அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Friday, June 12, 2009

மறுபிறவியாக நான் உயிர்வாழும் 3 வருடங்கள் இன்று (12.06.2006 - 12.06.2009) நிறைவடைகிறது - சிலரை நினைவுகூருவதற்காக இந்தப்பதிவு!

நீண்ட கட்டுரையாக இது இருக்கலாம் - என்னால் எழுதப்பட வேண்டும் என ஒரு சக்தி தூண்டியதால் காலங்கடந்து தேவைகருதி இதைப் பதிவிடுகிறேன். இதைப்பற்றி தாராளமாக விமர்சனம் செய்யுங்கள். ஏனெனில் நான் இறந்து விட்டேன் என்றே என்னை எதிரியாக நினைப்பவர்கள் கருதுகிறார்கள். ஆனால் நான் ஒருபோதும் எதிரியாக யாரையும் நினைப்பவனும் அல்ல.அப்படிப்பட்ட கொடுமையான எண்ணமுடையவனும் அல்ல.

1984 - 85களில் நான் அளவெட்டி ஸ்ரீ சிவசுப்பிரமுனிய ஆச்சிரமத்தில் வேலை செய்த காரணத்தாலும் யோகர் சுவாமிகளைப் பற்றி அதிகம் அறிந்து அவர்பால் என்மனம் நாடியதாலும் நான் எப்போதும் நற்சிந்தனையில் வரும் தன்னைப்போலச் சகலமும் ஓம்புக விண்ணைப் போல வியாபகமாகுக கண்ணைப் போலக் காக்க அறத்தை என்ற அடிகளையும் - ஒரு பொல்லாப்புமில்லை - எப்பவோ முடிந்த காரியம் - நாமறியோம் - முழுதும் உண்மை என்ற 4 மகாவாக்கியங்களையும் மனதிற் பதித்து என் கொள்கைகளாகக் கொண்டிருப்பதால் யாரும் எனக்கு எதிரிகள் இல்லை. அவர்கள் தாமாக நினைப்பதற்கு நான் ஒன்றும் செய்ய முடியாது!
நம்மேல் அன்பு இல்லாதவர்கள் மேலும் நாம் அன்பு உள்ளவர்களாயே இருக்க வேண்டும் என்ற நாவலரின் வாக்கியத்தை மில்க்வைற் தொழிலதிபர் சிறு துண்டுப் பிரசுரமாக வெளியிட்டதை 1982; ஆம் ஆண்டுகளிலேலே நான் நிறைய வாங்கிப் பலருக்கும் கொடுத்திருக்கிறேன்.

இன்றும் புலம்பெயர்ந்து சுவிற்சர்லாந்தில் இங்கு நான் பலருக்கும் என்னால் முடிந்த உதவிகளைச் செய்து கொண்டே வருகின்றேன். அது என்னுடைய உயிரோடு கலந்துவிட்ட ஒரு இயல்பு. அதை மாற்ற ஒருவராலும் முடியாது – நான் இறந்தால் ஒழிய!

மூன்று வருடங்களுக்கு முன் கடந்த 12-06-2006 திங்கட்கிழமை மாலை 6.45 மணியளவில் மூளாயில் எனது வீட்டு முற்றத்தில் வைத்து (மூன்றாவது தடவையாகவும் என்னைச் சந்திக்க வந்தவரில் ஒருவர் இருந்தார்) மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு இளைஞர்களுடன் கதைத்துக் கொண்டிருந்த வேளையில் திடீரென டுப் என ஒரு சத்தம் மட்டுமே கேட்டது! என்மீது சிறிய கைத்துப்பாக்கியால் சுட்டது இரண்டாவது தடவை அவர்கள் அதை அழுத்தியபோதே கண்டேன் - ஆனால் தெய்வத்தின் திருவருள் அது வெடிக்கவில்லை இதனால் அருகிலிருந்த எனது மைத்தனர் கத்திக் கல்லெடுத்துக் கலைக்க – அருகில் தன் வீட்டு வாசலில் இன்னொருவருடன் கதைத்துக் கொண்டிருந்த கிறீஸ்தவப் பாதிரியார் - மற்றும் வீதியால் சென்றவர்கள் வரவும் - வந்தவர்கள் மோட்டார் சைக்கிளில் ஓடவும் - இரண்டு வீட்டு வளவுகளுக்கு அப்பால் விளையாடிக்கொண்டிருந்த இந்து இளைஞர் மன்ற அங்கத்தவர்களும் ஏனைய இளைஞர்களும் வர நான் அப்படியே எனது வீட்டு முன்றலில் தரையில் படுக்க விரும்பி எனது மைத்துனருடைய உதவியை நாடினேன்.

எனது மனைவி ஐயோ கடவுளே எனக் குளறியடித்தவண்ணம் வெளியே வர நான் சொன்னது எனக்கு ஒன்றுமில்லை. நான் சாக மாட்டேன். முதலில் போய் தலையணையையும் துவாயையும் எடுத்து வரும்படி சொன்னேன்.

எனது மகன் (அப்போது அவனுக்கு 4வயது) வீட்டின் சுவருக்கருகில் என்னைப் பார்த்து விக்கி விக்கி அழுதது இன்றும் என் நெஞ்சை விட்டு அகலவில்லை.

அதிகம் பேர் என்னைச் சூழ்ந்து நிற்க நானே சொன்னேன் - கொஞ்சம் விலகி நில்லுங்கள் என்றேன். ஊரிலுள்ள ஓரிரு பெரியவர்கள் உடனடியாக எமது கூட்டுறவு வைத்தியசாலைக்குப் புதிதாக வந்த அம்புலன்ஸ் வண்டியை எடுத்துவரச் சென்று அங்கு எனக்காக வாதாடி – சூடுபட்டு ஒரு 20 அல்லது 25 நிமிடங்களின் பிறகுதான் வண்டியே வந்தது. (சூடுபட்ட காரணத்தால் பொலிஸ் விசாரணை நடைபெறும் என்பதால் வண்டியை அனுப்ப ஒத்துக்கொள்ளாத நிர்வாகத்துடன் - அவசரத்துக்கு உதவாத வண்டியை அடித்து நொறுக்கி விடுவோம் என்ற பின்னரே வண்டி வந்ததாக பின்னர் நான் அறிந்தேன்) அதிலும் அவசரத்தில் என்னை ஏற்றிவர்கள் மாற்றிப் படுக்க வைத்துவிட்டார்கள். நானாக எழும்பி ஓடும் வண்டியில் எனது மைத்துனரின் உதவியுடன் திரும்பி அதில் படுத்துக் கொண்டேன்.
யாழ்ப்பாண வைத்தியசாலைக்கு செல்லும் வரைக்கும் எனது மைத்துனனிடம் இப்போது எங்கே போகிறோம் என்று கேட்டபடி நினைவோடு – (நினைவை இழக்காமல்) இருந்ததும் ஞாபகம்.

முதலுதவிப் பயிற்சி வகுப்பு நடத்தியமையாலும் அதில் ஓரளவு பயிற்சி இருந்தமையாலும் எனது உயிரை நான் ஓரளவு என்னால் காப்பாற்ற முடிந்தது. யாழ் வைத்தியசாலையில் அனுமதி பெற சிறிது பிரச்சனை இருந்தது. அதற்கிடையில் கொழும்புக்குத் தகவல் தெரிந்து எமது கட்சியின் தலைவர் திரு. வீ. ஆனந்தசங்கரி அவர்கள் வேண்டியவர்களுடன் தொடர்பு கொண்டதுடன் என்னுடனும் பேசினார்.

யாழ்ப்பாண TULF அலுவலகத்தில் அன்று பொறுப்பாக இருந்த தம்பி அங்கு கடமையிலிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர்களுடன் வந்து உதவியமையையும் நான் மறந்துவிட முடியாது. எனது ஊர் இளைஞர்களும் பெரியவர்களும் இரவுமுழுவதும் யாழ்ப்பாண வைத்திய சாலையில் இருந்ததையும் - எனது வீட்டில் எனது மனைவிக்கும் எனது இரு பிள்ளைகளுக்கும் ஆறுதல் சொன்னவர்களையும் என்னால் மறக்க முடியாது. இரவு இரவாக என்னை முதலில் எக்ஸ்றே எடுத்து பின்னர் சத்திர சிகிச்சைப் பிரிவுக்கு எடுத்துச் சென்று முற்புறமும் பிற்புறமும் தையலிட்டார்கள். இடதுபக்க மேற்புறத்தில் உள்ளே சிந்திய இரத்தத்தை எடுப்பதற்காக வெட்டி ஒரு குழாய் செருகப்பட்டது. குறிப்பிட்ட பகுதிகளை மட்டுமே விறைக்கச் செய்து இந்த சிகிச்சைகளை மேற்கொண்டிருந்த மாணவ வைத்தியர்களில் இருவர் பேசிய பேச்சு இப்போதும் எனது நினைவில் மறவாமல் நிலைத்திருக்கிறது. ஒருவர் கேட்டார் எப்படியடா இவன் தப்பினவன்? மற்றவர் எனக்கும் தெரியவில்லை - இதுதான்டா அதிர்ஸ்டம்(Luck)! என்னிடமும் சில கேள்விகள் கேட்டார்கள். மூச்சு எடுக்க சிரமப்பட்டதால் உடனடியாக எனக்கு ஓக்சிசனும் வழங்கப்பட்டது.

நள்ளிரவு பலாலி இராணுவத் தலமையக வைத்தியர்கள் வந்து உடனடியாக என்னைப் பலாலிக்கு எடுத்துச் செல்ல பொது மருத்துவரிடம் கோரிக்கை விடுத்தனர். உடனடியாக மறுத்த வைத்திய கலாநிதி இரவிராஜ் அவர்கள் என்னிடம் இன்னும் முழு சிகிச்சையும் முடிவுபெறவில்லை அதனால் கொஞ்சம் பொறுக்கும்படி கோரினார் நானும் அப்படியே அவர்களிடம் சொன்னேன்!
அன்றைய இரவு முழுவதும் செய்தி கேட்ட பலர் வந்து என்னைப் பார்த்துச் சென்றார்கள். அடுத்தநாள் செவ்வாய்க்கிழமை மதியம் 12 மணியளவில் என்னைப் பலாலி இராணுவ வைத்தியசாலைக்கு கொண்டுசென்று இரண்டு நாட்களின் பின்னர் கொழும்பு பொது வைத்தியசாலைக்கு மாற்றினர்.

ஒரு மனிதனுக்கு 9 வாசல்கள் - சிவபுராணத்தில் மிக அழகாக மாணிக்கவாசகர் சொல்லியுள்ளார் - புறந்தோல் போர்த்தெங்கும் புழுஅழுக்கு மூடி மலம் சோரும் ஒன்பது வாயிற் குடிலை மலங்கப் புலனைந்தும் வஞ்சனையைச் செய்ய என்று. 9 வாசல்கள் இருக்க வேண்டிய எனக்கு மேலதிகமாக 5 வாசல்கள் - ஆனால் எல்லாம் இன்று அடைக்கப்பட்ட வாசல்களே!
எனது உயிரைக் காப்பாற்றிய பெருமையுடைய எனது ஊர்மக்கள் அனைவருக்கும் - வைத்தியர்கள் மற்றம் சுகாதார சேவை உத்தியோகத்தர்கள் - பலாலி இராணுவ வைத்தியர் குழுவினருக்கும் - அங்கு என்னை உடனிருந்து கவனித்த உத்தியோத்தர்கள் - ஊழியர்கள் அனைவருக்கும் - கொழும்புக்கு என்னைக் கூட்டி வந்த விமானப்படை உத்தியோகத்தருக்கும் -கொழும்பில் என்னைக் கவனித்த வைத்திய கலாநிதிகள் - ஜி.எஸ்.டி. சில்வா, ஆனந்தராஜா, ரகுபதி மற்றும் உதவியாளர்கள் உத்தியோகத்தர்கள் அனைவருக்கும் - என்னை வைத்தியசாலையில் வந்த பார்வையிட்டவர்கள் - தொலைபேசியில் தொடர்பு கொண்டவர்கள் அனைவருக்கும் மறவாத நன்றிகளை இந்நாளில் நான் மீண்டும் தெரிவிக்க விரும்புகின்றேன்.

என்னை வைத்தியசாலையில் அருகிலிருந்து கவனித்த என்னுடைய அம்மா, மனைவி பிள்ளைகள், தம்பி, மற்றம் உறவினர்கள் நண்பர்கள் முக்கியமாக TULF அலுவலக உத்தியோகத்தர்கள் அனைவருக்கும் மறவாத நன்றிகள் உரித்தாகட்டும். எனது தாயாரை வீட்டுக்குப் போகச் சொல்லிவிட்டு என்னுடன் வந்து தங்கிய ஒரு சில நண்பர்களை நான் கட்டாயம் குறிப்பிடவே வேண்டும்.

என்னைப்பற்றி வந்த ஒரு சிலசெய்திகளையும் இங்கு பதிவிட விரும்புகிறேன்.

NGO official shot, injured in Jaffna

[TamilNet, Monday, 12 June 2006, 15:07 GMT]
A senior member of the Jaffna branch of the White Pigeon, a non government organization, was shot and seriously injured by unidentified armed men at his house in Moolai in the Jaffna peninsula, around 7 p.m., Monday. Thangarasa Mukunthan, 41, was former member of the Jaffna Municipal Council.

He was rushed to Jaffna teaching hospital.

White Pigeon is an organization which conducts awareness programmes among the masses about landmine danger, and assists the disabled by supplying tools and materials needed for them to sustain themselves on their own by designing self employed projects.

-----

University Teachers for Human Rights (Jaffna)
Sri Lanka
UTHR(J)
Information Bulletin No. 40
Date of Release: 15th June 2006
Flight, Displacement and the Two-fold Reign of Terror
1. Introduction
1.1 LTTE attacks on Mr. Anandasangary’s followers:
1.1 LTTE attacks on Mr. Anandasangary’s followers:
While those who championed the peace process that is now in a state of collapse have been pointing the finger at ‘paramilitaries’ and ‘spoilers’, they are blind to the old disease that made the peace process unworkable from the start – the LTTE’s constant targeting of political opponents. No one has called the respected democratic politician Mr. Anandasangary a paramilitary. Now with the LTTE’s own party the TNA in the doldrums as time ordained, the LTTE appears determined to eliminate Anandasangary’s loyalists.
About 7.00 PM at his Wellawatte residence in Colombo on 10th June, the LTTE shot dead Mr. Ramachandran (67) brother of Mr. Anandasangary’s former secretary, Satchidanandam, who too has moved out of Jaffna. Ramachandran’s daughter is married to Jeeva of the EPDP. Thangarasa Thangamuhunthan who is an Anandasangary loyalist and former member of the Jaffna Municipal Council that had defied the LTTE on the opening of the Public Library was summoned by two LTTE men who came on a motor cycle and shot at his home in Moolai, Jaffna. He was warded at Jaffna Hospital.[Top]
----
எப்படி ஏன் எதற்காக நான் இன்னும் உயிர் வாழ்கிறேன் என்பதுதான் எனக்குப் புரியாத புதிராக இருக்கிறது!

என்னை எதற்காகச் சுட்டார்கள் என்று தெரியாத நிலையில் தமக்கு எதிரான கருத்துடையவர்களை அவர்கள் கொன்று தீர்த்ததுதானே வரலாறு! எனது அரசியல் சம்பந்தமான ஒரு கருத்தையும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

அமிர்தலிங்கம் சகாப்தம் நூலில் அத்தியாயம் 44ல் தொல்லை தீர்ந்ததென்று போய்விடுவேன் - தருமர் ஆலால் நினைவுக் கூட்டத்தில் அமிர் - இந்தத் தலைப்பில் அமரர்கள் தருமலிங்கம் ஆலாலசுந்தரம் ஆகியோரின் படுகொலைகளுக்கு இரங்கல் தெரிவித்து சென்னையில் நடந்த கூட்டத்தில் பேசிய பேச்சு குறிப்பிடப் பட்டிருக்கிறது. அதில் ஓரிடத்தில்
கொலை புதுடில்லியிலும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. கேரளத்திலும், புதுடில்லியிலும் ஸ்ரீ ராஜிவ் காந்தி அவர்கள் ஆற்றிய உரை, இந்த இருவரது கொலைகளும் அவரது உள்ளத்தில் ஏற்படுத்தி உள்ள தாக்கத்தைக் காட்டுகிறது. சிலர் தமிழர் விடுதலைக் கூட்டணியைப் பயப்படுத்த இக்கொலை செய்யப்பட்டதாகச் சொல்கிறார்கள். இதனைக் கண்டு நாம் பின்வாங்குவோம் என்று கூறினால் நாம் எப்பவோ ஒதுங்கியிருப்போம். 1972ஆம் ஆண்டு, சிங்கக் கொடியை எரித்த இளைஞர்களைத் துரத்தி வந்த பொலிஸ்காரனைத் தடுத்து சேட் பட்டனைக் கழற்றி என் நெஞ்சைக் காட்டி இயலுமானால் சுட்டுவிட்டுப் போ என்று தெரிவித்தவன் நான். நாங்கள், என்று விடுதலைக் களத்தில் இறங்கினோமோ அன்றே மரணம் வரும் என்றுதான் இறங்கினோம். எனக்கு ஏதும் நடந்தால் என் தொல்லை முடிந்தது என்று போய்விடுவேன். எனக்கு என்ன நட்டம்? தர்மலிங்கம் மரணித்துவிட்டார். அவருக்கு என்ன நட்டம்? ஆலாலசுந்தரத்துக்கு என்ன நட்டம்? மரணத்தைக் கண்டு அஞ்சுவார்கள் என்று எண்ணி எம்மை வெருட்ட நினைக்கக் கூடாது. அங்கே யாழ்ப்பாணத்தில் இலட்சியத்தைக் கடந்து வெறியாட்ட நிலை நடக்கிறது,என்றுள்ளது.

இதைக் குறிப்பிடுவதன் காரணம் இன்று மக்கள் அல்லோல கல்லப்பட்டுக்கொண்டிருக்கும் நிலைக்கும் அன்றைய அவரது பேச்சுக்கும் தீர்க்கதரிசனமான தொடர்பு இருப்பதைக் குறிப்பிடவே!
என்னுடைய சம்பவத்தையும் இதில் நான் தொடர்பு படுத்துவது பொருத்தமானதென்றே நானும் இதில் கருத்திட்டேன். இது 1985ல் நடந்தது. இந்நிகழ்வுக்குப் பின்னர் 1988ல் செனட்டர் நடராசா (படுத்திருந்த வேளையில் சுடப்பட்டார்) வேல்முருகு மாஸ்டர் எஸ். சம்பந்தமூர்த்தி 1989ல் அ. அமிர்தலிங்கம் வி. யோகேஸ்வரன் 1990ல் சாம். தம்பிமுத்து திருமதி. கலா தம்பிமுத்து 1997ல் அ. தங்கத்துரை (இவருடன் தமிழறிஞர்கள் ஐவர்) 1998ல் திருமதி. சரோஜினி யோகேஸ்வரன் எஸ். நமசிவாயம் பொன். சிவபாலன் (இவருடன் மாநகரசபை ஊழியர்கள் பலர்) பொன். மதிமுகராஜா 1999ல் கலாநிதி நீலன் திருச்செல்வம் 2000ல் நிமலன் சவுந்தரநாயகம் 2004ல் ஜோசப் பரராஜசிங்கம் அரியநாயகம் சந்திரநேரு 2006ல் ந. இரவிராஜ் சி.சிவமகாராசா போன்றோர் கொல்லப்பட்டது அனைத்துமே என்ன பலனைத் தந்தன.
மக்களுக்காக இன்று துணிந்து குரல் கொடுப்பது யார்? மாற்றுக் கருத்தடையவர்களும் கொல்லப்படுகிறார்கள். படித்த சமூகத்தில் வாழும் சான்றோரையும் கொன்றுதீர்க்கிறார்கள். விடுதலை இதனால் வருமா? அறிவிலும் மக்களிடத்தில் துணிந்து கருமம் ஆற்றும் ஆற்றலும் அனுபவமும் கொண்ட பலர் இருந்த இடத்தை விட்டு தமதுயிரைக் காக்க வெளிநாடுகளுக்கு ஓடிக்கொண்டிருக்கிறார்கள். யாருக்கான போராட்டம் இப்போது நடைபெறுகிறது? சற்று நிதானமாக ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டிய ஆராயவேண்டிய விடயங்கள்!

ஓவ்வொரு தடவையும் நடைபெற்ற சம்பவங்களை சற்று விபரமாக இனிவரும் தொடர்களில் நான் அப்பாவிப் பொது மக்களின் நன்மைகருதி எழுதவிருக்கின்றேன். பத்திரிகைகள் அனைத்துமே ஒருபக்கச் சார்பாக அரசைச் சாடி அரசுக்கு யோசனைகள் சொல்கின்றன. நான் ஏதோ அரசுக்கு ஆதரவாக கருத்து வெளியிடுகிறேன் என்ற எண்ணம் வாசகர்களுக்கு ஏற்படுமானால் அது ஒரு மிகமிக முட்டாள்தனமான எண்ணமெனவே நான் குறிப்பிடுவேன். இதற்காக நான் எவரையும் கோபிக்க முடியாது. அவரவர் அறிவு அவ்வளவுதான் என்பதை மாத்திரம் என்னால் சொல்ல முடியும். இதற்காக நான் சில விடயங்களை ஆதாரங்களுடன் சில மேற்கோள்கள் காட்டி எழுதவிழைகிறேன்.

வாசகர்கள் வெறுமனே கூப்பாடுபோடும் ஒரு தலைப்பட்சமான நபர்களுக்கோ அல்லது பத்திரிகைகளுக்கோ அல்லது பக்கச் சார்புடைய இணைய வலைத் தளங்கள் மற்றும் பதிவுகள் இவற்றுக்குச் செலவிடும் நேரத்தை நியாயமான நடந்த உண்மைகளை எதுவும் திரிக்காமல் எழுதும் என்னுடைய பதிவில் ஒரு சில நிமிடமாவது செலவிட்டுத் தங்கள் கருத்துக்களை பெயர் குறிப்பிட விரும்பாவிடினும் உள்ளத்தைத் தொட்டு மனச்சாட்சிப்படி தமது கருத்தக்களைத் தெரிவிக்க வேண்டும் எனத் தயவாக வேண்டிக் கொள்கின்றேன்.
நான் தவறாக ஏதாவது கருத்துக்களைத் தெரிவிக்கிறேன் அல்லது மேலதிக பொய்யான தகவலைத் திணிக்கின்றேன் எனக் கருதினால் உடனடியாக சுட்டிக் காட்டலாம். இந்த விடயத்தில் நான் கடந்த 01.09.2008 திகதி எழுதிய வாசகர்களுக்கு ஓர் பணிவான வேண்டுகோள் என்பதில் எழுதிய சொற்களை மீள நினைவுபடுத்த விரும்புகிறேன். அதில் தமது கருத்துக்களை மற்றவர்கள் மனது புண்படாத விதத்தில் இடுவது நலமென நான் கருதுவதால் என்று குறிப்பிட்டுள்ளேன். நீங்கள் எப்டியானாலும் என்னை விமர்சிக்க நான் இந்தத் தொடரில் வாசகர்களுக்கு முழு உரிமையும் அளிக்கின்றேன். ஆனால் அதற்காக மோசமான வார்த்தைகளைப் பாவிக்காமலிருக்கவும் தயவுடன் வேண்டுகிறேன்.
இன்று ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வீரர்களில் பலருக்கு (ஒரு சிலரது நடத்தைகளால் அனைத்து வீரர்களுக்கும் கெட்ட பெயர் ஏற்பட்டது ஒருபுறம் சில வேளைகளில் பொறுப்புமிக்கவர்களாலும் அப்படிப்பட்ட செய்கைகள் நடைபெற்ற சம்பவங்களும் நிறைய உண்டு) மக்களுடன் செவ்வையாகப் பேசவே தெரியாது என்பது எனது கருத்து. அது எந்த இயக்கமாக இருந்தாலும் சரி மேலிடத்திலுள்ளவர்கள் இதுபற்றி அலட்சியமாக இருப்பதே மிகவும் வேதனை. சில வேளை அவர்களும் அப்படியோ தெரியாது.
நான் ஒரு தடவை வெளியே போ (போடா என்று சொல்லவில்லை) என்ற வார்த்தையை யாழ் நூலகத் திறப்பு விழாச் சர்ச்சைகளின்போது மாநகர சபையில் இரண்டு கிராம சேவையாளர்களுக்குக் கத்தினேன்.
மற்றொருமுறை தமிழர் விடுதலைக் கூட்டணி அலுவலகத்தில் ஏகப் பிரதிநிதிப் பிரச்சனை வந்தபோது இந்தக் கட்சியில் இருந்துகொண்டு அவர்கள் செய்யும் அனைத்து அக்கிரமங்களுக்கும் நாம் ஆதரவு அளிக்க முடியாது அவர்களுடைய பதிவு செய்யப்பட்ட கட்சி இருக்கிறது அங்கு போய் உங்கள் பணிகளைச் செய்யுங்கள் என்று அன்று கூட்டத்தில் அவர்களின் பிரதிநிதிகளாக செயற்பட்டவர்களைப் பார்த்துச் சொன்னதும் ஞாபகம். இதை வவுனியாக்கிளைத் தலைவர் நான் குடிபோதையிலிருந்து கெட்ட வார்த்தைகளால் திட்டினார் என்று அறிக்கை விட்டு அது தினக்குரலில் வெளிவந்தபோது நான் அதற்கு மறுப்பைத் தெரிவித்த போதும் அவர்கள் பிரசுரிக்காத காரணத்தால் மறைந்த பாராளுமன்ற உறுப்பினரும் எனது நண்பருமான ந. இரவிராஜ் அவர்களுக்கு எழுதிய கடிதத்துக்கு அவர் பதிலளித்து தினக்குரலில் அச்செய்தி வெளியானதையும் இங்கு குறிப்பிடுவது பொருத்தமானதெனக் கருதுகிறேன்.
இதேபோல இன்னுமொரு தடவை நான் கூட்டணியின் பொதுக் குழுக் கூட்டத்தில் அன்றைய சந்திரிகா அரசு தீர்வுத் திட்டத்தை பாராளுமன்றத்தில் வைக்க இருக்கின்றவேளையில் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும் என்ற கருத்தை மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவர் ஏற்கனவே அவர்களுக்கு (விடுதலைப் புலிகளுக்கு) வாக்குக் கொடுத்தவிட்டு வந்தவர்கள் போல பேசியபொழுது கலாநிதி நீலன் அமைதியாக இருந்தபோதும் கெயலாளர் நாயகம் திரு. சம்பந்தன் தன் மனச் சாட்சிப்படி வாக்களிப்பேன் என்று கூறி வெளியேறிய கூட்டத்தில் நான் சொன்னேன் 5 பாராளுமன்ற உறுப்பினர்களும் நீங்கள் பாராளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப் பட்டால் நீங்களே ஒன்று கூடி முடிவை எடுங்கள் என்று! இங்கு நான் உணர்ச்சிவசப்படவில்லை. எமது மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவரே குமுறி எழுந்தார்கள்.
இவற்றை நான் குறிப்பிடுவதன் காரணம் கட்சியினுள்ளும் மாநகரசபையில் நடைபெற்ற சம்பவங்களும் என்மீது அபாண்டமான பழியை அண்டர் கூட்டங்கள் சொல்லி என்னைச் சுட்டக் கொல்லும் அளவுக்குப் பிரச்சனை போயிருக்கிறது.
இதில் இன்னுமொரு காரணம் துரோகிக்கு விழா எடுக்கக் கூடாது என்ற நிலையில் அவர்களது(விடுதலைப் புலிகளது) எடுபிடிகளால் கடிதம் எழுதப்பட்ட பின்னர் நாம் ஏற்பாடுசெய்திருந்த அமிர்தலிங்கம் அவர்களின் நூல் வெளியீட்டு விழாவும் அவர்களுக்கு கோபத்தை அல்லது வெறுப்பை ஏற்படுத்தியிருக்கலாம்.


இதற்கிடையில் நூலகத் திறப்பு விழா பிரச்சனையில் முதல்வருடன் பிரச்சனைப்பட்ட போது நானும் கூடவே விவாதித்த காரணமும் அடங்கும். இதை முதல்வர் தனது பேட்டியில் கூறியுமிருக்கிறார்.

Special Report No: 16
Date of release: 18th March 2003.
Child Conscription and Peace: A Tragedy of Contradictions
11. Strengthening (One Party) Democracy in the North-East
The Jaffna Public Library: Closing Minds & Rivers of Blood
Whoever ordered the burning of the Library in 1981 it was a vindictive act for which the UNP government was responsible. Apart from the irreplaceable materials destroyed, the Library was a public utility, an indispensable source of modern knowledge, books and periodicals to growing generations.
Moves to reconstruct the Library were begun under the last PA government and the execution fell to the newly elected Municipal Council in 1998. The work that was delayed by LTTE threats and its murder of two TULF mayors Sarojini Yogeswaran and Sivapalan, was completed under Mayor Sellan Kandaiyan, a TULF stalwart who had taken on the dangerous job. The Council was unanimous in scheduling the opening for 14th February since its term was to end on the 17th .
Although Kandaiyan’s task was made the harder by his caste status, he turned out to be among the most competent of Mayors. He maintained an excellent working relationship with other councillors, the TULF being in a minority of 9 members out of 23, and functioned by consensus. In passing unanimously resolutions opposing arbitrary taxation by the LTTE and its claim to be sole representatives, the Council became a symbol against totalitarianism. It also became a model of consensual politics. The rebuilt Library kept the spirit of its founders as a monument to co-operation for the public weal. None of this was to the LTTE’s liking. It encouraged TNA elements and its agents to stop the opening. As in the past, if caste could be used to its advantage, the LTTE was prepared to encourage or at least allow it.
Having failed to get the Council to back down, the incidents in Delft and Manipay provided the context for a more direct use of terror. On the 13th Morning, the day after the Manipay incident, Ilamparithy (alias Aanjeneyar), the LTTE’s Jaffna political chief, walked into the Council and sought a meeting with the Mayor. The Mayor talked to Ilamparithy in the presence of Muhunthan, a young TULF councillor. We give the essence of the exchange as gathered from reliable sources.
Ilamparithy told the Mayor that the Leader (Prabhakaran) wants them to stop the opening, and failure to comply will land them in the ‘other’ list [i.e. of ‘traitors’]. The Mayor stuck to his position of being bound by the collective decision of the Council to open the library on the 14th. Ilamparithy raised objections to the participation of councillors from ‘traitor’ groups. The Mayor stood by those with whom he had jointly run the Council.
Then Muhunthan chipped in, “Apart from other TULF leaders, you killed Mayors Sarojini and Sivapalan and placed so many obstacles before the Council. What moral right have you now to stop us opening the Library?” “Those killed were all traitors”, replied Ilamparithy. “We cannot accept that, nor will the people”, rejoined Muhunthan.
Ilamparithy delivered a blunt parting shot, “If you go ahead with the opening, there will be a blood bath as happened at the International Tamil Conference in 1974…It may be far worse leading to many more deaths [than the 9 then].”
Among the LTTE fronts present, was the International Students’ Union of Gajendran with some student agitators. A councillor from an opposition party told the students, “A Library is meant to create a learned people. It is not right for you students to oppose the opening.” TNA MP Sivajilingam suggested a compromise, that instead of actually opening the Library, they could just perform the ceremony of boiling milk. Gajendran told him bluntly, “It is we who made you an MP, do not tell us what to do.” Sivajilingam smiled sheepishly. Gajendran, it was, who ran the massive operation of vote impersonation by university students, to which several TNA MPs owe their good fortune!
Mayor Kandaiyan stuck by his stand of collective responsibility to the last. The Commissioners met and bowed to the inevitable. As a mark of protest they resigned collectively. Talking to the Press, Kandiayan hinted, “I am a man with a family.” TULF leader Mr. Anandasangari, who was billed to open the Library, recounted in a moving statement how the Library had helped him to advance in life. He added in a barbed remark, “I can understand Thenmaratchy traders [an LTTE front] opposing the opening. What I cannot fathom is university students trying to stop the opening of a library!”
The LTTE was very angry over the collective resignations and Anandasangari’s statement. However cowardly the TULF leadership of the moment, the LTTE knows that the considerable body of ordinary hard core TULF supporters, though passive, believes strongly that the LTTE betrayed and destroyed the Tamil struggle.
The LTTE let it be known that it had wanted the ruins of the destroyed Library preserved as a monument to the crime against the Tamil people. The LTTE’s selectiveness in the memory of crimes against the Tamil people it wants to preserve, is meant to perpetuate its politics of hate.[Top]
-------
என்னைத் துப்பாக்கியால் சுட்ட அன்றைய தினமே அவர்களது(விடுதலைப் புலிகளினது) இணையத்தளச் செய்தியில் இனந் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார் என்றும் செய்தி வெளியிட்டது.

- Tamil Daily News from Tamileelam. Updated Daily. -
12.06.2006 திங்கட்கிழமை

யாழ்ப்பாணக் குடாநாட்டின் பல பகுதிகளில் இன்று இரவு தாக்குதல்கள் நடத்தப்பட்டிருக்கின்றன.
யாழ் நகரத்திலுள்ள டொன் பொஸ்கோ சந்தியில் இன்று இரவு சிறீலங்கா படையினரை குறிவைத்து இனந்தெரியாத நபர்களால் கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் ஏற்பட்ட சேத விபரங்கள் தெரியவரவில்லை.
இதேவேளை இன்று இரவு யாழ் இந்துக்கல்லூரிப் பகுதியில் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்ட சிறிலங்கா படையினருக்கும் இனந்தெரியாத நபர்களுக்கும் இடையில் நேரடித் துப்பாகக்கிச் சமர் நடைபெற்றள்ளது.
15 நிமிடங்களுக்கு மேலாக இந்த சண்டை நீடித்ததாகவும் இதில் ஒரு படையினன் காயமடைந்ததாகவும் அங்கிருந்த கிடைத்த செய்திகள் தெரிவித்தன.
இதற்கிடையில் யாழ் மூளாய் பகுதியில் வைத்து யாழ் மாநகர சபையின் முன்னாள் உறுப்பினரான தங்கராஜா முகுந்தன் என்பவர் இன்று இரவு இனந்தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தலைமையிலான அமைச்சர் குழுவொன்று இன்று நோர்வேக்கு விஜயம் செய்ததை எதிர்த்து நோர்வே வெளிவகார அமைச்சு முன்பாக அங்குள்ள தமிழ் மக்கள் கண்டன ஆhப்;பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.
போர் குற்வாளிகளான முன்ளாள் செர்பிய அரசுத் தலைவர் சிலோபதான் மிலோசவிச்சும் ஈராக்கின் முன்னாள் அரசுத் தலைவர் சதாம் குசேனும் கூட செய்திராத அளவுக்கு பச்சிளம் குழந்தைகளை கொடூரமாகக் கொலை செய்து கட்டித்தொங்கவிட்ட சிறீலங்கா அரசின் பிரதிநிதிகள் நீதிக்குப் புறம்பான இந்தக் கொலைகளுக்காக சர்வதேசப் போர் குற்றவியல் நிதிமன்றத்தில் நிறுத்தப்பட வேண்டும் என்று கோரியே இந்த ஆர்பாட்டப் பேரணியை நடத்தியதாக பேரணியில் கலந்துகொண்ட பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் தலைமையிலான விடுதலைப்புலிகளின் உயர் மட்டக் குழுவினர் இன்று சுவீட்சர்லாந்தின் வெளிவிவகார அமைச்சு அதிகாரிகளுடன் நட்புரீதியான பேச்சுவார்த்தை ஒன்றை நடத்தியுள்ளனர்.
நோர்வே தலைநகர் ஒஸலோவிலிருந்து நேற்றிரவு சுவீசுக்கு சென்ற அவர்களுக்கு சுவிஸ் வாழ் ஈழத் தமிழர்கள் சு10ரிச் விமான நிலையத்தில் தமிழீழ தேசியக் கொடியையும் ; சுவிஸ் நாட்டின் தேசியக் கொடியையும் தாங்கிய வண்ணம் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதேவேளை நேற்று மாலை சுவிட்சர்லாந்தக்கு புறப்படுவதற்கு முன்பு ஒஸ்லோ விமான நிலயத்தில் வைத்து எமது செய்தியாளருக்கு கருத்துத் தெரிவித்த தமிழீழ அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன். மிக மோசமான மனிதப் படுகொலைகளை செய்துவரும் சிறிலங்கா அரசாங்கத்தக்கு நோர்வே நாடு வழங்கிவரும் உயர்ந்த மதிப்பும் கௌரவமும் தமிழ் மக்கள் மத்தியில் ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது என்று கூறியுள்ளார்.

தமிழீழ தாயகத்தில் அப்பாவித் தமிழ் மக்கள் மீது நடாத்தப்படும் மிகக் கொடுமையான படுகொலைகளை நிறுத்தக்கோரியும், தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பினை ஐரோப்பிய அரசு தடைசெய்ததை கண்டித்தும் இன்று முதல் எதிர்வரும் 18ம் திகதி வரை ஈழத் தமிழர்கள் புலம் பெயர்ந்து வாழும் ஐரோப்பிய நாடுகளில் கறுப்புப் பட்டி அணியும் போராட்டம் நடத்தப்படுகிறது

வவுனியா மாவட்டம் செட்டிகுளம் பாரதிபுரம் கிராமத்தில் நடத்தப்பட்ட கிளைமோர்த் தாக்குதலில் சிறிலங்காப் படையினர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
நெளுக்குளம் செட்டிக்குளம் வீதியில்; சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த படையினரை இலக்குவைத்தே இன்று காலை 8 மணியளவில் இந்தத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

வன்னிப் பெருநிலப்பரப்பிலுள்ள வவுனியா வடக்கு நயினாமடு கிராமத்தில் நடத்தப்பட்ட கிளேமார்த் தாக்குதலில் நெடுங்கேணி பிரதேச சபை செயலாளர் உட்டபட மூவர் படுகாயமடைந்துளள்னர் அவர்கள் சென்ற வாகனத்தின் ஓட்டுநர் கொல்லப்பட்டடுள்ளார்.

ஈழத் தமிழர்களுக்கு சிறிலங்கா அரசு இழைத்துவரும் அநீதிகளை நேரில் சென்று பார்வையிடுவதற்கு அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களையும் சட்டமன்ற உறுப்பினர்களையும் உள்ளடக்கிய சிறப்பு குழுவை இலங்கைக்கு அனுப்ப வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது
தமிழ்நாட்டிலிலும் , மத்தியில் ஆட்சியிலுள்ள ஐக்கிய முன்னேற்றக் கூட்டணி அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் இந்தகோரிக்கையை முன் வைத்துள்ளார்.

புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம், நன்றி.
--------
தற்போது இந்தத் செய்தித் தளம் இயங்குவது கிடையாது. எனினும் நான் நாட்டைவிட்ட வெளியேறிய பின்னரும் என்னைப் பற்றிய ஒரு செய்தியை என்பெயர் குறிப்பிடாமல் அவர்களது நிதர்சனம் என்ற இணையதளம் செய்தி வெளியிட்டிருக்கிறது.

ஜரோப்பாவிற்கு அகதியாக வந்தவர் அவசரமாக அச்சகம் தேடுகிறார்.
(வியாழக்கிழமை, 17 மே 2007 - யோகராஜன் )

யாழ்ப்பாணத்தில் இருந்து சுவிஸ் நாட்டுக்கு அகதியாக வந்தவர் அவசரமாக சுவிசில் அச்சகங்களை தேடிவருகிறார். யாழ்குடாநாட்டில் தவறான வழியில் சென்ற தமிழர்களை கடந்த காலத்தில் ஏமாற்றிய ஆயுதம் ஏந்தாத கட்சி ஒன்றின் முக்கியஸ்தர் சுவிஸ் நாட்டில் அகதி தஞ்சம் கோரியுள்ளார். கடந்தமாதம் அகதியாக சுவிஸ் நாட்டுக்கு வந்த இவர் அச்சகங்களை நாடிச் சென்று பத்திரிகை வெளியிட விரும்புவதாகவும் அதற்கு உதவுமாறும் கோரிவருகிறார். இதே நேரம் இலங்கையில் கடந்தமாதம் தேசத்துரோகி ஒருவருக்கு அஞ்சலி நிகழ்ச்சியை நடத்தி இருந்த குறித்த யாழ்ப்பாணத்து அரசியல்வாதி திடீர் என்று சுவிஸ் நாட்டுக்கு வந்து பத்திரிகை வெளியிடுவதற்கு முயற்சித்து வருகின்றமை பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதுடன் இலங்கையின் ஏரிக்கரை பத்திரிகை நிறுவனம் ஒன்றின் ஊழியர்களின் உதவியையும் இவர் நாடியுள்ளதாக தெரியவருகிறது. தற்பொது இவருடைய தஞ்ச கோரிக்கை சுவிஸ் அரசாங்கத்தால் அவசரமாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.
-------

மீதி பின் என் சுயசரிதை என்ற தலைப்புடன் தொடரும்

No comments: