அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Monday, August 18, 2008

இலண்டன் தமிழர் தகவல் என்ற மாதாந்திர செய்திச் சஞ்சிகைக்கு எழுதியது

சுவிற்சர்லாந்து,13.08.2008
சிவத்திரு. அரவிந்தன் அவர்கள்
ஆசிரியர் - தமிழர் தகவல்
இலண்டன்.

பேரன்புக்கும் பெருமதிப்புக்குமுரிய ஆசிரியர் சிவத்திரு. அரவிந்தன் அவர்களுக்கு,வணக்கம்.

தங்களின் புத்தாண்டு இதழை முதற் தடவையாகப் பார்வையிட்டேன். அட்டையில் வெளியான மற்றொரு அரவிந்தன் எனது பெறாமகன். ஏன ஒன்றுவிட்ட அண்ணன் பகீரதன் அவர்கள் தனது நண்பரொருவர் மூலம் அனுப்பிய இதழை நேற்று வாசித்தபின் இன்று நேரடியாகப் பேசுவதற்கு தொடர்புகொள்ள முயற்சித்தும் பலனில்லாத காரணத்தால் இதனை மின்னஞ்சல் மூலமாகத் தெரிவிக்கின்றேன்.

முதலில் உங்கள் தமிழ் எழுத்துத் தகவல்பணிக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.
வாசிப்பதில் ஆர்வமுடைய எனக்கு தகவல் இதழை அனுப்பிய அண்ணனுக்கும் கொண்டுவந்து சுவிஸில் சேர்ப்பித்த நண்பன் உதயனுக்கும் எனது நன்றிகள்.

மிக அருமையான சஞ்சிகை. சகலதையும் அடக்கி வருவது சிறப்பு. 5வது வயதில் நான் கண்டு ரசித்தது காலம் பிந்தியதாயினும் வரவேற்கத்தக்கது. தொடர்ந்து வாசிக்க முன்னர் பழைய இதழ்களைப் பெற முடியுமா என்ற ஒரு ஆதங்கம்.

இந்த இதழுக்கு முன்னைய இதழ் கட்டாயம் தேவை. காரணம் பக்கம் 2ல் அக்னிஹோத்திரம் ராமானுஜ தாத்தாச்சாரியருடைய கட்டுரையில் குறிப்பிட்ட …புத்தகத்தில் சுவாமியைப்பற்றி எழுதியிருந்த விஷயம் என்னைக் கவர்ந்தது.அந்த விஷயத்தை மார்ச் மாத இதழில் மறுபிரசுரம் செய்தேன்…..ஆனால் எந்த மார்ச் என்று குறிப்பிடவில்லை. அந்த இதழ் கண்டிப்பாக எனக்குத் தேவை. மேலும் கட்டுரையைப் படிக்கும் போது எமக்கும் அவரைச் சந்திக்க வேண்டும் என்ற ஆவல் எழுகிறது. அதற்கு தகவல் தேவை. அவரது தொடர்பு முகவரி தொலைபேசி இல. மின்னஞ்சல் முகவரி போன்றன. உதவ முடியுமா?

ஏனைய சகல கட்டுரைகளும் மிகவும் சிறப்பு. குறிப்பாக ஆத்மீகத்தில் அதிக நாட்டமுடைய எனக்கு படித்ததில் பிடித்ததிலிருந்து, ராமானுஜ தாத்தாச்சாரியருடைய கட்டுரை, ஜகந்நாதன் அவர்கள், சிவயோகம் கும்பாபிஷேகமலர் பற்றிய தகவல், சைவநீதி கட்டுரை மாதம் ஓர் ஈழத்துச்சிவாலயம், 50 சுய முன்னேற்ற வழிகள், மதுரை சைவ சித்தாந்த மாநாட்டுச் செய்திகள் படங்கள் சிவானந்தசோதியின் அன்னதானம் தஞ்சைப்பெரிய கோவில் அபிஷேகப் படங்கள் அருமையிலும் அருமை. முதன்முதல் தங்கள் தகவலில் வெளியான (பின்னரும்) சிவலிங்கம் ஏனைய ஆலயங்களில் பரிவார மூர்த்தியாக அமைவது சம்பந்தமான சகல கட்டுரைகளையும் வாசிக்க ஆவலாயுள்ளேன். சிவயோகம் கும்பாபிஷேக மலரை வெளியிட்டவர்களுடைய முகவரி மற்றும் கூனம்பட்டி கல்யாணபுரி ஆதீன முதல்வருடைய முகவரி என்பனவற்றை எனக்குத் தெரிவிப்பதுடன் ஏனையவர்களும் அறிந்து கொள்ள வசதியாக அவரவர் பற்றி நீங்கள் எழுதும் போது அந்தந்தப் பக்கங்களிலேயே அவர்களது சகல தொடர்பு விடயங்களை வெளிப்படுத்துவதுகூட ஒரு தகவலே.

தமிழர்களே! தமிழர்களுடன் தமிழில் பேசுங்கள் - அருமையிலும் அருமையான சொல்லடி.

என்றும் தமிழுக்காக
மறவாதநன்றியுடன்
தங்க. முகுந்தன்.

மின்னஞ்சலில் அனுப்புவதும் பிரச்சனையாயிருந்த காரணத்தால் புத்தகத்தில் இருந்த முகவரிக்கு இக்கடிதம் அனுப்பப்பட்டது. இலவச சஞ்சிகையான இவ்விதழ் திருமுருகன் அறிவகம் என்ற அமைப்பினால் வெளியிடப்பட்டுவருகிறது.

முகவரி சரியானது என்று உறுதியான பின்பு வாசகர்களுக்கு முகவரியை வழங்கலாம் என்று நினைக்கின்றேன்.
அவர்களது தொலைபேசி இல. 0044 208 480 3320
மின்னஞ்சல் - jothy5@yahoo.co.uk

No comments: