அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Tuesday, September 30, 2008

வாசகர்களின் கவனத்திற்கு

கிருத்தியத்திலிருந்த அரசியல் சம்பந்தமான சகல கட்டுரைகளும் தற்போது நீக்கப்பட்டு தந்தை செல்வாவுடைய பெயரில் ஒரு புதிய அரசியல் பதிவை இப்போது ஆரம்பித்துள்ளேன். கட்டுரைகளை பிரதி பண்ணும் பணி நடைபெறுவதால் ஒருசில நாட்களுக்கு அரசியல் சம்பந்தமான பதிவைப் பார்ப்பதில் சிரமமிருக்கும். இதற்கு தயவுசெய்து அடியேனை மன்னிக்கவும்.
மாணவர்களுடைய நன்மை கருதி இந்த நடவடிக்கை ஏற்படுத்தப் பட்டுள்ளது.
புதிய அரசியல் வலைப் பதிவின் முகவரி:- http://www.thandaichelva.blogspot.com/

இன்று நவராத்திரி ஆரம்பம்

சாக்தம் - தேவி வழிபாடு

ஒரே பரம்பொருளை பல்வேறு நாம ரூபங்களில் வழிபட்டு மகிழ்ந்தனர் நமது மூதாதையர்கள். கடவுளைத் தாயாக பெண் வடிவில் வழிபடுகின்ற கொள்கையை சாக்தம் என்றழைப்பர். பெண் தெய்வ வடிவங்களை விளக்கிக் கூறும் கொள்கைக்கு சாக்தேயம் என்று பெயர்.
வேதோபநிஷதங்களில் சிறிய அளவில் காணப்படும் குறிப்புகள், தேவி பாகவதம், தேவி புராணங்கள், ஆகமங்கள்(தந்திரங்கள்) முதலிய நூல்கள் வழியாக வளர்ச்சியடைந்தது. தக மகா வித்தையென்றும், சப்த மாத்ருக்கள்(ஏழம்மன்) என்றும் பல வடிவங்கள் தேவிக்கு உண்டு. அவைகளில் மகாசரஸ்வதி (பிராஹ்மி), மகாலஷ்மி (வைஷ்ணவி), மகாகாளி (பார்வதி) என்ற மூன்று வடிவங்கள் முக்கியமானவை.
மகாசரஸ்வதி ஞானத்திற்கும், மகாலஷ்மி செல்வத்திற்கும், மகாகாளி அல்லது துர்க்கா வீரத்திற்கும் அதிதேவதையாக இருக்கின்றனர். நவராத்திரி காலத்தில் இந்த சக்திகள் வழிபடப்படுகின்றனர்.
நமது நாட்டில் 108 சக்தி பீடங்கள் (தேவி கோவில்கள்) புகழ்பெற்றவைகள் ஆகும். இவற்றில் சில பாகிஸ்தானில் உள்ளன. காசி, உஜ்ஜயினி, காஞ்சி, மதுரை, கல்கத்தா (காளிக்கட்டம்), துவாரகை, மூகாம்பிகை முதலியன முக்கிய தேவி பீடங்கள் ஆகும். காசியில் விசாலாட்சி, உஜ்ஜயினியில் மகாகாளி, காஞ்சியில் காமாட்சி, மதுரையில் மீனாட்சி, கல்கத்தாவில் மகாகாளி, துவாரகையில் ருக்மணி முதலிய வடிவங்களில் தேவி வழிபடப்படுகிறாள். இவைபற்றிய விரிவுரைகள் பிரம்மாண்ட புராணம், உத்தர காண்டம் லலிதோபாக்கியானத்தில் சொல்லப்பெற்றுள்ளன.
தேவி மகாத்மியம் என்ற நூல் மார்க்கண்டேய புராணத்தில் அடங்கியது ஆகும். இது 700 பாடல்களுள்ள சிறந்த சாக்தேய நூலாகும். இதனைச் சண்டி என்று வங்காளிகள் கூறுவர். இதற்கு துர்க்கா சப்தசதீ என்ற பெயரும் உண்டு.
அசுரர்களை அழித்து தேவர்களுக்கு அருள்புரியும்பொருட்டு பரதேவதையாகிய சக்தி முதலில் மகாகாளியாகவும், பின்னர் மகாலஷ்மியாகவும், மகாசரஸ்வதியாகவும் தோன்றினாள். அவளது வரலாறு 13 அத்யாயங்களாக இந்நூலில் கூறப்பட்டுள்ளன. இதைப் பாராயணம் பண்ணுவோர் சகல துன்பங்களிலிருந்தும் விடுபடுவர் என்று பாரத மக்களால் போற்றப்படுகிறது. இந்நூல் மந்திர வடிவானது. நவராத்திரி காலத்தில் இவற்றைப் படித்தும் கேட்டும் நாம் எமது பிறவிப் பேற்றைப் பெற்றுய்வோமாக!!!

நம்பும் நம்மைக் காப்பதற்கு தேவி ஓடி வருகிறாள்

வருகிறாள் வருகிறாள் அன்னை சக்தி வருகிறாள்
வருகிறாள் வருகிறாள் ஆதி சக்தி வருகிறாள்

பாவம் எல்லாம் தீர்ப்பதற்கு பராசக்தி வருகிறாள்
பக்தர்களைக் காப்பதற்கு பத்ரகாளி வருகிறாள்

இன்னல் எல்லாம் தீர்ப்பதற்கு இச்சாசக்தி வருகிறாள்
கீர்த்தியோடு புகிழ் வழங்கிட கிரயாசக்தி வருகிறாள்

ஞானமழையைப் பொழிவதற்கு ஞானசக்தி வருகிறாள்
நம்பும் நம்மைக் காப்பதற்கு தேவி ஓடி வருகிறாள்

சமயபுரத்தில் வாழும் அம்மை சாந்தி வழங்க வருகிறாள்
சஞ்சலங்கள் தீர்ப்பதற்கு சாம்பவியும் வருகிறாள்

சோட்டாணிக்கரை பகவதியும் சோகம் தீர்க்க வருகிறாள்
சொர்க்க போக வாழ்வை வழங்க தேவி ஆடி வருகிறாள்

மாயைவிலகி மனம் திருந்த மகாதேவி வருகிறாள்
மாதுளம்பூ மேனிகொண்ட மகாகாளி வருகிறாள்

மோகம் எல்லாம் தீர்ப்பதற்கு மூகாம்பிகை வருகிறாள்
முக்திநலம் தந்திடவே சக்தி ஓடி வருகிறாள்

பஞ்சம் ஓட பாவம் ஓட பஞ்சபாணி வருகிறாள்
பாம்பணிந்த பரமனோடு பார்வதியாள் வருகிறாள்

மகிடன் தலையின் மீதிலேறி துர்க்கையாக வருகிறாள்
மலைமகளாய் கலைமகளாய் அலைமகளாய் வருகிறாள்

Monday, September 29, 2008

தமிழ் மக்கள் சிந்திக்க வேண்டியது - ஞானயோகி

இலங்கைத்தமிழர்கள் சொல்லமுடியாத வேதனையில் உள்ள இவ்வேளையிலே எந்த தலைவர்களிடமோ அல்லது எந்த நாட்டிடமோ ஆசீர்வாதத்தையோ உதவியையோ நாடிப்போனால் அவர்கள் தருவதற்கு மறுக்கிறார்கள். இதற்கான காரணத்தை தமிழ் மக்கள் சிந்திக்க வேண்டியது அவசியமாகிறது. இதைப்பற்றி சிந்திக்க வேண்டியவர்கள் 1. தமிழ் அரசியல்வாதிகள் 2. தமிழ் ஊடகவியலாளர்கள் 3. தமிழ் புத்திஜிவிகள் 4. சகல தமிழ் மக்கள்
முதலாவதாக தமிழ் அரசியல்வாதிகளைப் பார்போமானால் திரு. சம்பந்தன் அவர்கள் தலைமையில் இருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்று கையறு நிலையில் இருப்பதாகவே தெரிகிறது. சந்திரிகா பதவியில் இருந்த வேளையிலும் அதற்கு முன்பும் திரு. சம்பந்தன் அவர்கள் அதிகார வர்க்கத்துடன் விவாதித்து தமிழர் துயரங்களை ஒரளவு தீர்த்து வைத்திருந்தார். இப்போதுள்ள அரசாங்கம் இவரை எதிரியாகவே பார்கிறது. தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த 22 எம்பிக்களும் இலங்கை அரசாங்கத்துடனோ அதிகாரிகள் மட்டத்துடனோ தொடர்பு கொள்ள முடியாதவர்களாக இருக்கிறார்கள். பாராளுமன்றத்தில் கத்துவதும் அதை தமிழ் ஊடகங்களுக்கு பரப்புவதுமே இவர்களுடைய தொழிலாக இருக்கிறது. இவர்கள் என்ன செய்ய வேண்டும் என்றும் மற்றைய தமிழ் அரசியல்வாதிகளைப் பற்றியும் பின்பு விரிவாக ஆராய்வோம்.
இரண்டாவதாக தமிழ் ஊடகங்களைப் பொறுத்த வரையில் மக்களுக்கு அறிவையும் நல்ல செய்திகளையும் தரவேண்டியவர்கள் மக்களை உணர்ச்சியூட்டி அறிவுமயக்கத்தை ஏற்படுத்தி அதில் இலாபத்தையும் விளம்பரத்தையும் பெற முயற்சிக்கிறார்கள். வீரகேசரி, தினக்குரல், உதயன், சுடரொளி போன்ற தினசரிகள் நமது அயல் நாடான இந்தியாவுக்கு அறிவுரை சொல்லி ஆசிரிய தலையங்கங்கள் தீட்டுகிறார்கள். இதிலிருந்து வடக்கத்தையான் என்ற நினைப்பு இப்பொழுதும் இவர்களுக்கு இருக்கின்றது போலும். அமெரிக்காவிலும் ஜரோப்பாவிலும் இந்தியர்களுக்கு மதிப்பு அதிகம். நிலைமை இப்படியிருக்க கிணற்று தவளைபோல் இவ்வுடகங்கள் எழுதித் தள்ளுகின்றன. எங்களுடைய சமயம், மொழி, கலாச்சாரம் அனைத்திற்கும் மூலம் தமிழகம் என்பதை மறவாதீர்கள். ஈழத்திற்கும் தமிழகத்திற்கும் நட்பு வலயம் ஒன்றை உருவாக்க பத்திரிகைகள் முயற்சிக்க வேண்டும். இன்று(25.09.08) கூட கலைஞர் கருணாநிதி தவறு இழைக்கிறார் என்று உதயன் பத்திரிகை ஆசிரிய தலையங்கம் தீட்டியுள்ளது. கலைஞர் கருணாநிதி மட்டுமல்ல நீதி தெரிந்த இலங்கைத் தமிழர்கள் பலர் நீணட காலமாகவே மௌனமாக இருந்து வருகிறார்கள் என்பது உதயன் ஆசிரியருக்கு தெரியாது. வடக்கு கிழக்கு இணைந்த மாகாண சபைக்கே இனிக் கனவுதான் காணவேண்டும்.
அடுத்தாக தமிழ் புத்திஜிவிகள் பலர் நாட்டின் நிலைமை காரணமாக புலம்பெயர்ந்து உலகின் பல நாடுகளிலும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவர்கள் இனிவரும் காலங்களில் சமூகத்திற்கான கடமைகளை செய்வதற்கு முன்வர வேண்டும். சும்மா இருக்காமல் உதவி செய்யப்போய் ஏன் சோதனைகளையும் வேதனைகளையும் படுவான் என்று நினைக்காதீர்கள். புத்திஜிவிகள் ஒன்று சேர முயற்ச்சி செய்யுங்கள். உங்களால் தான் தமிழ் சமூகத்தை மாற்றி அமைத்து முன்னேற்ற முடியும். தமீழீழ போராடடம் தொடங்கி 25 ஆண்டுகளின் பின்பு தமிழர்களின் பிற்போக்கு தனங்கள்(தொழில், சாதி நையாண்டிகள்) இன்னும் மாறவில்லை என்று அடேல் பாலசிங்கம் நூல் வெளியிட்டுள்ளார்.
அமெரிக்கா, ஜரோப்பிய நாடுகளில் கூட்டுதல், துப்பரவாக்குதல் போன்ற வேலைகளுக்கு நல்ல சம்பளம் கொடுக்கிறார்கள். நாட்டையும் அழகாக வைத்திருக்கிறார்கள். நாமும் நமது நாட்டுக்கு திரும்பிச் சென்று வீட்டையும் நாட்டையும் அழகுபடுத்துவோம். தமிழர்களின் கல்வி கலாச்சார பொருளாதார மையங்கள் எங்கெங்கே உள்ளன அவற்றை யார் உறிஞசுகிறார்கள் என்பதை இனிவரும் பகுதிகளில் விரிவாக பார்போம்.
இன்றைய நிலையில் தமிழ் மக்கள் நிறைய சிந்திக்க வேண்டியிருக்கிறது. 1985 இலிருந்து இன்றுவரை ஜெனிவாவில் ஜக்கிய நாடுகள் சபையின் முன்னால் எத்தனை ஊர்வலங்கள் ஒன்றுகூடல்கள் செய்திருப்போம். அத்தனைக்கும் ஏதாவது ஒரு பலன் தான் கிடைத்ததா? இன்று வன்னியில் ஜக்கிய நாடுகள் நிறுவனங்கள் தமிழ் மக்களுக்கு உதவி செய்கின்றதா? வன்னி மக்கள் செய்வறியாது நிற்கிறார்கள். தமிழ் அரசியல்வாதிகளும், தமிழ் ஊடகங்களும் தங்கள் வேலைகளையும், இலாபங்களையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு முடிவே கிடையாதா?
ஏன் கிடைக்காது, நான் ஒருவன் சிந்திப்பதால் இக்கட்டுரையை எழுத முடியுமென்றால் தமிழ் மக்கள் அனைவரும் சிந்தித்தால் நாட்டையே முன்னேற்றிவிடலாம். நாம் நீதியோடும், மனிதநேயத்தோடும் நடந்தால் தான் ஆசீர்வாதமும், உதவியும் நாம் கஷ்டப் படும்போது கிடைக்கும். நன்றி.

இன்று 30.09.2008 செவ்வாய்க்கிழமை நவராத்திரி விரதாரம்பம்

வெண்டாமரைக்கன்றி நின்பதந்தாங்கவென் வெள்ளையுள்ளத்
தண்டாமரைக்குத் தகாதுகொலோ சகமேழுமளித்
துண்டானுறங்க வொழித்தான் பித்தாகவுண்டாக்கும்வண்ணம்
கண்டான் சுவைகொள் கரும்பே சகலகலாவல்லியே.


சகலாவல்லிமாலையில் குமரகுருபரசுவாமிகள்

எல்லாக் கலைகளுக்கும் தலைவி ஆக விளங்குகின்ற சரசுவதி அம்மையே! ஏழு உலகங்களையும் காத்து தன்னகத்தே வைத்துள்ள திருமால் பாற்கடலில் உறங்குகிறார். அவைகளை அழித்து ஒடுக்குகின்ற சிவனார் பித்தனாகத் திரிகிறார். ஆக்குங் கடவுளாகிய பிரம்மதேவர் உன்னை மனைவியாகப் பெற்று மகிழ்கிறார். உன் பெருமை என்னே! உன் திருப் பாதங்களைத் தாங்குகின்ற பேறு வெள்ளைத் தாமரைக்கு மட்டும் தானோ? எனது தூய மனமாகிய தாமரையில் குடியிருந்து அருள்புரியாயோ?

