அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Sunday, May 17, 2009

Congress - United Progressive Alliance Victory காங்கிரஸ் கூட்டணியின் வெற்றிக்கு வாழ்த்து - TULF

பாரதப் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி ஆகியோருக்கு எழுதிய வாழ்த்துக் கடிதங்கள்!


17.05.2009

His Excellency Dr. Manmohan Singh, M.P.
Prime Minister of India,
New Delhi.

Your Excellency,

PARLIAMENTARY ELECTIONS – 2009

The Tamil United Liberation Front rejoices with the people of India at the tremendous performance of the United Progressive Alliance at the elections and congratulates you and Respected Smt. Sonia Gandhi, for leading the alliance to Victory and for bringing the Congress back to its past glory.

May god bless you with another term of Premiership of the world’s largest and greatest democracy and also give you the strength to eradicate poverty, the dream of Mahathmaji, Nehruji and other freedom fighters.

With best wishes,

Yours Sincerely,


V. Anandasangaree,
President – TULF.

17.05.2009

மேன்மை தங்கிய டாக்டர் மன்மோகன் சிங், பா.உ
பிரதமர்
இந்தியா.

மேன்மை தங்கிய ஐயா,

நடந்து முடிந்த பாராளுமன்ற பொதுத்தேர்தலில் ஐக்கிய முற்போக்கு முன்னணி ஈட்டிய பிரமிக்கத்தக்க வெற்றியை இந்திய மக்களுடன் சேர்ந்து தமிழர் விடுதலைக் கூட்டணியும் பெருமகிழ்ச்சி அடைகின்றது. தங்களையும் மரியாதைக்குரிய சோனியா காந்தி அம்மையாரையும் கூட்டணி வெற்றி பெற வழிகாட்டியமைக்கும், காங்கிரசை அதன் பழைய பெருமைக்கு மீட்டெடுத்தமைக்காகவும் மிகவும் பாராட்டுகின்றது.

மீண்டும் ஒரு முறை உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாகிய பெருமைமிக்க இந்தியாவின் பிரதமராக தாங்கள் வரும் வாய்பு கடவுளின் ஆசீர்வாதமாகும். மகாத்மாஜீ, நேருஜீ மற்றும் சுகந்திர போராட்ட தியாகிகளின் கனவாகிய வறுமையை முற்றாக ஒழிக்க ஆண்டவன் தங்களுக்கு வேண்டிய சக்தியை கொடுக்கட்டும்.

நல் வாழ்த்துக்களுடன்,


வீ. ஆனந்தசங்கரி,
தலைவர்,
தமிழர் விடுதலைக் கூட்டணி.


17.05.2009

Hon. Smt. Sonia Gandhi, M.P.,
Chair-Person,
United Progressive Alliance,
No.10, Janpath,
New Delhi-01,
India.

Respected Soniaji,

PARLIAMENTARY ELECTIONS – 2009

The Tamil United Liberation Front rejoices with the people of India at the tremendous performance of the United Progressive Alliance at the elections and congratulates you and His Excellency Dr. Manmohan Singh, for leading the alliance to Victory and for bringing the Congress back to its past glory.

May the world’s largess and greatest democracy thrive under your guidance and leadership and march towards prosperity and total eradication of poverty.

With best wishes,

Yours Sincerely,


V. Anandasangaree,
President – TULF.

17.05.2009

கௌரவ சோனியா காந்தி, பா.உ
தலைவி
ஐக்கிய முற்போக்கு முன்னணி

மதிப்புக்குரிய சோனியாஜீ,

நடந்து முடிந்த பாராளுமன்ற பொதுத்தேர்தலில் ஐக்கிய முற்போக்கு முன்னணி ஈட்டிய பிரமிக்கத்தக்க வெற்றியை இந்திய மக்களுடன் சேர்ந்து தமிழர் விடுதலைக் கூட்டணியும் பெருமகிழ்ச்சி அடைகின்றது. தங்களையும் மேன்மை தங்கிய டாக்டர் மன்மோகன் சிங் அவர்களையும் கூட்டணி வெற்றி பெற வழிகாட்டியமைக்கும், காங்கிரசை அதன் பழைய பெருமைக்கு மீட்டெடுத்தமைக்காகவும் மிகவும் பாராட்டுகின்றது.

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாகிய பெருமைமிக்க இந்தியா தங்களின் தலைமைத்துவத்தினாலும், வழிகாட்டலினாலும் விருத்தியடைந்து நாடு வறுமையை முற்றாக ஒழித்து செழிப்புற வாழ்த்துகின்றேன்.

நல் வாழ்த்துக்களுடன்,


வீ. ஆனந்தசங்கரி,
தலைவர்,
தமிழர் விடுதலைக் கூட்டணி.

No comments: