அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Saturday, March 27, 2010

சொல்வேந்தர் சுகிசிவம் கருத்து - உண்மைகளை ஏற்காதோர் பழியுரை!

சன்தொலைக்காட்சியில் - தமிழ் மாலை -இந்த நாள் இனிய நாள் நிகழ்வில் இலங்கைத் தமிழர்படும் இன்னல்கள் குறித்து கருத்துத் தெரிவித்த சொல்வேந்தர் சுகிசிவம் அவர்களை - தமிழ் மன்னன் எல்லாளனின் பெயர் கொண்ட ஒரு பதிவர் தனது இணையத்தளத்தில் அறிவற்ற தனமாக விமர்சித்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கின்றேன்.

இந்து கலாசார அலுவல்கள் அமைச்சராக பி.பி.தேவராஜ் அவர்கள் பணிபுரிந்த காலப்பகுதியிலிருந்து சொல்வேந்தர் சுகிசிவம் அவர்களும் வேறும் பலரும் இலங்கைக்கு விஜயம் செய்து தமது அறிவு சார்ந்த ஆன்மீகக் கருத்துக்களைப் பரப்பி வருவது யாவரும் அறிந்ததே! அவர் யாழ்ப்பாணத்துக்குச் சென்று அங்குள்ள உண்மை நிலைகளைக் கண்டறிந்தபின் வெளியிட்ட இத்தகவல்கள் அனைத்தும் உண்மையே!

மக்களை அவர்களின் விருப்பத்திற்கு மாறாக வெளியேறவிடாமல்(Pass கொடுக்காமல்) தங்களுடன் வைத்திருந்து - கொன்றொழித்தபிறகு பல ஏகப் பிரதிநிதிகள் தம் உயிரைக் காப்பாற்ற - ஒளித்து - ஓடி இன்று பல நாடுகளிலும் தஞ்சமடைந்துள்ள நிலையில், வாழும் மக்களுக்காக நியாயமான - நடைமுறைக்கு ஏற்ற கருத்துச் சொன்ன சொல்வேந்தரின் கருத்துக்கு - ஆட்டையும் ஓநாயையும் முன்னிறுத்துவது தங்களின் மிருகத்தனத்தையே (இனம் இனத்தைச் சாரும் என்பதுபோல) ஒப்புவிக்கிறது போலாகிறது.

யாராவது எமக்கு நியாயமான கருத்துக்களைச் சொன்னால் எங்களில் சிலர்(உங்களைப் போன்றோர்) அதை ஏற்க முடியாத நிலையிலல்லவா இருக்கிறோம்.

வெளிநாடுகளில் பல இன,மத,நிற,மொழி வேறுபாடுகொண்ட - மனிதர்களோடு வாழும் நீங்கள் - சராசரி மனிதராக - உண்மைத் தமிழுணர்வுள்ளவராக - வாழ முதலில் முயற்சி செய்யுங்கள்!

2 comments:

LK said...

oru silara tirutha mudiyathu vidunga
-LK
http://vezham.co.cc

சிவம் அமுதசிவம் said...

அன்பரே! அன்பைமுன்னிறுத்திய தங்கள் அறைகூவலைஏற்று, இதோ தங்கள் மனசாட்சியிடம் ஓரிரு கேள்விகளை முன்வைக்கிறேன். தயவுசெய்து இதற்கானவிடைகளை உங்கள் மனசாட்சியிடமே விட்டுவிடுங்கள்.
முழுஅகிம்சாவழியில் உரிமைகளைக் கேட்ட தந்தைசெல்வா தொடங்கி அமிர்தலிங்கம்வரை - ஏன் உங்கள் ஆனந்தசங்கரிவரை, சிங்களத்திடமிருந்து பெற்றுக்கொண்டது தான் என்ன?வெறும்உறுதிமொழிகளும், மைகாயுமுன்பே கிழித்தெறியப்பட்ட ஒப்பந்தங்களும்தானே! போதாக்குறைக்கு அனைத்து அகிம்சைப்போராட்டங்களும் ஆயுதபலத்தினாற்றானே ஒடுக்கப்பட்டது?காலமெல்லாம் அவர்கள் குட்டிக்கொண்டேயிருப்பார்கள்; காலமெல்லாம் நாம் குனிந்துகொண்டேயிருக்கவேண்டுமென்கிறீர்களா? உங்கள் கிருத்தியத்தின் முகப்பில் இட்டிருக்கிறீர்களே சிவன்! அவரும் அநியாயங்கள் அதிகரித்தால், தனது சூலாயுதத்தைப் பிரயோகிப்பவர்தானே?இந்தவன்முறைவாதியை எதற்காக இதில் இட்டீர்கள்?சரி! உங்கள் கருத்துப்படியே புலிகள் பயங்கரவாதிகள் என்றேவைத்துக்கொள்வோம். இந்தப்பயங்கரவாதிகளுக்காக, எமது மதநம்பிக்கைகளை, கல்விக்கூடங்களை, ஏன் எமது நூலகத்தைக்கூட, சிங்களன் அழித்தமை சரியென்கிறீர்களா? உலகமே அதிச்சியடையும்வகையில் எவ்வளவுபெரிய இனப்படுகொலை நடந்தேறியிருக்கிறது. இதையெல்லாம் விட்டுவிட்டு,” புலிகள் பாஸ் கொடுக்கவில்லை; அதனாற்றான் மக்கள் இறந்தார்கள் ‘ என்று நாக்கூசாமற்சொல்கிறீர்களே!இதுமட்டுமா? எத்தனை அப்பாவித்தமிழ்ப்பெண்களைக் கேடுகெட்ட சிங்களஇராணுவம், வன்புணர்ந்து கொலைசெய்ததே! அதையும் ஒருவேளை, “ அந்த இராணுவத்தானின் ஆசைக்கு இணங்காமையாற்றான் கொல்லப்பட்டார்கள்” என்றும் குற்றஞ்சாட்டுவீர்களோ? அல்லது ‘ அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா’ என்று கையைவிரிப்பீர்களோ?நன்றாகப்புரிந்துகொள்ளுங்கள்! புலிகள் வலிந்து ஆயுதமெடுக்கவில்லை! அதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டார்கள்.
1950 களில் சத்தியாக்கிரகப் போராட்டத்திலிருந்த தமிழ்மக்களின் தலைகள்மீது வல்லுந்து ( jeep) ஓட்டியவர்கள் யார்? புலிகளா?
1970 களில் ஆவணி அமளியில் ஈடுபட்டவர்கள் யார்? புலிகளா?
1980 களில் கருப்பு ஜூலையை நிகழ்த்திமுடித்தவர்கள் யார்? புலிகளா? கோணேஸ்வரி,கிருஷாந்தி என்றும் இன்னும் எத்தனை எத்தனையோ வார்த்தைகளில்வடிக்கமுடியாத கொடுமைகளைப்புரிந்தவர்கள் யார்? புலிகளா?
ஒருவேளை இதற்கும் அதேபாணியில் பதிலளிப்பீர்களோ - இவர்கள் ஆயுதம் எடுக்காமல்விட்டிருந்தால் ஏன் அவன் இதையெல்லாம் செய்யப்போகிறான் என்று? அந்தக்காலப்பகுதியில் உங்கள் அகிம்சாவாதி(? ) கள் உச்சரித்த
‘தமிழீழம்’ என்ற சொல்தான் சிங்களக்காடையர்களுக்கு ஒவ்வாமையாக இருந்தது என்பதை மறுக்கமுடியுமா உங்களால்? இத்தனை அநியாயங்கள் இலகுவாக நடந்தேறியிருக்கிறது ; இதில் எதையுமே கண்டுகொள்ளாமல் - சுகிசிவம் என்பவர் எமது உடைந்தவீடுகளை எம்மவர்க்கேபெற்றுத்தரும் தரகர் வேலைபார்க்கிறார். அவர் நினைக்கிறார் தம்மைத்தவிர மற்றைய அனைவருமே சிந்திக்கத்தெர்யாதவர்கள் என்று. அவருக்கு நீங்கள் வக்காலத்து வாங்குகிறீர்கள்; இல்லையா? எமக்கெல்லாம் நன்றாகப்புரிகிறது -
அவர், தமிழகத்தின் உழுத்துப்போன அரசியலில் குளிர்காய்கிறார்.
நீங்கள் எங்கு குளிர்காய்கிறீர்கள்? உங்களுக்குத்தான் வெளிச்சம்!!!!