



தற்போது கிடைத்த தகவல்களின்படி உதயசூரியன் சின்னம் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் திரு. வீ. ஆனந்தசங்கரி அவர்களின் அணியினருக்கு கிடைத்திருப்பதாக ஊர்ஜிதமான செய்திகள் தெரிவிக்கின்றன.


தலைவரை ஒதுக்கி நடைபெற்ற செயற்பாடுகளுக்கு தலைவர் மறுப்புத் தெரிவித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பிரிந்து சென்ற திரு. சம்பந்தன் தலைமையிலான அணியினர் தமிழரசுக் கட்சிக்கு புத்துயிர் அளித்து கடந்த தேர்தலில் போட்டியிட்டமை யாவரும் அறிந்ததே!
எனினும் கூட்டணியை திரு. ஆனந்தசங்கரி அவர்களே கடந்த 5 வருடங்களுக்கு மேலாக தனித்து பல சிரமங்களுக்கு மத்தியில் இன்றும் பொறுப்பாக நடத்திவருகின்றார். இந்நிலையில் தொடர்ந்து கொடுத்த அழுத்தங்களின் காரணமாக கட்சியின் உதயசூரியன் சின்னத்தை தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் திரு. ஆனந்தசங்கரியின் அணியினர் பயன்படுத்தலாம் என தற்போது வெளியான தகவலொன்று சொல்கிறது. மேலதிக தகவல்கள் பின்னர் வெளிவரும். (வவுனியாவிலிருந்து வாகீசன்)
No comments:
Post a Comment