அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Tuesday, May 5, 2009

ஏறக்குறைய 7 மாதங்களுக்கு முன்னர் நான் கோரிய 2 மனிதாபிமான வேண்டுகோள்களை இன்று திரும்பவும் பதிவில் இடுகின்றேன்! (10.09.2008 + 18.09.2008)

மனிதாபிமான பகிரங்க வேண்டுகோள் 10.09.2008மனிதாபிமானத்தின் பெயரால் சகல நாடுகளையும் பொது அமைப்புக்களையும் வேண்டிநிற்கும் சிறுபான்மைச்சமூகத்தின் ஒட்டுமொத்தக் குரலாக இந்த வேண்டுகோளைச் சமர்ப்பிக்கின்றேன். தயவுசெய்து இலங்கைவாழ் தமிழ்மக்களுக்கு மாத்திரமல்ல அப்பாவிச் சிங்கள முஸ்லிம் மக்களுக்கும் வாழும் உரிமையை எமது நாட்டில் ஏற்படுத்தித் தாருங்கள்.இன்று நேற்றல்ல சுதந்திரமடைந்த நாள் முதலாக இன்றுவரை எமது நாட்டில் இடம்பெறும் படுகொலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முன்வாருங்கள்.எமது நாட்டில் சட்டங்கள் ஏற்படுத்தப்படுவது ஒரு சிலரைத் திருப்திப் படுத்தவேயன்றி ஒட்டு மொத்த இலங்கையருக்காகவல்ல. குடும்ப ஆதிக்க அரசியல் பாரம்பரியத்தை மாற்றியமைத்த தற்போதைய ஜனாதிபதி தற்போது பண்டாரநாயக்க குடும்பத்தை விலக்கிவிட்டு ராஜபக்ஷ ஆதிக்கத்தை முன்னெடுப்பதை அனைத்து இலங்கைப் பிரஜைகளும் வன்மையாக எதிர்க்க வேண்டும்.
நேற்று 09.09.2007 மாத்திரமல்ல 1985ஆம் ஆண்டு காலப் பகுதிகளிலிருந்தே தமிழ்ப் பேசும் மக்கள் வாழ்ந்து வரும் பகுதிகளில் விமான பீரங்கி எறிகணைத் தாக்குதல்கள் தொடர்ந்த வண்ணமிருக்கின்றன. இது தமிழ்ப் பேசும் மக்களுக்கு சிங்கள பேரினவாத அரசுகள் கடந்த 23 வருடங்களாக மேற்கொண்டுவரும் மிருகத்தனமான நடவடிக்கைகள் என்பதைப் பகிரங்கமாகத் தெரிவிக்கிறேன்.மக்களை பரிபாலனம் செய்ய முடியாத அரசு உடனடியாக பதவியிலிருந்த விலகிவிட வேண்டும். பாராளுமன்றத்திற்கு முன்னர் தெரிவான உறுப்பினர்கள் செய்தவற்றைத் தவறென்றுகூறி அவர்களை கொன்றுகுவித்துவிட்டு இப்போதிருக்கும் உறுப்பினர்கள் என்னத்தைச் செய்து கிழித்துவிட்டார்கள் என்று பகிரங்கமாகவே அப்பாவிப் பொதுமக்கள் சார்பாக வேண்டுகிறேன். உடனடியாக தமிழ்ப் பேசும் மக்களைப் பிரதிநிதித்தவப் படுத்துவோர் பதவி ஆசையை விட்டுவிட்டு மக்களுக்காக உங்கள் பதவிகளைத் துறந்து விட்டு ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைத் தூதுவராலயத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம் செய்யுங்கள்.இலங்கையை கடைசியாக கைப்பற்றி ஆட்சிபுரிந்த பிரித்தானிய அரசு உடனடியாக இந்த விடயங்களில் தலையிட்டு உடனடியாக போரை நிறுத்த பணிப்புரை விடுக்க வேண்டும் என அல்லலுறும் அப்பாவிப் பொதுமக்கள் சார்பாக வேண்டுகிறேன். போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவில் அங்கம் வகிக்கின்ற அனைத்து நாடுகளும் இது விடயத்தில் ஒரு நெருக்கத்தை இலங்கை அரசுக்கும் அதே நேரம் போரில் ஈடுபட்டுள்ள விடுதலைப் புலிகளுக்கும் உடனடியாகக் கொடுத்து அழிந்து கொண்டிருக்கும் இனத்தை உடனடியாக காப்பாற்ற ஆவன செய்ய முன்வரவேண்டும். மனிதாபிமானப் பணிகளிலீடுபட்ட அமைப்புக்களை உடனடியாக வெளியேற உத்தரவிட்ட அரசைக் கண்டித்து பொது நல அமைப்பு நாடுகளிலிருந்தும் சார்க் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை என்பவற்றின் உறுப்பினர் பதவியிலிருந்து உடனடியாக இலங்கையை நீக்க வேண்டும். 1990 களில் என்னால் எழுதப்பட்ட ஒரு கடிதத்தை Hinduism Today என்ற பத்திரிகை பின்வருமாறு வெளியிட்டது. அதை மீண்டும் இன்றைய நிலையில் மக்களுக்காக சமர்ப்பிக்கின்றேன்.


Letter.

Unexpected war started again on June 11th, 1990, in Sri Lanka. Because of this war whole Tamil areas are under tension. Both sides have not considered the people, but only political victory and taking revenge. Now the People of Neduntheevu (Delft) are suffering from non-communication with the outside world. No food, no electricity, no infant foods. All cut off because of war. In mannar district at Pesalai and Viddaththaltheevu, there are about 30,000 refugees waiting the seashore area to go to India. According to the Virakesari news paper, foue died and most others are in line to die without food, medicine and watter. Partly burnt bodies are in the streets at Trincomalee and Batticaloa districts. Most people of these areas have lost their residents and are living in the forests without food, medicine or shelter. In the whole northern province the hospital are not functioning. Prices are raised twenty times normal. Please take immediate action over this humanitarian request and save innocent, peace loving civilians through your non-political movements. Please request the parties who are engaged in battle in Sri Lanka to Stopp the all-people killing war. Please do meditation and prayer for peace and harmony for our leaderless people.
TMColombo, Sri Lanka.

யாராவது முன்வருவீர்களா? (18.09.2008)

தமிழர்களுக்கு எதிரான அரசின் தற்போதைய செய்கைகளுக்கு எதிராக ஒட்டுமொத்த இலங்கையரும் ஐக்கிய நாடுகள் சபைக்கு கையெழுத்திட்டு ஒரு கடிதத்தை அனுப்பிவைக்க பொது மக்களில் ஈடுபாடுடைய ஒருவராவது இலங்கையில் (நான் தற்போது வெளிநாட்டில் இருப்பதால்) யாராவது ஒருவர் முன்வந்து உடனடியாக முயற்சி எடுக்கவேண்டும் என பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் சார்பாகவும் இலங்கையில் சமாதானத்தை விரும்பும் ஒருவன் என்ற வகையிலும் மிகவும் குறிப்பாக மனிதன் என்ற ரீதியில் தாழ்மையாக வேண்டுகிறேன்.
ஐக்கிய நாடுகள் சபையும் வெளியேறிய காரணத்தால் எமக்கு ஒரு சாதகமான முடிவை வெளிப்படுத்த சந்தர்ப்பம் தானாக வரும் வேளையில் தற்போது புதிதாக ஒரு செய்தியைக் கேள்விப்படும் பொழுது எமக்கு நெஞ்சில் புளிவாரத்தது போன்ற நிலை ஏற்படுகிறது. இரசாயன ஆயுதங்கள் பாவிப்பது பற்றிய இச்செய்தி உண்மையாக இருந்தால் எமக்குப் பாதகமானதாயிருக்கும். எது எப்படியாயிருந்தாலும் தற்போது எமது மக்களுக்கு நிவாரணத்தையும் பாதுகாப்பையும் வழங்க எவருமில்லாத காரணத்தால் உடனடியாக இந்த வேண்டுதலை சகல நாடுகளின் தூதுவராலயங்களிடமும் சர்வதேச மன்னிப்புச் சபை ஐ.நா.சபையின் இலங்கைத் தூதுவராலயம் போன்ற அமைப்புக்களுக்கும் அனுப்பி திக்கற்ற எமது மக்களுக்கு விடிவு ஏற்படுத்தித் தரவேண்டும் என கோரிக்கையை எழுதி கையெழுத்திட்டு சமர்ப்பிக்க உடன் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

No comments: