அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Thursday, May 14, 2009

ஈழத் தமிழரைக் காப்பாற்ற - சதாமை எப்படி அமெரிக்கா கைது பண்ணியதோ அதே போல மகிந்த ராஜபக்க்ஷவையும் கைது பண்ணுவதே ஒரேவழி!

இன்றுவரை நான் வன்முறையை ஆதரிக்கவுமில்லை. இனிமேல் ஆதரிக்கப் போவதுமில்லை. எவரையும் கொல்லும் அதிகாரம் எவருக்கும் யாரும் கொடுக்கவுமில்லை. பௌத்த தர்மம் கொலையையா ஆதரிக்கிறது? - என்ற கோட்பாட்டுடனேயே இந்தக் கோரிக்கையை முன்வைக்கின்றேன்.
ஈழத் தமிழரைக் காப்பாற்ற - இலங்கையில் அமைதி ஏற்பட ஒரேஒரு வழிதான் இருக்கிறது.

ஈராக்கில் சதாமை எப்படி அமெரிக்கா கைது பண்ணியதோ அதே நடைமுறையில் மகிந்த ராஜக்ஷவையும் கைது பண்ணுவதே தமிழரைக் காப்பாற்ற ஒரேவழி!
இந்த முயற்சியை யாரேனும் ஒருவர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும். பாதுகாப்புச் சபை - போர் நிறுத்தம் என்ற பேச்சை விடுத்து தற்போது உடனடியாக செய்யவேண்டியது இலங்கை அரசை எந்த ஒரு நாடாவது தனது கட்டுப்பாட்டின் கீழ்க் கொண்டுவருவதே!
மனிதாபிமானம் - மனித உரிமை பற்றி பேசுவோர் இதற்கு ஏதாவது செய்ய வேண்டும்! ஜனாதிபதியையும் அவரது சகோதரர்களையும் ஏன் பாராளுமன்ற உறுப்பினர்கள் 225 பேர்களுட்பட சகல பாதுகாப்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகளையும் கைதுபண்ணுவதுடன் இவர்களுடைய சொத்துக்களையும் பரிசீலித்து மேலதிகமானவற்றை மக்கள் நிவாரணத்துக்கு செலவிட வேண்டும்! இதை யார் செய்வது? எப்படிச் செய்வது? எனக்கு இதுவே தற்போதைய கேள்வியாக இருக்கிறது! உங்களுக்கு எப்படி?

No comments: