அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Saturday, May 23, 2009

தமிழர்களைக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் - தந்தை செல்வா - இன்றும் இதையே திரும்பத் திரும்பச் சொல்கிறேன்! பரிசில்காரனின் பதிவுக்கு எனது கருத்தும்!

எனது மானசீகமான தலைவர் ஈழத்துக் காந்தி என அழைக்கப்பட்ட தமிழர் தலைவர் தந்தை செல்வா சொல்லியதையே நான் திரும்பத் திரும்பச் சொல்கிறேன். இதையிட்டுப் பதிவர்கள் என்ன நினைத்தாலும் பரவாயில்லை - 1947ல் பாராளுமன்றத்திற்குத் தெரிவானது முதல் தனது இறுதிமூச்சுவரை(1977 மார்ச்) தமிழ்ப்பேசும் மக்களின் உரிமைக் காவலானாக விளங்கியவர் தந்தை செல்வநாயகம் அவர்கள்.
அதீத காந்தீயக் கொள்கையுடைய தலைவரால் வன்முறைக் கலாச்சாரம் ஈழத் தமிழ்ப் பேசும் மக்களின் வாழ்க்கைக்கு நியாயமாக இருக்க முடியாது - இதுவும் அடிக்கடி குறிப்பிடப்பட்டு வந்ததையும் நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். 70 சதவீதத்துக்கும் அதிகமான பேரினவாதிகளுடன் ஒருபோதும் வன்முறை மூலமாகத் தீர்வு எட்ட முடியாது என்பதில் அவரின் சிந்தனை அமைந்திருந்ததும் - இந்தியாவின் உதவியுடனேயே தமிழ்ப் பேசும் மக்களின் விடுதலை சாத்தியப்படும் என்பதில் அக்கறைகொண்டு 1972 பெப்ரவரியில் இந்தியத் தலைவர்களைச் சந்தித்தார் தந்தை செல்வா.
இலங்கை சுதந்திரக் கட்சியின் தலைமையில் 1970இல் தெரியப்பட்ட கூட்டரசால் கொண்டுவரப்பட்ட புதிய அரசியலமைப்பை எதிர்த்து 1972-10-2இல் தனது பாராளுமன்றப் பதவியைத் துறந்தார். யாழ் மாநகர முதல்வர் துரையப்பா கொலை - வங்கிக் கொள்ளை - காவற் துறையின் கெடுபிடி - கைது - சித்திரவதை - சயனைட் அறிமுகம் போன்றவற்றை நினைத்தே இறுதிக் காலத்தில் தந்தை தமிழர்களைக் கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் -அப்படிச் சொல்லியிருப்பார் - என்பது எனது தனிப்பட்ட கருத்தாகும். ஏனெனில் அவர் தமிழரசுக்கட்சியைத் தொடங்கியதே மலையக மக்களின் குடியுரிமை பறிப்பில் மொழிப் பிரச்சனை ஏற்படும் என்று தீர்க்கதரிசனமாக யோசித்தது! இறுதிக் காலத்தில் இப்படிச் சென்னதற்குக் காரணம் தான் கட்டி வைத்திருந்த தமிழ் - முஸ்லீம் ஒற்றுமையும் ............ என்னால் எப்படி எழுதுவது என்று முடியவில்லை! தமிழர் விடுதலைக் கூட்டணியின் மறைந்த தலைவர் மு. சிவசிதம்பரம் அவர்கள் தான் சொல்லிய வாக்குக்கு அமைய நடந்தார். ஏனையவர்கள் ? தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் ஒரு பாராளுமன்றப் பதவியை வழங்கியதன் மூலம் அந்தப் பழி தீர்ந்துவிட்டதா?....
பரிசில்காரனின் "பிரபாகரன் மரணம் பற்றிய அதிர்ச்சி அறிக்கை வெளியாகும் - இலங்கை எம்.பி." என்ற பதிவுக்கு - எனது கருத்து

புகைப்படங்களுக்குக் கீழே எனது கருத்து இருக்கிறது - சில தேவைகள் கருதி இவை பிரசுரிக்கப்படுகின்றன.








காலங்கடந்தமை ஒரு காரணம்!
உலகம் அனைத்துமே இலங்கை அரசுக்குச் சார்பாக இருந்தமை இரண்டாவது காரணம்! விடுதலைப் புலிகள் மக்களுடைய நன்மையைக் கருதாமல் போரைத் தொடங்கியமை மூன்றாவது!
மக்கள் எவ்வளவு பேர் இருக்கிறார்கள் - போரை ஆரம்பித்தால் என்ன நடக்கும் என்று திட்டமிடப்படாதமையும் - மக்களை வெளியேற விடாமல் அனுமதி(பாஸ்) நடைமுறையைப் புலிகள் கடுமையாக வைத்திருந்தமை போன்ற அனைத்துக் காரணங்களுடன் ஒரு தெளிவான அரசியல் தீர்வை முன்வைக்காதமை போன்று அடுக்கிக் கொண்டே காரணங்களையும் குற்றங்களையும் சுமத்திக் கொண்டுபோகலாம்.
என்னைப் பொறுத்தவரையில் நான் கடந்த 2008 செப்டெம்பர் 10இல் விடுத்த மனிதாபிமான பகிரங்க வேண்டுகோளை (எனது கிருத்தியம் வலைப்பதிவில் குறிப்பிட்டதுபோல்) யாராவது செவிமடுத்து நடவடிக்கை எடுத்திருந்தால் இன்று அநியாயமாகக் கொல்லப்பட்ட அப்பாவிப் பொதுமக்களின் உயிர்களைக் காப்பாற்றியிருக்க முடியும்! இனியும் தாமதிக்காமல் உடனடியான உருப்படியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது அவசியம்! இதை யார் செய்வது - எப்படிச் செய்வது என்பதே எனது மனதில் எழும் தற்போதைய கேள்வி!

No comments: