அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Monday, June 22, 2009

தமிழ்ப்பேசும் மக்களின் பிரதிநிதிகள் - தலைவர்கள் பற்றிய பதிவுக்கு இன்றைய பதிவர்களிடமிருந்து உதவி தேவை!

நான் தமிழர் விடுதலைக் கூட்டணி அலுவலகத்தில் 1989இன் இறுதிக்காலத்தில் பணிக்கு அமர்த்தப்பட்ட பின்னர் 2005 வரை அலுவலகப் பொறுப்பிலும் கட்சி நடவடிக்கைகளில் ஈடுபட்ட காரணங்களினாலும் எமது தலைவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களுடைய தகவல்கள் சேகரிப்பதில் பெரிதும் ஈடுபாடு கொண்டிருந்தேன். இதற்கு மறைந்த தலைவர் மு. சிவசிதம்பரம் அவர்களும், அலுவலகத்தில் குடியிருந்த மறைந்த தமிழரசுக்கட்சித் தலைவரும் முன்னாள் திருமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும் எனது அரசியல் ஆசானுமாகிய மூதூர் தங்கத்துரை அவர்களும், மற்றும் மாவை. சோ. சேனாதிராசா, தற்போதைய கூட்டணித் தலைவர் திரு. வீ. ஆனந்தசங்கரி அமரர் கலாநிதி நீலன் திருச்செல்வம் ஆகியோர் பெரிதும் உதவி புரிந்தனர்.
தமிழர் விடுதலைக் கூட்டணி மற்றும் தமிழரசுக் கட்சி, அகில இலங்கைத் தமிழ்க்காங்கிரஸ் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுடைய விபரங்களுக்காக பாராளுமன்ற தலைமை நூலகரிடம் தலைவர்களின் பெயர்ப்பட்டியலை நான் அனுப்பியபோது அவர் அந்தப் பட்டியலில் 4 தலைவர்களுடைய பிறந்த மற்றும் இறந்த திகதிகளை(அவர்களிடம் பதிவிலில்லாத காரணத்தால்) விடுத்து பூரணப்படுத்தி அனுப்பி வைத்தார். கட்சித் தலைவர்களின் விபரங்கள் அவர்கள் எக்கட்சியினராயிருந்தாலும் விபரங்கள் ஆவணப்படுத்தப்பட வேண்டும் என்பதற்காக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதற்கிடையில் மலையகத் தலைவர்களின் விபரங்களுக்காக தேர்தல் ஆணையாளருக்கு எழுதிய கடிதத்திற்கு அவர் அனுப்பிவைத்த பதில் கடிதத்தையும் இங்கு பதிவுக்காக இணைத்துள்ளேன். இவர்களைப்பற்றி எழுத வேண்டும் என்ற ஆவல் நிறைய இருப்பதால் இவர்களைப்பற்றிய குறிப்புக்கள் மற்றும் புகைப்படங்கள் நினைவுமலர்கள் வைத்திருப்போர் தயவுசெய்து அவற்றை எனது இப்பதிவுக்கு தந்துதவிடுமாறு அன்புடனும், தயவுடனும் கேட்டுக்கொள்கின்றேன்.
தொடர்புகளுக்கு - 0041 76 293 6295
மின்னஞ்சல் thangamukunthan@gmail.com or tulfmukunthan@yahoo.com

No comments: