அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Sunday, March 7, 2010

பிளவுகள் கருத்து முரண்பாடுகளைப் பார்க்கும்போது அவர்களது தலைவர் இல்லை என்பது ஊர்ஜிதமாகிறது!

நவம்பர் 27இல் (மாவீரர் நாளன்று) அப்பாவி மக்களின் - நியாயமான - நீதியான வாழ்வுக்காகப் போராடி உயிர்நீத்த தியாகிகளுக்கு எமது நினைவஞ்சலிகள்! என்ற தலைப்பிட்டு ஒரு பதிவை இட்டேன். அதில் வருவாரா? வரமாட்டாரா? என்ற ஆவலோடு இந்த முட்டாள் தொண்டர்கள் - உறுப்பினர்கள் காத்துக்கொண்டு இருக்கிறார்கள்! என்ற ஒரு வரியையுமிட்டிருந்தேன்.

இன்று கூட்டமைப்பினரின் (சம்பந்தன் - கஜந்திரகுமார் பொன்னம்பலம் - கிஷோர் - தங்கேஸ்வரி - சிறீகாந்தா - சிவாஜலிங்கம் - கஜேந்திரன் - பத்மினி - இன்னும் பலர்) பிளவுகள் கருத்து முரண்பாடுகளைப் பார்க்கும்போது அவர்களது ஏகப்பிரதிநிதிகளின் தலைவர் இல்லை என்பது ஊர்ஜிதமாகிறது.(அவர் இன்னும் உயிருடனிருக்கிறார் என்று நம்புகின்றவர்களுக்கு இது சமர்ப்பணம்) அவர் இருந்தால் இவ்வளவு பிரச்சனைகள் தோன்றுமா? இதிலிருந்து இன்னும் தெரியவில்லையா அவர் இல்லை என்று!

சுவிசில் தமிழ்ப்பேசும் கட்சித் தலைவர்களை நான் சந்தித்தபோது பலருடைய முகத்திலும் ஒரு குற்ற உணர்வு இருந்துது!
கடந்த நவம்பர்23இல் நான் எழுதிய - சந்திப்பும் கலந்துரையாடலும் ஈழத் தமிழ் பேசும் மக்களுக்கு ஏதேனும் விமோசனத்தைத் தருமா? என்ற கட்டுரையில் சுருக்கமாக நான் சந்தித்த விபரத்தைத் தெரிவித்தேன்.

ஏதோ பல தலைவர்கள் ஒன்றுபட்டு ஏதாவது ஒரு நல்ல முடிவுக்கு வருவார்களென்றால் இது ஒரு சில நாட்களிலேயே சின்னாபின்னமாகியது. இதுபற்றி பின்னர் விரிவாக எழுதுகிறேன். முதலில் நடந்த முடிந்த அன்றைய சந்திப்பில் நான் சந்தித்த ஒரு சிலரைப் பற்றிச் சொல்ல விரும்புகிறேன்.

22.11.2009 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1.00 மணியளவில் நாங்கள் போயிருந்த சமயத்தில் கலந்தரையாடல் முடிவுபெறவில்லை. மாடியில் அவர்கள் இருந்தார்கள். நாம் கீழே காத்திருந்தோம். ஒரு சில தலைவர்களின் ஆதரவாளர்கள் போவதும் வருவதுமாக இருந்தார்கள்.

நான்தான் தந்தையின் வழிவந்த அரசியல்கட்சியின் உறுப்பினர் என்றபடியாலும் - ஏற்கனவே சுவிற்சர்லாந்தின் அனுபவங்களாலும் பொறுத்து நிதானமாக காத்திருந்தேன்.

முதலில் சிறீதரன் அண்ணை வந்த தான் போய் நான் வந்திருப்பதாக சங்கரி அண்ணையிடம் சொல்வதாக சொன்னார். சித்தார்த்தன் அண்ணை, டக்ளஸ தேவானந்தா அண்ணன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், மனோ கணேசன் திரு. சந்திரசேகரன் திரு. ரவூப் ஹக்கீம் சேனாதி அண்ணை ஹென்றி அண்ணை சுரேஷ் அண்ணை எல்லோரும் வந்தார்கள். முதலில் வெளியே மொட்டைமாடிக்குச் சென்ற சந்திர சேகரனுடனும் மனோ கணேசனுடனும் சந்தித்துக் கதைத்தேன். சந்திரசேகரன் அவர்களை கடைசியாகச் சந்திப்பேன் என்று நான் கனவிலும் நினைத்திருக்கவில்லை. ஆனால் அவரது தோற்றத்தில் நிறைய மாறுதல்கள் இருந்தன.

சித்தார்த்தன் அண்ணை, டக்ளஸ தேவானந்தா அண்ணன், சிறீதரன் அண்ணை இவர்களது ஆதரவாளர்கள் பலர் நின்றிருந்ததால் கைகுலுக்கி குசலம் விசாரித்ததுடன் எமது அன்பைப் பரிமாறிக் கொண்டோம்.சம்பந்தன் செளியே விருட் என்று சென்றார். 2 தடவை நான் அவர் முன் சென்று கதைத்தபொழுதிலும் அவர் ஏறெடுத்தம் பார்க்கவில்லை. விறைச்ச மண்டைக்காரர்தானே!

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அங்கேயே எல்லாரும் தவறு இழைக்கிறார்கள் என்று மனவருத்தப்பட்டுக் கொண்டார். ரவூப் ஹக்கீம் அவர்கள் கடந்த ஆகஸ்டில் அமிர்தலிங்கம் நினைவுச் சொற்பொழிவுக்காக லண்டன் சென்றிருந்தார். என்னால் அதில் கலந்த கொள்ள முடியாத காரணத்தைச் சொல்லி அவருடன் அதுபற்றிக் கதைத்தேன். சாப்பிட அமர்ந்த சேனாதி அண்ணை வழமைபோல கண்டவுடன் எழும்பிவந்த அன்பாக கதைத்தார். சுகநலன் - குடும்ப நலன்களைக் கேட்டார். படங்களும் எடுத்தக்கொண்டோம். ஆனால் இதுவரை எனக்கு ஒரு படமும் கிடைக்கவில்லை.

கருத்தரங்கு நடந்த இடம் ஒரு அமைதியான பகுதி. நிறைவுபெற்ற பின் வெளியேற ஆயத்தமான நிலையில் தங்கியிருந்த இடத்தில் ஹென்றி அண்ணை, சுரேஷ் அண்ணை இவர்ளையும் ஏனைய சில பத்திரிகையாளர்களையும் ஏற்பாட்டாளர்களில் சிலரையும் சந்தித்தேன்.

எனது கட்சித் தலைவர் ஆனந்தசங்கரி அவர்களுடன் நடந்துமுடிந்த கருத்தரங்கைப்பறறி கதைக்க நேரம் கிடைக்காதமையால் அடுத்த நாள் செவ்வாய்க்கிழமை அவர் தங்கியிருந்த இடத்துக்குச் சென்று அளவளாவி பின்னர் விமானநிலையம் சென்று வழியனுப்பி வைத்துவிட்டு வந்தேன்.

No comments: