அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Monday, May 18, 2009

என்ன சொல்வது? என்ன செய்வது? என்னத்தை எழுதுவது? ஒரே குழப்பம்! ஆனாலும் ......

என்ன சொல்வதென்று தெரியவில்லை – என்னால் எழுதவும் முடியவில்லை - யாருக்காக? என்பதும் ஒரு குழப்பமான கேள்வி! எல்லாமே முடிந்து விட்டதா? அப்பாவிப் பொதுமக்களுக்கு என்ன நடந்தது? அவர்களது எதிர்காலம் என்ன? யார் என்ன செய்யப் போகிறார்கள்? கருத்துரை சொல்லிய ஒபோமா - எரிக்சொல்ஹெய்ம் - ஐக்கிய நாடுகள் சபை - சர்வதேச மன்னிப்புச் சபை - ICRC மற்றும் பலரும் - முதலும் சொன்னார்கள் - காலங்கடந்தும் சொன்னார்கள் - இனி என்ன செய்வதாக உத்தேசம்?

எப்போதும் மக்களோடு இருந்தவன் என்ற வகையில் மக்களின் இன்ப துன்பங்களில் பங்கெடுத்தவன் என்ற வகையில் இந்தக் குறிப்பை (முடியாத நிலையிலும் எழுத வேண்டும்போல இருக்கிறது – அதனால்) எழுதுகிறேன்.

கடந்த 4 வாரங்களுக்கு முன்னர் 26.04.2009 ஞாயிறு மட்டும் எனது பதிவில் ஆறு (6) இடுகைகளை இட்டேன்.

1. இன்று ஈழத் தமிழர் தலைவர் தந்தை செல்வா அவர்களின் நினைவு தினம்.
2. மனம் நோக வேண்டாம். பதிவர்கள் சிலரின்…..
3. பூனைக்குக் கொண்டாட்டம். எலிக்குச் சீவன் போகிறது!
4. விடுதலைப் போராட்டத்தில் கொச்சைப்படுத்தப்பட்ட உண்ணாவிரதம் - மறந்து விட்ட உண்மைகள்.
5. பிந்திய செய்தி விடுதலைப் புலிகள் ஒருதலைப்பட்ச யுத்த நிறுத்த அறிவிப்பு
6. இன்றைய எனது இடுகைகள் அனைத்தும் அப்பாவி மக்கள் குறித்த மனப்பூர்வமான உணர்வுகளின் அடிப்படையில் எழுதப்பட்டவையே!

பின்னர் 30.04.2009 இலும் நான்கு (4) இடுகைகள் இட்டேன்.

1. பரமேஸ்வரனுடைய உண்ணாநோன்பு முடிவுற்றது - செய்தி மனநிறைவைத் தருகிறது.
2. கடவுள் (தம்பி பரமேஸ்வரன்) இருக்கிறார்! - 5 நாட்களில் என் பிரார்த்தனை நிறைவேறப்பட்டுள்ளது.
3. எனது இறுதிப் பதிவு - ஈழப் போராட்டம் - முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் - தமிழ்ப் பழமொழி
4. வவுனியாவிலுள்ள இடம்பெயர்ந்தவர்களுக்கும் உதவி தேவை - மேலும் ஒரு வேண்டுகோள்

26.04.2009 இல் எழுதிய பூனைக்குக் கொண்டாட்டம். எலிக்குச் சீவன் போகிறது என்ற கட்டுரையில் மிக அவதானமாகவே எனது கருத்துக்களைத் தெரிவித்திருந்தேன் - காரணம் நான் நாட்டைவிட்டு வெளியேறி நாளையுடன் 25 மாதங்கள் மட்டும்தான்!

இலங்கையின் அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று வந்தவன் என்ற வகையில் குறிப்பாக 10.10.2005 தொடக்கம் 13.10.2005 வரை 4 நாட்கள் ஒரு பயிற்சியின் நிமித்தம் கிளிநொச்சியில் CARITAS - HUDEC இல் தங்கியிருந்தவன் என்ற வகையிலும், அதற்கு முதல் எனது தந்தையார் கிளிநொச்சி அரச அதிபர் அலுவலகத்திலும் - மாவட்டச் செயலகத்திலும் வேலைசெய்த போது போய்வந்தது வேறு - அப்பாவி மக்கள் அனைவருடைய மன உணர்வுகளைப் புரிந்திருப்பதன் காரணமாகவுமே – சுதந்திரமாக எனது கருத்துக்களை இடுகிறேன். எனக்குச் சரியெனப்பட்டதை – நான் எனது மனச்சாட்சிப்படி இடுகிறேன். இதில் சரி பிழை இருக்கலாம். அதற்காக நியாயம் - தர்மத்தை மீறி என்னால் எதையும் செய்ய முடியாது! பிழை சொல்பவர்கள் தாராளமாக எதையும் சொல்லுங்கள் - உண்மைகளை ஒருபோதும் மறக்கவோ மறைக்கவோ முடியாது!

No comments: