அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Thursday, August 28, 2008

நல்லூர்க் கந்தன் தேர் நாளை (29.08.2008) வெள்ளிக்கிழமை(கடந்த வருடம் நடைபெற்ற நல்லூர் முருகப் பெருமானுடைய தேர்த் திருவிழாவின்போது எடுக்கப்பட்ட படம் - 09.09.2007 நன்றி –தமிழ் நெற்)
நல்லை நகர் வீற்றிருக்கும் கந்தா உன் சரணம்
தொல்லைகளைத் தீர்த்தருள்வாய் கந்தா உன் சரணம்

இல்லை உனக்கு ஈடு என்றோம் கந்தா உன் சரணம்
இடரகற்றக் குரல் கொடுத்தோம் கந்தா உன் சரணம்

பார்வதியாள் பெற்றெடுத்த பாலா உன் சரணம்
பார்த்தருள்வாய் பைந்தமிழைக் காத்தருள்வாய் சரணம்
(இப்பாடல் வரிகளை நாம் 1978 1979 காலப் பகுதிகளில் தேர்த் திருவிழாக்களின்போது பாடியது ஞாபகம்)
கடல் கடந்த நிலையில் எம்மக்களின் இன்னல்களைத் தீர்த்து அவர்கள் செம்மையாக வாழ வழிகாட்டுவாயாக என்று ஆத்மார்த்தமாகப் பிரார்த்திக்கின்றோம்.1 comment:

மாயா said...

மேலும் நல்லைக்கந்தன் உற்சவகால புகைப்படங்கள் @ http://mayasphotoblog.blogspot.com/