அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Tuesday, August 19, 2008

காந்திவழியில் போராடிய மாபெரும் தலைவர் உடுப்பிட்டி சிவா

எனக்கு அரசியல் வழிகாட்டிய ஆசான் தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் தலைவர் அமரர் மு. சிவசிதம்பரம் அவர்களை விழித்து 16.12.2001ல் ஞாயிறு தினக்குரலின் 10ம் பக்கத்தில் வெளியான சிவாவுக்கு ஒரு மடல் என்ற சத்யனின் கடிதத்துக்கு 21.12.2001ல் நான் எழுதிய பதில் இன்றுவரை பிரசுரிக்கப்படாத நிலையில் அக்கடிதத்தையே இங்கு சமர்ப்பிக்கின்றேன். கடந்த 20.07.2008 அவரது 85வது பிறந்த தினம் செய்தி பிந்தியமைக்கு மன்னிக்கவும்

செய்தி ஆசிரியர் - தினக்குரல் - கொழும்பு.
அன்புடையீர் - கடந்த ஞாயிறு சிவாவுக்கு ஒரு மடல் என்ற சத்யனின் கடிதம் சார்பாக, அவரது உதவியாளன் என்ற வகையிலும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் விசுவாசமான தொண்டன் என்ற வகையிலும் இப்பதில் கடிதத்தை எழுதுகின்றேன். தர்மப்படி பிரசுரிப்பீர்கள் என நம்புகின்றேன்.

எதையும் குறிப்பிட்டு எழுதவேண்டிய தேவை எனக்கு இருப்பதாக இல்லை. ஏனெனில் தமிழர் விடுதலைக் கூட்டணியில் திரு.மு.சிவசிதம்பரம் அவர்கள் தான் தொடர்ந்தும் தலைவராக இருக்கின்றார். இது மக்கள் குறிப்பாக வடக்கு-கிழக்கில் வாழும் தமிழ்ப் பேசும் மக்கள் அனைவருக்கும் தெளிவாக - அறிவுபூர்வமாகத் தெரியும். கடந்த வருடம் பொதுத்தேர்தலின்போது மட்டுமல்ல, சகலதேர்தல்களிலும் ஏன் முக்கிய விடயமான தற்போதைய நான்கு கட்சி கூட்டமைப்பு ஏற்படுத்தப்பட முன்பும் - பின்னரும் எமது சிரேஷ்ட துணைத் தலைவர், செயலாளர் நாயகம் ஆகியோர் இந்தியா சென்று தலைவர் அவர்களின் ஆலோசனைகளைப்; பெற்றுவந்தமை நீங்கள் அறியாதிருக்கலாம். ஆனால் எமது கட்சியினர் மற்றும் பலருக்கு இது தெரி;ந்த ஒரு விடயம். கடந்த தேர்தலின்போதும், அதற்குமுன்னரும் தலைவர் மு. சிவசிதம்பரம் அவர்கள் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு ஆதரவு கேட்டு விடுத்த செய்திகளையும்(ஒலிப்பதிவுநாடா, துண்டுப்பிரசுரம்) நாம் மறந்துவிடலாகாது. இம்முறை வெளியிடப்பட்ட துண்டுப்பிரசுரத்தின் பிரதி இணைக்கப்பட்டுள்ளது. பத்திரிகைகள் காலம்காலமாக பாதுகாக்கப்படக்கூடிய ஆவணங்களில் ஒன்றாகும். ஏதோ எழுதவேண்டும் என்பதற்காக எழுந்தமான முறையில் ஒரு தலைவரைப்பற்றி விமர்சனம் செய்கையில் அவரது கடந்தகால செயற்பாடுகளையும் எடுத்து நோக்குவது சிறப்பாக இருக்கும். 1956ம் ஆண்டுப் பொதுத் தேர்தலில் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் சார்பில் பருத்தித்துறையில் போட்டியிட்டு தோல்வியடைந்த திரு. மு.சிவசிதம்பரம் அவர்கள் சிங்கள ஸ்ரீ எதிர்ப்புப் போராட்டம் மற்றும் அரசுக்கு எதிரான வேலைநிறுத்த எதிர்ப்புப் போராட்டங்;களில் கட்சிவேறுபாடின்றி ஆதரவு அளித்துவந்தார். 1960 மாhர்ச் தேர்தலில் உடுப்பிட்டித் தொகுதியில் 7365 வாக்குகளைப் பெற்றுத் தெரிவானார். பின் 1960 ஜூலையில் அதே உடுப்பிட்டித் தொகுதியில் 9080 வாக்குகளைப் பெற்று மீண்டும் தெரிவானார். 1965ல் 12009 வாக்குகளைப்பெற்றுத் தெரிவாகிய சிவசிதம்பரம் அவர்கள் 1970ல் 11662 வாக்குகளைப் பெற்று தமிழரசுக் கட்சியில் போட்டியிட்ட ஜெயக்கொடி அவர்களினால் தோற்கடிக்கப்பட்டார். 1972ம் ஆண்டு புதிய அரசியலமைப்பினை எதிர்த்து தமிழ்க்கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டணியை உருவாக்கியவேளையில் அதன் இணைச் செயலாளர்களில் ஒருவராக இருந்தார். 1977ல் நல்லூரில் 29858வாக்குகளைப் பெற்று (28137 வாக்கு வித்தியாசத்தில் - இலங்கையில் தனிஉறுப்பினர் தொகுதியில் அதிகூடியது) வெற்றிபெற்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவரானார். 1989ல் யாழ் மாவட்டத்தில் 8359 வாக்குகளைப்பெற்று தோல்வியடைந்தார். 1989ல் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் படுகாயமுற்று மயிரிழையில் தப்பி சிகிச்சைபெற்ற வேளையிலும்கூட தமக்குக் கிடைத்த பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ஏற்காது விட்டவர். 1994ல் வன்னியில் போட்டியிட்டு தோல்வியடைந்த பின்னரும் கட்சிப் பணிகளில் தீவிரமாகப் பங்குகொண்டவர். 1998ல் சுகவீனமுற்றபோது இந்தியாவுக்குச் சென்று தனது குடும்பத்தவர்களுடன் இருந்து கட்சியின் பணிகளில் தொடர்ந்தும் ஈடுபட்டுவருவதை நான் குறிப்பிட்டேயாகவேண்டும்.
கடந்த 5.12.2001ல் நடைபெற்ற பொதுத்தேர்தலுக்கு முன்னரே தேசியப்பட்டியலில் முதலிடம் வழங்கப்பட்ட எமது தலைவர் மு. சிவசிதம்பரம் அவர்களை எந்தவித ஆட்சேபனையுமின்றி 4 கட்சிகளும் ஏற்றுக்கொண்டபின்னரே தங்கள் பத்திரிகை உட்பட அனைத்துப் பத்திரிகைகளும் செய்தியைப் பிரசுரித்தன. இந்த 4 கட்சிகளின் கூட்டமைப்பு வெளியிட்ட தேர்தல் விஞ்ஞாபனம் எந்தக் குறிக்கோளை எட்ட முற்படுகிறதோ அதுவே அந்த அமைப்பின்மூலம் தெரிவாகியுள்ள 15 உறுப்பினர்களின் கடமையாகும்
1989ல் திரு.அ.அமிர்தலிங்கம் அவர்களின் மறைவுக்குப்பின் 1990ல் திரு. க.யோகசங்கரியின் மறைவுக்குப்பின் 1994ல் தேசியப்பட்டியல் மூலம் தெரிவாகியிருக்கக்கூடிய வேளையிலே அவற்றை ஏற்காது ஒதுக்கிய திரு. மு. சிவசிதம்பரம் அவர்கள் இன்றும் தமது ஆதரவாளர்களின் வேண்டுகோளைஏற்று தேசியயப்பட்டியலில் இடம்பெற ஒத்துக்கொண்டுள்ளார். அவரது தேவை இன்றைய நிலையில் அவசியமானது. பலரும் எதிர்பார்க்கும் அவரது ஆலோசனைகளை சிதறடிக்க வேண்டாம் என்பதே எனது பணிவாhன வேண்டுகோளாகும்.

நன்றி

அன்புடன் பணியிலுள்ள
தங்க. முகுந்தன்

அவரது நினைவாக இலண்டனில் வெளியிடப்பட்ட முதலாவது ஆண்டு மலரிலிருந்து சில வரிகள்.
சொகுசான வாழ்க்கையைத் தேடாமல் சாதாரணமான ஒரு மனிதராக வாழ்ந்தார்.
தந்தை செல்வாவின் மறைவுக்குப் பின் அவரது பணிகளை ஏற்று செயற்பட்ட செயல்வீரர் காசுக்கு ஆசைப்படாத ஒரு மனிதர்
காந்தியைப்போல வாழ்ந்த சட்ட வல்லுனர் - அரசியல் தலைவர் - ஆன்மீகவாதி

No comments: