அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Sunday, March 7, 2010

இரு வாரங்களின் பின் திடீரெனப் பெய்த பனிக் காட்சிகள் சில!

சுவிற்சர்லாந்தின் பருவ காலம் 4. இலைதுளிர்காலம் பங்குனி - வைகாசி. கோடை ஆனி - ஆவணி. இலையுதிர்காலம் புரட்டாதி - கார்த்திகை. பனிகாலம் மார்கழி - மாசி. காலமும் சிலவேளை முந்திப்பிந்திவரும். இம்முறை எதிர்பார்த்ததைவிட பனி அள்ளிக் கொட்டியதால் இருப்பில் வைத்திருந்த உப்பு நிறைவடைந்து பக்கத்தில் இத்தாலியில் வாங்கியிருக்கிறது சுவிஸ அரசு. இங்கு கடல் இல்லாதபடியால் உப்பின் விலை சற்று அதிகம். என்ன 95றாப்பன். எமது நாட்டுப் பணத்தில் அண்ணளவாக 100ரூபா. இங்கு பனிக்காக வீசும் உப்பு செயற்கையாகச் செய்யப்படுவது. பனி கொட்ட ஆரம்பித்ததும் கரைப்பதற்கு அதை வீசுவதும் - பனியை அள்ளுவதும் கடினமான வேலை - இங்கு இவர்களுக்கு இது பழகிவிட்டது.

எப்போது இனிப் பனி வரும் என அங்கலாய்த்தபடி இருந்தேன். இன்று காலையில் எழுந்து வெளியே பார்த்தால் ஒரே வெள்ளைமயமாக இருந்தது. குதூகலித்துக்கொண்டு சில காட்சிகளை நண்பனொருவனிடமிருந்து பறித்துக்கொண்டுவந்த ஒரு புகைப்படக்கருவியால் பதிவுசெய்தால் என்னுடைய கெட்டகாலம் படங்கள் கணனியில் ஏற்றும்போது நடந்த சிறுதவறால் முழுப்படங்களும் அழிந்துவிட்டன. பிறகும் மனம் தளராமல் சென்று பிடித்தவற்றை பதிவிட்டுள்ளேன். நாளைக்கும் பனி பெய்யுமாம். இன்னும் எனக்குப் பிடித்த சிலவற்றை தரலாம் என்று இருக்கிறேன். நாளைய கால நிலையைப் பொறுத்து என் எண்ணம்.....1 comment:

ஜோதிஜி said...

இங்கு திரைப்பட பிரபலங்கள் சொன்னது பத்திரிக்கை வாயிலாக படித்தது இப்போது நண்பரான உங்கள் மூலம் படங்கள் பார்த்த போது மகிழ்ச்சியாய் உள்ளது.