அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Sunday, March 14, 2010

தமிழ் தோட்டம் ( Tamil Park ) வலைப்பதிவாளருடன் .......

கடந்த மார்ச் 2 ஆந்திகதி எனக்கு ஒரு மின்னஞ்சல் வந்திருந்தது. அதாவது

வணக்கம்,

நமது தமிழ்த்தோட்டம் http://tamilparks.50webs.com படைப்பாளர்களை ஊக்குவிக்கும் வண்ணமாக இலவசமாக படைப்புகளை நமது தமிழ்த்தோட்டத்தில் வெளியிட்டு வருகிறது.. தங்களின் படைப்புகளையும் எழுதி tamilparks@gmail.com அனுப்பிவையுங்கள்

என்றும் நன்றியுடன்
தமிழ்த்தோட்டம்
http://tamilparks.50webs.com

இதற்கு

அன்புள்ள தமிழ் தோட்டத்துப் பண்ணையாளரே!

வணக்கம்.

உங்கள் பண்ணையில் எனது செடியையும் நட அனுமதி கிடைக்குமா?
உங்களுடன் பேசியதில் மிக்க மகிழ்ச்சி!

தோட்டம் ஆரம்பித்து 4 ஆண்டுகள் ஆகிவிட்டதோ! வாழ்த்துக்கள்.

என்றும் அன்புடன்
தோட்டத்து நட்பை விரும்பும்
தங்க. முகுந்தன்.

அதற்கு

ஏன் தங்களின் செடியை நடுவதற்கு அனுமதி இல்லை, தாராளமாக விதையுங்கள்

என்று பதில் தந்தார். அதற்கு

எப்படி எங்கே என்னமாதிரி எந்த இடத்தில் விதைக்கவேண்டும் என்று தோட்டக்காரன் சொன்னால்தானே நாங்கள் உள்ளுக்கு இறங்கி எதுவும் செய்யலாம். இல்லாவிட்டால் தோட்டக்காரன்பாடு அம்போதான்!

என்று நான் பதில் அளித்தேன்.

தமிழ்த்தோட்டத்திலிருந்து தங்களுக்கு பிடித்த 10 தலைப்புகளை (கவிதை / கட்டுரை / நகைச்சுவை / பொன்மொழி) எதுவாயினும் பரவாயில்லை சொல்லுவீர்களா?

இது அவர்.

ம்...என்னவோ உங்களுடைய தமிழ் தோட்டத்தை பிரிச்சு மேய வைத்துவிட்டீர்கள்!

1. நகைச்சுவை முழுதும் படித்தேன். ஏனெனில் நகைச்சுவை எனக்கு ரொம்பவும் பிடிக்கும். இதில் வாழைப்பழம் - அப்பிள் அருமை.
2.தெனாலி ராமனுடைய கதைகள் ரொம்பப் பிடிக்கும். படித்தேன்
3.கவிதையில் அன்பு, நட்பு, இலங்கை இவற்றை ரொம்பப் பிடித்திருந்தது.
4.இப்போ சிறுகதையிலும் நல்ல நண்பன் கதை - முனிவர் காட்டிய வழி - மனதை தொட்ட உண்மைக்கதை

இது போதும்தானே! இது நான்.

மிக்க நன்றி. இது அவர்.

சிறுவர்களுக்கு மிகவும் பிரயோசனமான தளம்!

1 comment:

Tamilparks said...

மிக்க நன்றி