அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Thursday, March 11, 2010

தமிழ்க்கட்சிகளையும் - தலைவர்களையும் அழித்து கடைசியில் தமிழ் மக்களையும் அழிவுக்கு கொண்டுவந்து விட்டவர்கள் யார்?

திரும்பத் திரும்ப பழசுகளை நான் எழுத விரும்பவில்லை. ஒரேயொருவரைப் பற்றி மீண்டும் நினைவுபடுத்த விரும்புகிறேன். உலக நாடுகளின் அரசியல் யாப்பு நிபுணரெனப் பெயர்பெற்ற கலாநிதி நீலனைக் கொன்றவர்கள்தான் எமது ஏகப் பிரதிநிதிகள் என்று வாக்குகள் அளித்தால் - ஒரு திருக்குறள் நினைவுக்கு வருகிறது!

ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன்
பின்சாரப் பொய்யாமை நன்று.

ஒன்று மாத்திரமல்ல பல குறள்களில் மனிதன் இப்படி நடக்க வேண்டும் என்று அருமையாகச் சொல்லியுள்ளார். நாம் யார் - சொந்தப் புத்தியை பாவிக்க! எவனோ ஒருவன் அல்லது ஒரு கொஞ்சப் பேர் சொல்லுவதற்கு தலையாட்டும் மந்தைகளல்லவா நாங்கள்! இல்லாவிட்டால் நல்லது எது கெட்டது எது என்று தெரியும் அறிவு நம்மிடமிருந்து விலகுமா?


இந்த மனிதரைக் கொன்றுவிட்டு அவர் தயாரித்த தீர்வுத் திட்டம் அரசியல் ஆலோசகரால் அருமை எனப் பகன்றதையும் நாம் மறந்துவிட முடியாது!

இந்த மாபாதகச் செயலைச் செய்தவர்கள்தான் எமக்கு ஏகப் பிரதிநிதிகளென்றால் .... கொஞ்சம் சிந்திக்க வேண்டும்.

No comments: