கூட்டமைப்பின் கடந்தகால தேர்தல் கோஷமனைத்தும் புஸ்ஸாகிப்போன நிலையில் மக்களை மீண்டும் ஒருதடவை நட்டாற்றில் தள்ள யுக்தியாக புதிய தேர்தல் விஞ்ஞாபனத்தில் புலிகளே ஏற்காத ஒஸ்லோ பிரகடனத்தை முன்வைத்து மீண்டும் மக்களை மோடர்களாக்க நினைக்கிறார் சம்பந்தன். புலிகளால் கொடுக்கப்பட்ட பெயர்களுக்குரியவர்களை தமது கூட்டமைப்பிலிருந்த வெளியேற்றிவிட்டு - இம்முறை தமக்கு ஒத்தூதும் சிலரை முன்னிறுத்தி போட்டியிடுகிறார்கள். இதில் செல்வம் அடைக்கலநாதனும், சுரேஸபிரேமச்சந்திரனும், மாவை சேனாதிராசாவும், அப்பாத்துரை விறாயகமூர்த்தியும் இவரைத் தாங்கிப் பிடிக்கும் மிண்டுகளாவார்கள். இவர்களுடைய சதியை முன்கூட்டியே அறிந்துதான் நாம் பகிரங்கமாகவே விடுதலைப் புலிகளை ஏகப்பிரதிநிதிகளாக ஏற்க முடியாது என எமது கட்சியின் தலைவர் திரு. வீ. ஆனந்தசங்கரி அவர்களுடன் சேர்ந்து கட்சியில் வாதாடி - தந்தையின் அசைக்கமுடியாத கொள்கைக்காகப் பிரிந்தோம்.
எமது கட்சியை துண்டாடிய புலிகள் பின் தமக்குள் வடக்கு கிழக்கு என பிளவுண்டு இன்று இறுதியில் தாமே அழிந்துபோனதையும் தற்போது நினைவுபடுத்த வேண்டும்.
மக்கள் சொல்லொணாத இன்னல்களுக்கு ஆளாகியிருந்தபோது வன்னிப்பிரதேசத்தின் தொடர்புகளைப் பெற்று பல விடயங்களை வெளிப்படுத்தியதுடன் எமது தலைவர் ஆனந்தசங்கரி அவர்கள் உலகத்தை முட்டாளாகிக் கொண்டிருந்த இலங்கை அரசின் செய்திகளுக்கும் மறுப்பையும் உண்மை நிலையையும் தெளிவுபடுத்தி வந்தார்.
ஏற்கனவே விடுதலைப் புலிகளின் தலைவருக்குக் கூட பல நியாயமான விடயங்களைச் சுட்டிக்காட்டிய தலைவரின் கடிதங்களையும் - கருத்துக்களையும் ஏற்றுக்கொள்ளாத நிலையில் புலிகள் அமைப்பு இன்று அழிவுபட்டுள்ளது.
மக்களே இம்முறை தேர்தலில் கொஞ்சம் சிந்தித்து வாக்களித்தால் உங்கள் எதிர்காலம் ஓரளவாவது முன்னேற்றமடையும்! சிந்தியுங்கள்!
Sunday, March 7, 2010
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
இதில் உள்ள பல விசயங்கள் நான் பார்த்த படித்த 500 புத்தகங்களிலும் இல்லாத தகவல்கள். வாழ்த்துகள்.
Post a Comment