அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Monday, August 11, 2008

சுவிற்சலாந்து அடில்வீஸ் முருகன் கோவில் கொடியேற்றத் திருவிழாப் புகைப் படங்கள்.1

உலகின் ஐம்பெருங் கண்டங்களிலே சரஸ்வதி கடாஷமும் லஷ்சுமி கடாஷமும் ஒருங்கே அமைந்த ஐரோப்பிய கண்டத்தில் தனமும், அறிவும், கடவுள் பக்தியும் நிறைந்த தமிழர்களும் வாழும் சுவர்ணபூமியாம் சுவிற்சர்லாந்து நாட்டில் சு10ரிச் மாநகரில் அடில்ஸ்வீல் பதியில் அல்ப்ஸ் மலையின் பின்புறத்தே ஊற்றெழுந்து ஓடிவரும் சீல் நதி ஓரத்தில் அமர்ந்திருந்து அருள்பாலிக்கும் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத சிவசுப்பிரமணியப் பெருமானுக்கு வருடாந்த மஹோற்சவம் கடந்த 08.08.2008 வெள்ளிக்கிழமை கொடியேற்ற வைபவத்துடன் ஆரம்பமாகியது. தொடர்ந்து 12 தினங்களுக்கு உற்சவம் நடைபெறும்.எதிர்வரும் 16ந்திகதி சனிக்கிழமை இரதோற்சவமும் 17ந்திகதி ஞாயிற்றுக்கிழமை தீர்த்தோற்சவமும் நடைபெறும். கடந்த வெள்ளிக்கிழமை கொடியேற்றத்தின்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.


மகோற்சவ பிரதம சிவாச்சாரியார் கலாநிதி பிரதிஷ்டாஞானதிலகம் சமஸ்கிரு பண்டிதர் குருஜி ஸ்தோத்திரகான விற்பன்னர் சிவஸ்ரீ. சாம்பசிவ தணிகாசல சிவாச்சாரியார் (தென்னாபிரிக்கா) ஒவ்வொருநாளும் முருகப்பெருமானுக்கு வசந்த மண்டபத்தில் நடக்கும் விசேட பூசைகளின்போது தமிழ்வேதமாகிய தேவாரப் பாடல்களின் பின்னர் தமிழில் 3 கீர்த்தனைப் பாடல்கள் பாடுவது ஒரு சிறப்பம்சம்.

No comments: