அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Tuesday, August 12, 2008

சபரிமலைக்கு யாத்திரை மேற்கொண்டபோது எழுதியவை.

17-11-2006.

ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா!

தந்தை தாய் ஆவானும் சார்கதியிங்காவானும்
அந்தமிலா இன்பம் நமக்காவானும் - எந்தமது
ஊனாகுவானும் உயிராகுவானும்
அருட் கோனாகுவானும் குரு.

திருவருளும் குருவருளும் முன்னிற்க,

சபரிமலை ஸ்ரீ ஐயப்பஸ்வாமி பக்தர்கள் அனைவருக்கும் முதலில் எனது பணிவான வணக்கம்.

சபரிமலை யாத்திரை விரதத்தில் எமது ஆலயத்தில் மாலையணிந்து யாத்திரை செய்ய விரும்புபவர்களின் பின்வரும் விபரங்களை தயவுகூர்ந்து விளக்கமாக உடன் தந்துதவுமாறு உங்களை தாழ்மையாக கேட்டுக்கொள்கின்றேன்.

முழுப்பெயர், முகவரி, தொலைபேசி இல., பிறந்த திகதி, தேசிய அடையாள அட்டை இலக்கம் (பிரதி இணைத்தால் நன்று),கடவுச் சீட்டு இலக்கம் (பிரதி இணைத்தால் நன்று) முன்னர் சபரிமலை யாத்திரை செய்தவர்களாயின் எத்தனை தடவைகள் சென்றார்கள் என்ற விபரம்.


சென்னை சென்று மீண்டும் சென்னையூடாக வரஇருப்பதால் ஏறக்குறைய பதினைந்து (15) நாட்கள் எமது யாத்திரைக்கு தேவைப்படலாம். எனவே இந்த வழியில் செல்ல தங்களுக்கு முடியுமா? அல்லது ஏதேனும் மாற்றுவழி தேவையா? எமது வழி பெருவழிப்பாதை. சென்னை சென்று அங்கிருந்து நேரடியாக கன்னியாகுமரி பொது வண்டிப்பயணம். பின்னர் அங்கிருந்து இருமுடி கட்டி சுசீந்திரம், நாகர் கோவில், பாவநாசம் சொரிமுத்தையனார் கோவில், குற்றாலம், அச்சன்கோவில், ஆரியங்காவு, குளத்துப்புழை, பந்தளம், எருமேலி வரை பிரத்தியேக வண்டி. பின்னர் எருமேலி, பம்பை, சந்நிதானம் நடை. மீண்டும் பம்பை வந்து வண்டி மூலம் தலங்கள் தரிசனம் - கன்னியாகுமரி. திரும்ப சென்னை. இது தற்போதைய எமது வழி. உங்களுக்கு ஏதேனும் தனிப்பட்ட வேண்டுதல்கள் இருந்தால் முன்கூட்டியே தெரிவித்தால் அதுபற்றி ஏதேனும் அனுகூலமாக முடிவுசெய்யலாம்.

இந்த வழியிலும் மேலும் மாற்றங்கள் ஏற்படலாம். எல்லாம் அவனருளே! எம்முடன் தொடர்பாக இருங்கள். இதுஒன்றுதான் எம்மால் கூற முடியும். ஸ்வாமி ஸரணம்.

என்றும் இறைபணியிலுள்ள,


தங்க. முகுந்தன்.


ஓம்
ஓம் எங்கள் குல தெய்வமே ஸரணம் ஐயப்பா!


சபரி மலை யாத்திரை மனிதன் ஒருவன் தன்னை அறிவதற்கு ஒரு ஆத்மீக செய்முறைப் பரீட்சையில் தோற்றுவது போன்றது. “தன்னை அறிந்தால் தவம் வேறில்லை - தன்னை அறியச் சகலமும் இல்லை” என்றும்,“தன்னைப் போலச் சகலமும் ஓம்புக - விண்ணைப் போல வியாபகமாகுக - கண்ணைப் போலக் காக்க அறத்தை” என்றும் நற்சிந்தனையில் மிகச் சிறப்பாக யாழ்ப்பாணத்து யோகர் சுவாமிகள் எடுத்துரைக்கின்றார்.

இயமங்கள் - சைவனுக்குரிய கட்டுப்பாடுகள்

1. எண்ணத்திலும், செயலிலும் வன்முறையில்லாதிரு.
2. திருடாதே, பிறர் பொருளைக் கவராதே.
3. கட்டுப்பாட்டை விரும்பு.
4. காம இச்சையையும், பேராசையையும் விட்டுவிடு.
5. கர்வத்தையும், சினத்தையும் அடக்கு.
6. பொய் சொல்வதையும், உறுதி மொழிகள், இரகசியங்களைக் கைவிடுதலைத் தவிர்.
7. அநீதி, குடிப்பழக்கம் ஆகியவற்றைக் கைவிடு.
8. தவறு செய்வதைக் கைவிடு. தீயோர் நட்பைத் தவிர்.


நியமங்கள் - சைவனுக்குரிய கடமையொழுங்குகள்.

1. மனம், மொழி, செயல்களில் து}ய்மையாயிரு.
2. உன் உடன்வாழ் மக்களை நேசி.
3. வாழ்வில் நிறைவையும், அமைதியையும் நாடு.
4. தினவழிபாடு, தியானம் மூலம் பக்தியை வளர்த்திடு.
5. துன்பத்தில் உறுதியுடனும், மக்களிடம் பொறுமையுடனும் நடந்துகொள்.
6. பத்திலொரு பங்கு வருவாயை சமயத்திற்குக் கொடு. பிரதிபலனை எண்ணாமல் ஆக்கமுற வழங்கு.
7. வேதங்களையும், ஞான நு}ல்களையும் திறந்தமனதுடன் பயில்.
8. அவ்வப்போது நோன்பு, தவம், தியாகங்களைப் புரிந்திடுக.எக்கருமத்தைச் செய்யும்போதும் (அது எதுவாகினாலும் கல்வியோ, தொழிலோ, யாத்திரையோ) ஊக்கம், சிரத்தை(கவனம்), மனமகிழ்ச்சி இவற்றோடு ஒன்றித்து செய்து பழகுதல் வேண்டும். அப்படிச் செய்துபழகிவந்தால் மனஉறுதி உண்டாகும். அதாவது மனம் ஏகாக்கிர சித்தத்தைப் பொருந்தும். பொருந்தவே ஆன்மசக்தி அதிகரிக்கும். நினைத்த காரியம் நினைத்த மாத்திரத்தில் உண்டாகும். இவர் பகைவர், உறவினர் என்ற பாகுபாடு சித்தத்திற் புகுந்து கவலையை உண்டாக்காது.

சிந்தனை செய்வது ஒன்றே மனிதனுக்கு மேலாகிய அறிவும், அவனுக்கு கொடுக்கப்பட்ட ஒரு கொடையும் ஆகும். இச்சுயசிந்தனையை விருத்தி செய்யவே இந்த யாத்திரை எம்மைப் பக்குவப்படுத்தகிறது.

எளிய வாழ்வு, உயர்ந்த எண்ணம், பரந்த உள்ளம், ஆழ்ந்த அன்பு இந்த நான்குமே ஒருவனுக்கு இம்மண்ணுலகத்திலேயே விண்ணுலக வாழ்வை அளிக்கவல்லன.

எல்லோரையும் நேசி, எல்லோருக்கும் பணிவிடை செய், அன்பாயிரு, உண்மையாயிரு, கருணையுடன் இரு, பெருந்தன்மையோடிரு, மிருகங்களிடம் அன்பாயிரு, பிறரது உணர்ச்சிகளைப் புண்படுத்தாதே, எல்லாவற்றிலும் இறைவனைக் காண்.

என்றும் நல்லதையே நினையுங்கள் - நல்லதையே பேசுங்கள்
- நல்லதையே செய்யுங்கள்

முன்முடிக்கு வேண்டிய பொருட்கள் - மஞ்சள், விபூதி, சந்தணம், குங்குமம், ஊதுபத்தி, சாம்பிராணி, நெற்பொரி, கற்பூரம், பட்டு, பன்னீர், கற்கண்டு, பேரீச்சம்பழம், நெய், தேங்காய், பச்சரிசி கன்னிசுவாமிக்கு காதோலை, கருகுமணி, மிளகு, சர்க்கரை, தேன், ஏலக்காய், சுக்கு

ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா!

சபரிமலை ஸ்ரீ ஐயப்ப ஸ்வாமி யாத்திரை மேற்கொள்ளும் அனைத்து ஸ்வாமிகளுக்கும் ஒரு பணிவான வேண்டுகோள்

1. ஸ்ரீ ஐயப்ப ஸ்வாமியின் 108 சரணங்கள் கேட்ட பொழுதில் ஒப்புவிக்க வேண்டும்.

2. குறிப்பிட்ட அல்லது குறிப்பிடும் பணியைச் செய்ய சித்தமாயிருக்க வேண்டும்.

3. யாத்திரை ஆரம்பிக்க முன்னர் யாத்திரை பற்றி தெரிய வேண்டியவற்றை தெரிந்து கொள்ள வேண்டும்.

4. ஸ்ரீ ஐயப்பனுடைய சரித்திரத்தையும் விரத முறைகளையும் ப10ரணமாக அறிந்துகொள்ள இதுபற்றிய விபரங்கள் அடங்கிய நு}ல்களை வாசித்து அறிந்து கொள்ளவும். புத்தகங்கள் தேவையாயின் அடியேனிடம் கேட்டு வாங்கி வாசித்த பின்னர் மீண்டும் ஒப்படைக்கவும்.

5. கன்னி ஸ்வாமிகளுக்குரிய இருமுடிப் பை, நெய்த்தேங்காய் பை, சோல்னாப் பை எமது குழுவினரால் வழங்கப்படும். ஏனையோர் தாமே அவற்றைக் கொண்டு வரவேண்டும்.

6. யாத்திரை சென்னை விமான நிலையத்தில் ஆரம்பித்த பின்னர் - குறிப்பிட்ட ஆலயங்களுக்கு மட்டும் செல்வதால் நேரக்கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்கவும். ஒரு ஸ்வாமி தாமதப்படுத்தினால் அது குழுவுக்கே பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும். தமது உடல் நிலையை ஒவ்வொருவரும் மிகவும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

7. 7ந் திகதி சென்னையில் ராஜா அண்ணாமலைபுரம் ஸ்ரீ ஐயப்பன் கோவில், மயிலை ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவில், (நேரமிருப்பின்) பெசன்ட்நகர் ஸ்ரீ அஷ்ட ல~;மி கோவில், காஞ்சிபுரம் காமாட்சியம்பாள் கோவில், (நேரமிருப்பின்) திருவண்ணாமலை, 8ந் திகதி திருச்சியில் உச்சிப்பிள்ளையார் கோவில், தாயுமானஸ்வாமி கோவில், சமயபுரம், திருவானைக்கா, ஸ்ரீரங்கம், ஐயப்பன் கோவில், (நேரமிருப்பின்) உறையூர் - வயலு}ர், 9ந் திகதி மதுரை மீனாட்சியம்பாள், திருப்பரங்குன்றம், அழகர் கோவில், பழமுதிர்சோலை, திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில், கன்னியாகுமரி.

8. பெருவழி யாத்திரையின் போது குருஸ்வாமியுடனேயே நீங்கள் இருக்கவேண்டும் அல்லது அவர் குறிப்பிடும் பழமலை ஸ்வாமிகளுடன் இருக்கவேண்டும்.3ஆவது கடிதம்

ஓம்
ஓம் பாவமெல்லாம் அழிப்பவரே - ஸரணம் ஐயப்பா!

19 – 11 – 2006.

ஓம் ஸ்வாமியே! ஸரணம் ஐயப்பா!

திருவருளும் குருவருளும் முன்னிற்க!

அன்புக்குரிய ஸ்லாமிகளுக்கு வணக்கம்.

தாங்கள் ஐயப்பனை வணங்கும்போது உங்களது துண்டை விரித்து வீழ்ந்து வணங்குவதை அடியேன் நேற்றிரவு (18.11.2006) நேரடியாகப் பார்த்தேன். தயவுசெய்து அவ்வாறு வணங்குவதை எமது ஆலயத்தில், எமது குழுவில் நீங்கள் தவிர்க்க வேண்டுகின்றேன். அவ்வாறு வணங்குவதை தவிர்க்கவேண்டும் அல்லது ஏனையோரைப் போல வீழ்ந்து வணங்காமல் இருங்கள். தண்டனிடுவது என்பது “நான் உன் அடைக்கலம் - என்னைக் காப்பவனும், என்னை ஆழ்பவனும் நீயே” என்பதைக் குறிக்கும். அப்படியான உணர்வு இருந்தால் வீழ்ந்து வணங்கலாம். இல்லாவிடின் தவிர்க்கலாம். எந்த விதமான எதிர்ப்பும் யாரும் சொல்ல மாட்டார்கள்.

“குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை” என்பது பழமொழி. நாம் யார் நிலத்தின் மீது குற்றம் பார்ப்பதற்கு. தாங்கள், முன்பு மாலையணிந்த குருஸ{வாமி தவறாக ஏதேனும் சொல்லியிருப்பார். அதுபற்றி நான் எதுவும் கூறமுடியாது. ஆனால் எம்முடன் யாத்திரை செய்பவர்கள் “தத்வமஸி” என்ற மஹா வாக்கியத்தின் பொருள் தெரிந்தவர்களாக - யாத்திரையின் அர்த்தம் தெரிந்தவர்களாக இருக்கவேண்டும். “அதுவே நீயாக இருக்கிறாய்” என்றதுபோல அனைத்திலும், என்னைக் காணும் அதாவது மனிதர்களிடத்தில் மாத்திரமல்ல அனைத்து உயிர்களிலும், மற்றும் பஞ்ச பூதங்கள் எனப்படும் நிலம், நீர், தீ. காற்று, வானம் இவற்றிலும் பரிபூரணனாக இறைவன் இருக்கின்றான் என்ற உணர்வு - எண்ணம் உடையவராக, அதை நடைமுறைப்படுத்துபவர்களாக நாம் எமது குழுவினர் இருக்க வேண்டும் என்பதே எனது அவா! இதற்கு ஒத்துப்போக முடியாவிட்டால் - தாராளமாக வேறு யாருடனாவது உங்கள் யாத்திரையை மேற்கொள்ளலாம். ஒரு பொல்லாப்பும் இல்லை. அடியேன் இதனால் எந்த மனவருத்தமும் அடையமாட்டேன். மாறாக அடியேனது குழுவில் எமது கொள்கைக்கு மாறான கருத்துடையவர்கள் இருந்தால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது என்பதை மாத்திரம் உறுதியாக கூற விரும்புகின்றேன்.

நாம் மாலையிட்ட பின்னர் ஏனைய ஸ்வாமிமார்களை கண்டால் அவர்கள் எவராயினும் நமஸ்காரம் செய்கின்றோம். ஆனால் மாலையிட்ட பின்னர் குலம், கோத்திரம் பார்ப்பவர்கள் - நாம் பாத நமஸ்காரம் செய்தாலும் எமக்கு பாத நமஸ்காரம் செய்யாமல் இருப்பவர்களை நாம் பார்த்துள்ளோம். அப்படியானவர்கள் மாலையிடாமல் இருப்பது நல்லது. ஸ்ரீ ஸ்வாமி ஐயப்பன் வாபரையே தனது தோழனாக ஏற்றுக்கொண்டவர். அடியேன் எதுவும் அதிகமாக உங்களுக்கு விளக்க விரும்பவில்லை. ஆனால் இத்துடன் அடியேனது முன்னைய இரு கடிதங்களை உங்களுடைய கவனத்திற்கு அனுப்புகின்றேன்.

ஏதேனும் அடியேன் தவறாக எழுதியிருந்தால் மன்னிக்கவும். நன்றி.

ஓம் ஸ்வாமியே! ஸரணம் ஐயப்பா!

என்றும் பணியிலுள்ள,


தங்க. முகுந்தன்
(குருஸ்வாமி)

21-01-2008.

ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா!.

திருவருளும் குருவருளும் முன்னிற்க,

கொள்ளுப்பிட்டி ஸ்ரீ தேவிகருமாரியம்மன் ஸ்ரீ ஐயப்பஸ்வாமி திருக்கோவிலிலிருந்து சபரிமலை யாத்திரை சென்ற அனைத்து அடியார்களுக்கும் அடியேனது பணிவான வணக்கம்.

தங்களனைவருடனும் தொலைபேசியில் அடிக்கடி பேசி சகல விடயங்களையும் உடனுக்குடன் தெரிந்திருந்தேன். ஏதிர்வரும் 26.01.2008 சனிக்கிழமை பிரசாதம் பங்கிட்ட பின்னர் - இந்த வருடம் கார்த்திகைக்கு மாலையிட முன்னர் ஒவ்வொரு சனிக்கிழமையும் மாலை நடைபெறும் பஐனையில் கட்டாயம் பங்குகொள்ள வேண்டுமென தயவாக வேண்டிக்கொள்கின்றேன்.

மாலையிட்ட நாட்களில் எவ்வாறு நடந்துகொண்டீர்களோ அதுபோல தொடர்ந்தும் நடந்து எமது வாழ்க்கையில் நல்லவற்றையே செய்து நல்லவர்களாக வாழ முன்வரவேண்டும். முடிந்தால் இந்தமுறை உங்கள் யாத்திரையைப் பற்றி எனக்கு ஒவ்வொருவரும் தனித்தனியாக கடிதம் எழுதவும். உங்கள் கருத்துக்களை அறிய ஆவலாக இருக்கின்றேன். பொதுவாக எமது யாத்திரைக்குழுவினர் அனைவருடனும் அடியேன் குறைந்தது ஒருதடவையாவது தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியிருப்பேன்.

கட்டாயம் கன்னிஸ்வாமிகளும் மிராளன் ராஐ;மகேந்திரன் Nஐபி சீலன் குமாரராஐh அனைவரும் உங்கள் கைப்பட கடிதங்களை எழுதி சுகநந்தன்ஸ்வாமியிடம் கொடுத்தால் அவர் எனக்கு அனுப்பிவைப்பார். ஏற்கனவே துபாயிலிருந்து சுகந்தன் சுஐந்தன் ஸ்வாமி சில படங்கள் அனுப்பியிருந்தார்கள். குகநாதேஸ்வரர்கோவில் அச்சன்கோவில் ஆரியங்காவில் எடுத்த படங்கள்.

நுஅயடை மூலம் பதில் அனுப்ப முடிந்தாலும் அனுப்பவும்.

வேறு பின்னர் எழுதுகிறேன். முடிந்தால் அனைவரது தொடர்பு முகவரிகளையும் தெரியப்படுத்தவும்.

நல்லதையே நினையுங்கள் - நல்லதையே பேசுங்கள் - நல்லதையே செய்யுங்கள்

முழுதும் உண்மை.
எப்பவோமுடிந்த காரியம்.
நாமறியோம்.
ஒரு பொல்லாப்பும் இல்லை. - யோகர் ஸ்வாமிகள்ஏன்றும் பணியிலுள்ள
தங்க. முகுந்தன்.


ஓம் சற்குரு நாதரே சரணம் ஐயப்பா!

Thanga. Mukunthan, JP
Guruswamy – Sri Devi Karumariamman Sri Iyappa Swamy Thirukkovil Sabarimalai Yaththiraikkulu

No. 30/1B, Alwis Place,
Colombo – 3,
09. 02. 2005.

குருஸ்வாமி சிவஸ்ரீ. பால ரவிசங்கரக் குருக்கள்,
ஸ்ரீ ஞான வைரவர் தேவஸ்தானம்,
இல. 42, டிவோஸ் லேன்,
கொழும்பு – 14.

வணக்கத்திற்கும், மதிப்புக்குமுரிய குருக்கள் ஐயா அவர்களுக்கு,

வணக்கம். தாங்கள் கடந்த 19.12.2004 வீரகேசரி வாரவெளியீட்டுக்கு வழங்கிய புனித யாத்திரை என்ற கட்டுரையைப் படித்த பின் அவர்களுக்கு ஒரு பதிலை எழுதியிருந்தேன். குறிப்பிட்ட கட்டுரையில் நீங்கள் சில கருத்துக்களைத் தெரிவித்திருந்தீர்கள். நியாயமற்ற சில கருத்துக்களுக்கு நியாயமான மாற்றுக் கருத்துக்களை நான் தெரிவிக்கின்றேன். அவர்கள் பிரசுரிக்காத காரணத்தால் தங்களுக்கு இதை எழுதுகின்றேன். மேலும் தங்களின் முகவரியும் தற்போதுதான் எனக்குக் கிடைத்தது. பிழையிருந்தால் கட்டாயமாக அதனைத் தெரியப்படுத்துங்கள்.

1. அமைச்சருக்கு கோரிக்கைகளை கொடுத்துவிட்டு, அவருடன் இணைந்து புகைப்படத்தையும் எடுத்துவிட்டு பின்னர் அவரை குறை சொல்லி அதற்களித்த பதிலால் தற்போது தாங்கள் அவமானப்பட்டு நிற்பதுபோல எனக்குத் தோன்றுகிறது.

2. யாத்திரை அவரவர் வசதிக்கு ஏற்றபடி அவரவர் மேற்கொள்வது. யாரையும் யாரும் வற்புறுத்தியோ, அல்லது கெஞ்சியோ போகவேண்டியதுமல்ல. எமக்காக தாங்கள் ஏதோ பெற முயற்சித்ததாக உங்கள் கோரிக்கையில் தெரிவித்திருந்தும், இறுதியில் பணத்தையே பல குருஸ்வாமிமார்கள் எதிர்பார்க்கிறார்கள் என்பதுபோல பதில் அளிக்கப்பட்டுள்ளது.

3. என்னைப் பொறுத்தவரையில் தங்களிடம் - இதுவரை தாங்கள் 18 முறை போய்வந்த குருஸ்வாமி என்ற வகையில் கேட்கும் கேள்வி என்னவென்றால,; மாலை அணிந்த அத்தனை சுவாமிமார்களையும் தாங்கள் பாதநமஸ்காரம் செய்பவரா?

4. தங்களைப் போன்ற, ஆனால் தாங்களல்ல - நான் காணவில்லை, ஒரு சில ஐயப்ப விரதம் அனுட்டிக்கும் அந்தணப் பெருமக்கள் - பாத நமஸ்காரம் செய்வதில்லை. காரணம் - தாங்கள் பிராமணர்கள் எனவும் - அதனால் பாத நமஸ்காரம் பிராமணரல்லாதோருக்கு பண்ணக் கூடாது எனவும் கூறும் அதேவேளை ஏனையோர் ஆலயங்களில் சாஷ்டாங்கமாக இறைவனை நிலத்தில் வீழ்ந்து வணங்குவதை – அதாவது சபரிமலை முத்திரையாகிய மாலை நிலத்திலே படுதல் குற்றம் எனக் கூறி, அரையில் கட்டியிருக்கும் துண்டை விரித்து நமஸ்காரம் பண்ணும் முறையையும் ஏற்படுத்தியுள்ளார்கள். அதற்கு வாஸ்துவை சாட்சியாக்குகின்றார்கள்.

5. வேலை நேரங்களில் எம்மைப் போன்ற பலர் சில முக்கிய சட்டதிட்டங்களுக்கு அமைவாகவே பணிபுரிய வேண்டியுள்ளது. அதனைத் தாங்கள் வேஷம் போடுவது என்று கூறுவது எவ்வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது.

6. “தன்னைப் போல சகலமும் ஓம்புக – விண்ணைப் போல வியாபக மாகுக – கண்ணைப் போலக் காக்க அறத்தை” என்ற யாழ்ப்பாணத்து யோகர் சுவாமிகளின் அர்த்தத்துக்கும், சபரிமவையிலுள்ள சன்னிதானத்தில் பொறிக்கப்பட்டுள்ள “தத்துவமஸி” என்ற வாக்கியத்திற்கும் அடியேன் எந்தவித வேறுபாடுகளையும் பார்க்கவில்லை.

இத்துடன் தங்களின் கட்டுரைக்கு – வீரகேசரிப் பத்திரிகைக்கு எழுதிய கடிதத்தையும், பொதுவாக பத்திரிகைகளுக்கு எழுதிய கடிதத்தையும் தங்கள் பார்வைக்கு அனுப்பிகின்றேன்.

இவற்றில் ஏதேனும் பிழையிருந்தால் தயவுசெய்து சுட்டிக் காட்டும் படி தாழ்மையுடன் கேட்டு இதனை நிறைவுசெய்கின்றேன்.

“ஓம் பாவமெல்லாம் அழிப்பவரே – சரணம் ஐயப்பா!”


என்றும் அவன் பணியிலுள்ள,


தங்க. முகுந்தன்,29.12.2004.


பத்திரிகை ஆசிரியருக்குஇந்தக் கட்டுரையின் நோக்கம் யாரையும் புண்படுத்தப்படவேண்டும் என்றநோக்கில் எழுதப்படவில்லை. இன்றுள்ள நிலையில் இக்கட்டுரை ஒருசிலருக்கு வேண்டப்படாததாகக் கூட இருக்கலாம். ஆனால் உண்மையை, தர்மத்தை அனைவரும் அறிய வேண்டும் என்பதற்காகவே இதனை எழுதுகின்றேன்.

இன்று இந்தநாட்டில் என்றுமில்லாத வகையில் இயற்கை பாரிய அனர்த்தத்தை புரிந்திருக்கிறது. இதனுடைய தத்துவம் எமக்கெல்லாம் ஏதோ ஒரு அறிவைப் புலப்படுத்துவதாக இருக்கவேண்டும். ஆனால் நாம் இவற்றையெல்லாம் உணராது மீண்டும் மீண்டும் பரந்த உள்ளம் கொண்டு நாமும் வாழ்ந்து மற்றவர்களும் வாழவேண்டும் என்ற பரோபகார மனதை ஏற்படுத்தாமல் - சுயநலமுடையவராக இருப்பது நல்லதுக்கல்ல.

இன்றைய அனர்த்தத்துக்கு 3 காரணங்களை நான் முன்வைக்கின்றேன்.

1. பூமாதேவிக்கு வழங்காத மதிப்பு

நாம் அன்னை வயிற்றில் பிறந்து வளர்ந்து இவ்வளவு பெரிய உருவத்தைப் பெறுவதற்கு காரணம் பூமாதேவி. பஞ்ச பூதங்கள் இறைவனின் படைப்பு. அதிலும் முதலாவதாகச் சொல்லப்பட்டது பிருதுவி எனப்படும் நிலம். பொறையுடைய பூமி நீர் ஆனாய் போற்றி என திருநாவுக்கரசர் திருத்தாண்டகத்தில் பாடியுள்ளார். அந்த நிலத்துக்கு சபரிமலை அணிந்த ஒருசில சுவாமிமார்கள் தாங்கள் நீருக்கு கொடுக்கின்ற மரியாதையை கொடுக்காத ஒரேஒரு காரணமே இந்த கடலுக்கடியில் நடந்த நிலநடுக்கம். அதாவது சபரிமலை யாத்திரை மேற்கொள்ளும் சுவாமிமார்கள் பெருவழிப்பாதையில் உள்ள அத்தனை நீர் நிலைகளிலும் நீராடுவது வழக்கம். குறிப்பாக எருமேலியிலுள்ள ஆறு, அழுதைநதி, கரிவலந்தோட்டிலுள்ள நீரோடை, பம்மை நதி, பஸ்மக்குளம் என்பவற்றில் எமது கண்ணால் காணப்படும் அழுக்குகளை எல்லாம் பொறுத்து அந்த நீர் நிலைகளில் நாம் எமது மாலையோடு நீராடுவோம். அதைவிட பலவிடங்களிலும் குறிப்பாக திருச்செந்து}ர்க்கடலிலும், தாமிரபரணி ஆற்றிலும், காவேரியிலும் கூட நீராடியுள்ளோம். இது இந்தியாவில் உள்ள நிலை. இங்கு எமது நாட்டில் அல்ல. ஆனால் இங்கு ஒரு ஆலயத்தில் இறைவனது திருவுருவுக்கு முன்பாக நாம் மாலையோடு சாஸ்டாங்க நமஸ்காரம் பண்ணும்போது எமது கண்ணுக்கு சுத்தமாகப் புலப்படும் இடத்தில் மட்டும் ஏன் இடுப்பிலுள்ள துண்டு எமக்குத் தேவைப்படுகிறது. இதில் நாம் நிலத்துக்கும் நீருக்குமிடையில் பேதத்தை ஏற்படுத்துகின்றோம். எந்த இறைவன் பிட்டுக்காக மண்ணைச் சுமந்தானோ! எந்த இறைவன் மண்ணைத் தின்றானோ! இவர்களின் மகனாகக் கருதப்படும் ஐயன் தர்மசாஸ்தா எந்த மண்ணில் கிடந்தானோ! அந்த மண்ணைப் பழிக்கலாமா?

புனிதமான ஐயப்ப முத்திரை நிலத்தில் படக்கூடாது என்ற கருத்துக்கு முற்றிலும் நான் மாறுபட்டவன். காரணம் இதே மாலையோடு நாம் சபரிமலையில் வீழ்ந்து வணங்குகின்றோம். அங்கப் பிரதட்சணம் கூடச் செய்கின்றோம். ஆனால் ஏனைய இடங்களை நாம் அவமதிப்பதுபோல நடந்து கொள்வது எமது ஆறறிவுக்கு முரண்பட்டதாகும். இந்த மாலை மண்ணிலிருந்து பெறப்பட்டது. அதிலுள்ள ஐயப்பனின் திருவுரு மண்ணிலிருந்து பெறப்பட்ட லோகங்களினால் ஆக்கப்பட்டது. நாமே எமது மூச்சை விட்ட பின்னர் இந்த மண்ணிற்கும், அக்கினிக்கும் இறுதியில் நீருக்கும் கொடுக்கப்படுகின்றோம். இந்த தத்துவத்தை இனிமேலாவது உணருங்கள். இல்லாவிடின் இன்று கடலுக்கடியில் நிகழ்ந்தது நாளை நாட்டில் நிகழலாம்.

2. பூமிக்கு ஏற்பட்டுள்ள பாரம்.

நாம் பாரிய கட்டடங்களை கட்டும்போது பல இயந்தரங்களால் மண்ணுக்கு அமுக்கத்தைக் கொடுக்கின்றோம். இந்த அமுக்கம் நிலத்தினுள் சேர்ந்து ஒன்றாகி வெடிப்பை ஏற்படுத்துகிறது.


3. பூமியை ஆளப் பார்க்கின்றோம்.

இந்த அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட ஆசியாக் கண்ட நாடுகளிலே எமது நாடுதான் அதிகப்படியாகப் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 20 ஆண்டுகால யுத்தத்தினால் பாதிக்ப்பட்ட நாம் இந்த யுத்தத்தால் என்ன பலனைக் கண்டோம். ஒருவரது இடத்தை ஒருவர் பிடித்துவிட்டதாகவும், இன்னொருவர் தனது இடத்தைவிட்டு ஓடிவிட்டதாகவும் பெருமையடித்தோம். அண்மைக்காலத்தில் நாம் மீண்டும் யுத்தத்தை தொடங்குவதாகவும் பேசியுள்ளோம். குறிப்பாக சிங்களவர் இந்நாடு தமது நாடு பௌத்தநாடு என்று சொந்தம் கொண்டாடுகின்றனர். தமிழர்கள் வடக்குகிழக்கு தமது பகுதி தமிழீழம் என்று சொந்தம் கொண்டாடுகின்றனர். முஸ்லீம்கள் கிழக்கில் அம்பாறைப் பகுதியில் தமக்கு ஒரு தனியலகு கேட்கின்றார்கள். இப்படியே ஆளுக்கு ஆள் மண்ணுக்கு உரிமை பாராட்டும்போது, பூமாதேவி தனது உரிமையை இந்த அனர்த்தம் மூலமாக எமக்குப் படிப்பினை செய்துள்ளாள். இதனை இன்னும் உணராவிடில் பின்னர் வருவதை நான் சொல்ல விரும்பவில்லை. பௌத்த சமயம் கூறும் துக்கத்துக்கு காரணமான ஆசையை சிங்களவர்கள் விடுவதாக இல்லை. காதற்ற ஊசியும் வாராது காணுன் கடைவழிக்கே என்ற இந்து சமயத்தின் சிறந்த சித்தர் பட்டினத்தாரின் கருத்தையும் தமிழர்கள் ஏற்பதாயில்லை.

நாம் இதுவரை செய்ததை சற்று நிதானமாக நின்று பார்த்தால் “அரசன் அன்றறுப்பான் தெய்வம் நின்றறுக்கும்” என்பது நினைவுக்கு வரும். நாம் செய்த பழிபாவங்களை கணக்கிலெடுத்து கூட்டிப் பாரத்தால் அது 1956 இனக்கலவரமாகட்டும், 1977 கலவரமாகட்டும், 1981 அனர்த்தமாகட்டும், 1983 படுகொலைகளாகட்டும், குறிப்பாக பாதுகாப்பாக சிறையிலடைக்கப்பட்டவர்களை கொன்றீர்களே! படகில் வந்தவர்களை ஈவிரக்கமின்றி வெட்டினீர்களே! அபயம் என தஞ்சமடைந்தவர்களை விமானக் குண்டின்முலம் எத்தனை தடவைகள் அழித்தீர்கள்! மாற்றியக்கத்திலிருந்த ஒரே குற்றத்திற்காக எத்தனை சிறார்கள் கொல்லப்பட்டார்கள்! துறவிகள் கொல்லப்பட்டார்கள்! ஓரிரு கிராம மக்களை கொன்றார்கள்! தொழுகையிலிருந்தவர்களை கொன்றார்கள்! எத்தனை எத்தனை சம்பவங்கள்!!!

மனிதர்கள் நாம் அவற்றை மறந்தாலும், நீதியும் தர்மமும் கணக்குப் பார்த்து தமது கடமையை செய்திருக்கிறது. மேலே சொல்லப்பட்ட சம்பவங்கள் யாவும் மனிதர்களால் ஏற்பட்டவை. இது இயற்கை முடிந்தால் நாம் கூட்டிப் பார்த்தாலும் இயற்கை இதிலும்கூட மனிதாபிமான முறையில் நடந்திருக்கிறது என்ற உண்மை புரியும்.

எமக்கு இது எங்கே புரியப்போகிறது. நான் என்ற ஆணவம் எப்போ மாறுமோ அப்போதே எமக்கு வெளிச்சம்.

முழுதும் உண்மை. எப்பவோமுடிந்த காரியம். நாமறியோம். ஒரு பொல்லாப்பும் இல்லை.

தங்க. முகுந்தன்
ஐயப்ப பக்தன்.

ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா!
ஓம் பாவமெல்லாம் அழிப்பவரே சரணம் ஐயப்பா!!

29.12.2004.


ஆசிரியர்,
வீரகேசரி.

அன்புக்குரிய ஆசிரியருக்கு,

வணக்கம்.

தங்களின் 19.12.2004 திகதி வாரவெளியீட்டின் 19ம் பக்கத்தில் வெளியாகிய புறக்கணிக்கப்படும் புனித யாத்திரை என்ற கட்டுரையில் குறிப்பிட்ட விடயங்கள் சிலவற்றுக்கு மாற்றுக் கருத்துத் தெரிவிக்க வேண்டிய கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டமையினால் இக்கருத்துக்களை அப்படியே பிரசுரிக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றேன். இக்கட்டுரைக்கு எவராவது பதில் எழுதுவார்கள் என்று கடந்த வாரம் வரை காத்திருந்தேன் எவரும் எழுதாத காரணத்தால் அடியேன் எழுத முற்பட்டேன் தவறுகள் இருந்தால் மன்னிக்கவும்.

வேஷம் போடுவதற்கு ஐயப்பன் விரதத்தைப் பயன்படுத்தாதீர்கள் என்று கோடிட்டுக் காட்டும் ஐயாவின் கருத்து - எம்போன்ற சம்பளம் வாங்கிப் பணிபுரிபவர்களுக்கு மனவேதனையை அளிக்கிறது. சொந்தமாகத் தொழில் புரிபவர்கள், வசதிபடைத்தவர்கள் விதிகளை கடைப்பிடிக்கலாம். சம்பளத்திற்கு வேலைபார்க்கும் அடியேனைப் போன்ற பலர் கடமைக்குச் செல்லும் போது சில கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு செயற்படவேண்டிய கட்டாயம் இருப்பதால் - கடமை நேரத்தில் பாதணிகளை அணிந்து கருமையான மேலாடைகளை தவிர்த்து இருக்கவேண்டியுள்ளது. ஆனால் சபரிமலை தர்ம சாஸ்தாவை ஜோதி ரூபத்தில் மகரசங்கிராந்தி தினத்தில் காண வேண்டும் என்ற பெரும் ஆவலால் 41 நாட்களல்ல 70க்கும் மேற்பட்ட நாட்கள் மாலையணிந்து இருவேளை நீராடி வேலை நேரம் தவிர்ந்த ஏனைய நேரத்தில் கறுப்பு உடையணிந்து முடிந்தவரை எமது நோன்பை செவ்வனே நோற்று வருகின்றோம். கருத்துக் கூறும் அதிகாரம் எல்லோருக்கும் உண்டு. ஆனால் கடமையைச் செய்து அதில்வரும் பணத்தில் யாத்திரை மேற்கொள்ளும் எம்மை ஐயன் ஆசீர்வாதம் செய்வான் என்ற நம்பிக்கை எமக்குண்டு. குருசுவாமிகளிடத்தில் இதற்கான அனுமதிபெற்று அவரது ஆலோசனையுடனே நாம் சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுகின்றோம். மனிதனை தெய்வமாக்கவல்ல இந்த வழிபாட்டை மேற்கொள்ளும் நாம் தெய்வீகத் தன்மையைப் பெறவே முயலுகின்றோம். ஐயா அவர்களைப்போல இருந்த இடத்தில் தட்சணையாக எமக்குப்பணம் வருவதில்லை. மேலும் இவ்வளவு பணம் என்றும் கேட்டுப்பெறுவதில்லை. சபரிமலையில் எமக்குக் கிடைக்கும் குருதட்சணையிலும் எமக்குரிய மூன்றிலொருபங்கையும் நாம் பொதுப்பணிகளுக்கு வழங்குவதுடன் மட்டுமல்ல நாம் எமது வருவாயின் பத்திலொருபங்கை சமய சமூகப்பணிகளுக்கு வழங்குகின்றோம்.

முதலில் அமைச்சருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்து எல்லாம் செய்துவிட்டு பின்னர் அறிக்கைவிட்டு தம்மையே கொச்சைப்படுத்துவதிலும் பார்க்க பேசாமல் இருந்;திருக்கலாம். நாம் சபரிமலை போவதற்கு எவரும் எமக்கு சலுகை பண்ணவேண்டும் என்ற அவசியமும் இல்லை. யாரிடமும் யாசகம் கேட்கவேண்டும் என்ற நிலையும் இல்லை. கடந்த வருடமும் இந்த வருடமும் மாத்திரம் இந்து சமய கலாசார அலவல்கள் திணைக்களம் அடையாள அட்டையை வழங்கியது. இம்முறை இந்திய விசாபெறுவதிலும் சில அசௌகரியங்களைத் தவிர்க்க முடிந்தது. (முற்றாக அல்ல)

மேலும் அதேநாளில் 3ம் சஞ்சிகையின் முதற்பக்கத்தில் வெளியான சபரிமலை யாத்திரை சம்பந்தமான கட்டுரை மிகுந்த நல்ல விடயங்களைக் குறிப்பிட்டுச் சொல்லியிருந்தது. அக்கட்டுரையில் இறுதிப் பாகத்தில் அமைந்துள்ள விடயங்களை நினைவில் கொண்டால் நாம் யாத்திரை செய்வதற்கோ அல்லது இறைவனைக் காண்பதற்கோ யாரையும் எதிர்பார்க்க வேண்டிய அவசியம் கிடையாது என்பதை அறியலாம். எமது தகுதிக்கேற்ற வகையில் யாத்திரை மேற்கொள்ளலாம். முதுகெலும்புள்ளவர்களாக நாம் இருந்தால் போதும். எமக்கு வேறு ஒருவருடைய முதுகெலும்பும் தேவையில்லை.

எங்கள் மண்டல விரதத்திலன்று 26.12.2004 நாட்டில் நடந்த அனர்த்தத்துக்கு சபரிமலை விரதமணிந்த சுவாமி என்ற வகையில் எனது அறிவுக்கு எட்டிய வகையில் நாம் நீருக்கு வழங்கும் ஸ்தானத்தை – மதிப்பை பூமாதேவிக்கு வழங்காத காரணத்தாலேயே நீருக்கடியில் பூமாதேவி தனது சக்தியை வெளிப்படுத்தி எமக்குப் பாடம் புகட்டியிருக்கிறாள் என்பதே எனது முடிவு. காரணம் எமது சுவாமிமார்களில் பலர் நிலத்தில் வீழ்ந்து வணங்கும் போது தமது துண்டை(சால்வையை) கீழே விரித்து வணங்குவதைப் பார்த்து வேதனையடைந்தவன் என்ற வகையிலேயே இதை குறிப்பிடுகின்றேன். இதுகூட ஐயாமார்களினாலேயே ஏற்படுத்தப்பட்டது. சபரிமலை யாத்திரை மேற்கொள்ளும் சுவாமிமார்கள் பெருவழிப்பாதையில் உள்ள அத்தனை நீர் நிலைகளிலும் நீராடுவது வழக்கம். குறிப்பாக எருமேலியிலுள்ள ஆறு, அழுதைநதி, கரிவலந்தோட்டிலுள்ள நீரோடை, பம்மை நதி, பஸ்மக்குளம் என்பவற்றில் எமது கண்ணால் காணப்படும் அழுக்குகளை எல்லாம் பொறுத்து அந்த நீர் நிலைகளில் நாம் எமது மாலையோடு நீராடுவோம். அதைவிட பலவிடங்களிலும் குறிப்பாக திருச்செந்து}ர்க்கடலிலும், தாமிரபரணி ஆற்றிலும், காவேரியிலும் கூட நீராடியுள்ளோம். இது இந்தியாவில் உள்ள நிலை. இங்கு எமது நாட்டில் அல்ல. ஆனால் இங்கு ஒரு ஆலயத்தில் இறைவனது திருவுருவுக்கு முன்பாக நாம் மாலையோடு சாஸ்டாங்க நமஸ்காரம் பண்ணும்போது எமது கண்ணுக்கு சுத்தமாகப் புலப்படும் இடத்தில் மட்டும் ஏன் இடுப்பிலுள்ள துண்டு எமக்குத் தேவைப்படுகிறது. இதில் நாம் நிலத்துக்கும் நீருக்குமிடையில் பேதத்தை ஏற்படுத்துகின்றோம். எந்த இறைவன் பிட்டுக்காக மண்ணைச் சுமந்தானோ! எந்த இறைவன் மண்ணைத் தின்றானோ! இவர்களின் மகனாகக் கருதப்படும் ஐயன் தர்மசாஸ்தா எந்த மண்ணில் கிடந்தானோ! அந்த மண்ணைப் பழிக்கலாமா?

பம்பாநதிபாலன் மணிகண்டனாக காட்டில் கிடந்தவன். பந்தள அரண்மனையில் சின்னம் சிறுபாலனாக இருந்தபோதும் - தாய்க்கு புலிப்பால் எடுத்துவரப் புறப்பட்டபோதும் பூமாதேவியின்மேல் தன் சின்னஞ்சிறு கால்களால் நடந்ததை நாம் மறக்கலாகாது. பஞ்ச பூதங்கள் அவனது படைப்பே.

இன்று சபரிமலை மாலையணிந்த சுவாமிமார்கள் குறிப்பாக அந்தணப்பெருமக்கள் (ஒருசில சுவாமிமாரைத் தவிர) ஏனையவர்கள் மற்ற சுவாமிமார்களைப்போல நடந்துகொள்வதில்லை. முக்கியமாக பாதநமஸ்காரம் எல்லோருக்கும் பண்ணுவதில்லை. இப்படியானவர்கள் மாலைபோடாமல் இருப்பது சிறப்பு. ஜாதிபேதமற்ற வாபரின் தோழனான ஸ்ரீதர்ம சாஸ்தாவை குறுகிய வட்டத்துள்வைத்து வணங்குவதை விடுத்து நீக்கமற எங்கும் வியாபித்திருக்கும் பரம்பொருளை பிரம்மசொரூபனை எங்கும் நிறைந்தவனை சச்சிதானந்தனாக பேதங்களற்றவனாக நினைந்து மனத்திலிருத்தி அதுவே நாம் என்ற பேருண்மையை அறிந்து உணர்ந்து வாழ முயற்சிப்போமாக!.

பலதடவைகள் ஏன் பதினெட்டு தடவைகள் யாத்திரைபோயும் இந்த விரதத்தின் உண்மையை - தத்வமஸி என்ற மகாவாக்கியத்தின் பொருளை (அதுவே நீயென்ற உண்மையை) உணராது - வீணே கூப்பாடுபோடுவதால் எந்தப் பலனும் இல்லை.

மலைக்குப் போய் சுவாமி தரிசனம் செய்த அனுபவம் மனதைப் பண்படுத்தி எம்மை பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும். விரதம் மனது சம்பந்தப்பட்டது. உடல் சம்பந்தப்பட்டதல்ல. உடற் து}ய்மை இரண்டாம்பட்சமே! ஆனால் நாம் உடலுக்கு முதலிலும் பின்னர் உள்ளத்திற்கும் அதாவது ஆத்மாவிற்கும் முன்னுரிமை வழங்குகின்றோம். இது தவறு. உடலை நாம் கருவியாகக் கொண்டுள்ளோம். வேஷம் வெளிப்படை. உள்மனதை அறியும் ஆற்றல் மூலமே நாம் தெய்வீகத்தை உணரமுடியும். இதற்கு பக்குவம் தேவை. இதில்லாதவர்கள் விரதம் என்று கூறிக்கொண்டு அடுத்தவர்களின் குறைகளையே பேசிக்கொண்டிருப்போம். தன்னை மேலான ஒரு நெறிக்கு – மார்க்கத்திற்கு செப்பனிட்டுக்கொள்ளும் யாத்திரிகன் தனது மனச்சாட்சிப்படியே கருமமாற்றுவான். அவரவர் மனம் போல அனைத்தும் வெளிப்படும். நிறைவைக் கொள்பவர்கள் நிறைவாக இருப்பார்கள். குறையுடையவர்கள் குறைவாகவே அனைத்தையும் காண்பார்கள். அதனை நாம் மாற்ற இயலாது.

யாழ்ப்பாணத்து யோகர் சுவாமிகளும் மிகச் சிறப்பாக நாமறியோம்! எப்பவோ முடிந்த காரியம்! முழுதும் உண்மை! ஒருபொல்லாப்பும் இல்லை! என்று கூறியுள்ளார்.

- தங்க. முகுந்தன்.
ஐயப்ப பக்தன்.


ஓம்
“தன்னைப்போலச் சகலமும் ஓம்புக
விண்ணைப்போல வியாபகம் ஆகுக
கண்ணைப்போலக் காக்க அறத்தை” – யோகர் சுவாமிகள்


13 – 11 – 2006.


மாண்புமிகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்~ அவர்கள்,
அலரிமாளிகை,
கொழும்பு - 3.

பேரன்புக்கும் பெருமதிப்புக்குமுரிய மாண்புமிகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்~ அவர்களுக்கு,


வணக்கம். எதிர்வரும் 17.11.2006 வெள்ளிக்கிழமை முதல் சபரிமலை ஸ்ரீ ஐயப்ப ஸ்வாமி தரிசன யாத்திரைக்கான விரதம் ஆரம்பிக்க இருப்பதால் பக்தர்களின் நலன்கருதி தங்களிடம் பின்வரும் விடயங்களைக் கவனத்தில் எடுத்து அவர்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களைத் தவிர்க்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றேன்.

1. சபரிமலை யாத்திரை மேற்கொள்ளும் ஐயப்ப பக்தர்கள் விரத முறையின்படி கறுப்பு, நீலம், காவி, பச்சை, மஞ்கள் நிற ஆடைகளை அணிவதால் அவர்களை இனம் காண்பது இலகுவானதாக இருக்கும். சந்தேகத்தின் பெயரால் இவர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு – காவலில் வைக்கப்படுவதும், அவர்கள் அணிந்திருக்கம் விரதமாலையினை கழற்றுவதும் பல காலமாக நடைபெற்று வருகிறது. இது குறித்து முன்னர் இவற்றுக்குப் பொறுப்பாக இருந்த அமைச்சருக்கு எழுதிய இரண்டு கடிதத்தின் பிரதிகளையும் இத்துடன் இணைத்துள்ளேன். தயவுசெய்து இம்முறையும் இவ்வாறான கெடுபிடிகள் அவர்களுக்கு ஏற்படாதிருக்க எல்லா காவல்துறையினருக்கும் இதுபற்றி முன்கூட்டியே அறிவுறுத்தல் வழங்கி அவர்களுக்கு உரிய வசதிகளைச் செய்துதருமாறு பணிவுடன் வேண்டுகிறேன்.

2. இந்த கலாச்சார அலுவல்கள் திணைக்களம் வழங்கும் அடையாள அட்டைக்கு உரிய மதிப்பு வழங்கப்பட வேண்டும் எனவும், அவர்களை எந்தவித தொந்தரவுக்கும் உட்படுத்த வேண்டாம் எனவும் தாங்கள் அவர்களுக்கு எடுத்துக்கூறி ஆவன செய்ய வேண்டும் எனவும் பணிவாக கேட்டுக் கொள்கின்றேன்.

இதுகுறித்து தங்களுடன் நேரில் சந்திக்க வேண்டுமென்றாலும் நாம் தங்களைக் காணத்தயாராக உள்ளோம். தயவுசெய்து இந்த விடயத்தில் கூடிய அக்கறை செலுத்தும்படி ஐயப்ப பக்தர்கள் சார்பில் வேண்டுகின்றேன்.

நன்றி.

தங்களுண்மையுள்ள,


தங்க. முகுந்தன்.

பிரதிகள் -
கௌரவ பிரதம மந்திரி ரட்ணசிறி விக்கிரமநாயக்க பா.உ அவர்கள்,
பிரதமர் அலுவலகம்

கௌரவ திஸ்ஸ கரலியத்த பா.உ அவர்கள்,
பிரதி சமய விவகார அலுவல்கள் அமைச்சர் அலுவலகம்,

கௌரவ டி யூ குணசேகர பா.உ அவர்கள்,
அரசியலமைப்பு விவகார அமைச்சர் அலுவலகம்,

கௌரவ அல்ஹாஜ். அலவி மௌலானா அவர்கள்,
ஆளுனர், மேல்மாகாண சபை,

சமய விவகார அமைச்சர் - உரிய நடவடிக்கைக்காக
பணிப்பாளர், இந்து கலாச்சார அலுவல்கள் திணைக்களம் - தகவலுக்காக
பொலிஸ் மா அதிபர்
இராணுவத் தளபதி
கடற்படைத் தளபதி
விமானப்படைத் தளபதி

25.11.1998.

Hon. Prof. G L Peiris MP,
Minister of Justice, Constitutional Affairs,
Ethnic Affairs & National Integration,
Superior Courts Complex,
Colombo – 12.

Dear Sir,

I request that the following matters also to be discussed in the Meeting to be held at your Ministry Office regarding the problems of the Tamils living in Colombo.

1. Reference the notification published by the Anti Harassment Organisation in the Thinakkural, of 26.11.98 regarding the registration of people living in rented out houses in Colombo need not produce two photographs and to register themselves again.
But the Kollupitiya Police is following the old procedure and insist that all people living in a house should visit to the Police Station for registration. These People have to wait for a long time at the Police Station.
It would be advantageous if you insist that the Chief Occupant or his representative is sufficient to register the residents of the house.
Further more, we request you to instruct all your Security Forces that there is no necessity to register the names every year.

2. Also may I remind you the suggestions made at the Meeting held on 20.10.1998 regarding the devotees of Aiyappa Swami.

3. Further, I have been reliably informed that some Tamil youths were arrested and detained at Galle prior to the visit of President on 22.11.98. It has been the practice of the UNP Government to arrest all Tamil youths before the late President Mr. R. Premadasa visit that place. Like wise your Government is also following the same path and antagonizing the Tamils who have voted her to come to power.

4. You will never get 2/3 majority in the Parliament. Since 1994 you are blaming the UNP and not putting through the Devolution.

Yours faithfully,


T. Mukunthan.


8th December, 1999.

Hon. Prof. G L Peiris MP,
Minister of Justice, Constitutional Affairs,
Ethnic Affairs & National Integration,
Superior Courts Complex,
Colombo – 12.

Dear Sir,

I regret to note that I have not received any reply for my Tamil letter dated 25.11.1998 addressed to you and the President of Sri Lanka. I understand that there are no officers to read, understand and reply the letters written in Tamil.

I wanted to complain about 2 matters out of the 4 things pointed out to you my letter dated 25.11.98 – a copy which is annexed. However, I am sending herewith the English translation of that letter referred to above.

Those who worship and attend Poojas of Sabari Malai Iyappa Swami must compulsorily wear black, Yellow or Blue cloths. They should not wear shoes, sandles or any sort of foot wear for 45 days. There is no opportunity or chance to know about the restrictions to be followed by devotees of Iyappa Swami by the other religious groups.

The devotees of Iyappa Swami do not harm others they respect people treat all alike. Some mischievous people and the Security Forces some times suspect those devotees and arrest them and harass them. As you are a respected Professor we believe that you will always safeguard Justice and do Justice to the people.

A devotee of our religious group, a Student was arrested and detained by the Kirilapona Police on 7.12.99. It is unjustifiable and unlawful to detain a harmless, Iyappa Swami devotee in the cell. Is it Justifiable and proper to arrest and detain an Innocent devotee of Iyappa Swami along with the criminals?

Also I wish to point out to you at this juncture that last year also a young devotee of Iyappa Swami was arrested by the Bambalapitiya Police and they forcibly removed the devotional garland from his body. All these obstacles and harassments are meted out by the Security Forces because of the fact that we are Tamils. Further more, a devotee of Iyappa Swami was arrested at Kandy some days back and his devotional garland was removed by the Police forcibly.

As a Minister of Justice, Constitutional Affairs and National Integration we need not mention to you how the democracy, and religious independence be safeguarded.

There is no difficulty to find out the identity of the Iyappa Swami devotees. Hence, Please instruct your Security Forces and Police Officers to stop harassing the religious devotees of Iyappa Swami.

The devotional garland, black, Yellow or blue uniforms are essential for Iyappa Swami devotees as the Yellow ropes are essential for the Bikkus.

I fervantly hope and trust that you will intervene in this matter and safeguard the freedom of worship of the other communities and do justice and fairplay to all in Sri Lanka.
Thanking you,
Yours faithfully,


T. Mukunthan.
Copy to : 1. Hon. Lakshman Jeyakody MP, Minister of Cultural & Religious Affairs,
No. 135, Anagarika Dharmapala Mawatha, Colombo - 7.
2. Secretary, Anti Harassment Committee.

No comments: