அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Sunday, March 14, 2010

தனித்து ஓடுவதைவிட - சேர்ந்து ஓடுவதுதான் இப்போதுள்ள பிரச்சனையே!

ஒரு கட்சி தேர்தலில் தனித்துப் போட்டியிடுவது சுலபம். இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கட்சிகள் சேரும்போது - அதுவும் வெவ்வேறு மொழிபேசுபவர்கள் - பிரச்சனைகளை எதிர்நோக்குகிறார்கள். இருதலைக் கொள்ளிஎறும்பின் நிலையில் சில தமிழ்க்கட்சிகள்!

குறிப்பாக மக்கள் சுதந்திர முன்னணியுடனும் ஐக்கிய தேசிய முன்னணியுடன் சேர்ந்து கூட்டாக இணைந்துள்ள சிறுபான்மைக் கட்சிகள் பலத்த சவால்களை முன்னோக்கியுள்ளன. முன்பு ஒரு தடவை ஜனாதிபதியாக இருந்த டிங்கிரி பண்டா விஜயதுங்க சொல்லிய பெருமரத்தில் படரும் செடி கொடிபோல - சிறுபான்மைக்கட்சிகள் தொடர்ந்தும் இவ்வளவு இன்னல்களுக்குப் பின்னரும் பெரும்பான்மைக் கட்சிகளில் சேருவதால்தான் இந்த முரண்பாடுகள் ஏற்படுகின்றன.

என்ன நோக்கில் இவர்கள் சேருகிறார்கள?; - பின்னர் அனைத்துக் கட்சி மாநாடுகளில் தாம் தாம் தனி ஒரு கொள்கை என்று எதற்காக வாதிடுகிறார்கள் என்பதுதான் இன்றுவரை புரியவில்லை. தேர்தல் போட்டி வரும்போது ஒருவனுடன் சேர்ந்துவிட்டு பின் ஏதேனும் ஒரு பிரச்சனையில் வேறொருவனுடன் பேசும்போது - தானும் தனியாளெனப் போவதையிட்டுத்தான் நான் என் மண்டையை உடைத்துக் கொள்ள வேண்டி இருக்கிறது.

நீ ஒரு மாற்றுக் கட்சியின் சின்னத்தில் போட்டியிட்டுவிட்டு ஏதேனுமொரு காரணத்தில் பிரச்சனைவரும்போது உனது தனித்துவத்தைக் காட்டி உன் கட்சியில் செல்வதைப் காட்டிலும் - நீ தனித்தே இருப்பது எவ்வளவோ மேல் என்பதே எனது தெளிவான முடிவு.

இதில் யாரையும் சேர்த்துக் கொள்ளலாம். தமிழ்க்கடசியாயினும் சரி, முஸ்லிம் கட்சியாயினும் சரி, மலையக அல்லது மேல்மாகாண கட்சிகளானாலும் சரி எல்லாமே சாதாரண அப்பாவி மக்களை முட்டாள்களாக்க எண்ணுகிறார்கள். 1994இல் எனது நெருங்கிய நண்பனொருவன் (மலையகத்தைச் சார்ந்தவர்) ஒரு தடவை சொன்னது இப்போதும் எனக்கு ஞாபகம் வருகிறது. இவர்கள் இப்போது புதிய அணியுடன் சேரும்போது – எப்போதுமே போட்டு பழகிய யானைக்குத்தான் இம்முறையும் போடுவார்கள் - கதிரைக்குப் போடமாட்டார்கள்

கூட்டுச் சேருபவர்களும் அடிக்கடி தம்மை மாற்றிக் கொள்வதால் மக்களுக்கும் குழப்பம் அதிகம். அதிலும் இம்முறை ஒரு மாவட்டத்தில் தனித்தும் சில மாவட்டங்களில் கூட்டாகவும் போட்டியிடுவதும் குழப்பத்தையே உண்டு பண்ணுகிறது. பதவிக்காக குழப்பம்கொள்ளும் இந்தப் போலிகளை மக்கள் கொஞ்சம் உஷாராகி தெளிவு பெறவேண்டும் என்பதே எனது ஆதங்கம்.

No comments: