கடந்த 05. 05. 2009இல் ஏறக்குறைய 7 மாதங்களுக்கு முன்னர் நான் கோரிய 2 மனிதாபிமான வேண்டுகோள்களை இன்று திரும்பவும் பதிவில் இடுகின்றேன்! (10.09.2008 10 18.09.2008) என்ற தலைப்பிட்டும்
18.09.2008இல் யாராவது முன்வருவீர்களா? என்றும்
10.09.2008இல் மனிதாபிமான பகிரங்க வேண்டுகோள் என்றும் பதிவிட்டிருந்ததை வாசித்திருப்பீர்கள்.
இதில் முதல் பதிவில் 10.09.2008இல் எழுதிய மனிதாபிமான பகிரங்க வேண்டுகோளில் - மக்களை பரிபாலனம் செய்ய முடியாத அரசு உடனடியாக பதவியிலிருந்த விலகிவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தேன்.
அகதிகள் பட்டினியால் மரணித்தால் ஐ.நா சபையே பொறுப்பேற்க வேண்டும் - என்று கடந்த 04.06.2009 பத்திரிகையாளர்களிடம் கருத்துத் தெரிவித்த மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்கவின் கருத்தானது அரசினுடைய இயலாமையை எடுத்துக் காட்டுகிறது. ஐக்கிய நாடுகள் சபையை இன்று வரை சுயாதீனமாக இயங்கவிடாமல் இப்படி முட்டாள் தனமான கருத்தை பொறுப்புமிக்க அதுவும் மிகவும் மனித உரிமைகள் சம்பந்தமான அமைச்சர் கருத்துத் தெரிவித்திருப்பது கேலிக்குரியதொன்றாகும். இதனால் மக்களைக் காப்பாற்ற முடியாத அரசும் - அமைச்சுப் பொறுப்பிலுள்ளவர்களும் தமது பதவிகளைத் துறந்துவிட்டு பேசாமலிப்பது பொருத்தமான தீர்வாகும்.
நன்றி - உதயன் 05.06.2009
Sunday, June 7, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment