அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Saturday, November 14, 2009

பிடிச்சதும் - பிடிக்காததும்! - அன்பாய் இருப்போமே! -


பதிவுலகால் ஏற்பட்ட அன்புத் தொடர்புகள் ஏராளம்!
அதற்கு முன் ஊரில் நட்பு!
அலைந்த திரிந்த இடங்களில் பழகிய நட்பு!
கல்வி கற்ற காலத்தில் பள்ளி நட்பு!
தொழில் புரியும் இடங்களில் ஏற்பட்ட விதவித நட்பு!
எங்கு சென்றாலும்
அன்பை அறிந்தமையால் - அதனுள் இருந்தமையால்
உயிரோடு கலந்த உருத்தெரியாத அந்த
உண்மைஅமுதத்தை என்னால் இன்று தள்ள முடியவில்லை!
ஏனெனில் நான் அன்பாக இருக்கிறேன்!
அதே நேரத்தில் இருமையும் உள்ளதால் ஒரு சிலபோதுகளில்
கோபமும் -வெறுப்பும் சரிக்குச் சரி வந்து போகிறது!
எழுதத் தொடங்கிய காலத்திலிருந்து
இன்று பதிவுக்காய் தட்டெழுத்து இட்டதுவரை
கைகள் என்னோடு பகையாமல் ஆதரவாய் இருந்தன!
மனம்தான் சில வேளைகளில் சீ..சீ எழுதாதே எழுதி என்ன பலன்? என்று திட்டும்!
கூடிப் பேசுவதில் ஒரு ஆர்வம் அன்றுமுதல் இன்றுவரை என்னிடம் இருக்கிறது!

பதிவுலகில் ஈழத்தில் நடந்த முதல் சந்திப்பிற்குப் பிறகு சில பதிவர்களின் நட்பு என்னைத் திக்குமுக்காடச் செய்துவிட்டது!

காரணம் கொழும்பிலிருந்தபோது வெள்ளி மதியம் எப்படா வருமென எதிர்பார்த்திருப்பேன்! பொதுவாக சனி ஞாயிறு கொழும்பிலே இருக்க மாட்டேன்! எங்காவது பிடித்த இடங்களுக்கும் - பிடித்தவர்களுடைய வீடுகளுக்கும் போய் முகாமிட்டு தங்கி ஞாயிறு இரவு கொழும்பு திரும்புவேன்!

திருமணத்தின் பின்பும் கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் வேலை தொடர்ந்ததால் மாறி மாறி விமான மற்றும் ஏ -9 வீதிப் பயணங்களும் அதன்மூலம் அறிமுகமாகிய நட்புகளும் - அந்த நினைவுகள் மனதை எங்கேயோ கொண்டுபோயிருந்தன!

அரசியல் அநாகரிகம் முற்றியபோது - வேண்டாம் இதுவென சொந்த ஊர் திரும்பி வாழ்ந்த 2வருடத்தின்பின் நடந்ததுதான் உங்களுக்குத்தெரியுமே!

ஊரில் சொந்த நாட்டில் பழகிய - தெரிந்த அனுபவங்களைக் காட்டிலும் புலம்பெயர்ந்த பின்னர் இங்கும் நிறையவே புதிதாக அறிந்து கொண்டேன்! இதுபற்றி தனிப் பதிவிடலாம்!

சரி விடயத்திற்கு வருகிறேன் நண்பர் ஜனா - பிடிச்சிருக்கா! பிடிக்கலையா!- என்ற தனது பதிவில் - தங்கமுகுந்தன் (அருமையாக, பகைப்படங்களை பிடித்து விளக்கம் கொடுத்து பதிவு தருவார்) - என்று என்னை மாட்டிவிட்டுள்ளார்!

நான் அவருக்கு அப்பதிவில் - தனக்கு ஏற்பட்ட சோதனையை அடுத்தவன் மேல் திணிக்கும் - பதிவர் கூட்டத்தின் (ஒரு சாராரிடம்) கலாச்சார சூழலில் தற்காலிகமாக அகப்பட்டுக்கொண்ட நண்பன் ஜனாவின் வேண்டுகோளை ஏற்று - பதிவைக் கூடியவிரைவில் இடுகை இடுகிறேன்! என்று இடுகை இட்டேன்.

அதற்கு அவர் - ஒருவகையில் நீங்கள் சொல்வது உண்மைதான், என்றாலும், இந்த தொடர்பதிவின்மூலம் பல பதிவர்கள் இணைக்கப்படுகின்றார்கள் தானே முகுந்தன் அண்ணா - என்று பதிலளித்திருக்கிறார்!

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்கள் உண்டு!

பதிவர்களில் பலவகையினர் இருக்கின்றனர்!


1. பொழுதுபோக்கிற்காக எழுதுபவர்கள்!

2. தமது எண்ணங்களை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்பவர்கள்!

3. தெரியாத விடயங்களைத் தெரியப்படுத்தபவர்கள்!

4. சிலர் அதற்கு மேல் தமது பாணியில் அதை விலாவாரியாக விளக்கம் கொடுத்து தமது அறிவைப் பகிர்பவர்கள்!

5. உண்மைச் செய்திகள் வெளிப்படுத்தப்பட வேண்டும் என்ற நோக்கில் எழுதுபவர்கள் என இப்படி பலர் இருக்கின்றார்கள்!

நான் பதிவு எழுத முதற் காரணம் நியாயமாக நான் எண்ணிய - சொல்லிய பல (சில பிரசுரிக்கப்பட்டன) விடயங்கள் செய்தித் தாள்களில் பிரசுரிக்கப்படாத காரணமே! இன்று செய்தித் தாள்களே - சஞ்சிகைகளும்! பதிவை பிரசுரிக்கும் அளவிற்கு பதிவுலகம் முன்னேறுகிறதை எண்ணும்போது பெருமையாக இருக்கிறது! ஆனால்

மனித வாழ்வில் மக்கள் வாழும் உரிமை மறுக்கப்படும்போது அதுபற்றிப் பேசினால் ஏதோ தீட்டு என்று சொல்லி அமைதிகாக்கும் பதிவர்கள் பலர் இருக்கிறார்கள்!

அதை மறைக்கும் - அல்லது ஒருபக்கச் சார்பான கருத்துக்களுக்கு முதலிடம் கொடுப்பது! குற்றம் செய்பவனை சுட்டிக் காட்டாமல் சும்மா சிவனே என்று இருப்பவனை விறாண்டுவது போன்ற அநாகரிக முறைகள் எப்போது முடிவுக்கு வருமோ என்று ஆதங்கப்படுபவன் என்ற வகையில்

எனக்குப் பிடித்த பிடிக்காதவற்றை இங்கு பதிவிடுகிறேன்!

சரி பிழை எதுவெனச் சொல்லுங்கள் - ஆனால் என்னால் - எனது அறிவுக்கு எட்டிய கருத்தைச் சொல்கிறேன் - விதி முறைகளை நான் கேட்டிருந்தும் இந்த நிமிடம் வரை அவர் தெரிவிக்காதபடியால் பலரது பதிவுகளைப் படித்த முறையில் என் உரிமைகொண்டு எழுதுகிறேன்.
1.
பிடித்த கடவுள் - பிள்ளையார் குலதெய்வம்!!அன்பைப் போதிக்கும் நெறிகளே சமயங்கள் - பேசும் மொழியாலும் - வழிபடும் முறையாலும் வித்தியாசப்பட்டிருந்தாலும் மனிதர்கள் - ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் என்ற திருமூலரின் தாரக மந்திரத்தை ஏற்றால் இப்பூமியே நமக்கு சுவர்க்கலோகம்)
பிடிக்காதவர் - இல்லை.
2.
பிடித்த துறவி - ஈழத்தில் - யோகர்சுவாமி!
பிடிக்காதவர் - ஆசை கொண்டவர்கள் - அரசியலில் இருப்பவர்கள்.
3.
பிடித்த துறவி - தாய் நாட்டில் - காஞ்சிப் பெரியவர் ஸ்ரீ சந்திரேந்த்ர சரஸ்வதி சுவாமிகள்
பிடிக்காதவர் - போலிகள்.
4.
பிடித்த மொழி - எனது தாய்மொழி!
பிடிக்காதது - இல்லை. (அன்பாயிருக்கும் நான் மனிதர் பேசும் அனைத்து மொழிகளையும் நேசிப்பதால் இதற்கு விடை)
5.
பிடித்த நூல் - நற்சிந்தனை!
பிடிக்காதது! - பொய்யான தகவல்களைத் தாங்கிவருபவை.
6.
எனக்குப் பிடித்த அரசியற் தலைவர் - காந்தி(ஈழத்து)!
பிடிக்காதவர் - அனைவராலும் கடவுளாக கருதப்படுபவர்.
7.
பிடித்த புலவர் - தமிழ் மூதாட்டி ஒளவை!
பிடிக்காதவர் - இப்போதிருக்கும் - அர்த்தமில்லாத் தமிழ்ப் புலமையுள்ளவர்கள்.
8.
பிடித்த தொலைக்காட்சி நிகழ்வு - விசுவின் மக்களரங்கம்
பிடிக்காதது - லூசுக் கதைகள்.
9.
பிடித்த நடிகர் - நடிகர் திலகம் செவாலியே சிவாஜி!
பிடிக்காதவர் - இல்லை.
10.
பிடித்த நடிகை - கே. ஆர் விஜயா
பிடிக்காதவர் - இல்லை.
11.
பிடித்த குணச்சித்திர நடிகர்- சார்லி சப்ளின்
பிடிக்காதவர் - இல்லை.
12.
பிடித்த குணச்சித்திரநடிகை - மனோரமா
பிடிக்காதவர் - இல்லை.

13.
பிடித்த வில்லன் - நம்பியார்
பிடிக்காதவர் - இல்லை.
14.
பிடித்த நண்பர்கள் - இப்போது எனது வீட்டிற்கருகிலுள்ள ஏரிப் பறவைகள்இதுபற்றி நான் பல பதிவர்களோடு மனம்விட்டுக் கதைத்திருக்கிறேன்! இதற்கும் தனியாக ஒரு பதிவிட இருக்கிறேன்!
பிடிக்காதவர்கள் - ஆபத்தில் உதவாத பலர்!
15.
பிடித்த உணவு - பொரிச்சுப் பிரட்டின சோறு - சூடுபட்ட அன்று 12.06.2006 மாலையில் நான் சாப்பிட்டது இப்போது ஞாபகத்திற்கு வந்தது!
பிடிக்காதது - இங்கத்தயான் சாப்பாடு.
16.
பிடித்த இடம் - கன்னியாகுமரி விவேகானந்தர் பாறை!
பிடிக்காத இடம் - தற்போது வேலைசெய்யும் இடம்.
17.
உறவில் பிடித்தவர் - இறந்த தம்பி துளசிதாசன்!
பிடிக்காதவர் - இல்லை.
18.
பிடித்த வாழ்க்கை - எளிமையாக இருப்பது!
பிடியாதது - பகட்டை.
19.
தினமும் பிடித்தது! - பதிவர்களுடன் கதைப்பது!
பிடிக்காதது - தனிமை.
20.
பிடித்த இசை - ஊரில் கூட்டமாக வாசிக்கும் பறையொலி!
பிடிக்காதது - இல்லை.
21.
பிடித்த விளையாட்டு - சிறுவயதில் விளையாடி இப்போது இங்கும் சில வேளை விளையாடும் தாச்சி!
பிடிக்காதது - கோல்ப்! எங்கள் வதிவிடத்தின் பக்கத்திலிருப்பது கோல்ப் மைதானம்தான்.

22.
பிடித்த பாட்டு - தற்போது எமது சூரிச் முருகன் கோவில் இறைமூர்த்தங்களில் நாராயணர் மீது உன்னிக்கிருஷ்ணன் அவர்கள் பாடிய அலைகடல் நடுவினிலே ஆதிஷேஷ அரியணையில் அழகாக வீற்றிருக்கும் சூரிச் ஆழும் நாராயணா!
வையகத்தில் அன்புபொங்கி ஈழத்திலே அமைதிதங்கி மக்கள் எல்லாம் இன்பம்பெற அருள் வழங்கு நாராயணா!
பிடிக்காதது - தமிழில் ஒரு அர்த்தமும் இல்லாதவை.
23.
பிடித்த நிறம் - சிவப்பு
பிடிக்காதது - எதுவும் இல்லை! நானும் வானவில்லை ரசிப்பவன்!

1 comment:

Jana said...

அருமை நண்பரே..பார்த்தீர்களா இந்த பதிவின்மூலம் எத்தனை விடயங்கள் வெளிவந்திருக்கின்றது என்று!
வாழ்த்துக்கள். கவலை வேண்டாம் தூரத்தில் இருந்தாலும் இப்போது உங்களுக்கு நிறைய நல்ல நண்பர்கள் கிடைத்துள்ளனர்.