அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Wednesday, May 20, 2009

பிரபாகரனின் நிலை - எனது தலைவர் தந்தை செல்வா இறுதிக் காலத்தில் எப்படி இருந்தாரோ அதேபோல .....என் உள் உணர்வு சொல்கிறது!

கொஞ்சம் நீண்ட பதிவாக இருக்கலாம் - ஆனால் எனக்குத் தோன்றியதை உடனடியாக எழுதியிருக்கிறேன்.

எனது - தமிழ் மக்களின் உரிமைக் காவலனாக விளங்கிய தந்தை செல்வநாயகம் என்ற 26-04-1994 வீரகேசரி 2ஆம்பக்கக் கட்டுரையின் ஒரு பகுதியை முதலில் அப்படியே இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

1977 மார்ச் நடுப்பகுதியில் தெல்லிப்பழையிலுள்ள தமது இல்லத்தில் காலை உணவருந்தியபின்னர் எழுந்து நடந்தபோது கால்தடக்கி பின்புறமாக விழுந்ததைத் தொடர்ந்து அவர் மூர்ச்சை அடைந்தார். அன்று மாலை யாழ்ப்பாணம் அரசினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நள்ளிரவில் மூளையில் கட்டியிருந்த இரத்தத்தை மூளை நரம்புச் சத்திர சிகிச்சை நிபுணர் டாக்டர் கப்ரால் மற்றும் இரு நிபுணர்களுடன் வந்து அவசர சத்திர சிகிச்சை செய்து வெளியே எடுத்தார்கள். உலகப் பிரசித்திபெற்ற மூளை நரம்பு சிகிச்சை நிபுணர் டாக்டர் வி. இராமமூர்த்தி இந்தியாவிலிருந்து வந்து பரிசோதித்தார். முப்பத்து நான்கு தினங்கள் நினைவின்றி இருந்த தலைவர் தந்தை செல்வா அவர்கள் 26.04.1977 செவ்வாய்க்கிழமை இரவு 9.50 மணியளவில் காலமானார்.

இதைப்போல இராமேஸ்வரத்தில் இலங்கை அகதிகளைப் பார்வையிட்ட பின்னர் சென்னையில் இரத்த அழுத்தம் அதிகரித்து மயங்கி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுப் பின் சுகமடைந்த மறைந்த கூட்டணித் தலைவர் அ. அமிர்தலிங்கம் அவர்களாகட்டும், யாழ் மாநகர முதல்வர் பொன் சிவபாலன் படுகொலை செய்யப்பட்டார் என்ற செய்தியை உலகத் தமிழர் பேரவைத் தலைவர் இரா. ஜனார்த்தனன் சொல்லியவுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கூட்டணித் தலைவர் மு.சிவசிதம்பரம் அவர்களும் சரி மக்களுக்காகத் தம்மை அர்ப்பணித்தவர்கள். இதைப்போல........இனித்தான் எனது கட்டுரை ஆரம்பமாகிறது.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பற்றிய எனது கருத்துக்கள் - வித்தியாசமான நோக்கல்கள்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரைப் பற்றிய பல வதந்திகள் - இலங்கை அரச செய்திகள் வெளியிட்டுவரும் நேரத்தில் பலரும் பல கருத்துக்களைத் தெரிவித்துவருகிறார்கள். என்னுடைய எண்ணப்படி (ஒரு ஊகம் - நானும் அவர் உயிருடனிருக்கிறார் என்றுதான் இப்பொழுதும் நம்பியபடி இருக்கிறேன்) 3 கருத்துக்களை முன்வைக்க விரும்புகிறேன்.

அரச செய்தி சொல்லுவதுபோல அவர் கொல்லப்பட்டிருக்கலாம். ஆனால் அவர்கள் காட்டுவது அனைத்தும் பொய்யான படங்கள். சிங்கள இனத்தைத் திருப்திப் படுத்துவதற்கு ஒரு பொய்யான உடலைத் தயாரித்து வைத்திருக்கின்றார்கள். அவரது உடல் சிதறியிருக்கலாம் அல்லது எரிந்திருக்கலாம். கண்டெடுத்த அடையாள அட்டையை(LTTE வழங்கியதை) மட்டும் வைத்து(அதுவும் எப்படி புதிதாக இருக்கிறது என்பதிலும் ஒரு சந்தேகம்) முடிவு எடுக்க முடியாதுள்ளது!

நெற்றிப் பொட்டில் சுட்டபடியால் அடுத்த என்னுடைய இரண்டு கருத்துக்களை எதிர் எதிராகத் தெரிவிக்க வேண்டியிருக்கிறது.

முதலாவது நிலத்தின்கீழ் பங்கருக்குள் இருந்திருப்பவரை கைது செய்து கொன்றிருக்கலாம். ஆனால் அதுவரை அவர் சயனைட்டை உட்கொள்ளாமல் இருந்திருக்க முடியாது.

மற்றயது பிரச்சாரம் செய்யப்படுவது போல – உயிருடனிருக்கிறார். ஆனால் அவர் இப்போது வருவதற்கான சாத்தியம் இல்லை என்று சொல்லப்படுவதன் அர்த்தம் - என்னைப் பொறுத்தவரை நான் ஒரு தமிழர் விடுதலைக் கூட்டணியின் உண்மையான அங்கத்தவன் - இன்றும் என் கொள்கையை விட்டு விலகாதவன் என்ற வகையில் என்னுடைய மானசீகமான தலைவர் தந்தை செல்வா தனது இறுதிக்காலத்தில் முப்பத்து நான்கு தினங்கள் நினைவின்றி இருந்தார். அவரைப் போல தன்னுடைய போராட்டம் - ஆயுதப் போராட்டம் - செயலற்ற நிலையில் பல பொறுப்பானவர்களை இழந்த நிலையில் - இந்த இடத்தில் ஒன்றைக் குறிப்பிட விரும்புகிறேன் - நான் பல பதிவுகளையும் பார்ப்பதால் யார்? எப்போது என்பதை நினைவில் வைத்திருக்க வில்லை – ஒரு பதிவர் குறிப்பிட்டது போல அல்லது ஒரு கட்டுரையில் தெரிவிக்கப்பட்டதுபோல – தற்போது அதிக பதட்டமடையும் தலைவருக்கருகில் அவரைப் பார்க்க தனியானதொரு மருத்துவர் எப்போதும் அருகில் இருக்கிறார். வேளாவேளைக்கு அவருக்கு மாத்திரைகள் கொடுக்கிறார் என்றிருந்தது. இதனடிப்படையில் எனது தலைவர் தந்தை செல்வா இறுதிக் காலத்தில் எப்படி இருந்தாரோ அதேபோல ஏதாவது மனநோய்வாய்ப்பட்ட நிலையில் - உணர்வற்ற நிலையிலும் அவர் உயிரோடிருக்கலாம் என்று என் உள் உணர்வு சொல்கிறது! ஏனென்றால் எனக்கு என்னுடைய மனம் இப்போது இருக்கும் நிலையை நான் உணர்ந்து இக்கட்டுரையை சுய சிந்தனையுடன் உண்மையான தமிழன் என்ற அடிப்படையில் எழுதியிருக்கிறேன். ஏற்பதும் ஏற்காததும் உங்களுடையது

ஆனால்!
குறிப்பாக இன்னொரு பதிவு
கடந்த 19.05.2009இல் எத்தகைய சூழ்நிலையிலும் மனம் தளராது நிமிர்ந்து நிற்போம் என்ற தலைப்பிட்ட எல்லாளன் அவர்களின் தமிழ்த் தேசியம் பதிவில் போராளி கே. பி. அறிவனின் அறிக்கையிலும் தலைவரைப் பற்றிய எந்த ஒரு செய்தியும் அதில் குறிப்பிடப்படாதது சந்தேகத்தையே ஏற்படுத்துகிறது.

6 comments:

Unknown said...

முகுந்தன், தங்களின் பதிவில் சிறு திருத்தம்.
//தந்தை செல்வா அவர்கள் 26.04.1997 செவ்வாய்க்கிழமை இரவு 9.50 மணியளவில் காலமானார்//
<1977 சித்திரை 26 என்பதே சரியானதாகும்.b>

தங்க முகுந்தன் said...

ஈழவா!
4ஆம் மாதமும் சித்திரையும் ஒன்றுதானே!
என்ன நீங்களும் குழம்பியிருக்கிறீர்களோ?

Unknown said...

என்ன முகுந்தன் நீங்களும் குழம்பி, என்னையும் குழப்புகின்றீர்களே!
//26.04.1997 செவ்வாய்க்கிழமை இரவு 9.50 மணி//

இதில் 26.04.1977 என்பதே சரியானது, அதாவது உங்கள் பதிவில் உள்ள 1997 என்பதை 1977 என மாற்றம் செய்யுங்கள்.

நான்காம் மாதத்தை சித்திரையெனவும், ஏப்ரல் மாதமெனவும் கூறலாம் அது எனக்கும் தெரிந்ததே.

Anonymous said...

1977 enriruppathatku pathilaka 1997 enru erukku

தங்க முகுந்தன் said...

ஈழவரே! மன்னிக்கவும் நான் மனம் குழம்பிய நிலையில் அவசரமாக பதிவிட்டதால் 1977 - 1997 என பதியப் பட்டுள்ளது. இப்போது திருத்திவிட்டேன். நன்றி!!! உமக்கு எனது வார்த்தைகளால் கோபம் இல்லைத்தானே! முடிந்தால் உமது தொடர்பு மின்னஞ்சல் முகவரியை எனக்குத் தெரியப்படுத்தவும் சிலவிடயங்களைப் பற்றி பேசவேண்டும்.

தங்க முகுந்தன் said...

Thanks Anonymous! Thiruththi vitten.