அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Tuesday, March 16, 2010

இவ்வளவு அழிவுகள் - ஏமாற்றங்களின் பிறகும் அரசியல் கட்சிகள் சிலவற்றின் ஏமாற்றும் தந்திரங்கள்! மக்களே கவனம்!

முதலாவதாக கூட்டமைப்பின் ஏமாற்று வித்தையைப் பார்ப்போம்

உகந்த தீர்வை அரசு தராவிடில்.... மாற்றுத் தீர்வைப் பெறுவதற்கு சர்வதேச உதவியை நாடுவோம் - வவுனியாக் கூட்டத்தில் சம்பந்தன் தெரிவிப்பு என்ற - இன்றைய உதயன் தலைப்புச் செய்தியைப் பார்த்தால் அழுவதா சிரிப்பதா எனத் தெரியவில்லை!

உலகத் தமிழர் பேரவையின் மாநாட்டில் பிரிட்டிஷ் வெளிவிவகார அமைச்சர் மில்லிபான்ட் அவர்களின் உரையையும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கருத்தையும் சுட்டிக்காட்டிப் பேசியுள்ளார்.

இந்திய இலங்கை ஒப்பந்தத்தின்மூலம் கிடைத்த மாகாணசபைச் சட்டம்தான் இன்று நாடுமுழுவதும் அமுல்படுத்தப்பட்டு வருகிறது. வடக்கு கிழக்கில் ஏகப் பிரதிநிதிகளின் எதிர்ப்பால் இச்சட்டம் முற்றாக அமுல்படுத்தப்படவில்லை. இணைந்த வடக்கு கிழக்கும் புலிகளின் பிரிவால் தற்போது நீதிமன்றத்தால் பிரிக்கப்பட்டு நடந்த தேர்தலில் கிழக்கு மாகாணசபைக்கு புலிகளிலிருந்து விலகிய பிள்ளையான் முதலமைச்சராக இருக்கிறார்.

கடந்த சிலதினங்களுக்கு முன் 2005 ஜனாதிபதித் தேர்தலை புறக்கணித்தமைக்காக புலிகளை விமர்சித்த சம்பந்தன் இப்போது தேர்தல் விஞ்ஞாபனத்தை தயாரிக்க முதலில் புலிகளின் ஒஸ்லோ பிரகடனத்தை முன்வைத்தார். அது அரசால் நிராகரிக்கப்பட்டவுடன் வேறு சில பழைய நிராகரிக்கப்பட்ட ஒப்பந்தங்களின் வாக்கியங்களை தனது அறிவுத் திறமையால் புகுத்தி முன்வைத்திருக்கிறார்.

கடந்த பாராளுமன்றத் தேர்தலில் எந்தக் கோரிக்கையை முன்வைத்தார்களோ அது முற்றுமுழுதாகச் சிதைவடைந்த நிலையில் இப்போது புதிதாக விஞ்ஞாபனத்தை வெளியிட்ட பின் அது சரிவராது என தாமே முட்டாள்தனமாக அதை ஏற்றுக்கொண்டு வெளிநாட்டை உதவிக்கு அழைப்பதுபற்றியே எனது ஆதங்கம். போரை நிறுத்த ஒரு உருப்படியான காரியத்தையும் செய்யமுடியாத நிலையில் இப்போது புதுக் கதை தொடங்கியிருப்பதுதான் இன்னும் வேதனை. இதே சர்வதேசம்தான் போர்நடைபெற்றபோது வாய்மூடி மௌனியாக இருந்தது.

மேலும் 2004இல் பாராளுமன்றத் தேர்தலின் பின்பே சுனாமி வந்தது. தமிழர்களைக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்ற தந்தையின் தீர்க்கதரிசனமான வார்த்தை பலித்திருக்கிறது. அதற்குப் பின்பும் போரால் நடந்த அழிவுகளையும் நாம் கண்கூடாகப் பாரத்தும் ஏன் இந்த அநீதியான செயலை - பதவிக்காக சம்பந்தன் முன்வைக்கிறார் என்றுதான் புரியவில்லை. பல தடவை அரசியல் தீர்வு சம்பந்தமாக கடந்த பாராளுமன்ற காலத்தில் அழைக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மாநாட்டில் அழைத்தும் பங்குபற்றாமல் இப்போது தேர்தல் முடிந்தபின் பேச இருப்பதுபற்றி சொல்லுவதும் அறிவுடைய எம்மவர்களை முட்டாளாக்கும் கதைதான்.

அடுத்து மனோ கணேசனின் பெரும்பான்மையினரைப் பற்றிய கட்டுரை பகுதி 2 ஆக தொடரும்.

வாக்காளர்களே! கவனமாகச் சிந்தித்து உங்கள் பிரதிநிதிகளை தெரிவு செய்யுங்கள் -

2 comments:

Dr.எம்.கே.முருகானந்தன் said...

ஆழமாகக் கவனிக்கிறீர்கள். நல்ல பதிவு.

JKR said...

முட்டை இட்ட கோழிக்குத்தான் அதன் எரிவு புரியும் யார் சொல்லியும் புரியாது நல்ல பதிவு நல்ல அருமையான பகிர்வு, எல்லோரையும் சிந்திக்கவைக்கும் பதிவு.mullaimukaam.blogspot.com