அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Sunday, June 14, 2009

நாளை தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் திரு. வீ. ஆனந்தசங்கரி அவர்களின் 77வது பிறந்த தினம்


அவரது சாதனைகளுக்காக இக்கட்டுரை அவரது பதிவிருந்து எடுக்கப்பட்டு தகவலுக்காகவும் குறிப்பாக சிலர் அறிய வேண்டும் என்பதற்காகவும் மீள்பதிவிடப்படுகிறது. புறக்கணிக்கப்பட்ட கிளிநொச்சித்தொகுதியை புதுமெருகுடன் தனிமாவட்டம்ஆக்கிய ஆனந்தசங்கரிக்கு இன்று 70 வயது!
Sunday June 15th 2003
தினகரன் வார மஞ்சரி
15-06-2003 ஞாயிற்றுக் கிழமை

எழுபத்தொராவது அகவையில் காலெடுத்து வைக்கும் சங்கரி அவர்களை. அவர்தம் பிறந்த நாளினை நினைவு கூர்ந்து கடந்தகால நிகழ்வுகளையும் சாதனைகள் சோதனைகளை ஒரு தடைவை திரம்பிப் பார்ப்பது காலத்தின் கட்டாயமாக இருக்கின்றது.

ஒரு காலத்தில் சோறு கொடுக்கும் சோழ மண்டலமாக இருந்த மண் இன்று தனது சொத்தினையே தொலைத்து விட்டு சோதனைக்கும் வேதனைக்கும் ஆட்பட்டு மீண்டும் தலைநிமிர்ந்து தன்னிறைவினைக் காண்போம் என மார்நிமித்தி நிற்பது மகிழ்வினைத் தருகிறது. இத்தனை மாண்பிற்கும் மரியாதைக்கும் காரணகர்த்தாவாக இருந்தவர்களுள் சங்கரி என்னும் மானுடன் முதன்மையானவன்.

இன்று வரை ஒரு குழி நிலம் தன்னும் தனக்கு சொந்தமாக இல்லாத நிலையிலும் புகலிடம் தேடி ஓடி வந்த மக்களை உபசரித்து உண்ண உணவளித்து வாழ நிலம் வழங்கி அவர்களின் வாழ்வில் தன்னிறைவு கண்ட வரலாறுகள் அனேகம். அதனை பறைசாற்ற மாவட்டத்தின் பல கிராமங்கள் புதுப்பெயர் குறித்து நிற்கின்றன.

இலங்கையின் தலையென வர்ணிக்கப்படும் வடமராட்சிப் பகுதியின் பருத்தித்துறை தொகுதியில் 15.06-1933ல் திரு. வீரசிங்கம் இரத்தினம் தம்பதிகளுக்கு புத்திரனாக பிறந்து அச்சுவேலி கிறிஸ்ரியன் கல்லூரி புத்தூர் ஸ்ரீசோமஸ்கந்தா கல்லூரி, பரத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி. கொழும்பு சாஹிராக் கல்லூரி ஆகியவற்றில் தன் கல்லியினைத் தொடர்ந்து அதன் மூலம் சமூகத்தின் சிறந்த வழிகாட்டிகளாக மக்களை உருவாக்கவதாயின் அதற்கு ஆசிரியப் பணியே பொருத்மானதெனக் கருதிப் போலும் ஆசிரியத் தொழிலை மேற்கொண்டு நாட்டின் பல இடங்களிலும் தன் பணி செய்து இறுதியாக கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி மகாவித்தியாலயத்தில் தனது ஆசிரியக் கடமையினைத் தொடர்ந்தார். அக்கால கட்டத்தில் கிளிநொச்சியின் கல்வித்தரம் இவரை வெகுவாகப் பாதித்தது எனச் சொல்லலாம். பல மாணவர்கள் எண்ணுதலிலேயே தவறுகள் விடுவதைக் கண்டு இவாகளின் பின்புலங்களையும் அதற்கான காரண காரியங்கள் அனைத்தையம் இனங்கண்டார். இடதுசாரிக் கொள்கையில் தன்னை முழமையாக ஈடுபடுத்திக் கொண்டதனால் அடிமட்ட மக்களுடன் மிகவும் அன்னியோன்னியமாக பழகுவதும் அவர்களின் சுக துக்கங்களில் பங்கெடுப்பதும் இயல்பாகவே இருந்ததினால் பல முற்போக்குச் சிந்தனைகளும் செயற்திட்டங்களும் மனதில் தயாரான நிலையில் தன் சக தோழர்களுடன் இவற்றினை மனம் விட்டுச் சொல்லி இவற்றிற்கான தீர்வுகளின் வடிவங்களையும் இனங்கண்டார். இச்சந்தர்ப்பத்தில் கிளிநொச்சி கரைச்சி கிராம சபையின் தேர்தல் வந்தது. “ அதனை ஏன் சங்கரி உனது எண்ணத்தின் ஆரம்ப செயற்பாட்டின் வடிகாலாக இத்தேர்தல் களத்தில் இறங்கக் கூடாது” என்ற பலரின் வேண்டகோளை ஏற்று 1965இல் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் போட்டியிட்டார். இவரை எதிர்த்து கிளிநொச்சியின் நில உடைமையாளர்கள். பண வசதி படைத்த பெரியவர்கள் போட்டியிட்டனர். சாமான்யனாக நின்று அத்தேர்தலில் மக்களின் அமோக ஆதரவுடன் வெற்றி பெற்றார். அச்சபையின் தலைவராகவும் இவரே தோந்தெடுக்கப்பட்டார்.

ஒரு மனிதன் வாசிப்பதனால் பூணைமடைகிறான் என்பதற்கொப்பாகவும் தனது ஆசிரியப் பணி அனுபவமும் இவரை கிராம சபைக்கென ஒரு நூலகம் அமைக்கத் தூண்டியது. அதன் பயன் அன்றைய கால கட்டத்தில் சகல வசதிகளுடனும் ஒரு நூலகத்தை கிளிநெச்சி கரடிப்போக்கில் நிறுவியதுடன் வாசிப்பாளர்களுடன் தானும் ஒருவாராக இருந்து கற்றலின் அவசியத்தினை உணர்த்தினார்.

1968இல் கிளிநொச்சி பட்டின சபையை தரமுயர்த்தப்பட்ட நிலையில் மீண்டும் அத்தேர்தலினை சந்தித்து பட்டின சபையின் முதல் தலைவராகவும் தோந்தெடுக்கப்பட்டார். இச்சந்தர்ப்பத்தில் தன்னை ஒரு அங்கீகரிக்கப்பட்ட சட்டத்தரணியாகவும் தரமுயர்த்திக் கொண்டார். ஒரு ஆசிரியராக கிராம சபையில் தான் பெற்ற அனுபவம் ஒரு சட்டத்தரணியாக பட்டின சபை நிர்வாகத்தில் பரிணாமம் பெற்றது. இதனால் சட்ட நுணுக்கங்கள் பலவற்றின் துணைகொண்டு கிளிநொச்சியின் எதிர் காலத்தினை வடிவமைத்துக் கொண்டார். ஒரு சபையின் ஆளுமையில் தன்னைப் வெளிப்படுத்திக் கொண்ட சங்கரி தொகுதி வாழ் மக்களின் மனங்களில் பேசப்படவராக இவரின் செயற்பாடு இருந்ததினால் அகில இலங்கைக் காங்கிரஸ் கட்சியின் கிளிநொச்சி வேட்பாளராக நிறுத்தப்பட்டார். 1970 ல் இவ்வாறு கிடைக்கப் பட்ட சந்தர்ப்பம் அமோக வெற்றியினைப் பெற்றுக் கொடுத்தது. அதன் மூலம் அசைக்க முடியாத ஒரு பாராளு மன்ற உறுப்பினராக உறுதிப்படுத்தப்பட்டார். 1977ல் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் சங்கரியினை எதிர்த்து அன்றைய ஆட்சியின் அமைச்சராக இருந்த திரு. செல்லையா குமாரசூரியர் அவர்கள் போட்டியிட்டார்கள். அமைச்சரும் இத்தொகுதியில் பல நூற்றக்கணக்கானவர்களுக்கு வேலைவாய்ப்பும் காணியற்றவர்களுக்கு திடீர் காணிக்கச்சேரி நடாத்தி காணிகளை வழங்கியும் உள்ள நிலையில் சகலரும் இத்தேர்தலினை மிக ஆவலுடன் எதிர்பார்த்த நிலையில் மிண்டும் சங்கரி அதிகப்படியான வாக்குகளுடன் வெற்றி பெற்றார். இச்சந்தர்ப்பம் தமிழர் விடுதலைக் கூட்டணி என்ற ஒரணி தனிநாட்டுக் கோரிகைகள் சாதகமாகவே சங்கரிக்குத் துணை போயின.

ஆசிரியப் பணி, கிராமசபை தலைவர், பட்டினசபைத் தலைவர் பதவிகள் போன்றவை கிடைக்கப் பெற்று பாராளுமன்ற பிரதிநிதித்துவம் கிடைத்தமை சங்கரிக்கு பல விடயங்களை இனங்காட்டி நின்றன. தொகுதி சம்பந்தமாக முன்மொழியப்படும் அபிவிருத்தித் திட்டங்கள் மாவட்ட ரீதியில் நோக்கப்பட்டு அள்ளித்தெளிக்கும் நிதியில் கிள்ளித் தெளிக்கும் தொகுதியாக கிளிநொச்சி கணிக்கப்படுவது கண்டு பல சந்தர்ப்பங்களில் பலருடன் விவாதிக்க வேண்டியவராகவும் மாறினார். அதனால் கிளிநொச்சியினை தனி மாவட்டமாகப் பிரித்து விடுங்கள் என்று பகிரங்கமாகக் கேட்டார். பரந்தன் இராசயன கூட்டுத் தாபனத்தில், ஆனையிறவ உப்பளத்தில். நீர்ப்பாசனத் திணைக்களத்தில் தொகுதி மக்களக்கு கிடைப்பது கூலி வேலை தான். உயர் பதவிகளிலும் வேறு இடங்களும் தொகுதி இல்லாதவர்களைக் கொண்டு நிரப்பப்படுவதை ஆட்சேபிக்கும் சந்தர்ப்பங்களில் சொல்லப்படுவது கிளிநொச்சியில் தகுதியானவர்கள் எவரும் இல்லையே என்பதாகும். இது வெகுவாக சங்கரியை வெகுவாகப் பாதித்தது.

கல்வியில் அபிவிருத்தியடையாத மாவட்டமாக யாழ்ப்பாணம் இருந்ததனாலும் அதற்குள் கிளிநொச்சி தொகுதியும் உள்ளடக்கப்பட்டதனாலும் பல்கலைக் கழகத் தேர்விலும் ஆசிரியப் பயிற்சிக்கும் இம்மாவட்ட மாணவர்களின் கல்வித்தரம் எட்டிப் பார்க்கக்கூட முடியாத அளவிற்கு தரம் குறைந்தே காணப்பட்டது. இவற்றினை வெல்வதாயின் பிரிந்து நின்று சாதிப்பதனால் தான் முடியும் என்று எண்ணினார். அதனால் தனி மாவட்ட கோரிக்கையினை முன் வைத்தார். முதலில் அதனை ஏற்றக் கொள்ள மறுத்த கூட்டணியின் தலைமைப் பீடம் எதற்கும் ஒத்துவராத சங்கரியின் விடாப்படித் தன்மை இறுதியில் தனிமாவாட்டமாக கிளிநொச்சித் தொகுதியினை ஆக்குவதே சரியானதென உணரத் தலைப்பட்டனர். இதனால் தனி மாவட்டமாகவும் கல்வியில் அபிவிருத்தரியடையாத கல்வி மாவட்டமாகவும் கிளிநொச்சித் தொகுதி பிரகடனப்படுத்தப்பட்டது. இதனால் இன்று எத்தனை மருத்துவர்கள், பொறியியலாளர்கள், விஞ்ஞான கலைப்பட்டதாரிகள் சட்டத்தரணிகள், உருவாகியிருக்கின்றனர்.

இதற்கான மூலகர்த்தாவும் பிதாமகனும் சங்கரி தான் என்பதை எவரும் மறுக்க முடியாது. சங்கரியின் அரசியல் தலைமைத்துவங்களின் வழிகாட்டிகள் கலாநிதி என். எம். பெரரா, தந்தை செல்வநாயகம், ஜீ. ஜீ. பொன்னம்பலம் அவர்களினது செப்பனிடப்பட்ட சீரான அரசியற் பாதைகளில் நடப்பதனை இன்றும் பெருமையாகக் கூறுவார். இன்றைய பாராளுமன்றத்தில் காலஞ்சென்ற டட்லி சேனநாயக்கா. ஜே. ஆர். ஜயவர்த்தனா,ஆர். பிரேமதாசா, ஏ. சி. எஸ் ஹமீட், காமினி திசநாயக்கா. வி. ஏ. சுகதாஸா, அப்துல் பாக்கீர் மாக்கர், கலநிதி டபிள்யூ தகநாயக்கா, சிறிமாவோ பண்டாரநாயக்கா, மைத்திரி பால சேனநாயக்கா, பீலிக்ஸ் ஆர். டயஸ் பண்டாரநாயக்கா. கொல்வின் ஆர். டி. சில்வா, லெஸ்லி குணவர்த்தன, விவியன் குணவர்த்தன. பேர்னாட் சொய்சா, எஸ். ஏ. விக்ரமசிங்க, பீட்டர் கெனமன், எம். ஜீ மென்டிஸ் போன்ற தலை சிறந்த இந்நாட்டின் அரசியல்வாதிகள் இலங்கைப் பாராளுமன்றத்தில் அங்கம் வகித்த காலத்தில் அவர்களுடன் அக்காலத்தில் இருந்த ஓரேயொரு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் திரு. விரசிங்கம் ஆனந்தசங்கரிதான் என்ற பெருமையும் இவருக்குண்டு. இன்று கடந்தகால சம்பவங்களை சந்தர்ப்பம் கிடைக்கும் போது ஆதாரங்களுடன் பாரளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும் தவறுவதில்லை.

- தினகரன் வார மஞ்சரி. 15-06-2003 ஞாயிற்றுக் கிழமை.

No comments: