பத்திரிகைச் செய்தி - 09-03-2010
பல்லின மக்களைக் கொண்ட கொழும்பு மாவட்டத்தில் கணிசமான தமிழ்ப் பேசும் மக்கள் வாழ்கின்றனர். தமிழர்கள் தமது பிரதிநிதித்துவத்தை தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்றால் தமது வாக்குப்பலத்தை வீணாக்காது, அதன் பலத்தை சரியாக பாவித்துக் கொள்ளவேண்டும். அதன் மூலமே தமது செல்வாக்கை அரசியலில் பிரயோகிக்க முடியும். தமிழ் மக்களின் தேர்தல் புறக்கணிப்பு - தமிழ்ப் பேசும் மக்கள் தரப்பின் குரலை பலவீனமடையவே செய்யும். இன்றைய கால கட்டத்தில் தமிழ் மக்களது தேர்தல் மூலமான குறைந்தபட்ச அரசியல் ஈடுபாடும் அவர்தம் உரிமையைப் பாவிப்பதும் ஒவ்வொரு தமிழ் பேசும் மக்களின் கடமையாகும். சேவை மனப்பான்மை கொண்டவார்களை தெரிவு செய்வதும் மற்றைய முக்கியமான கடமையாக கருதவேண்டும்.
கொழும்பு வாழ் சமூகத்தின் பல்லின வேட்பாளர்களையும் கொண்டு தனித்து போட்டியிடுகின்ற ஒரேயோரு தமிழ்க்கட்சியாக - கொழும்பு மாவட்டத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணி போட்டியிடுகின்றது. வடக்கு கிழக்கில் இருந்து இடம் பெயர்ந்து கொழும்பு நகரில் வாழும் தமிழ் மக்களும், மலையக மற்றும் முஸ்லீம் மக்களுடன் பெண்களும் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர். எமது அணியில் உள்ள உங்கள் சமூக பிரதிநிதிகளுக்கு வாக்குகளை வழங்கி உங்கள் குரலிற்கு வலு சேர்க்க கடமைப்பட்டுள்ளீர்கள். உதய சூரியன் சின்னத்தில் தவிகூ சார்பாக போட்டியிடும் முதன்மை வேட்பாளர் என்ற அடிப்படையில் மக்களை தேர்தல் பற்றி அறிவு மயப்படுத்துவது எனது கடமையாக கருதி இந்த வேண்டுகோளை கொழும்பு வாழ் வடக்கு கிழக்கு - மலையக -முஸ்ஸீம் தமிழ் பேசும் மக்களை குறிப்பாக வேண்டுகின்றேன்.
ஜெயசங்கரி ஆனந்தசங்கரி
தமிழர் விடுதலைக் கூட்டணி
கொழும்பு மாவட்டம்
Tuesday, March 9, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment