அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Monday, November 9, 2009

ஈழத்தவருக்காக - ஜோதிஜியின் தேவியர் இல்லம் - இனிமேல் புதிதாக பிறக்கும் தமிழர்களின் எச்சமும் மிச்சமும் உணர்வு மிக்க தமிழ்மக்களாக மாற்றிவிட உதவுமானால்

ஈழத்தமிழர்களில் அதிக அக்கறைகொண்ட பதிவர்களில் அண்மையில் என்னுடன் அறிமுகமாகிய நண்பர் ஜோதிஜி அவர்களுடன் இன்று சில நிமிடங்கள் உரையாட முடிந்தது. ஈழத்தமிழர் பிரச்சனைகள் - அங்கு தொடர்ந்து நிலவிவரும் படுகொலைகள் - தமிழர்களுக்கிடையில் ஓற்றுமையின்மை பற்றி பேசினோம். ஈழத்தமிழர்கள் அகதிகளாக தென் இந்தியாவில் மிகவும் அசௌகரியங்களை எதிர்கொள்ளுவதாகவும் அவர்களுக்கு அப்படியான ஒரு நிலை ஏற்படுவதற்கு தாம் மனம் வருந்துவதாகவும் என்னுடன் கவலையைப் பகிர்ந்துகொண்டார்.
இலங்கையினுள்ளே இருக்கும் பிரச்சனைகளை, வாழ்வியல் அவலங்களை, முடிந்தவரையிலும் அப்படியே அறிந்து கொள்ள ஆர்வம் அவருக்கு இருக்கிறது. அவர் விரும்புவது தொடர் இடுகையின் வாயிலாக - பின்னூட்டத்தின் வாயிலாக மொத்த தமிழனத்திற்கும் தெரிவிக்க வேண்டிய வியங்களை - தெரிந்தவர்கள், புரிந்தவர்கள், புலம் பெயர்ந்து வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் என அத்தனைபேரும் தனக்கு உணர்த்தினால் மிகுந்த மகிழ்ச்சியாய் இருக்கும் என்றார் திரு. ஜோதிஜி.
நானோ தமிழர் விடுதலைக் கூட்டணியைச் சார்ந்தவன். அவரது குற்றச் சாட்டுகளில் எமது கட்சியும் உள்ளடக்கப்படுவதால் நான் மாத்திரம் இதில் கருத்துக்களைக் கூறுவது நடுநிலையாக அமையாது.

ஈழத்தமிழர்களில் அக்கறையுடைய சமூகசேவையாளர்கள் - குறிப்பாக எழுத்தாளர்கள் - பதிவர்கள் - அவரது தேடுதலுக்கு ஒத்துழைப்பு நல்கி அவரது விருப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும் என்று தயவாக பதிவுலக வாசகர்களை அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன். நன்றி!

அவரது 2 இடுகைகளையும் இங்கு இணைத்துள்ளேன். பார்க்கவும்!

-------
வணக்கம் தங்க முகுந்தன்
நலமாய் இருக்கிறீர்களா?
உங்கள் குடும்பமும் உங்கள் வளர்ச்சியில் அக்கறை கொண்டவர்களும் என்றும் வளமாய் வாழ திருப்பூரில் இருந்து தேவியர் இல்லத்தின் ஆசிர்வாதம் கலந்த பங்களிப்பு என்றும் உண்டு.
உங்கள் இணைப்புக்கும் வாசிப்புக்கும் நன்றியை உரித்தாக்குகிறேன்.

http://deviyar-illam.blogspot.com

முழுமையாக உள்வாங்கிக்கொள்ளுங்கள். முடிந்தவரைக்கும் பகிர்ந்து கொள்வோம்
ஊடகம் மூலம் உண்மை எது பொய் எது என்று தெரியாமல் கலக்கத்தில் வாழும் என்னை போன்றவர்களுக்கு - உங்களின் வாழ்வியல் வெறும் சம்பவம் அல்ல.
அது வாழ்ந்து கொண்டுருப்பவர்களின் வரலாறு.
நன்றி வணக்கம்.
-----------

தங்கத்தை பெயரில் மட்டும் வைத்துக்கொண்டு தாய் நாட்டை விட்டு புலம் பெயர்ந்து வாழ்ந்து கொண்டுருக்கும் தங்கராஜா முகுந்தனுக்கு

திருப்பூரில் இருந்து தேவியர் இல்லம் ஜோதிஜி எழுதும் மடல்.

நலம். நலமறிய ஆவல் என்று கேட்கமாட்டேன்.

அது வெறும் வார்த்தை அலங்காரம் மட்டும் என்று நீங்கள் என்னுடன் ஸ்கைபே மூலம் பேசிய நீண்ட உரையாடல் உணர்த்தியது.

நான் தமிழன் என்றும் என்றைக்குமே சொல்ல விரும்பியது இல்லை. எனக்கும் எழுத தெரியும் என்று உணர்ந்த இந்த நிமிடம் வரைக்கும்.

காரணம் இங்கு கட்சி தமிழன், காட்சிகளை மட்டும் ரசிக்கும் தமிழன், திரையில் மட்டும் வாழும் தமிழன் என்று உணர்ந்த தமிழனத்தை இன்றைய வலைதளத்தில் அதிகம் பார்க்கும் "இடுப்புக்குள் நல்ல வ(ழி)ளிப்பு " என்று பார்த்துக்கொண்டுருப்பதால் சற்று பயமாக இருக்கிறது.

ஒவ்வொரு முறையும் தமிழனின் குணம் என்பது "தானே யார் துணையும் இல்லாமல் வலைக்குள் தான் போய்" சிக்கிக் கொள்கின்ற காரணத்தால்.

இன்று வரைக்கும் எனக்கு நல்ல வாழ்க்கையை வாழ கற்றுக்கொடுத்த காரைக்குடி மனிதன் என்று என்னை உங்களிடம் அறிமுகப்படுத்திக்கொள்வதில் மகிழ்ச்சி.

உங்கள் உரையாடலின் மூலம் உணர்ந்த "கசிப்பு" என்னால் உணர்ந்து கொள்ள முடிகின்றது. வாழ்ந்த தலைவனின் "குணம்" புரிந்து கொள்ள முடிந்தது. வாழ்ந்து கொண்டிருக்கின்ற மனிதர்களின் "நிறம்" உணர்ந்து கொள்ள முடிந்தது.

சக மனிதனை கொன்ற விதமும், கொள்கையில் இருந்த பதவிக்கான வேறுபாடுகள் என்று அத்தனை நிறத்தையும் உணர்த்திய விதம் நான் உள்வாங்கிக்கொண்ட சமாச்சாரங்கள்.

சராசரியாக பார்க்கும் போது நீங்கள் உணர்த்தியது உணர்வு பூர்வமாக இருந்தாலும், இன்னமும் கூட எனக்குள் மிச்ச சொச்சமும் உள்ளே இருக்கும் அத்தனை புத்திக்குள்ளும் அந்த "ஆளுமை" யின் வியப்பு, உங்களைப் பொறுத்தவரையில் "விபரீதம்".

அதுவே என்னைப் பொறுத்தவரையிலும் "ஆச்சரியம் அல்லது தமிழனின் வீரம்".

நான் யார் என்று தெரியாமல் என்னிடம் பேச வேண்டும் என்ற உங்கள் ஆர்வம் ஆச்சரியமாய் இருந்தது. சரியான நேரத்தில் உள்ளே வந்து உரையாடிய போது உங்கள் மாறாத மொழி மகிழ்ச்சியையும் தந்தது.

இலங்கை உள்ள பதிவர்களுக்கு மொத்தமாய் இணைக்கும் ஒரு வலைதளம் இருப்பதையே நேற்று தான் உணர்ந்து கொண்டேன்.

நான் கொள்கை பிடிப்பாளனோ, குனக்குன்று என்றோ பொய் சொல்ல விருப்பமில்லை. ஆனால் தொடக்கம் முதல் இலங்கையில் உள்ள தமிழ் தலைவர்கள் தெரிந்தே செய்த தவறுகள், உருவான கொள்கை வேறுபாடுகளினால் கிடைத்த பாடங்கள்,பரிதாப வாழ்க்கை, என்று தொடர்ந்து தொடர்ந்து இன்று உள்ளே வாழ்ந்து கொண்டுருப்பவர்களும், தொலைவில் வாழ்ந்து கொண்டுருப்பவர்களும் மகிழ்ச்சியாய் இல்லை. உதவும் நிலையில் இருந்த இருக்கும் இங்குள்ள தலைவர்களும் தர"மான" வர்களாகவும் இல்லை.

தமிழீழம் என்ற கொள்கை தவறா சரியா என்று என்னுடைய தொடர் இடுகை எழுத்து எங்கு கொண்டு போய் என்னை நிறுத்தும்? என்பது இன்று என்னால் முழுமையாக சொல்ல முடியவில்லை. ஆனால் ஏன் முடியவில்லை? என்பதை ஆராய்வதே இந்த தொடர் இடுகையின் நோக்கம்.

"சகித்துக்கொண்டு இங்கு வாழ்ந்து தான் ஆகவேண்டும்" என்ற பொய்மையான சிகிப்புத்தன்மை என்ற இயலாமையில் வாழும் ஒரு தந்தையாக, கணவனாக, தொழிலுக்கு சொந்தக்காரனாக என்னை நெட்டித்தள்ளிக்கொண்டுருக்கும் சிந்தனைகள் அத்தனையும் மொத்த இலங்கை தமிழர்களுக்கும் இந்த எழுத்துக்களை சமர்ப்பணம் செய்வதில் பெருமை அடைகின்றேன்.

உணர்வு, உணர்ச்சி இந்த இரண்டு வார்த்தைகளில் கூட இரண்டாவது வார்த்தையில் தான் ஒரு எழுத்து அதிகமாக இருக்கிறது. அதனால் தான் 3000 ஆண்டு தமிழனத்தின் வாழ்க்கையை ஆராய்ந்து பார்க்க தோன்றியது.

மொத்தத்தில் நீங்கள் என்னுடன் பேசிய பின்பு என்னுடைய படைக்கின்ற எழுத்து எதிர்காலத்தில் படிக்கின்ற, வாழ்கின்ற புலம் பெயர்ந்த தமிழினத்தை, நிறைவேறாத தமிழீழத்தை, ஒரு வேளை இனிமேல் புதிதாக பிறக்கும் தமிழர்களின் எச்சமும் மிச்சமும் உணர்வு மிக்க தமிழ் மக்களாக மாற்றி விட உதவுமானால் என்னுடைய இன்றைய ஆற்றாமையின் அழுக்கு கழுவப்பட்டதாக இருக்கும் என்று கருதுகிறேன்.

அவலமாய் வாழ்க்கை நடத்திக்கொண்டுருக்கும் புலம் பெயர்ந்த தமிழனத்துக்கு, அழுக்குகளுடன் வாழும் தமிழனான தேவியர் இல்லத்து பூங்கொத்து.


ஜோதிஜி
தேவியர் இல்லம். திருப்பூர்
http://deviyar-illam.blogspot.com

2 comments:

ஜோதிஜி said...

மனம் அன்பினால் நிறையட்டும். அன்பினால் களிப்படையட்டும். அன்பினால் செய்ய முடியாதது எதுவுமில்லை

வேறு என்ன இதை விட பெரிதான வார்த்தைகள்?

Dhavappudhalvan said...

உள்ளம் கசிகின்றபோது வார்த்தைகளுக்கு வேலையில்லை.


-தவப்புதல்வன்.