அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Wednesday, May 20, 2009

மனநிலை உறுதிபெற எல்லோரும் வேண்டுவோமாக - சுரேஷ்

21.05.2009

அன்புடையீர்,

தமிழர்களின் உரிமைகள் மறுக்கப்பட்டதன் விளைவாக தமிழர்கள் அகிம்சை ரீதியான போராட்டத்தை ஆரம்பித்தனர். அந்த போராட்டம் வெற்றியளிக்காத காரணத்தினால் தமிழ் ஈழத்திற்கான கொள்கையை முன்வைத்து ஆயுத hPதியில் தமிழ் இளைஞர்கள் போராட ஆரம்பித்தார்கள். கடைசிவரை ஈழத்திற்காக போராடிய தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் இப்பொழுது முறியடிக்கப்பட்டு விட்டது.

உரிமை கேட்டு அகிம்சை, ஆயுத ரீதியில் போராடியதினால் பல தலைவர்களையும், பல்லாயிரக்கணக்கான மக்களையும், பெறுமதிமிக்க சொத்துக்களையும் இழந்ததொழிய தமிழ் இனம் வேறு ஒன்றையும் சாதிக்கவில்லை.

இன்று மக்கள் நிம்மதியாக வாழ்தால் போதும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டு விட்டார்கள். இதற்கு பாதுகாப்புத் தரப்பில் இருந்து பெற்றுக்கொண்ட பாடமே ஒரு முக்கிய காரணம்.

எமக்கு நியாயமான நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்க நாங்கள் எல்லோரும் ஆண்டவனிடம் தான் வேண்டிக்கொள்ள வேண்டும்.

இந்த யுத்தத்தினால் இறந்த அனைவரினதும் ஆத்மா சாந்தியடையவும், காயமடைந்தவர்கள், குடும்ப உறுப்பினர்களை இழந்தோரின் மனநிலை உறுதிபெற எல்லோரும் வேண்டுவோமாக.

நன்றி,

தி. சுரேஷ்

No comments: