார்! சும்மா விடுவாரா சிவசிதம்பரம்! அப்படியல்ல நீர்தான் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் என்றார்! சம்பந்தன்தான் கட்சிச் செயலாளர் நாயகம் அவரிடம் கையெழுத்துப் பெறுவதே குதிரைக்கொம்பு!

ஒரு மாதிரியாக சம்பந்தன் தன் கையெழுத்தை இட்டாலும் தனது வேலையைக் காட்டினார் - திரு. தங்கத்துரையையும் கலாநிதி நீலனையும் படுத்தாதபாடுபடுத்தி இறுதியில் இருவருமே புலிகளால் கொல்லப்பட்னர்! தாம் நினைத்ததுபோலவே சம்பந்தனும் 1997ல் பாராளுமன்றத்துக்குப் போனார்! 1999இல் மாவையரும் தேசியப்பட்டியலில் போனார்! எனக்கு இப்போது ஒரு சந்தேகம் இவர்கள் புலிகளோடு இணைந்து.........
தமிழரைக் கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் என்ற தந்தையின் வரிகள்தான் அடிக்கடி நினைவுக்கு வருகிறது! எல்லாம் அவனுக்குத்தான் தெரியும்!
அவனுக்கென்றால் தப்பாக யாரையும் நினைத்துவிடாதீர்கள் இந்த கல்லாய் காற்றாய் எங்கும் இருக்கும் பரம்பொருளைத்தான் சொன்னேன்! ஏனென்றால் மிருகங்களை நான் ஒருபோதும் மதிப்பவனே கிடையாது! அதற்கு அறிவு 5 தான்! மீண்டும் வருவேன்!

No comments: