அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Monday, August 18, 2008

அறநெறிப் பாடசாலை அவசியத் தேவை - சுவாமி சைதன்யானந்தா.

HINDU DHARMA VIDYA PEEDAM
SRI VIVEKANANDA ASRAM
Vellimalai, Kalpadi P.O.
Kayakumari Dist. 629 204.

Date : 27.03.1996.

அறநெறிப் பாடசாலை அவசியத் தேவை


சோஷலிஸ அரசியல் கருத்துக்களைப் பரப்புமுன் ஆன்மீகக் கருத்துக்களின் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடச் செய்யுங்கள். நம் உபநிடதங்களிலும் மதநூல்களிலும் புராணங்களிலும் பொதிந்து கிடக்கிற அற்புதமான கருத்துக்களை வெளிக் கொணர்ந்து நாடு முழுவதும் வாரி இறைக்க வேண்டும் என்கிறார் வீரத்துறவி விவேகானந்தர்.
ஆம். இவ்வாறு ஆன்மீகம் போதிக்கப்பட்டால் அதனை உணர்ந்து மக்கள் அதன்படி வாழத் தலைப்பட்டால் நாட்டில் கள்ளம் கபடு சூதுவாது மறையும் அமைதி அன்பு சேவை நிறையும்.

இத்தகைய நிலை நாட்டில் ஏற்படும்பொழுது நாட்டுமக்கள் அமைதியான வாழ்க்கை வாழ்வர். போட்டி பொறாமை அடக்கியாளும் முயற்சி லஞ்சம் ஊழல் என அனைத்துத் தீக்குணங்களும் மக்கள் மனதை விட்டு அகலும். ஒருவருக்கொருவர் உதவி புரிந்து இன்பமாய் வாழ்க்கை நடத்தும் நிலைமை ஏற்படும்.
எனவே ஆன்மீகக் கருத்துக்களை நாம் பரவச் செய்ய வேண்டும்.

மாணவச் செல்வங்கள் பொதுவாக உருவாக்குவது போல் உருவாவார்கள். எனவே சிறந்து விளங்கும் மாணவச் செல்வங்களை உருவாக்க அவர்களுக்கு அறநெறி பாடசாலைகள் நடத்தி ஆன்மீகமும் ஒழுக்க நெறிகளும் போதிக்கப்பட வேண்டும். இது ஒரு மிகச் சிறந்த புனிதப் பணியாகும். இதனைச் செய்வதில் நாம் மிகவும் ஆர்வமும் ஊக்கமும் உடையவர்களாக மாற வேண்டும். இதற்காக நாம் சில தியாகங்களைச் செய்ய வேண்டி வரும். பொருட் செலவு வரும். உடல் உழைப்பு நல்க வேண்டிவரும். ஆனால் இது போன்ற தியாகங்கள் நமக்கு இறையருளைப் பெற்றுத்தருவதுடன் முத்தி நிலைக்கும் வழிவகுக்கும். தியாகத்தாலன்றி அமரத்துவம் அடையப் படமாட்டாது என்பது வேதவாக்கு.

எனவே தியாகமும் சேவையுமே கொள்கையாகக் கொண்டு ஆன்மீகப் பணி செய்து இறையருள் பெறுவோமாக. இதற்கு எம் பெருமான் அருள் செய்யப் பிரார்த்திக்கிறோம்.

No comments: