அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Wednesday, August 13, 2008

" சுவிற்சலாந்து காட்டும் பாதை" - தந்தை செல்வா

கொழும்பு வெள்ளவத்தை சைவமங்யைர்கழக மண்டபத்தில் நடைபெற்ற மொழிமாநாட்டில் பேசியது. 29. ஜனவரி 1956.

தமிழன் இந்நாட்டில் உரிமையுடன் வாழ வழிவகுக்கப்பட வேண்டும். நமது ஜீவாதார உரிமையான மொழி உரிமையைப் பாதுகாக்க முனைந்திருக்கிறோம். எமது சமூகம் மொழி ஆகியன ஒதுக்கப்படுவதை எதிர்த்துப் போராட்டம் நடாத்த முன்வந்திருக்கிறோம். இந்த நாட்டில் உள்ள தமிழ்ப்பேசும் மக்களின் எண்ணிக்கை பற்றிய புள்ளி விபரத்தைச் சிங்களவர் என்றும் குறைத்தே கூறுகின்றனர். இலங்கையில் 24 இலட்சம் தமிழ் பேசும் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். 81 இலட்சம் மக்கள் ஜனத்தொகையை உடைய இந்நாட்டில் அவர்கள் 30 சதவீதமானவர்களாகத் திகழ்கின்றனர். இலங்கையில் இரண்டு மொழிகள் உத்தியோக மொழிகளாக இருக்க முடியாது என்று கூறிவருவோர் இதர நாடுடகளின் முன்மாதிரியைப் பின்பற்றிச் செயலாற்றுவது சிறந்ததாகும். சுவிற்சலாந்து தேசத்தில் 4 மொழிகள் உத்தியோக மொழிகளாக இருக்கின்றன. இலங்கையில் சிங்களம் போல் அந்நாட்டில் ஜெர்மன் மொழியை 72.7 சத விகிதமானோர் பேசி வந்த போதிலும் பிரெஞ்சு இத்தாலியன் ஆகிய இரு மொழிகள் உட்பட 1.2 சத விகிதமானோர் பேசிவரும் ரொமனிஸ் மொழியும் ஜெர்மன் மொழியுடன் சமஅந்தஸ்துக் கொண்டிருக்கின்றது. இலங்கை சிறிய ஒரு நாடெனவும் எனவே இங்கு இரு மொழிகள் உத்தியோக பாசைகளாக இருக்க முடியாதெனவும் கூறுகின்றனர.; சுவிற்சலாந்து 14 ஆயிரம் சதுர மைல் விஸ்தீரணத்தை உடையது. ஆனால் இலங்கையோ 25 ஆயிரம் சதுர மைல் விஸ்தீரணமாகவிருக்கிறது.

ஒரு நாட்டில் தேசியம் வளர்வதுடன் மக்கள் ஐக்கியமாக வாழ்வதற்கு அந்நாட்டில் பெரும்பான்மையினராக விருக்கும் மக்கள் தங்களின் ஆதிக்கத்தை சிறுபான்மையினர் மீது நீதியுடன் செலுத்தவேண்டும். இதைச் சிங்களவர் முற்றாக மறந்து விட்டார்கள். இதன் விளைவாகத்தான் சிங்களம் மாத்திரம் கூச்சல் எழுந்திருக்கிறது. தமிழ் மொழி இலங்கையில் இல்லாவிட்டாலும் இந்தியாவில் பாதுகாக்கப்படுமென்றும் சிங்களமோ அப்படியல்ல வென்றும் ஒரு சில சிங்கள அரசியல்வாதிகள் கூறுகின்றனர். இதைப் பார்த்தால் இந்தியாவில் வாழும் தமிழர் உணவு உட்கொள்ளுகிறார்கள். ஆகவே இலங்கையில் வாழும் தமிழர்கள் சாப்பிட வேண்டியதில்லை என்று கூறுவதைப் போல இருக்கிறது.

(இக்கட்டுரை எழுதப்பட்டதன் நோக்கம் - தந்தை செல்வா அவர்களின் தீர்க்க தரிசனத்திற்காகவே - இந்நாட்டில் மக்கள் மக்களாக மனிதர்களாக மதிக்கப்படுகிறார்கள். மித உரிமை பேணப்படுகிறது. சுத்திரமான வாழ்க்கையை ஒவ்வொருவரும் மேற்கொள்ள முடியும். இந்நாட்டிலுள்ள பிரசையாக இருந்தாலும் சரி வெளிநாட்டவர்களாயிருந்தாலும் சரி முதன்முதல் அவர்களது கைவிரல் அடையாளங்கள் காவல்துறையினரால் பதிவுசெய்யப்பட்டு கணனி முறைப் படுத்தப்படும். நாட்டில் சகல பொறுப்புக்களும் காவல்துறையின் கீழ் இருப்பதால் அநீதி என்ற சொல்லுக்கு அனுமதி கிடையாது. யாராயிருந்தாலும் சகலரையும் விசாரணை செய்யும் அதிகாரம் காவல் துறையிடம் உண்டு. சகல விபரங்களும் அரசாங்கத்திற்கு தெரியப்படுத்த வேண்டும் என்ற கட்டுப்பாடு உண்டு. அனைவரும் நீதியாக வாழுவதால் பிரச்சனைகள் பெரிதாக ஏற்பட வாய்ப்பில்லை. 26 மாநிலங்களுடைய இந்நாட்டில் அவரவர் தாய்மொழியைக் கட்டாயம் அறிந்திருக்கக் கூடியவகையில் அரசு சகல உதவிகளையும் செய்கிறது. எமக்கு தமிழ் பாடசாலைகள் நடக்கக் கூடிய வகையில் ஒவ்வொரு புதன்கிழமைகளிலும் பாடசாலைகள் மாலைநேரம் தமிழர்களின் பாவனைக்கு வழங்கப்படுகிறது. (மேலதிக விபரங்கள் பின்னர் இணைக்கப்படும்.)

2 comments:

சயந்தன் said...

சுவிசிலிருந்தா..?
வாருங்கள் வணக்கம்..
பத்திரிகையாளர் மீது கொஞ்சம் காட்டமாகத் தான் இருக்கிறீர்கள் :).
நானும் சுவிசிலிருந்து தான்

தங்க முகுந்தன் said...

வருகைக்கும் கருத்துத் தெரிவித்தமைக்கும் நன்றி சயந்தன் அவர்களே!

ஓம் சுவிசுக்கு வந்து 16 மாதங்கள்தான். தொடர்பை நீங்கள் வலுப்படுத்த வேண்டும்.

பத்திரிகைகள்தான் பிரச்சனைகளை அதிகரிக்கச் செய்தன.

அவர்கள் நினைத்திருந்தால் இன்று நிலைமையை மாற்றியமைத்திருக்க முடியும் என்று திடமாக நம்புபவன் நான்.

ஆனால் ஏதேதோவெல்லாம் நடந்து கொண்டிருக்கிறது. பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்