அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Wednesday, August 27, 2008

நான் விரும்பிப் பார்க்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சி -– விசுவின் மக்கள் அரங்கம்.

ஆரம்பத்தில் அரட்டை அரங்கமாக நடந்த நிகழ்ச்சி தற்போது மக்கள் அரங்கமாக நடத்தப்படுவது உண்மையிலேயே மனதுக்கு மிகவும் நிம்மதியைத் தரும். நடிகர் திரு. விசு அவர்கள் நடித்த வீடு மனைவி மக்கள் மிகவும் பிடித்த ஒரு திரைப்படம். கதை இருக்கும் என்றால் அது அவரது படம் குறிப்பிடலாம். எனக்கு நேரமிருக்கும்போது அவரது மக்கள் அரங்கம் முன்னைய அரட்டை அரங்கம் போன்றவற்றை ஒளிப்பதிவுப் பிரதி பண்ணப்பட்ட ஊனுக்களை வாங்கி வந்த பார்ப்பது வழக்கம். ஏற்கனவே இலங்கையிலிருந்தபோது 2 தடவைகள் செய்தியை மின்னஞ்சலில் இட்டேன். எனது மடல் கிடைத்ததா என்ற சந்தேகத்தில் தற்போதைய நிகழ்ச்சிகளைப் பார்த்துவிட்டு எழுதவேண்டும் என்ற ஆதங்கத்தால் எனது வலைப் பதிவில் தனியான ஒரு இடத்தை ஒதுக்குகிறேன்.

வீண்வார்த்தைகள் ஒரு சிலர் பேசினாலும் - சிரிக்கவும் சிந்திக்கவும் இந்நிகழ்ச்சி வழிசமைக்கிறது. ஒரு சிலரது மனக் குமுறல்களை வெளிப்படுத்தும் மேடையாகவும் இதில் பல உண்மைச் சம்பவங்களுக்கு இடமளிப்பது வரவேற்கத் தக்கது. குறிப்பாகத் தேர்வுக் குழுவில் உள்ள அனைத்து மனிதத்துவம் கொண்ட அத்தனை நல் இதயங்களுக்கும் எமது பாராட்டுக்களும் நன்றிகளும்.

மன்னார்குடியில் நடந்த மக்கள் அரங்கத்தில் அவர் ஒரு தாய்மைக்காகப் பிச்சை எடுத்ததும் மன்னார்க்குடி மக்கள் வழங்கிய பெரு நிதிக்கும் ஆத்மார்த்தமான நன்றிகள்.
அந்த நிகழ்வில் திரு. விசு அவர்களுடைய மனம் வெதும்பியதை ஆத்மார்த்த உணர்வுடன் நோக்கிய எனக்கு இறுதியாக அவர் குறிப்பிட்ட வரிகள் என்னை மிகவும் உருகச் செய்தது. அதாவது மனித ரூபத்தில் தெய்வம் இங்கே வெளிப்பட்டு நிற்கிறது என்ற அர்த்தப்பட உரைத்தது.

ஒரு பாடல் வரியில் பணம் இருக்கும் மனிதரிடம் குணம் இருப்பதில்லை – குணம் இருக்கும் மனிதரிடம் பணம் இருப்பதில்லை என்று வருகிறது. பழமொழி எமக்குப் பொருந்தினாலும் மன்னார்க்குடி மக்கள் தமக்கு குணமும் பணமும் இருப்பதை நிரூபித்துக் காட்டியுள்ளார்கள். அதைவிட மக்கள் அரங்கத்திற்கு உதவிபுரியும் அத்தனை அறக் கொடையாளர்களும் குணத்தினாலும் பணத்தினாலும் சிறந்த விளங்குவதுபோல அனைவரும் மனிதாபிமானம் கொண்டு இப்படியான பொதுக் காரியங்களுக்குத் தம்மாலான உதவிகளைப் புரிய வேண்டும் எனத் தயவாக வேண்டுவதுடன் நாமும் முடிந்த உதவியைச் செய்யவுள்ளோம் என்பதையும் இத்தால் தெரியப் படுத்துகின்றோம்.

வாழ்க தமிழ்!!!
வளர்க விசு அவர்கள் குழுவின் பணி!!!

2 comments:

Vetrimagal said...

மக்கள் அரங்கம் கூட ஒரு குறிக்கோளுடன் நடத்தப படுவதாக நான் உணர்கிறேன். கரிவுடன் விசு அவர்கள் , பங்கு பெருபவர்களை அறிமுகப் படுத்துகிறார். இன்று 25.01.2009 ,ஒளி பரப்பான நிகழ்ச்சியில் , அம்பேத்கர் இலவச பள்ளி பற்றி பேசியவர் , இதயத்திலிருந்து பேசினார். நமக்கு உற்சாகமாக இருந்த்து.

தமிழில் ஒளிபரப்பாகும் சிறந்த காட்சி.

Vetrimagal said...

/கரிவுடன்/

எழுத்துப் பிழை மன்னிக்கவும்.

'கனிவுடன்' என்று படிக்கவும். நன்றி.