அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Monday, March 1, 2010

தேர்தல் திருவிளையாடல்கள் 4 நிறைவேறின! இன்னும் எத்தனையோ?

கடந்த 2004இல் ஏகப்பிரதிநிதிகளுக்காக ஒப்பாரிவைத்த 4 கட்சிக் கூட்டமைப்பு தமக்குள் குத்துச்சண்டைபோட்டு பிரிந்தது ஒரு விளையாட்டு!

மனோ கணேசனை கண்டியில் தேர்தலில் போட்டியிட வரவேண்டாம் என ஆர்ப்பாட்டம் செய்தது இரண்டாவது.

பேரியல் அஷ்ரப் ஆதரவாளர்களை மிரட்டியிருப்பது 3வது.

யாழ்ப்பாணத்தில் பத்திரிகையாளரை மிரட்டிய அரச கட்சியின் வண்டவாளத்தை பிபிசி வெளிப்படுத்தியதன்மூலம் இன்னோரு விளையாட்டு அம்பலம்.

இப்படி இன்னும் எத்தனை விளையாட்டுக்கள் வரப் போகின்றன.

நடுரோட்டில் நிற்கும் தமிழர்கள் எவரை நம்பி வாக்களிக்கப் போகிறார்களோ?

யாமறியோம் பராபரனே!

1 comment:

Bavan said...

போகிறபோக்கில் வேட்பாளர் எண்ணிக்கை கூடிப்போய் வாக்காளர் எண்ணிக்கை குறையப்போகிறது... அரசியல் சாக்கடைதான் எல்லாக்குப்பைகளையும் வந்துசேர்கின்றன..:(