மறைக்கப்படும் வரலாறுகள் - 5

தந்தையின் சிந்தனையும் தரங்கெட்டோர் புளுகுகளும்

யேசுபிரானை எதிர்த்தவர்கள், அவருடன் நெருங்கிப் பழகாதவர்கள், நெருங்கவே முடியாதவர்கள் ஆகியோர்கூட அவர் இறந்த பின்னர் அவரைப்பற்றி நூல்களை எழுதி பிழைப்பு நடத்தினார்கள். அதுபோலவே தந்தை செல்வாவை காற்சட்டை காந்தி என எள்ளி நகையாடியவர்கள் அவரின் மறைவுக்குப் பின்னர் அவரைப் போற்றி எழுதியும், உருவப்படத்தைப் பிரசுரித்தும் வயிறு வளர்த்து வருகிறார்கள்.
இளைஞர்கள் வன்செயல்களில் ஈடுபடுவதற்கு அமிர்தலிங்கம்தான் தூபமிட்டு வருகிறார். எனக்கும் இதற்கும் எதுவித தொடர்போ சம்பந்தமோ இல்லை. தயவுசெய்து என்னை விட்டுவிடுங்கள் என்று எழுதிக் கொடுத்துவிட்டு 24 மணி நேரத்தில் வீட்டுக்கு ஓடோடிவந்த மாவீரன் ஒருவரும் தந்தை செல்வா பெயரைக் கூறிவருகிறார்.
70ம் ஆண்டுத் தேர்தலில் தோல்வியுற்ற என்னை மீண்டும் ஆளாக்கி அரசியலில் புகுவதற்கு வழிவகுத்துவிட்டவர் தானே என்று வெளிநாட்டுத் தம்பி ஒருவரின் பெயரில் எழுதியிருக்கின்றார் மற்றத் தம்பி கோவை மகேசன். இது உண்மையென்றால், சரியென்றால் 1952இல் தோல்விகண்ட தந்தை செல்வாவை மீண்டும் வெற்றிபெறச் செய்து தலைவராக்கிய பெருமை யாருக்கு? இதனைத் தம்பி கோவை தனது பத்திரிகையில் எழுதி வெளியிடுவாரா?
மக்கள் சேவையே மகேஸ்வரன் சேவை என்று பேரறிஞர் அண்ணா சொன்னார். இதைக்கூட தமிழக அரசின் முதலமைச்சராகத் தான் ஆக்கிவைத்த காரணத்தாலேயே அண்ணா தன்னைப்பற்றி இப்படிப் புகழ்ந்திருக்கிறாரென்று இந்த மகேஸ்வர ஐயர் எழுதினால் நாம் ஆச்சரியப்படமாட்டோம். பாவம் அவர். அவருக்கு அரசியலைப்பற்றி எதுவும் தெரியாது. ஆண்டவன் அவருக்கு நல்லறிவைக் கொடுத்து நல்வழிப்படுத்த வேண்டுமென்பதே என் பேரவா.
தந்தை செல்வா 1956 தொடக்கம் 1977 வரை எத்தனை அரசுகளுடன் எத்தனை முறை எப்படி எப்படி எல்லாம் பேச்சுவார்த்தைகள் நடத்தினார் என்பதை நாம் அறிவோம். நாடறியும். தந்தை செல்வாவின் வழியைப் பின்பற்றித்தான் நாங்களும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகிறோம்.
நாங்கள் போராட்டங்கள் ஏதும் நடத்துகிறோமில்லை என்று தம்பிமார் சிலர் குறைகூறித் திரிவது எமக்குத் தெரியும். நாங்கள் பாராளுமன்றத்தைப் பகிஷ்கரித்துப் போராட்டங்களை ஆரம்பிக்க முயற்சித்த இரண்டுக்கு மேற்பட்ட சந்தர்ப்பங்களில் அரசு விட்டுக்கொடுத்து நிலைமைகளைச் சரிசெய்திருக்கின்றது என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். அரசு விட்டுக் கொடுக்கும்போது வீம்புக்குப் போராட்டங்களை நடத்தி என்ன பயன் வரப்போகிறது?
தந்தை செல்வா எக்காரணம் கொண்டும் பாராளுமன்றத் தேர்தலைப் பகிஷ்கரிக்கக் கூடாதென்றே எமக்குச் சொல்லிவந்திருக்கிறார். சிறிமா அரசு அவரின் இடைத்தேர்தலை இழுத்தடித்தபோது அத்தேர்தலை விரைவில் நடத்துவதற்காக அவர் ஒரு கட்டத்தில் சிறிமாவைக்கூடச் சந்திக்க விரும்பினார். ஏனென்றால் எமது எதிர்ப்பை- கருத்துக்களைத் தெரிவிக்கக்கூடிய ஒரே ஒரு அடமாகப் பாராளுமன்றம்தான் இருக்கிறது என்பதை அவர் மிக நன்றாக உணர்ந்திருந்தார்.

கடமை, கண்ணியம், கட்டுப்பாடு - இதுவே விடுதலை மந்திரம்.

தமிழினத்தை இன்று மிகப் பயங்கரமான சோதனைகள் எதிர்நோக்கியுள்ளன. ஆட்சியாளரின் நடவடிக்கைகள் ஒருபுறம். மறுபுறம் எமது இனத்தில் குறிப்பாக, இளைய சமுதாயத்தின் மத்தியில் தோன்றியுள்ள உட்பகை, அந்நியரின் ஆதிக்கத்திலிருந்து விடுவிப்பதன்மூலம் மாற்றாரின் துன்புறுத்தல்களிலிருந்து தவிர்த்துக்கொள்ளலாம். ஆனால் உட்பகை இன அழிவையே தரும். இதை இளந் தலைமுறையினர் உணர்ந்து பொறுப்போடு செயல்படவேண்டும்.
காலத்துக்குக் காலம் நடைபெறும் கலவரங்களினால் நம்மவர் கொலை செய்யப்பட்டும், உடமைகள் கொள்ளையடிக்கப்பட்டும், பெண்களின் கற்பு சூறையாடப்பட்டும் வருகிறது. ஆட்சியாளரின் இராணுவமும் பொலிசும் எமது இளைஞர்களை அடித்தும், துன்புறுத்தியும், இம்சித்தும் வருகிறது. தனித்துவமான விடுதலைபெற்ற சுதந்திரத் தமிழ்ச் சமுதாயமாக எம்மை நாம் ஆக்கிக் கொள்வதன் மூலம் இக்கொடுமையிலிருந்து தவிர்த்துக் கொள்ளலாம். ஆனால், தமிழனைத் தமிழனே தாக்கும் நிலை, தமிழனைத் தமிழனே காட்டிக் கொடுக்கும் நிலை, தமிழனைத் தமிழனே கொல்லும்நிலை ஏற்பட்டால் அதாவது எமக்கிடையே உட்பகை ஏற்பட்டால் இதிலிருந்து நாம் மீட்சி பெற முடியாது.
சமீபகாலமாக தமிழ்மக்கள் மத்தியில் குறிப்பாக இளம் சந்ததியினரிடையே சில விரும்பத்தகாத சக்திகள் புகுந்து இனத்தின் ஒற்றுமையைக் குலைத்து தமிழ்ச் சமுதாயத்தையே பாழ்படுத்த முனைந்து நிற்கிறது. இளம்வயதில் தூண்டிவிட்டால் எதையும் செய்யலாம். எனவே இளைஞர்கள், பேரறிஞர் அண்ணா கூறியதுபோல் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற மூன்று குணாதிசயங்களையும் தற்போது வலுவாகக் கடைப்பிடிக்க வேண்டும்.
அடிமைப்பட்ட இனத்தில் பிறந்துவிட்ட எமக்குக் கடமை அடிமைத்தளையை அறுப்பதே. அதற்காகக் கட்டப்பாடற்ற முறையில் செயற்பட்டால் எமக்கு அழிவுதான் ஏற்படும்.
ஒரு நாட்டின் இராணுவம், நிறைந்த படைபலத்தையும் பெருமளவு ஆயுதங்களையும் கொண்டிருந்தாலும் ஒரு தலைவனுக்குக் கட்டுப்படாவிடின் அது வெற்றிபெற முடியாது. எனவே எந்த ஒரு இயக்கமும் வெற்றிபெற அதன் தலைவனுக்குக் கீழ் கட்டப்பட்டு இயங்க வேண்டும்.
இளைய சமுதாயம் கடந்த ஐந்தாண்டுகளையும் திரும்பிப் பார்க்க வேண்டும். 1977 ஆவணி குழப்பத்தையும், 78இல் திருமலையில் நடைபெற்ற படுகொலைகளையும், 79இல் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற அனர்த்தங்களையும், 81இல் நடைபெற்ற அட்டுழியங்களையும் எண்ணிப் பார்க்க வேண்டும்.
இவற்றிற்கெல்லாம் தீர்வுகாண எமக்கு சில பாதுகாப்பினை நாம் தேட வேண்டும். தமிழ் மக்களின் பிரதேசம் வரையறுக்கப்பட வேண்டும்.
பாலஸ்தீன விடுதலை இயக்கத்தைப் போன்று கோடிகோடியாக வருமானம் பெறும் இயக்கமல்ல எமது இயக்கம். எரிக்கப்பட்ட எமது அலுவலகத்தைத் திருத்த முடியாத நிலையில் எமது இயக்கம் இன்று இருக்கின்றது.
வள்ளுவன் சொன்னதுபோல தன்வலியும் மாற்றான் வலியும் உணர்ந்து ஏற்ற காலத்தில் களத்தில் இறங்க வேண்டும். 19, 20 வயது மாணவனாக பல்கலைக் கழகத்தில் படித்த காலத்திலிருந்தே நான் தந்தை செல்வாவுடன் இணைந்து இயக்கத்திற்காக உழைத்தேன். கடந்த 35 வருடகால அனுபவம் எனக்கிருக்கிறது. அந்த அனுபவத்தை எமது சமுதாயத்திற்கு பயன்படுத்துவேன்.
எமது இனத்தின் விடுதலை என்ற வடத்தை எல்லோரும் ஒரே சமயத்தில் சேர்த்து இழுக்க வேண்டும்.அவற்றில் சிறுசிறு தோல்விகள் ஏற்படலாம். அத்தோல்விகளை வெற்றியின் படிக்கல்லாக மாற்றி துன்பங்களுக்கும் இன்பங்களுக்கும் மத்தியில் எதிர்நீச்சல் போட்டு நெஞ்சில் உறுதியுடனும் நேர்மைத் திறத்துடனும் முன்னேற வேண்டும்.

மீதி பின் தொடரும்

Sunday, September 28, 2008

இசைப் பேரரசி அமரர் திருமதி. சாரதா பரம்சோதி அவர்களின் மறைவுக்கு கிருத்தியத்தின் நினைவஞ்சலி

திருமதி. சாரதா பரம்சோதி அவர்கள் சித்தங்கேணிச் சந்திக்கருகில் குண்டுவெடிப்பில் காயம்பட்டதும் தகவல் சுவிசுக்கு எனக்கு சில நண்பர்கள் மூலம் தெரிவிக்கப்பட்டதுடன் அவரை உடனடியாக வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்ல ஏதாவது செய்யமுடியுமா என்று கேட்டிருந்தும் எதுவுமே செய்ய முடியாத நிலையில் மனிதாபிமானமற்ற அரக்கர்கள் கூட்டத்தால் அவரது உயிர் அநியாயமாக எம்மிடமிருந்து பறிக்கப்பட்டுள்ளது. இதற்காக நாம் யாரை எப்படி எந்த வகையில் திட்டித் தீர்த்தாலும் போன சாரதா அக்கா திரும்பி வரப்போவதில்லை. ஆனால் விடுதலைக்காகப் போராடுவோர் வீதியல் போவோர் வருவோரைக் கருத்தில் கொள்ளாமல் வீணாக மறைந்திருந்து அரச படையினர்மீது மேற்கொள்ளும் குண்டெறிதல், துப்பாக்கிப்பிரயோகம் செய்தல் என்பவற்றால் பாதிக்கப்படுவது அப்பாவிப் பொதுமக்களே! தாம் ஏதோ பெரிய வீர சாகசம் நடத்திவிட்டோம் என்று கூறித் தம்பட்டம் அடிப்போர் சற்று சிதானமாக எது வீரம் என்பதைச் சிந்திக்க வேண்டும். மக்களோடு மக்களாக இருந்துவிட்டுச் சடுதியாக ஏதாவதொரு அசம்பாவிதத்தை ஏற்படுத்திவிட்டு தாம் தப்பித்துக்கொள்ள முட்டாள்படை என்ன செய்யும்! அப்பாவிப் பொதுமக்களைத்தான் கிடைத்த வேகத்திற்கு கண்முடித்தனமாகச் சுட்டம் அடித்தும் துன்புறுத்தும். இது நீண்ட நாட்களாகவே நடைபெற்றுவருகிறது. இதை வைத்துக் கொண்டு இது வீரமென்று இங்கு வெளிநாடுகளிலுள்ள மற்ற முட்டாள்கள் கூட்டம் பணம் சேகரித்து அவர்களுக்கு அனுப்ப இது தொடர் படுகொலைகளிலேயே முடிவுறும். எல்லோரும் சற்று நிதானமாகச் சிந்திக்க வேண்டும். இவர் மாத்திரமல்ல இன்னொரு வயதில் இளைய வாலிபனொருவரும் அன்றைய சம்பவத்தில் உயிர் நீத்தார்.
சாரதா அக்காவைச் சிறுவயதிலிருந்தே எனக்கு நன்கு பழக்கம். அவரது தந்தையார் சச்சி மாஸ்டர் எங்கள் பெரியப்பா வீட்டுக்கு அடிக்கடி வருபவர். தாடியை இரப்பர் பாண்டால் சுற்றி வைத்திருப்பார். சுhரணர் ஆசிரியரான அவர் சற்றுக் கண்டிப்பாகவே பார்ப்பதற்கு இருப்பார். நாங்கள் சிறுவயதில் அவரைக் கண்டால் ஒரு பயம். மரியாதை இருக்கும்.
இவரது இன்னொரு மகளான செல்வி யசோதா எம்முடன் முதலுதவிப் பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டதுடன் பல முதலுதவிகளையும் செய்தவர். தியாக உணர்வுடையவர் அவரும் அகாலமானார். தற்போது சாரதா அக்காவும் இப்படி ஒரு துக்ககரமான முறையில் மரணமடைந்தது மனதுக்கு மிகவும் சரியான வேதனையை எப்போதும் ஏற்படுத்திக் கொண்டுதான் இருக்கும்.
எங்கள் மூளாய்ப் பிள்ளையார் கோவில் முருகன் கோவில் திருவிழாக்களின்போது பிரசங்கமாயிருந்தாலும் சரி கலை நிகழ்வாக இருந்தாலும் சரி அவரது குடும்பத்தவர்கள் தம்மை அர்ப்பணித்துப் பணியாற்றிய சிறப்பை நாம் வார்த்தைகளால் சொல்லமுடியாது. தனது குரலிலேயே வதிரன்புலோ சித்திவிநாயகப் பெருமானுக்கு பாடல்கள் பாடி ஒரு தனியான இடத்தையும் அவர் தக்கவைத்திருந்தார். தனது மாணவர்களையும் பாடவைத்து தானும் பாடி மற்றவர்களையும் அழைப்பித்துப் பாடச் செய்த நிகழ்வுகளை சுலபமாக யாரும் மறுக்க முடியாது. பிள்ளையார் கோவில் திருவிழாவில் நானும் ஒருதடவை எனது மனைவிக்குப் பாடமுடியாத சூழ்நிலையில் (எனது மனைவியின் பெண் பக்க வாத்தியக் கலைஞர்கள் சகிதம்) பாட ஒரு பெரும்பேறு கிடைத்ததையும் இவ்விடத்தில் குறிப்பிடுவது பொருத்தமானதென நினைக்கின்றேன்.
இவருடன் பல தடவைகள் இசைக் கச்சேரிகளுக்கும் 1980களில் மாணவர்களைப் போட்டிகளில் பங்குகொள்ள வைப்பதற்கும் பல நிகழ்வுகளில் ஒன்றாக பங்குகொண்ட சந்தர்ப்பங்களை மறக்க முடியாது. நல்லூர்த் திருவிழாவானாலும் சரி இளங்கலைஞர் மன்ற நிகழ்வானாலும் சரி வேறு அரங்கேற்றங்கள் நிகழ்வுகளுக்கும் வான் வசதி செய்து இசை ஆசிரியர்களையும் ஆர்வலர்களையும் ஒன்றுதிரட்டி வீட்டுக்கு வீடு சென்று அவர்களை ஏற்றி நிகழ்வுக்கு முன்னர் செல்வதும், பின்னர் திரும்ப ஒவ்வொரு வீடுவீடாகப் போய் இறக்குவதும் மறக்கமுடியாது. அமரர் சந்திரராசா அவர்கள் மோட்டார் விபத்தில் கொல்லப்படுவதற்கு முதல் நாள் நாம் ஒரு நாட்டிய நிகழ்வுக்காக நல்லூர்க் கம்பன் கழக மண்டபத்தில் நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு திரும்பியபோது மினி பஸ் பழுதடைந்து ஆனைக்கோட்டையில் திருத்தம் செய்வதற்காக நள்ளிரவு நேரம் கலைஞர்களுடன் நடுரோட்டில் நின்றிருந்த சம்பவமும் குறிப்பிடத்தக்கவையே.
பெருமளவு மாணவர்களைப் பங்கு கொள்ள வைப்பதற்காக போட்டிகளில் இந்து இளைஞர் மன்றமும், மாதர் சங்கமும் விண்ணப்பத்தை வின்னப்பிக்கும்வகையில் நாம் சிறந்த மாணவமாணவியர்களை இரு பகுதியாக அனுப்பிவைப்பது வழக்கம். காலையிலிருந்து போட்டிகளுக்குச் சென்றால் மாலை வரை மாணவர்களுக்காக அவர்கள் இசையிலும் ஏனைய துறைகளிலும் முன்னுக்குவர தன்னுடைய தேவைகளை அறவே ஒதுக்கிப் பணியாற்றிய ஆசிரியப் பெருந்தகையின் அர்ப்பணிப்பை நான் கட்டாயம் குறிப்பிட்டேயாகவேண்டும். எனக்கு மறக்க முடியாத ஒரு நிகழ்வு பருத்தித்துறைக்கு நாம் மாணவர்களைக் கூட்டிச்சென்று திரும்பிய நிகழ்வு ஒருபோதும் மறுக்கமுடியாது. பல மணிநேரம் கால நிலை பசி களைப்பு ஞாயிற்றுக்கிழமை போக்குவரத்து வசதியுமின்றி நாம் பட்டபாடு ஏன் போட்டிக்கு இப்படிப் போக வேண்டும் என்ற சலிப்பைக் கூட ஏற்படுத்தும். எனினும் ஏதோ எம் மாணவருக்கு ஒரு சந்தர்ப்பத்தை நாம் ஏற்படுத்தலாமே என ஒரு பொது நோக்குடன் செயற்பட்ட அவர்களது சேவையை யாரும் எளிதில் மறந்துவிடமுடியாது. தனது இசைப் பயணத்தை இடையில் விட்டுவிட்டு விண்ணகம் சென்றது ஒரு பெரிய இடைவெளியை ஏற்படுத்தியிருக்கிறது. அவரது இழப்பு இசை உலகிற்கு பாரிய பேரிழப்பு!
எம்மக்கள் அனைவரையும் கடவுள் தான் காக்க வேண்டம் என்று தந்தை செல்வா கூறிய வார்த்தைகளை மீண்டும் தெரிவித்து அவரது குடும்பத்தவர்களுக்கு இது ஒரு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு. இசை ரசிகன் என்ற கோதாவிலும் மனைவி வழியில் உறவினன் என்ற வகையிலும் எனது இதய அஞ்சலியாக ஓராண்டு நிறைவில் அவருடைய இசைப் பயணத்தை மீள நினைவுபடுத்திக் கொள்வதில் மன ஆறுதல் அடைகின்றேன்.
அன்னாரின் குடும்பத்தவருக்கும் இன்றைய நாளில் எனது மறக்கமுடியாத நினைவுகளைப் பகிர்வதாக இந்தக் கிருத்தியத்தின்மூலம் செய்தி தெரிவிக்கின்றேன்.
இசையை உயிர்மூச்சாகக் கொண்டிருக்கும்
தங்க. முகுந்தன்.

மறைக்கப்படும் வரலாறுகள் - 4

இளைய தலைமுறைக்கு
நாச சக்திகளில் சிக்கி இன அழிவைத் தேடாதீர்.

தமிழ் இனத்தின் ஒற்றுமையைக் குலைத்து இளைஞர் சக்தியை எமக்கெதிராகத் திசைதிருப்பி தமிழினத்தை அழிவுப் பாதைக்கு அழைத்துச் செல்வதற்குப் பல முனைகளிலும் நின்று நாசகார சக்திகள் இயங்கிவருகின்றன. இவைபற்றி மக்கள் விழிப்பாக இருக்கவேண்டும். அன்று ஒரு காலத்தில் ஒருவரை ஒருவர் திட்டித் திட்டிப் பேசியே அரசியல் நடத்தி வந்தோம். பின்னர் தமிழினத்திற்கு ஏற்படும் பயங்கர விளைவுகளை சிந்திக்கத் தொடங்கினோம். இதன் விளைவாக பிளவுபட்ட தமிழர் சமுதாயத்தை ஒன்றுபடுத்தி ஒரே அணியில் திரட்டினோம். இதன் மூலம் அவ்வப்போது எமக்கெதிராகக் கட்டவிழ்ந்துவிடப்படும் அநீதிகளுக்கு எதிராகப் போர்க்குரல் எழுப்பினோம். இதனால் அரசாங்கம் எமது பிரச்சினைகளை அணுகி முகம் கொடுப்பதற்கு முன்வந்தது. மீண்டும் இப்போது தமிழ் இனத்தின் ஒற்றுமையைக் குலைத்து தமிழினத்தின் விடிவுக்காக நாம் எடுத்துவரும் நடவடிக்கைகளை முறியடித்து இளைஞர்களை எம்மிடமிருந்து பிரித்தெடுத்து அவர்களை எமக்கெதிராக ஏவிவிட்டு அதன்மூலம் தமிழினத்தை அழிவுப் பாதைக்கே அழைத்துச் செல்வதற்கான முயற்சிகளில் சிலர் ஈடுபட்டுள்ளனர். இவர்களின் செயல்களை இனியும் நாம் அனுமதிக்க முடியாது. இதை எப்படியாவது தடுத்தேயாக வேண்டும். இல்லாவிட்டால் மாற்றுக்கட்சியினர் எமது தமிழினத்தின் மீது வண்டி ஓட்டிச் செல்வதற்கு நாம் இடமளித்தவர்களாவோம்.
இளைஞர்களின் சக்தி வேகமாகப் பாய்ந்தோடும் ஆற்றைப் போன்றது. இந்த ஆறு காட்டிலே ஓடுமானால் அதனால் ஒரு பயனுமே ஏற்படப்போவதில்லை. வேகமாக ஓடிச் செல்லும் ஆற்றை மண் அணைபோட்டு, வாய்க்கால்கள் அமைத்து நீண்ட தூரத்திற்கு அந்த நீரை ஓட்டிச் சென்று செழித்துப் பயன் தரக்கூடிய பயிரை வளர்க்க வேண்டும்.
பயிர் செழிப்பதால் நாடும் மக்களும் சுபீட்சமடைவர். நாமும் எமது இளைஞர்களின் வேகமாகப் பாய்ந்து செல்லும் சக்தியைப் பல திசைகளிலும் சென்று சிதைந்துபோய்விடாமல் அணைபோட்டு, வாய்க்கால்கள் அமைத்து மிகக் கட்டுக்கோப்பான முறையில் எமது மக்களின் சுபீட்ச வாழ்வுக்காகப் பயன்படுத்தலாம். இதற்காக எத்தனையோ இன்னல்களின் மத்தியிலும் தியாகங்களைச் செய்தோம். ஆனால் இன்று எம் கண்முன்னேயே அவர்களின் வேகமாகப் பாய்ந்து செல்லும் சக்தி, சென்று கொண்டிருந்த பாதையை உடைத்து பலதிசைகளாகப் பாய்ந்தோட முற்பட்டுள்ளது. இதனால் யாது நடக்கும்?
உடைப்பெடுத்து ஓடும் ஆறு அக்கம்பக்கத்திலேயுள்ள குடிமனைகள் எல்லாவற்றையும் அடித்துப் புரட்டிக்கொண்டு எவ்வளவோ அழிவுகளையெல்லாம் ஏற்படுத்துமோ அதேபோலவே பல திசைகளிலும் சென்றுகொண்டிருக்கும் இளைஞர் சக்தியும் இனத்துக்கும் பேராபத்து ஏற்படுத்திவிடும்.
எனவேதான் திசைமாறிச் செல்லும் இளைஞர் சக்தியால் அபாயகரமான நிலை ஏற்படும் என்பதை வழிதவறிச் செல்லும் இளைஞர்களுக்கு கூறிவைக்க விரும்புகின்றேன்.
நாம் கட்டிக்காத்த ஒற்றுமையை எந்தவொரு நாசகாரசக்தியும் அழித்துவிடுவதற்கு இடமளியாதீர்கள்.

ஆயுதபலத்தின் இறுதி முடிவென்ன?

நாம் சுதந்திர இனமாக வாழ்வதற்கு எம்மிடையே உள்ள பேத உணர்வுகள் அகன்று ஒற்றுமை பலமடைய வேண்டும். சமூகரீதியில் மட்டுமன்றி அரசியல் ரீதியிலும் நாம் கூறுபோடப்படும் கவலைக்குரிய நிலைகள் உருவாகிவிட்டன. இதனையிட்டு மனம்வருந்தாமல் இருக்கமுடியாது. தீவிரவாதம், மிதவாதம் இவையெல்லாம் வேண்டப்படாதவை. எமக்கு வேண்டியது இன ஒற்றுமையே. தீயசக்திகள் எம்மத்தியில் ஊடுருவல் செய்துள்ளன. எமது ஒற்றுமையைச் சிதறடிக்க அவை பகீரதப் பிரயத்தனம் செய்து வருகின்றன. இத்தகைய தீய சக்திகளின் முயற்சியைத் தோல்வி அடையச் செய்ய வேண்டும். தமிழன் தமிழனாகவே உயிர்விட வேண்டும்.
நம்மை நாமே அழித்துக்கொள்ளும் ஒரு பயங்கர, விரும்பத்தகாத நிலை உருவாகியுள்ளது. இராணுவமோ, பொலிசோ ஒருவரைச் சுட்டுவிட்டால் பதறும்: பதட்டமடையும் நாம் இன்றைய நிலைபற்றி நிச்சயம் சிந்தித்தே ஆகவேண்டும்.
ஆயுத பலத்தை நம்பியவர்கள் அடிச்சுவடே இல்லாது ஒழிந்துபோன நிலையைச் சரித்திரம் காட்டுகிறது. ஆயுதத்தைவிட ஒற்றுமை சக்தி வாய்ந்தது.
நாம் அகிம்சையில் நம்பிக்கை உடையவர்கள். மகாத்மாவால் கையாளப்பட்ட அகிம்சை ஆத்மீகத்தை அடிப்படையாகக் கொண்டது. அதைவிட சக்திவாய்ந்த ஆயுதம் வேறு கிடையாது.
அன்பு மூலம் அகிம்சை வழியில் சமூக ஏற்றத் தாழ்வுகளை அகற்றி ஒரே அணியாகத் திரண்டு குரல்கொடுக்க அனைவரும் உழைக்க வேண்டும்.

விரக்தியை விட்டெறிந்து எதிர் நீச்சல் போடுவோம்!

எமது இனம் சகிக்கமுடியாத துன்பங்களை அனுபவித்து விரக்தியின் எல்லையிலே வாழ்ந்து கொண்டிருக்கின்றது. கடந்த நான்கு ஐந்து ஆண்டுகளில் இந்த விரக்தி மிகவும் அதிகரித்துவிட்டது. நமது மக்கள் விரக்தியினால் தமக்கும் இனத்துக்கும் தீங்கு ஏற்படுத்தும் செயல்களில் ஈடுபடாமல் மாறிவரும் சூழலுக்கேற்ப எதிர்நீச்சல் போட்டு வாழப் பழகவேண்டும். வெள்ளத்தோடு அள்ளுப்பட்டுச் செல்லும் வாழ்க்கை வாழக்கூடாது. எதுவந்தாலும் எதிர்நீச்சல் போட்டு வாழ்பவன்தான் கெட்டிக்காரன்.
உலகத்தில் யூத இனத்தைப்போல் விஞ்ஞானம், அரசியல், தத்துவம், கல்வி, கலை இப்படி எந்தத் துறையானாலும் ஒவ்வொருதுறையிலும் பெரும் மேதாவிகளைத் தோற்றுவித்த இனம் வேறு எதுவுமே இல்லை. யஸ்டின், கால்மாக்ஸ் போன்ற பல அறிஞர்களை உலகுக்குக் கொடுத்த பெருமை பெற்ற இனம் அது. இப்படி ஒவ்வொருதுறையிலும் பெரும் மேதாவிகள் யூத இனத்தில் தோன்றுவதற்குக் காரணம் என்னவென்பதை ஆராய்ந்த அறிஞர்கள் கண்டறிந்த உண்மை ஒன்றுண்டு. அது இதுதான்.
யூதர்கள் ஒவ்வொருகாலகட்டத்திலும் அவர்கள் வாழ்ந்த ஒவ்வொரு நாட்டிலும் நசுக்கப்பட்டார்கள், பெரும் இன்னல்களுக்கு ஆட்படுத்தப்பட்டார்கள். இதனால் ஏற்பட்ட ஆக்ரோஷம்தான் அவர்களை இந்த நிலைக்கு உயர்த்தியது.
அறிவிலும் புத்திசாலித்தனத்திலும் நாம் யூதர்களுக்கு எவ்விதத்திலும் குறைந்தவர்கள் அல்லர். அதுமட்டமன்றி அவர்களைப் போலவே நாமும் தொடர்ந்து காலம் காலமாக நசுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றோம். இதனால் ஏற்படும் உணர்ச்சிகளும் எழுச்சிகளும் எங்களை உயர்ந்த நிலைக்கு நிச்சயமாகக் கொண்டுசென்றே தீரும்.
வாழ்க்கையில் உயர்வடைவதற்குப் பல்கலைக்கழகம் கிடைக்காவிட்டால் கிடைக்கவில்லையே என்று மாணவர்கள் விரக்தியடைந்து சோர்ந்துவிடக் கூடாது. வாழ்க்கையைப் போராட்டக் களமாக நினைத்து எத்தனை துன்பங்கள் வந்தாலும் எதிர்த்து நின்று உறுதியான நெஞ்சத்தோடு போராடவேண்டும்.
இதே வேளையில் எமது மாணவர்கள் ஒழுக்கத்தைக் கட்டிக்காத்து வாழத் தவறக் கூடாது. ஒழுக்கத்திற்கும் பண்பாட்டிற்கும் உயர்ந்த இடம் கொடுத்து வாழ்ந்தது எமது இனம். இந்தப் பாரம்பரியத்தை என்றும் மறக்கவும் கூடாது. இழக்கவும் கூடாது.
வாழ்க்கையில் ஒரு குறிக்கோளோடு இளைஞர்கள் வாழவேண்டும். கடலில் பயணம் செய்கின்ற கப்பல் ஒரு துறைமுகத்தை நோக்கிப் பயணம் செய்தால்த்தான் பயணம் முற்றுப் பெறும். நோக்கமின்றிச் சென்றுகொண்டிருந்தால் கடலில் அலைய வேண்டியதுதான். இதைத்தான் இன்றைய இளம் சந்ததியினருக்கு நான் சொல்கிறேன். இதற்காக எதற்கும் தலையாட்டிக் கொண்டிருக்கவேண்டுமென்று நான் கூறிவிடவில்லை.
பிழையென்று தெரிந்தால் அதை மனத்துணிவோடு சொல்ல வேண்டிய இடத்தில் சொல்லியாக வேண்டும். ஆனால் சொல்லும் விதமாகச் சொல்லப் பழக வேண்டும். பண்பாகவும், பண்பாடாகவும் சொல்ல வேண்டும். இளம் சமூகம் இளவயதிலிருந்தே பழகிக்கொள்ள வேண்டும்.
உலக அரங்கில் தமிழினத்திற்கு நல்லதொரு எதிர்காலம் நிச்சயமாக உண்டு. அந்த நல்ல எதிர்காலத்திற்கு உரியவர்கள் எமது மக்கள்தான். ஆந்த நல்ல காலம் நிச்சயமாகக் கிட்டும். அதனை நாம் பெற்றுத் தருவோம்.

மீதி பின் தொடரும்.

Saturday, September 27, 2008

ஒக்டோபர் 02. மகாத்மா காந்தி ஜனனதினம் - கட்டுரை வேண்டும்.

மகாத்மா காந்தியின் பிறந்த நாளையொட்டி இன்றைய ஆசிய நாடுகள் மாத்திரமல்ல உலக நாடுகளே எதிர்நோக்கும் வன்முறைக் கலாச்சார - யுத்த அழிவுகளால் ஏற்பட்டுள்ள அனர்த்தங்களை முற்றாக ஒழிப்பதற்கு முடியாவிடினும் அதைத் தவிர்ப்பதற்கும் குறைப்பதற்கும் ஏதுவான ஒரு கட்டுரை எழுத வேண்டும் என்று கிருத்தியம் விரும்புகிறது. காந்தீய வழிமுறைகளால் இவற்றை எப்படி ஏற்படுத்தலாம் என்ற ரீதியில் வாசகர்கள் தாமே ஒரு தலைப்பிட்டு எதிர்வரும் ஒக்டோபர் 02 அவரது ஜனன தினத்தன்று கட்டுரை பிரசுரமாகக்கூடியவகையில் அனுப்பிவைக்கும்படி வலைப் பதிவாளர்களையும் வாசகர்களையும் அன்போடு கிருத்தியம் வேண்டுகிறது.
விஜயதசமிலியிருந்து கிருத்தியத்தின் பதிவிலுள்ள அரசியல் கட்டுரைகள் அனைத்தும் வேறொரு பதிவுக்கு மாற்றப்பட்டு கிருத்தியம் முற்று முழுதாக சமயப் பணிகளுக்கென ஒதுக்கப்படவிருக்கிறது என்பதை வாசகர்களுக்கு முன் கூட்டியே அறியத் தருகின்றேன். இதனால் ஏற்படும் அகௌகரியங்களுக்கு தயவுசெய்து அடியேனை மன்னிக்குமாறு தயவாக வேண்டிக் கொள்கின்றேன். நான் காந்திய வாதியாக இருந்தாலும் என்னுடைய கொள்கைகளை எவர்மீதும் நான் திணிக்க மனதாலும் விரும்பவில்லை. சில நண்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த முடிவை மேற்கொண்டுள்ளேன்.
தனிமனிதனுக்கு சமயம் எவ்வளவு முக்கியமோ அதேயளவு சமூகத்தில் பொதுப்பணி அரசியலாகிறது. ஆனால் அரசியல் என்ற அந்த புனிதமான சேவை இன்று மக்களையே கொல்லுமளவிற்கு திரிவுபடுத்தப்பட்டு வேறாயிருக்கிறது. இதை எவ்வளவுதான் அடித்துக் கூறினாலும் ஒரு கை தட்டி என்ன பயன். சிலர் அரசியல் கதைக்கவே முகத்தைச் சுளிக்கிறார்கள். சிலர் பயப்படுகிறார்கள். சிலர் தீட்டைப் போல ஓடிவிடுகின்றனர். எனக்கென்ன நானும் என்பாடும் என்று சுயநலவாதியாக இருப்பதற்கு என்மனம் இடம்கொடுக்கவில்லை. ஏதாவது வாழும் போது செய்துவிட்டுப் போய்விடவேண்டும். அல்லாமல் பூமிக்குப் பாரமாய் - கடனாளியாய் இருப்பதை நான் விரும்பவில்லை. சுற்றாடலையும் சூழலையும் அதிகாரம் பண்ணும் நாம் அதற்கும் ஏதேனுமொரு பணிவிடை செய்ய வேண்டும் என்பது எனது ஆசைமட்டுமல்ல. கடமையும் கூட. இடம்பெயர்ந்து வந்த எனக்கு இந்த சுவிற்சர்லாந்து தேசம் பிராணிகளின்மீதும் இயற்கையின்மீதும் காட்டும் அக்கறை - ஏதோ - கடவுள் - என்னை இங்குதான் நீ வாழ வேண்டும் - உனக்குரிய இடம் இது - என கட்டளை பிறப்பித்ததுபோல - என் மனச்சாட்சி - ஒவ்வொரு கணமும் சொல்கிறது. மனிதாபிமானம் ஜனநாயகம் இங்கு தாராளமாக தற்பொழுது இருக்கிறது. பல வருடங்களுக்கு முன்னர் இதுவும் எம்மைப் போன்றுதான் யுத்தபூமியாயிருந்தது. ஆனால் இன்று உணர்ந்து விட்டார்கள். நாம் படிப்பினை கொள்ள சில நாட்கள் மாதங்கள் வருடங்கள் யுகங்கள் செல்லலாம்.
நீதி நியாயத்திற்காக - ஏதோ எழுத வேண்டும் போலத் தோன்றியதால் - எழுதினேன். அடியேனது தவறுகளை முடியுமானால் மன்னியுங்கள். குறையிருந்தால் உரிமையோடு சொல்லுங்கள்.
எப்பவோ முடிந்த காரியம்.
ஒரு பொல்லாப்புமில்லை.
யாமறியோம்.
முழுதும் உண்மை.

அவனே நான் - தங்க. முகுந்தன்.

மறைக்கப்படும் வரலாறுகள் - 3

தொழிலாளி வர்க்கமும், தமிழ்த் தேசியமும்
உலகெங்கும் உழைக்கும் மக்கள் உற்சாகத்துடன் கொண்டாடும் மேதினத்தை நாம் இனரீதியில் தமிழ்த் தொழிலாளர்கள் என்ற வகையில் கொண்டாடுவதற்கு திரண்டு நிற்கின்றோம்.
ஒரு காலத்தில் சிவப்புச் சட்டைபோட்டு கைகளில் சம்மட்டிகளுடன் செல்வோர் மாத்திரமே மேதினத்தைக் கொண்டாடலாம். எமக்கெல்லாம் மேதினத்தைக் கொண்டாட உரிமையில்லை என்று அத்தகையோர் கூறிவந்தார்கள். அவ்வாறு கூறியவர்கள் இன்று எங்கே என்று தெரியாது.
இன்றைய நாளில் மேதினத் தத்துவத்தை நினைவுகூருவது அவசியம். முதன்முதலில் சிக்காக்கோ தொழிலாளர் இரத்தப் போராட்டம் நடத்தினார்கள். இரத்தத்தில் கைக்குட்டையைத் தோய்த்தெடுத்து அதனையே செங்கொடிபோல் பறக்கவிட்டு ஆர்ப்பாட்டம் நடாத்தினார்கள். இன்று உலகெங்கும் உரிமை மறுக்கப்பட்ட தொழிலாளர்கள் மேதினத்தைக் கொண்டாடுகிறார்கள். இந்த நாட்டில் தமிழர் சிறுபான்மையாக இருக்கின்ற போதிலும் தொழிலாளர்களில் பெரும்பான்மையோர் தமிழர்களே என்ற உண்மை பலருக்குத் தெரியாது. அவர்களை நினைத்துப்பார்க்க கடமைப்பட்டுள்ளோம்.
அவர்களது இரத்தம் வியர்வைகள் பசளையாக வைத்து இந்த நாடு முன்னேறியது. ஆனால், அதே தொழிலாளர்கள் இன்று கப்பல் கப்பலாக இங்கிருந்து அனுப்பப்படுகிறார்கள். கேரளாவில் அனாதரவான நிலையில் இறக்கிவிடப்படும் இத் தொழிலாளர்கள் அங்கு பிச்சை எடுக்கும் நிலையில் பல கஷ்டங்களுக்குள்ளாகி இருக்கிறார்கள்.
இதெல்லாம் எதற்காக? தமிழன் என்ற ஒரேஒரு குற்றத்திற்காகத்தான் இத்தொழிலாளர்களை அலட்சியப்படுத்துகிறார்கள். அவர்களுக்குப் பக்கபலமாக நிற்க இம்மேதினத்தில் நாம் உறுதி பூணவேண்டும்.
மலையகத்திலிருந்து அகதிகளாக வந்து வவுனியா, கிளிநொச்சிப் பகுதிகளில் குடியேறிய தோட்டத் தொழிலாளர்களைப்பற்றி சந்தேகமான கருத்துக்கள் கிளப்பப்பட்டன. இந்நேரத்தில் தமிழ்மக்களுக்கு குறிப்பாக யாழ் தமிழ்மக்களுக்கு ஒற்றுமைபற்றி வலியுறுத்த விரும்புகிறேன். யாழ் மக்களுக்கு மட்டுமன்றி இலங்கை முழுவதிலுமுள்ள தமிழர்களுக்கு ஒற்றுமை அடிப்படையில்தான் கூட்டணி இயங்குகிறது. இதனைப் புரிந்துகொள்ளமுடியாத சிலர் திரு. தொண்டமானுடன் இரகசிய உறவு என்றும் துண்டுப்பிரசுரமூலம் விஷமப் பிரசாரம் செய்கிறார்கள். ஆனால் யு.என்.பிக்கும் எமக்கும் இடையிலுள்ள உறவு எப்படிப்பட்டது என்பதை அக்கட்சியினர் என்னைப்பற்றிக் கூறுவதிலிருந்து புரிந்துகொள்ளமுடியும்.
என்மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணைமீது என்னவெல்லாம் கூறினார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணையின்போது எல்லா சிங்கள எம்.பிக்களும் பலவாறாக விமர்சித்துத் தாக்கியபோது ஒரேஒருகுரல் அதாவது திரு. தொண்டமான் மாத்திரமே நீதிக்காகப் பேசினார். அச்சந்தர்ப்பத்தில்தான் எமக்கு ஆபத்து நேரத்தில் உதவக் கூடியவர் யார் என்பதை என்னால் உணரமுடிந்தது.
இனரீதியிலான பிரச்சினை எழும்போது அவற்றிற்குத் தீர்வுகாணவே அதாவது தமிழ்த் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவே மொழிவழித் தொழிற்சங்கங்கள் உருவாகின.
இன்று பரந்தனிலுள்ள இரசாயனத் தொழிற்சாலைத் தொழிலாளர்கள் பலமாதகாலமாக வேலையின்றி சம்பளம்இன்றி கஷ்டப்படுகிறார்கள். இக் கூட்டுத்தாபனத்தின் பெரும்பாலான ஊழியர்கள் இலங்கை வர்த்தக ஊழியர் தொழிற்சங்கத்தில் இருக்கிறார்கள். இத்தொழிற்சங்கம் வேலைநீக்கம் செய்த தொழிலாளர்களுக்கு ஆதரவு கோரி அகில இலங்கை ரீதியில் போராட்டம் நடத்தமுடியாத நிலையில் இருக்கிறது. ஏனெனில் ஏனையபகுதிச் சிங்களத் தொழிலாளர்கள் தமிழ்த் தொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கத் தயாராக இல்லை. இவர்களுக்கு தமிழ்மொழிவழித் தொழிற்சங்கங்களே உதவவேண்டும்.

ஒற்றுமை – ஒற்றுமை ஒன்றே தமிழினத்தின் விமோசனம்!

இங்குள்ள தம்பிமார் சிலர் இப்போது எம்மில் குறைகாண முற்பட்டுள்ளார்கள். பலஸ்தீன பிரச்சனை குறித்துப் பேச நாங்கள் யார் என்று தம்பிமார் சிலர் கேட்கிறார்கள்.
எம்மைப் போன்ற விடுதலைக்காகப் போராடும் அந்த இயக்கத்தை எமது இயக்கத்துடன் ஒப்பிட்டு அவர்களுக்கு இருக்கும் வசதிகள், சோதனைகள், பிரச்சினைகளை ஆராய்ந்து நாமும் அவர்களது அனுபவத்தைப் பாடமாகக் கொள்ளவேண்டும் என்று கூறினேன். ஆனால், தம்பிகள் மாக்சியவாதிகளின் கொள்கைகளைப் பின்பற்றி வருகின்றார்கள். பலஸ்தீன இயக்கத்தின்கீழ் எத்தனையோ இயக்கங்கள் செயற்படுவதை அவர்கள் அறிவதில்லை.
மாக்சிய இயக்கம் முதல் தீவிரவாத இஸ்லாமிய இயக்கம்வரை எத்தனையோ இயக்கங்கள் யசீர் அரபாத்தின் தலைமையின்கீழ் செயற்பட்டு வந்தன. தமிழ் மக்கள் மத்தியில் பிளவுபட்ட தலைமைகள் அவ்வப்போது இருந்தன. முதலில் தந்தை செல்வா, அமரர் ஜீ.ஜீ. பொன்னம்பலம் ஆகியோரது பிரிவுகளும், பின்னர் தலைவர் சிவசிதம்பரம் தலைமையிலும், எனது தலைமையிலும் வௌ;வேறு இயக்கங்கள் இருந்தன. ஆனால் ஒற்றுமையே தமிழினத்தின் விமோசனம் என்பதை நாம் உணர்ந்து கொள்வதில்லை.
1974ஆம் ஆண்டு பொலிசாரின் துப்பாக்கிகளுக்குப் பயந்து ஓடிவந்த இளைஞரை நானே காப்பாற்றினேன். எம்மிடம் உயிர் ஒன்றுதான் உள்ளது. அதுவும் ஒரு தடவையே போகும். எமது உயிரைத் தமிழினத்திற்கு அர்ப்பணித்தபின்னர் எப்போது போனாலும் கவலையில்லை. ஆனால், இத்தகைய பயமுறுத்தலுக்கு நாம் பணிந்தவரல்ல. தம்பிகள் தவறான பாதையில் செல்வதைக் கைவிடவேண்டும்.
எம்மைவிட்டப் பிரிந்து போகவேண்டுமென்றால் போங்கள். ஆனால், உங்களுக்கு வில்லங்கம் ஏற்படும்போது சிவாவின் குரலே நீதிமன்றத்தில் எதிரொலிக்கும் என்பதை மறக்காதீர்கள். இதை நான் மிகவும் துக்கத்துடன் குறிப்பிடுகிறேன்.
வெளிநாடு சென்ற இளைஞர்கள் அனுப்பும் பணம் இப்போது எமக்கெதிரான நடவடிக்கைகளுக்காகச் செலவிடப்படுகிறது. இதே இளைஞர்கள் வெளிநாடு செல்வதற்கு நானே சிபார்சு செய்தேன் என்பதை மறக்க வேண்டாம். இவ்வாறு அனுப்பப்படும் பணத்தைக்கொண்டு எம்மை எதிர்க்க முனைந்தால் அது பகற்கனவாகவே முடியும்.
நாம் ஏன் பாராளுமன்றத் திறப்புவிழாவுக்குச் சென்றோம் என்பதை அங்கு நான் பேசிய பேச்சு விளக்கியிருக்கும். இலங்கைத் தீவில் மூன்று அரசுகளே ஆட்சிசெய்தன. அவ்வாறு அன்று ஆண்ட தமிழினம் இழந்த இறைமையை மீட்கவேண்டுமென்பதை திறப்பு விழாவில் வலியுறுத்தினேன் இதை அரசாங்க தரப்பினர், வெளிநாட்டுத் தூதுவர்கள், பத்திரிகையாளர்கள் அறிந்து கொண்டனர். இக்கருத்தை வேறு எங்கும் சொல்வதைவிட அவ்விடத்தில் சொல்வதில் தாக்கமுண்டு என்பதை எனது தம்பிமார்கள் அறிவதில்லை. பாராளுமன்றத் திறப்புவிழாவைத் தொடர்ந்து நான் மட்டக்களப்பு சென்றிருந்தபோது தீவிரவாத இளைஞர் ஒருவர் என்னைச் சந்தித்து பாராளுமன்றம் சென்றதன் அவசியத்தை வானொலிப் பேச்சைக் கெட்டுத் தெரிந்துகொண்டதாகச் சொன்னார்.
பிரதி அமைச்சர் ஒருவர் எனது பேச்சின் பிரதியைத் தருமாறு வேண்டினார்.
ஹன்சார்ட் வரும்வரை பொறுத்திருங்கள் என்றேன். மேற்கு ஜேர்மன் பத்திரிகையாளர் ஒருவர் தனது முகவரியைத் தந்து பேச்சின் சாரத்தைத் தருமாறு கேட்டுக் கொண்டார். எப்போதும் உற்சாகத்துடனும் உணர்ச்சிபூர்வமாகவும் பேசும் இராஜாங்க அமைச்சர் திரு. ஆனந்த திஸ்ஸ டி அல்விஸின் மனதில் எனது பேச்சு எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை அவரது பேச்சிலிருந்து அறிந்து கொள்ளலாம்.
தம்பிமார் வரலாறு தெரியாமல் கீரைக் கடைக்கும் எதிர்க்கடை வேண்டுமென்று போட்டியில் எமக்கெதிராக இயங்க ஆரம்பித்துள்ளனர்.

மீதி பின் தொடரும்.

Friday, September 26, 2008

விஜயதசமியன்று கிருத்தியத்திலே சைவசமய வினாவிடைப் போட்டி - குறுக்கெழுத்துப்போட்டி ஆரம்பம்.

கிருத்தியம் ஆரம்பிக்கப்பட்ட சில நாட்களிலேயே சென்னை மாறன் ஒரு கருத்தைத் தெரிவித்திருந்தார். அதாவது வினாவிடைப் பகுதியொன்றை ஆரம்பிக்குமாறு. அவருக்கு நான் எழுதிய பதிலை இங்கு குறிப்பிடுவது வாசகர்களுக்குப் பிரயோசனமானதாயிருக்கும் எனக் கருதுகிறேன்.
திரு. சென்னை மாரன் அவர்களுக்கு,
வணக்கம். வருகை வாழ்த்துடன் அபிப்பிராயமும் தெரிவித்திருக்கிறீர்கள். இதயபூர்வமான நன்றிகள். நமது நாட்டில் சமயம் கட்டாயபாடமாக இருக்கிறது. சமய வகுப்புக்கள் அரச திணைக்களத்தால் நடைபெறுகின்றன. வாரந்தோறும் ஞாயிறு அறநெறிப் பாடசாலையாக சில பாடத்திட்டங்களுடன் முறையாக நடைபெற்று வருகிறது. சிறுவயதில் நானும் பாடம் படித்து பின்னர் போதித்ததில் ஓரளவு அனுபவம் உண்டு. வினாவிடையுடன் மாதமொருதடவை குறுக்கெழுத்துப் போட்டியொன்றினையும் எதிர்வரும் நவராத்திரி - வித்தியாரம்பம் முதல் ஆரம்பமாக ஏற்பாடு செய்து வருகின்றேன்.
எல்லாம் திருவருள் துணையுடன் இனிதே நடைபெறவேண்டும்.
அத்துடன் உங்களுடைய ஊக்கங்களும் எமக்குத் தேவை.
தொடர்பாக இருங்கள்.
என்றும் நன்றி மறவாத
தங்க. முகுந்தன்.
இவருக்குக் குறிப்பிட்டதை மீள எமது வாசகர்களுக்கும் கோரிக்கையாக வைக்கின்றேன். உங்களால் முடிந்தளவுக்கு என்னுடன் தோள்நிற்பீர்கள் என எண்ணுகின்றேன். மேலும் சந்தேகங்கள் கேள்விகள் பிரச்சினைகள் போன்ற பகுதிகளும் தொடங்கலாம் என்றிருக்கின்றேன். அதற்கு இந்தியாவிலும் இலங்கையிலுமுள்ள சமயப் பெரியார்களின் விளக்கங்களைப் பதிவிடவும் எண்ணியிருக்கின்றேன். இந்த விடயங்களில் தயவுசெய்து சமயத்தில் ஆர்வமுடையவர்கள் உதவியாக இருக்கவேண்டும் என மிகவும் தாழ்மையுடனும் உரிமையோடும் வேண்டுகிறேன்.
விஜயதசமியன்று கிருத்தியத்திலே சைவசமய வினாவிடைப் போட்டியும் குறுக்கெழுத்துப் போட்டியும் ஆரம்பிக்கப்படவிருக்கிறது. போட்டியில் பங்குபற்றுவோர் தமது விபரங்களை உடன் எமக்குத் தெரியப்படுத்தவேண்டும். முதலில் மாணவர்களிடையே சமய அறிவை விருத்திசெய்ய இப்போட்டி ஆரம்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் அதிக அக்கறை காட்டுவார்களாயிருந்தால் அவர்களுக்கு ஆர்வத்தை மேலும் ஏற்படுத்த ஏதேனும் பரிசுத் திட்டத்தை ஏற்படுத்தலாம். தொடர்ந்து பங்குகொள்வோருக்கும் அதிக மதிப்பெண்கள் பெறுவோருக்கும் பரிசில்கள் வழங்க நாம் எண்ணியிருக்கிறோம். எல்லாம் அவன் செயல். இம்முறை விஜயதசமி 09.10.2008 வியாழக்கிழமை வருகிறது. தேவர்களின் குலகுருவான வியாழபகவானுடைய நாளில் இந்தப் போட்டி ஆரம்பிப்பதால் முறையே ஆங்கில மாதந்தோறும் வரும் 2ஆம் 4ஆம் வியாழக்கிழமைகளில் வினாவிடைப் போட்டிகள் முறையாக நடைபெறும். எனவே மாணவர்கள் இம்முறை 2008 ஆம் ஆண்டு எதிர்வரும் 09.10.2008, 23.10.2008, 13.11.2008, 27.11.2008, 11.12.2008, 25.12.2008 ஆகிய 8 வியாழக்கிழமையும் தவறாமல் பங்கு பற்ற வேண்டும். விடைகளை எமக்கு அடுத்துவரும் செவ்வாய்க் கிழமைக்கு அல்லது அதற்கு முன்னர் அனுப்பி வைக்க வேண்டும். அதேபோல குறுக்கெழுத்துப் போட்டி விஜயதசமியன்றும் அடுத்து வரும் 13.11.2008 11.12.2008 ஆகிய 3 முறை நடைபெறும். அதற்கும் விடைகளை மேற்குறிப்பிட்டதுபோல அடுத்துவரும் செவ்வாய்க் கிழமைக்கு அல்லது அதற்கு முன்னர் அனுப்பவேண்டும்.
போட்டிகளில் பங்குகொள்ளும் மாணவர்கள் எந்த நாட்டில் வசிப்பவராயிருந்தாலும் சரி தமது முழுமையான உண்மையான தகவல்களை எமக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவிக்க வேண்டும்.
விபரங்கள் -
முழுப்பெயர் - தமிழிலும் ஆங்கிலத்திலும்
பிறந்த திகதி -
கல்வி கற்கும் தரம் -
தற்போது வசிக்கும் நாட்டின் பெயர் -
தொடர்பு மின்னஞ்சல் முகவரி –
எமது மின்னஞ்சல் முகவரி –
இந்து சமய ஒற்றுமைப் பேரவையுடன் (hindureligiousunitedfederation@gmail.com) தொடர்புகொள்க!

மனிதத்துவம் - 4

பௌத்த தர்மம் என்ன சொல்கிறது? அல்லது மனிதாபிமானம் எங்கே?

(இக்கட்டுரை பத்திரிகைச் செய்தியாக 01.08.1990ல் எழுதப்பட்டது. 18 வருடங்களின் பின்னும் இன்று நடக்கும் பிரச்சனைகளுக்கும் இது பொருந்தும் யாரும் அப்பாவிப் பொதுமக்களைப் பற்றியோ அல்லது அவர்களது உடைமைகளைப் பற்றியோ சிந்திப்பதாகத் தெரியவில்லை.)

பௌத்த சமயம் புத்தபெருமான் என்று மார்தட்டும் எமது இலங்கை அரசுக்கு இந்திய துணைப்பிரதமர் அவர்கள் பௌத்த தர்மத்தை – தத்துவத்தை விளக்க வேண்டிய நிலை ஏற்பட்டது குறித்து இலங்தையைப் பிறப்பிடமாகவும் தாய்நாடாகவும் கொண்ட நாம் வெட்கமடைகின்றோம். பிணி; மூப்பு சாக்காடு என்ற 3 காரணங்களினால் தனது அரண்மனை வாழ்க்கையையும் இல்லறத்தையும் துறந்து அன்பையும் தருமத்தையும் அகிம்சையையும் போதித்தார்.
எமது நாட்டில் ஏறக்குறைய 41 ஆண்டுகளுக்கு மேலாக அரசியல் பிரச்சனை சிறிய அளவில் உருவாக்கப்பட்டு தற்போது பூதாகரமான நிலையில் பயங்கர விளைவுகளை ஏற்படுத்தியதோடு தொடர்ந்தும் அழிவுகளைக் கண்டும் காணாததுபோல இருப்பவர்களுக்கு ஒரு வேண்டுகோளாக இச்செய்தியைத் தெரிவிக்கினறோம்.
இம்சையைக் கண்டும் அதை எதிர்க்க முடியாதிருக்கும் மனித சமூகத்தின் மத்தியில் எத்தனை சமூக சமய அமைப்புக்கள் இருக்கின்றன. இவை அனைத்தையும் பொது அமைப்பாக இருப்பதன் காரணத்தை நாம் வினவுகின்றோம்.
சமயங்கள் யாவும் உயிர்களிடத்தில் அன்பை வளர்க்கும் பொருட்டே அடிப்படையில் போதனை செய்கின்றன. அகிம்சைக்கு உதாரணபுருராகிய அண்ணல் மகாத்மா காந்தியின் வாழ்க்கையை நாம் உற்று நோக்க வேண்டும். இந்து முஸ்லீம் ஒற்றுமைக்காகப் போராடிய அம் மகாத்மாவை எப்பொழுது ஒரு இந்து சுட்டுக்கொலை செய்தானோ அன்றே இந்துக்களுக்கான பழி ஏற்பட்டு எமது நாட்டிலும் அது தொடர வழிவகை செய்கின்றது. தமிழ் முஸ்லீம் களுக்கிடையே ஒற்றுமை நிலவிய எமது தேசத்தில் இன்று இந்த உறவு கேள்விக்குறியாக இருக்கிறது. காரணம் போராளி இயக்கங்கள் செய்த மனிதாபிமானமற்ற கொலைகளே. எந்த உயிரையும் கொலை செய்வதற்கோ அல்லது துன்புறுத்துவதற்கோ எவருக்கும் அதிகாரம் இல்லை.
எமது நாட்டில் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக மனிதாபிமானமற்ற முறையில் அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டமை குறித்து நாம் உள்ளுக்குள்ளே குமுறியபடி இருந்தோம். இன்று பொறுத்திருக்க முடியாது எமது எதிர்ப்பைப் பகிரங்கமாகத் தெரிவிக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம்.
1949ம் ஆண்டு மலையக மக்களுடைய குடியுரிமை பறித்தமை 1956ல் தனிச் சிங்களச் சட்டம் கொண்டு வந்தமை அதனைத்தொடர்ந்து வந்த சிங்கள ஸ்ரீ எதிர்ப்புப்போராட்டம் 1972ல் தரப்படுத்தல் போன்றவை ஆட்சியாளர்களின் தவறான சிந்தனையாலும் போக்காலும் ஏற்படுத்தப்பட்டது எனலாம்.
இவை அனைத்தும் ஒருவகையில் இனப்பிரச்சனைக்கு முக்கிய காரணிகளாக அமையும். 1977ன் பின் நாடளாவிய ரீதியில் இனப்பிரச்சனை ஆரம்பமாகியது. ஏராளமான மக்கள் குறிப்பாக தமிழ்மக்கள் கொல்லப்பட்டார்கள். உயிருடன் எரிக்கப்பட்டார்கள். அகதிகளாக்கப்பட்டார்கள்.
1981ல் யாழ்ப்பாணத்தில் பொது நூல்நிலையம் ஏராளமான கடைகள் வீடுகள் போன்றவை அரச படைகளின் உதவியோடு காட்டுமிராண்டித்தனமானவர்களால் எரிக்கப்பட்டன. கொலைகளும் கொள்ளைகளும் தாராளமாக இடம்பெற்றது. வடக்கு கிழக்கு பகுதிகளில் மக்கள் முதன்முதல் பாரிய அளவில் அரச படைகளால் தாக்கப்பட்டதைத்தொடர்ந்து மீண்டும் இன்றுவரை தொடர்ச்சியாக அரச படைகளினாலும் 1985க்குப் பின்னர் தமிழ் இளைஞர்களின் ஆயுதப் போராட்டங்களினாலும் மக்கள் சொல்லொணாத துயரங்களை அனுபவித்து வந்தார்கள். வருகிறார்கள்.
ஒன்றுபட்டிருந்த சமூகம் இன்று சின்னாபின்னமாகி ஒற்றுமையின்றி அல்லல்படுவதை எண்ணி ஏங்குவதைத்தவிர ஒன்றும் செய்ய முடியாத நிலையில் நாமிருக்கின்றோம்.
1983 1984ம் ஆண்டுகளில் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டவர்களை வன்மையாகத் தாக்கித் திரிந்தவர்கள் இன்றுவரை பேசிய பேச்சுவார்த்தைகளையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
எங்கள் மத்தியில் எத்தனை கட்சிகள் இயக்கங்கள் இன்று இருந்தும் மக்களைக் காக்க எவரும் யுத்தத்தை நிறுத்தும்படி கேட்கவில்லை. தாம் தாம் சுயலாபம் தேடுவதிலேயே காலத்தை ஓட்டுகின்றார்கள்.
யுத்தம் நடைபெறும்பொழுது எத்தனையோ விதிமுறைகள் இருந்தும் அனைத்தையும் மீறிய நிலையில் சண்டை புரிகின்றார்கள். கண்டது உயிரழிவும் உடமை இழப்புக்களுமே அன்றி வேறெதுவும் இல்லை. தாம்தாம் சண்டை செய்தாலும் பரவாயில்லை. அப்பாவிப் பொதுமக்கள் பெரியோர் மதகுருமார்கள் பெண்கள் குழந்தைகள் அனைவரும் கொல்லப்படுவது வேதனைக்குரியதும் சுட்டிக்காட்டப்பட வேண்டியதுமாகும்.
தமிழர்களை அரசபடைகள் வல்வெட்டித்துறை அரியாலை குமுதினிப்படகு போன்றவற்றில் கொலை செய்தபோதும் வெலிக்கடைச் சிறைகளில் தமிழ்க் கைதிகள் கொல்லப்பட்டபோதும் இவற்றால் கொதித்தெழுந்த எமது உணர்வுகள் இன்று எம்மவர்களாலேயே நடைபெறும் கொலைகளின்போது மௌனமாக்கப்படுவதுகண்டு வேதனையும் வெட்கமும் அடைகின்றோம். காரணம் எம்மிடையே காணப்படும் சுயநலம்.
அப்பாவி முஸ்லிம் மக்கள் தமிழர் போராட்டங்களில் முழுமூச்சாக ஈடுபட்டவர்கள் இன்று யாத்திரை சென்று மீண்டபோது அவர்களில் சிலரும்: அவர்களுடைய உறவினர்களும் கொடுமையான முறையில் விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்டமை குறித்து நாம் எமது பூரணமான கடும் எதிர்ப்பை இன்று தெரிவிக்கின்றோம். சிங்களப் பொதுமக்களைக் கொலை செய்தமை யுத்தம் செய்ய முடியாத பலவீனத்தையே காட்டுகிறது. இதையும் நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
1974ல் தமிழாராய்ச்சி மாநாட்டிற்கு வருகைதந்தவர்களில் இன்று இலங்கைக்கு விஜயம் செய்த தமிழறிஞர் பெரும்புலவர் பேராசிரியர் டாக்டர் சீ. நயினா முகம்மது அவர்களையும் வேறு சில சிங்கள அறிஞர்களையும் இந்நேரத்தில் நாம் சுட்டிக்காட்ட ஆவலாயுள்ளோம். காரணம் இன்று பிடித்த முயலுக்கு மூன்று கால் எனப்பேசும் சிலர் - வரலாறு தெரியாதவர்கள் - அறிய வேண்டும் என்பதற்காக. 10ம் திகதி ஜனவரி மாதம் 1974ம் ஆண்டு யாழ் முற்ற வெளிமைதானத்தில் நடைபெற்ற தமிழாராய்ச்சி மாநாட்டில் பேராசிரியர் நயினா முகம்மது அவர்கள் பேசிக்கொண்டிருக்கும்பொழுது ஏற்பட்ட குழப்பத்தில் 9 அப்பாவி உயிர்கள் கொல்லப்பட்டதையும் அன்று இச்செயலை மேற்கொண்ட அரச படையின் அட்டூழியத்தையும் கண்ணால் கண்ட ஒரு சாட்சியாக இருக்கும் பேராசிரியரின் இன்றைய வருகையின்போது அன்று ஒன்றுபட்டிருந்து தமிழ் முஸ்லிம்களின் ஒற்றுமையையும் இன்றைய பதட்டநிலையையும் எண்ணி நாம் சிந்திக்கவேண்டியவர்களாக இருக்கின்றோம்.
அன்று மாநாட்டிற்கு வருவதை எதிர்த்த சிங்கள அரசின் கட்டுப்பாடுகளையும் மீறி மாநாட்டில் கலந்துகொள்ள சிங்கள அறிஞர்களும் ஒரு சிலர் வந்து கலந்து கொண்டதையும் பலர் அறியமாட்டார்கள். இவை எமக்கு ஒரு பாடமாக இருக்கவேண்டும். குறிப்பாக 1987ல் பௌத்த சமயத் தலைவர்களுடன் யாழ் விஜயம் செய்த அமரர் விஜயகுமாரணதுங்க அவர்களுடன் விடுதலைப் புலிகள் நடந்துகொண்ட விதங்கள் இவற்றை நாம் பார்க்கும்பொழுது சந்தர்ப்பவாதம் எனப்படும் பதத்தை இவர்களுக்கும் வழங்கலாம் என்றே நாம் கருத இடமுண்டு.
சகலமக்களும் இன்றைய இக்கால கட்டத்தை மிகவும் நிதானமாக அவதானித்து உற்றுநோக்குவதோடு முன்னைய வரலாறுகளையும் அறிந்து ஒப்பிட்டு மதிப்பீடு செய்யவேண்டும்.
அரசாங்கங்களைப் பொறுத்தவரை இன்று ஜனாதிபதியின் கருத்துப்படி 2000ம் ஆண்டுகளின் பின்னரும் தாங்கள் ஆட்சிக்கு வரமுடியும் எனக்கூறியுள்ளார். யூஎன்பி அரசாங்கத்தினால் கடந்த 13 வருடங்கள் அல்லல்பட்ட வாழ்க்கை மேற்கொண்ட அரசின் நடவடிக்கைகளை நாம் கருத்திற் கொள்ள வேண்டும். குறிப்பாக இன்றைய இனப்பிரச்சனையை அன்றே பண்டா செல்வா ஒப்பந்தம் மூலம் தீர்க்க முன்வந்தபோது இதே யுஎன்பி கட்சியைச் சேர்ந்த முன்னாள் ஐனாதிபதி திரு. Nஐஆர் nஐயவர்த்தனா தமிழர்களுக்கு பண்டாரநாயக்கா இலங்கையைப் பிரித்துக் கொடுத்துவிட்டார் என்றுகூறி கண்டிக்குப் பாதயாத்திரை செய்ததையும் நினைவுபடுத்த வேண்டும்.
இன்று இதே அரசு இளைஞர்களின் விரக்தி நிலைகுறித்து ஆராய ஒரு விசேட ஆணைக்குழுவை நியமித்து அதன் அறிக்கையை ஏற்றுக்கொண்ட பின்னரும் தற்போதைய யுத்தத்தைத் தீவிரப்படுத்துவது ஏன் என்ற கேள்வியை ஏற்படுத்துகிறது.
எமது முக்கியமான பணிவான வேண்டுகோள் சண்டை நிறுத்தப்படவேண்டும். மக்கள் கொல்லப்படுவதும் உடமைகள் அழிக்கப்படுவதும் நிறுத்தப்படவேண்டும்.
வறுமையால் பட்டினியால் வாடும் மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும். அழிக்கப்பட்ட உடமைகளின் பெறுமானத்திற்கு அமைய நிவாரணம் வழங்கப்படவேண்டும். காணாமற்போனவர்களைக் கண்டுபிடிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ள சர்வதேச செஞ்சிலுவைச் சங்க அங்கத்தவர்களுக்கு பூரண ஒத்துழைப்பு நல்க வேண்டும். மரணமடைந்தவர்களின் விபரங்களை உடனடியாக அவரவர் குடும்பத்தினருக்கு அல்லது உறவினருக்குத் தெரிவிக்க வேண்டும்.
மேற்தரப்பட்ட செய்தியை மனிதாபிமானம் கொண்ட முறையிலும் சகல சமூகங்களையும் சேர்ந்தவர்களோடு இனஒற்றுமை இன்றைய அரசியல் நிலைப்பாடு என்பன பற்றிய கருத்தரங்குகளில் பலரது அபிப்பிராயத்தையும் அறிந்தவர்கள் என்ற முறையிலும் வெளியிடுவதில் ஓரளவு அமைதி அடைகின்றோம்.
வணக்கம்.
தேசிய ஒருமைப்பாட்டிற்கான இளைஞர்குழு உறுப்பினரும்
இந்து சமய ஒற்றுமைப்பேரவை அமைப்பாளரும்
தங்க. முகுந்தன்.

---------------------
07.08.1990

கடந்த சில நாட்களாக அப்பாவி பொதுமக்கள் குறிப்பாக சிங்கள-முஸ்லீம் இன மக்கள் மிகவும் மோசமான முறையில் விடுதலை புலிகளால் கொல்லப்பட்டமை குறித்து மிகவும் வேதனை அடைகின்றோம். எந்தத்தவறை அரச சிங்களப் படைகள் அன்று தமிழினத்திற்கு செய்தனவோ அதே செயலை மக்களின் ஏகப்பிரதிநிதிகள் என்றும், விடுதலைக்காக போராடும் வீரர்கள் என்றும், தமிழர்கள்தான் புலிகள் - புலிகள் தான் தமிழர்கள் என்று தம்மை தாமே கூறிடும் புலிகள் இன்று இப்படி கீழ்த்தரமாகச் செய்வதன் காரணம் ஏன் எனத்தெரியவில்லை.
தமிழ் மக்களின் விடுதலைப்போராட்டங்களில் கூடிய பங்கேற்ற முஸ்லீம் மக்களின் உயிர்களைப்பறிக்க கங்கணம் கட்டிய புலிகளுக்கு விடுதலைவரலாறு தெரியாமல் இருக்கலாம் ஆனால் வரலாறு தெரிந்த அறிஞர்கள் பலர் முஸ்லீம் மக்களாக இருப்பதும், இன்றும் இவர்கள் இப்படியான குரோத மனப்பாங்கை வளர்த்தாலும், தமிழ் மக்களோடு கூடியே வாழவேண்டும் என்ற அசைக்கமுடியாத நம்பிக்கை வைத்துள்ள முஸ்லீம் சகோதரர்களையும் எம்மால் பகைத்துக் கொள்ளமுடியாது. அந்த எண்ணமும் எம்மத்தியில் எழாது. ஒற்றுமையே பலம் என்று இளவயதில் நாம் படித்த பள்ளிப்பாடங்கள் என்றும் எம் நெஞ்சில் நீங்காது இருக்கின்றது. அதாவது பாடசாலைக்குபோனவர்களுக்கு புரியும்.
மக்காவிற்கு யாத்திரை சென்று மீண்ட முஸ்லீம் யாத்திரிகர்களையும் அவர்களது உறவினர்களையும் கொன்று ஒழித்தவர்கள், தற்பொழுது பள்ளிவாசலுக்குள் நுழைந்து பிராத்தனையில் ஈடுபட்டிருந்தவாகள் மீது துப்பாக்கிபிரயோகம் செய்ய வைத்த மிருகத்தனத்திலும் கொடிய அரக்கச் செயலுக்கு எந்தவிதமான மன்னிப்பும் கிடையவே கிடையாது. மற்றவர்களுக்கு மன்னிப்பு வழங்காது மரணதண்டனை வழங்கும் புலிகளுக்கு மக்கள் இனிமேலும் ஆதரவு அளிக்கமுடியாது மக்களில் பலரும் இன்று வெளிப்படையாகவே திட்டுகின்றார்கள். மட்டக்களப்பு அகதிகளில் பலர் வெளிப்படையாகவே கூறுகின்றார்கள் - இராணுவத்தினர் தாக்குவதற்கு மூலகாரணம் புலிகள் தான் என்று. மிருகங்களைக் கூட இன்று சர்க்கஸி;ல் பழக்கி எடுத்து மிகவும் செல்லமாக வளக்கப்பட்ட அவை அன்பின் அடிமையாகி பயிற்றப்படுகின்றது. சிலவேளைகளில் எப்படி நடந்து கொள்வேண்டும் என்று பயிற்சியும் கொடுக்கப்படுகின்றது. ஆனால் ஆறாவது அறிவைப்பெற்ற மிக உன்னதமான நிலையில் இருக்கவேண்டிய மனிதன் தன்னைப்போல் மன்னுயிரை நேசிக்கவேண்டிய நிலையில் மற்றவர்களை அழித்து தான் மட்டும் வாழ மனப்பால் குடிக்கின்றான்.
நீதி என்ற நிலை உள்ள மட்டும் எவரும் கீழ்த்தரமான எண்ணங்களால் முன்னுக்கு வரமுடியாது: தேரினை முல்லைச் செடிக்குத் தந்த பாரி வள்ளலும் கன்றின் உயிருக்காக தன் ஒரே வாரிசை தேர்ச்சில்லில் விட்டு நசித்துக்கொன்ற மனுநீதிச்சோழ மன்னனும் புறாவின் உயிருக்காக தன்னுடைய தொடைச் சதையினை அளித்த சிபிச்சக்கரவர்த்தியும் எமது சிந்தனைகளில் வாழ்க்கையில் வாழ்ந்துவரும்போது புல்லர்களின் செயல்கள் யாவும் புமியில் நிலைக்க முடியாது.
முஸ்லீம் சமுதாயத்தினருக்கு எமது பணிவான வேண்டுகோள் விடுதலைப்புலிகள் போல இருக்காது மனிதாபிமானம்கொண்ட நீங்கள் மக்கள் நலம்பேண புலிகளுக்கு எதிராகவுள்ள தமிழ்மக்களையும் உங்களுடன் இணைந்து நீதிக்காக குரல் எழுப்ப முன்வரவேண்டும். முஸ்லீம்களை மட்டுமல்ல தமிழ் சிங்கள அப்பாவிப் பொதுமக்கள் அறிஞர்கள் தலைவர்கள் கூட புலிகளால் கொல்லப்பட்டார்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்னும் சரியான நீதி வழங்கப்படவில்லை. இவையனைத்தையும் முஸ்லீம் சகோதரர்கள் உணர்ந்து நீண்ட காலம் அன்பில் இணைந்த நாம் இன்று கொடியவர்கள் சிலரால் பிரிக்கப்படவேண்டிய அவர்களுடைய எண்ணத்திற்கு செவிசாய்க்காது ஒற்றுமையாக இந்த சிறிய நாட்டில் அமைதியாக வாழ வேண்டிய ஒழுங்குகளை நாம் கூடி ஆராய்ந்து செயற்படவேண்டும் என சகல முஸ்லீம் சமய சமூக அமைப்புக்களுக்கு பணிவாக வேண்டி கொல்லப்பட்ட முஸ்லீம் சகோதரர்களின் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த வேதனையை தெரிவிப்பதோடு கொல்லப்பட்டவர்களின் ஆத்ம சாந்திக்காக இறைவனை வேண்டுவதோடு கொலை செய்வதையும் உடமைகள் நாசமாக்கப்படுவதையும் நிறுத்தும்படி தொடர்ந்து கீழ்த்தரமான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்குத் தெரிவிப்பதோடு இப்படியான நிகழ்வுகள் தொடர்ந்து கொண்டுள்;ள நிலையில் அரசினுடைய இயலாமையையும் கண்டனம் செய்து இவ்வறிக்கையை நிறைவு செய்கின்றோம்.
மனிதன் வாழவே சமயங்கள் வழிகாட்டுகின்றன. அந்த சமயங்களின் பெயரால் சண்டைகள் இருக்குமானால் சமயமே தேவையற்றது.
என்றும் ஒற்றுமைக்காக
இந்து சமய ஒற்றுமைப் பேரவை அமைப்பாளர்
தங்க. முகுந்தன்.

மனிதத்துவம் - 3

14.07.1995

மாண்பமிகு ஐனாதிபதி திருமதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க அவர்களுக்கு,
நவாலியிலுள்ள தேவாலயத்தின் மீதான படையினரின் விமானத்தாக்குதல் குறித்து வெளிவிவகார அமைச்சர் கௌரவ லக்ஷ்மன் கதிர்காமர் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் அறிக்கைக்குக் கண்டனம் தெரிவித்தது வெட்கத்துக்கும் வேதனைக்கும் உரிய செயலாகும் சர்வதேச ரீதியில் இன மத அரசியல் வேறுபாடற்று மனிதாபிமான சேவைகளை மேற்கொண்டுவரும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் அறிக்கைக்கு கண்டனம் தெரிவித்த அமைச்சரின் செயலானது சமாதானத்தின் பேரில் தற்போதைய அரசுக்கு வாக்களித்த அனைத்து மக்களையும் கேவலப்படுத்துவது போன்றதாகும்.
கடந்த காலத்தில் அரசு மேற்கொண்ட மனித உரிமை மீறல்களினடிப்படையில் அவற்றை வெளிப்படுத்தி விசாரணைகள் மேற்கொண்டுவரும் இன்றைய பொது சன ஐக்கிய முன்னணி அரசின் இம்தனிதாபிமானமற்ற கொடூரச் செயலால் சமாதானத்தின்மீதும் அமைதியின் மீதும் நம்பிக்கை வைத்த அனைத்து மக்கள் மனதிலும் அவநம்பிக்கையும் வேதனையும் எழுந்துள்ளது. விமானத்தாக்குதல் மற்றும் ஷெல்த் தாக்குதல்களினால் ஏற்பட்ட கொடூரமான உண்மை நிலையை வெளிப்படுத்திய சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் அறிக்கைக்கு அமைச்சரின் கண்டனம் ஏற்கப்படமுடியாது.
அப்பாவிப் பொதுமக்கள் மீதான ஷெல்த் தாக்குதல்கள், விமானத் தாக்குதல்கள் கடற்படைப் பீரங்கிக் குண்டுத் தாக்குதல்கள் இவற்றால் அழிக்கப்படும் உயிர்களுக்கும் உடமைகளுக்கும் இன்றைய அரசு எவ்வகையில் தீர்வுகாண முடியுமென எதிர்பார்ப்பதுடன் உண்மையை மறைக்க முயற்சிக்கும் செயல் ஒருபோதும் சமாதானத்தையோ அன்றி அமைதியையோ ஏற்படுத்த மாட்டாது என்பதையும் நினைவுபடுத்துவNதூடு அமைச்சரின் கண்டனத்திற்கு அமைச்சரும் அரசும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடம் உடனடியாக மன்னிப்புக் கேட்கவேண்டும் எனவும் கேட்டுக்கொள்கின்றேன்.
தொடர்ந்து கொண்டிருக்கும் யுத்தம் உடனடியாக நிறுத்தப்பட்டு பேச்சுவார்த்தைகள் மூலம் இனப்பிரச்சனைக்குத் தீர்வுகாணப்பட வேண்டும் என வேண்டுவதுடன் தற்போதைய நிலையில் வடபகுதியில் நிலவும் மருத்துவப் பற்றாக்குறைகள் உணவு மண்ணெண்ணெய் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை அனுப்பி அப்பாவிப் பொதுமக்களைக் காக்குமாறு மனிதாபிமானத்தின் பேரால் தங்களையும் தங்கள் அரசாங்கத்தையும் வேண்டுகிறேன்.
தங்களுண்மையுள்ள
தங்க. முகுந்தன்

21.09.1999.

மேன்மைதங்கிய ஐனாதிபதி திருமதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க அவர்களுக்கு,
வணக்கம்.
கடந்த 15.09.1999 புதன் கிழமை நடைபெற்ற விமானக் குண்டுத் தாக்குதல்களினால் அப்பாவிப் பொதுமக்கள் 22 பேர் பலியானதும் 41 பொதுமக்கள் படுகாயமடைந்ததும் குறித்துத் தாங்கள் எந்தவிதமான கருத்தையும் தெரிவிக்காது இன்றுவரை மௌனமாயிருப்பது குறித்து மிகவும் வேதனையடைந்த நிலையில் தாங்கள் இச்சம்பவம் குறித்து தமிழ்மக்களிடம் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் உடனடியாகப் பாதிக்கப் பட்டவர்கள் அனைவருக்கும் நிவாரணம் வழங்க வேண்டுமெனவும் மனிதாபிமானத்தின் பெயரால் வேண்டுகிறேன்
சிங்கள மக்கள் கொல்லப்பட்டவுடன் கண்டனம் தெரிவித்து அம்மக்களின் இறுதிக்கிரியைகளை அரச செலவில் நடத்தி நிவாரணம் வழங்கிய பொறுப்பு வாய்ந்த கடமையை – ஏன் தமிழ் மக்களுக்குச் செய்ய வில்லை எனவும் வினவ விரும்புகின்றேன்.
இந்நாட்டு மக்களை இனம் பிரித்துக் காணுவதில் முன்னைய அரசு தலைவர்களைப் போலவே தாங்களும் நடந்து கொள்கிறீர்கள். முல்லைத்தீவு மாவட்டமும் தாங்கள் ஐனாதிபதியாகவுள்ள இலங்கை நிர்வாகத்தினுள் அடங்குவதை தங்களுக்கு நினைவுபடுத்துவதுடன் - தமிழ் மக்கள் ஒருபோதும் தங்களை மன்னிக்க மாட்டார்கள் என்பதையும் உறுதியாகவும் தெரிவிக்கின்றேன்.
தங்களுண்மையுள்ள
தங்க. முகுந்தன்

06.11.1999.

மாண்பமிகு ஐனாதிபதி திருமதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க அவர்கள்,
அலரி மாளிகை,
கொழும்பு 3
மாண்பமிகு ஐனாதிபதி அவர்களுக்கு
வணக்கம். கடந்த 04.11.1999 தினக்குரல் பத்திரிகையில் "கிபிர் விமானத் தாக்குதலில் வன்னியில் 6 பொதுமக்கள் பலி " என்ற செய்தியைக் கண்ணுற்று மிகுற்த மனவேதனைபுடன் இக்கடிதத்தை எழுதுகின்றேன்.
6 அப்பாவிப் பொதுமக்கள் உடல் சிதறிப் பலியானதுடன் 7பேர் படுகாயமடைந்துள்ளனர். (புதன்கிழமை பாண்டியன்குளத்தில் நடைபெற்றது) தமிழ் மக்களுக்குப் பிரச்சனை இருக்கிறது என்று கூறி மக்களின் ஆதரவுடன் ஆட்சிப்பொறுப்பேற்ற தாங்கள் மக்களின் அமைதியான வாழ்வுக்கு முயற்சிக்காது மேலும் மக்களைத் துன்பப்படுத்தும் செயலானது எவ்வகையிலும் நியாயமாகாது. முக்களின் நம்பிக்கையை – எதிர்பார்ப்பைப் பாதுகாக்காது கடந்த 5 வருடகாலம் குறிப்பாகத் தமிழ் மக்கள் கடந்த அரசினது செயற்பாடுகளையே தங்களது காலத்திலும் ஏற்றுக்கொண்டீரப்பதை அவதானிக்க முடிகிறது. இன்னுமொரு தேர்தலில் தங்களுக்கு தமிழ்மக்கள் வாக்களிப்பார்கள் என்று கனவிலும் நினைக்க அருகதையற்றுவிட்டீர்கள். வடக்கு கிழக்கு மக்கள் கடந்த 5வருட காலமாக மிகவும் கேவலமான நிலையிலேயே இருக்கின்றார்கள். யுத்தம் நிறுத்தப்பட்டு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்புறப்பட்ட தாங்கள் இன்று மிருகத்தனமான முறையில் மக்களையும் மக்களின் சொத்துக்களையும் அழிப்பதிலேயே முழுமூச்சாக ஈடுபடுகின்றீர்கள். தங்கள் நடைமுறைகள் காலஞ்சென்ற தங்களின் கணவரின் கொள்கையிலிருந்து விலகி தங்கள் பெற்றோரின் கொள்கை முறைப்படி பின்பற்றுவதை தவிர்க்க வேண்டுமென்று மனிதாபிமானத்தின் பெயரால் தங்களை வேண்டுகின்றேன்.
வணக்கம்.
அப்பாவிப் பொதுமக்கள்
நலனில் அக்கறையில் ஈடுபாடுள்ள,
தங்க. முகுந்தன்.

21.11.1999.

மாண்பமிகு ஐனாதிபதி திருமதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க அவர்களுக்கு
வணக்கம்.
நேற்றிரவு நடைபெற்ற தாக்குதல் ஒன்றினால் சுமார் 30க்கும் மேற்பட்ட அப்பாவிப்பொதுமக்கள் மடுத் தேவாலயத்தில் கொல்லப்பட்டதுடன் சுமார் 40 பேர்வரையில் படுகாயமடைந்த செய்திகேட்டு ஆழ்ந்த அதிர்ச்சியும் கவலையும் அடைந்த நிலையில் இக்கடிதத்தை தங்களுக்கு எழுதுகின்றேன்.
கடந்த 15வருடத்திற்கு மேலாக அப்பாவித் தமிழ்மக்கள் அரசபடையின் விமானத்தாக்குதல்கள் பீரங்கி மற்றம் ஷெல்த் தாக்குதல்களினால் உயிர்களை இழந்தும் படுகாயமடைந்தும் வருவதுடன் தமது சொத்துக்களையும் இழந்து வருகின்றார்கள்.
தாங்கள் அரச பொறுப்பை ஏற்ற பின்னரும்கூட இத்தாக்குதல்கள் இன்றுவரை தொடர்ந்தவண்ணமே இருக்கின்றது. கடந்த 09.07.1995 ல் நவாலியிலுள்ள தேவாலயமொன்றில் தாக்குதல் நடைபெற்தையும் கடந்த 15.9.1999ல ; புதுக்குடியிருப்பில் நடைபெற்ற தாக்குதலையும் நேற்று 20.11.99ல் மடுதேவாலயத்தில் நடைபெற்ற தாக்குதலையும் வன்மையாகக் கண்டிப்பதுடன் கொல்லப்பட்ட பொதுமக்களுக்கு எதுவித தாமதமும் இன்றி நஷ்டஈடு வழங்குவதுடன் உடனடியாக அரச படையின் விமான, பீரங்கி, குண்டுத் தாக்குதல்களையும், ஷெல்த் தாக்குதல்களையும் நிறுத்தப் பணிப்புரை வழங்க வேண்டும் எனவும் மனிதாபிமானத்தின்பேரால் கேட்டுக்கொள்கின்றேன்.
தங்களுண்மையுள்ள
தங்க. முகுந்தன்

மறைக்கப்படும் வரலாறுகள் - 2

சிந்தனை வாதமா? சீர்குலைவு வாதமா?

கோட்டே ஸ்ரீ ஜயவர்த்தனபுர பாராளுமன்றத் திறப்புவிழாவன்று ஹர்த்தால் நடத்தப் போவதாக தமிழீழ விடுதலை அணியினர் கூறுவது ஹர்த்தால் என்ற புனித அனுட்டானத்துக்கே அபகீர்த்தியை ஏற்படுத்தும் செயலாகும். இதற்கு முன்னர் இந்நாட்டில் ஹர்த்தால் அனுட்டிக்கப்பட்ட சந்தர்ப்பங்களை நினைவுகூர்ந்து பார்க்கவேண்டும். கொழும்பில் நடந்த பாராளுமன்றக் கூட்டம் கோட்டேயில் நடந்தால் என்ன? கொழும்பில் நடக்கும்போது ஆதரித்துவிட்டு கோட்டேயில் இடம்பெறும்போது பகிஷ்கரிப்பது கேலிக் கூத்தாகும்.
தந்தை செல்வாவின் நினைவுதினமாகிய இன்று அவருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக நாம் இங்கு கூடியிருக்கும் இவ்வேளையில், எமக்கு மறுமுனையில் போட்டிக் கூட்டமொன்று நடைபெறுகிறது. தான் தோன்றித்தனமாக எதையும் செய்வது தன்னையே அழித்துவிடும் என்று தந்தை செல்வா அடிக்கடி கூறுவார். அன்று தந்தையை ஏசியவர்களே இன்று அவருக்கு அஞ்சலி செலுத்த வந்துள்ளனர். பிற்பகல் 3 மணிக்கே பிரார்த்தனையுடன் கூட்டத்தை ஆரம்பித்து 5.30மணிக்கு கூட்டத்தை முடிப்பதாக அறிவித்தார்கள். ஆனால் அறிவிப்பையும் மீறி 6 மணிக்குமேல் கூட்டத்தை நடத்துகிறார்கள்.
தந்தை செல்வா அன்று அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தையை வன்மையாக எதிர்த்துக் கண்டித்தவர் அமரர் கதிரவேற்பிள்ளை. பேச்சுவார்த்தை காரணமாக அவர் விரக்தியடைந்த போதிலும் கட்சிக் கட்டுக்கோப்பை மீறாமல் ஒழுக்கத்துடன் நடந்துகொண்டார். அத்தகைய உதாரண புருஷரின் பெயரை எதிர்த்தரப்பினர் எவ்வாறு உச்சரிக்கமுடியும்?
மாவட்ட அபிவிருத்திச் சபை அமைப்பை அமரர் கதிரவேற்பிள்ளை எதிர்த்தார் என்று இப்போது பொய்ப்பிரச்சாரம் செய்கின்றனர். மாவட்டசபை சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட போது இந்தியாவில் திருவாங்கூரில் இருந்த அமரர் கதிரவேற்பிள்ளை இங்குவந்து சட்டமூலத்தை ஆதரித்தப் பேசினார்.
ஈழமாணவர் மன்றம் என்ற புதிய அமைப்பு உருவாக்கப்பட்டள்ளது. இங்குள்ள தம்பிமாரை நான் குறைசொல்ல முடியாது.
ஏனென்றால் லண்டனிலிருந்து இடப்படும் கட்டளையை இவர்கள் நிறைவேற்றுகிறார்கள். தமிழீழம் அமைப்பதற்கு இது வழியல்ல. கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராக இருந்த வைகுந்தவாசன் இப்போது தமிழீழத்தில் அக்கறைகொண்டு குறுக்குவழியல் விளம்பரம் தேடப் பார்க்கிறார்.
வங்கதேசத்தில் சுதந்திரப் பிரகடனஞ் செய்யப்பட்டபோது மக்கள் பாகிஸ்தானியக் கடவுச் சீட்டுக்களைக் கிழித்தெறிந்தனர். ஆனால் இங்கு சுதந்திர தமிழீழத்தைப் பிரகடனம் செய்யும் எமது வாலிபர்கள் ஸ்ரீ லங்கா கடவுச்சீட்டையே பாவிக்கிறார்கள்.

தந்தை செல்வா தந்த பாதை

அரசாங்கத்துடன் நாம் இரகசிய ஒப்பந்தம் செய்துள்ளதாக ஒரு சிலர் திட்டமிட்டு தவறான பிரச்சாரம் செய்வதில் ஈடுபட்டுள்ளனர். எவருடனும் நாங்கள் ஒப்பந்தம் செய்யவுமில்லை. செய்யப்போவதுமில்லை. நமது நிலப்பரப்பையும் உயிர் உடமைகளையும் பாதுகாப்பதுடன் மாவட்ட சபைகளுக்கு கூடிய அதிகாரங்கள் வழங்க வேண்டும் என்பதற்காகத்தான் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறோம். அதில் வெற்றியும் கண்டு வருகிறோம்.
தமிழ் ஈழத்தைப் பற்றி அரசாங்கத்துடன் நாங்கள் பேசவில்லை. அதைப்பற்றி பல மாதங்களுக்குப் பின்போடவுமில்லை. வாய்ப்பேச்சில் சுதந்திரம் பாதுகாக்க முடியாது. நமது பலத்தையும் எதிரிகளுடைய பலத்தையும் நிதானமாக உணர்ந்து தமிழ் ஈழ இலட்சியத்தை ஏற்படுத்த வேண்டும். எமது சமுதாயம் விடுதலை பெற தமிழ் தேசிய இனத்தை அமைக்க வேண்டும்.
அண்மையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களை அமைதியாகக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவது சகல அரசியல் கட்சிகளின் ஒத்துழைப்பைப் பெற்று வன்முறைச் சம்பவங்களை தடுத்து நிறுத்துவது போன்ற நடவடிக்கையில் தற்போது ஈடுபட்டள்ளோம்.
தந்தை செல்வநாயகம்: ஜீ.ஜீ. பொன்னம்பலம்: திருச்செல்வம் ஆகியோர் விட்டுச்சென்ற பொறுப்புகளை நாம் ஏற்று அவற்றை நிறைவேற்றுவதில் ஈடுபட்டுள்ளோம். அவர்கள் மனதில் வேரூன்றிய இலட்சியங்களை நாம் தட்டிக்கழிக்கவில்லை. தந்தை விரும்பிய நிலத்தை பாதுகாக்க முயற்சி எடுத்து வருகின்றோம்.
தந்தை செல்வா மாறிமாறி ஆட்சிக்குவந்த இரு அரசாங்கங்களுடனும் பலதடவை பேச்சுவார்த்தை நடத்தினார். உண்மையான சத்தியாக்கிரகிகளுக்குப் பேச்சுவார்த்தையில்தான் நம்பிக்கையுண்டு. அதன்படிதான் இறப்பதற்கு முன்பும் அவர் சிறிமாவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
திட்டவட்டமான கொள்கையுடன் தந்தை வாழ்ந்து வந்தார். தமிழினம் சுதந்திரமாக வாழ்வதற்கு தாயகம் வேண்டும் என்று சிந்தித்தார். இவற்றை உணர்ந்து அன்று பிரதேச சபையை நிறுவ ஒப்பந்தம் செய்தார். இதற்காக 1960 ஆம் ஆண்டு சுதந்திரக் கட்சியுடன் சேர்ந்து ஐ.தே.க. அரசாங்கத்தை வீழ்த்தினார். 1965ல் ஐ.தே.கட்சி அரசாங்கத்துடன் சேர்ந்து மாவட்ட சபையை அமைக்க முற்பட்டார். நமது பகுதியை முன்னேற்றும் நோக்குடன்தான் அன்று திருச்செல்வத்தை உள்ளுராட்சி அமைச்சராக்கினார்.
1947ம் ஆண்டு நடைபெற்ற தமிழ் காங்கிரஸ் வரவேற்பில் தமிழினம் உரிமையுடன் வாழ எமது பிரதேசத்தை ஆளுகின்ற இணைப்பாட்சி வேண்டும் என்று திட்டவட்டமாக எடுத்துக் கூறினார். மக்களுடைய சகல உரிமைப் பிரச்சனைகளிலும் முன்னின்று தந்தை உழைத்துவந்தார்.
தந்தைபற்றி நிறிதேனும் சிந்திக்காதவர்கள் இப்போ தந்தைபற்றி பேச ஆரம்பித்து விட்டார்கள். தமிழ் மக்களின் எதிர்காலத்தை உணர்ந்த தந்தை 25 வருடங்களாக படிஏறாத திரு. ஜீ.ஜீ. பொன்னம்பலத்தின் வாசஸ்தலத்திற்குச் சென்றார்.

மீதி பின் தொடரும்

Thursday, September 25, 2008

மறைக்கப்படும் வரலாறுகள் - 1

தமிழர் விடுதலைப் போராட்ட வரலாற்றில் தமிழர் விடுதலைக் கூட்டணியைப்பற்றியும் அதன் தலைவர்களைப்பற்றியும் குறிப்பாக மறைந்த தலைவர் அ. அமிர்தலிங்கம் அவர்களின் அளப்பரிய பங்களிப்பையும் தற்போதைய காலகட்டத்தில் சரித்திரத்தை எழுதபவர்களும் சரி பத்திரிகை மற்றும் எழுத்தாளர்களும்சரி வேண்டுமென்று திட்டமிட்டுப் புறக்கணிக்கும் காரணத்தால் அவர் ஆற்றிய பணிகள், எடுத்த முயற்சிகள் என்பவற்றை முழுவதும் என்னால் குறிப்பிட முடியாவிட்டாலும் ஓரளவுக்காவது இன்றைய சமூகம் தெரிய வேண்டும் என்ற ஆதங்கத்தில் தொடரில் சமர்ப்பிக்க இருக்கின்றேன். காலத்தால் அழிக்கப்பட்ட பேச்சுக்கள் கட்டுரைகள் கொண்ட 3 தொகுப்பு நூல்களை நீண்ட தேடுதல்கள் மேற்கொண்டு பெற முடிந்தது. சிலவற்றைத் தேடிக்கொண்டு இருக்கிறேன். இதை ஒவ்வொருநாளும் முடிந்தவரை தட்டெழுத்துப் பண்ணி இடுகையிலிட இருக்கின்றேன்.

1. போராடுவோம் என்ற பாராளுமன்ற உரை.(03.08.1978)
2. தமிழீழத்தின் உதயசூரியன் - கொள்கை விளக்க உரைகளின் தொகுப்பு
3. ஈழத்தமிழர் இன்னல் - 19.08.1983ல் சென்னையில் நிகழ்த்திய உரை

முதலில் இன்றைய தேவைகருதி 2வது குறிப்பில் உள்ள தமிழீழத்தின் உதயசூரியன் என்ற நூலில் வெளியான செய்தியை அப்படியே வரிக்குவரி மாற்றாமல் இருந்ததை இருந்ததுபோலத் தருகின்றேன்.

தமிழ் ஈழத்தின் உதயசூரியன்

தமிழ்ப் பேசும் இனத்தின் இன்றைய நிலை, போராட்ட உணர்வும் வழிவகைகளும், எதிர்காலத் திட்டங்கள், கவலைக்குரிய அம்சங்கள்பற்றி தலைவர் அமிர் ஆற்றிய கொள்கை விளக்க உரைகளின் தொகுப்பு.

இரத்தந் தோய்ந்த வரலாறு!
„…மழையிலே, காலிமுகக் கடற்கரையிலே, பச்சைப் புற்றரையிலே நாம் இருந்தோம். எமக்கு எதிராக முதன் முதலாக இனவெறி கட்டவிழ்ந்து விடப்பட்டது. காடையர்களை ஏவிவிட்டார்கள். 300 பேரளவில் நாம் அங்கிருந்தோம். ஆயிரக்கணக்கில் காடையர்கள் வந்தார்கள். எம்மை நாம் வருத்தி, மழையிலேயிருந்து எம்மை வருத்துவதன்மூலம் ஆட்சியாளரும், பெரும்பான்மையினமும் எங்களுக்கு நீதி, நியாயம் வழங்க வேண்டுமென்பதை அவர்களுக்கு உணர்த்தலாம் என்று நாம் அங்கே காந்திய வழியிலே சத்தியாக்கிரகம் செய்தோம்….நான் இவற்றையெல்லாம் ஏன் குறிப்பிடுகிறேனென்றால், இப்பொழுது இங்கு இருப்பவர்கள் எல்லாம் அன்று சின்னப்பிள்ளைகளாக இருந்திருப்பார்கள். ஒருவேளை அவர்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். இவ்வாறு நாம் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்ட நேரத்தில் கட்டவிழ்ந்துவிடப்பட்ட காடையர்கள் எம்மைத் தாக்கினார்கள், என்னுடைய உடைகள் கிழித்தெறியப்பட்டன. யாரோ எறிந்த கல் என்னுடைய மண்டையைப் பிளந்தது, எனக்கு நெற்றியிலும் மேல் தலையிலும் இரு காயங்கள் ஏற்பட்டன. பக்கத்திலிருந்த வவுனியா பிரதிநிதி சுந்தரலிங்கம் அவர்களின் கைக்குட்டையினால் எனது தலையிலுள்ள காயத்தைக் கட்டிக்கொண்டு அந்த இரத்தம் தோய்ந்த உடையோடு நான் பாராளுமன்றத்தினுள் சென்றேன்.“ - தலைவர் அமிர்.

இந்நூல் விற்பனையால் வரும் நிதி, செங்கதிர் பத்திரிகை வளர்ச்சிக்கு உரியது.

ஒரு வார்த்தை.

உலகெங்கம் வாழுகின்ற தமிழ்ப்பேசும் மக்களாலும், விடுதலை விரும்பிகளாலும் ஒடுக்கப்பட்ட இனங்களுக்காய் அயராது உழைக்கின்ற போராளிகளாலும் அறியப்பட்ட தலைவர், ஈழத் தமிழரின் நம்பிக்கை நட்சத்திரமான அமிர்தலிங்கம். மாணவனாயிருக்கையில் உணர்ச்சிமிகு பேரார்வத்தோடு அரசியலை நோக்கி, பல்கலைக்கழகத்தில் பயில்கையிலே பங்காளனாய் வளர்ந்த, பல்கலைக்கழகப் படிக்கட்டிலிருந்து எடுத்த காலினை அரசியல் இயக்கத்திலே வைத்து தொண்டனாய் கொள்கையாளனாய் தலைவனாய் மலர்ந்தவர் அமிர். தன் உழைப்பை மட்டுமல்ல, குடும்பத்தையே அரசியல் விடுதலைப் போராட்டத்துக்கு அவர் ஒப்புக் கொடுத்தவர். கல்லடியும் பொல்லடியும் பட்டு செந்நீரால் இயக்கத்தை வளர்த்து இன்றுவரை கட்டிக்காத்து வருபவர் அமிர். தொண்டனாயிருக்கையிலும், நாடாளுமன்ற உறுப்பினனானபோதும், எதிர்க்கட்சித் தலைவனானவேளையும் துப்பாக்கிகளாலும், சிறைச்சாலையாலும், குண்டாந்தடிகளாலும் அச்சுறுத்தப்பட்டபோது புன்னகையோடு இவையெல்லாம் இனவிடுதலைக்கான பரிசுகளே என ஏற்றுக்கொண்ட கொள்கைக் கோமான் எங்கள் தலைவர், தமிழ் ஈழத்தின் வரலாற்றோடு பின்னிப் பிணைந்தது அவரது இலட்சிய வாழ்வு. தன்னுடைய இலட்சியத்தினை அவர் எந்த நெருக்கடியிலும் தளரவிட்டதில்லை. அவரைத் தாக்கவென குண்டர்கள் படையாய் வந்திருக்கின்றனர். நாகரிகமே இல்லாமல் பாராளுமன்றத்தில் அவரைக் கொலைசெய்ய வேண்டும், கழுவேற்ற வேண்டும் என்றெல்லாம் ஆக்ரோஷத்துடன் பேசப்பட்டிருக்கின்றது. இந்த ஆவேச முயற்சிகளெல்லாம் எதற்காக? இவர் தமிழின விடுதலைக்காக உழக்கின்ற ஒரே ஒரு காரணத்திற்காகவே!
தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தானைத் தளபதியாக தந்தை செல்வா இவரை இனங்கண்டு பொறுப்பளித்தார். அந்த மகோன்னதமான பொறுப்பினை இம்மியும் வழுவாது முன்னெடுத்துச் செல்லும் தலைவரின் சில கருத்துரைகள், காலத்தின் தேவைகருதி இந்நூலாகத் தொகுக்கப்பட்டிருக்கின்றது. இவ்வேளையில் இதன் பின்னணிபற்றி சிறிது சொல்லவேண்டும்.
தமிழ் ஈழக் கொள்கை வலுவடைந்துவரும் இந்நாளில், அதில் ஆதாயம் தேடவென ஒரு குழுவினர், கோணங்கி நியாயங்களோடு புறப்பட்டுக் குட்டை குழப்பிவருகின்றனர். தென்னம்பிள்ளை காய்க்கும்வரை காத்திருந்தவர்கள், தந்தை செல்வாவைக் காற்சட்டைக் காந்தி என எழுதி மகிழ்ந்த தற்குறிகள்: நிமிஷத்திற்கு ஒன்றாய் எழுதுகிற அரசியல் முட்டாள்கள்: இரண்டு மேடைகளில் ஏறிவிட்டு தலைவரெனத் தம்மை நினைத்துக் கொள்ளுகின்ற வெம்பற் பிஞ்சுகள்: இவர்களின் சுயரூபத்தைத் தமிழ் மக்கள் இன்று இனங்கண்டு வருகின்றனர். இவர்களை - இவர்களின் தவறான வழிமார்க்கங்களை மக்கள் முன் அம்பலப்படுத்த வேண்டியது ஒரு அரசியல் தலைவனின் முக்கிய கடமை. இந்தக் கடமையில் தலைவர் ஈடுபட்டுச் சிந்திய முத்துக்களையே நீங்கள் கையில் வைத்திருக்கின்றீர்கள்.
இன வெறியர்கள் எத்தகைய ஆயுதங்களை அமிருக்கு எதிராகக் கையாண்டார்களோ, அதே ஆயுதத்தையே இந்தச் சிறு குழுவினர் வேறு உருவங்களில் கையாண்டு வருகின்றனர். இந்த ஒற்றுமையை மிக அவதானமாகத் தமிழ்ப் பேசும்மக்கள் ஆழமாகக் கூர்ந்து கவனிக்க வேண்டும். இனவாதத்தையே பிறவிக் குணமாகக்கொண்ட லேக்கவுஸ் பத்திரிகைகள், குணசேனாக் கம்பெனியாரின் இதழ்கள், இவற்றின் கடைசிச் சகோதரனான உபாலி நிறுவன வெளியீடுகள் என்பனவற்றில் அமிருக்கும், தமிழர் விடுதலைக் கூட்டணிக்கும் எதிராக எழுதப்படுகின்ற விஷமப் பிரச்சாரங்களின் அரைகுறை மொழிபெயர்ப்பு இதழாக ஒரு பாரம்பரிய சிறப்புமிக்க இதழினை மாற்றியிருக்கிறது இந்தக் கும்பல். இந்தத் தன்மையே இவர்கள் யார் என்பதை அம்பலப்படுத்தவில்லையா? இதனால்தான் எரியூட்டிலிருந்து இவர்கள் தப்பிக்கொண்டனரா? இந்தச் சீர்குலைவுவாதிகள் இன்னும் எத்தனை நாள் வேஷம் கலையாமலிருக்க முடியும்?
ஒருவர் சொல்கிறார் - பாராளுமன்றத்தைப் பகிஷ்கரிப்போம் என்று. தலைவர் தர்மலிங்கமோ அப்படி ஒருவரும் சொல்லவில்லை. கட்டாயம் தேர்தலுக்கு நிற்போம் என்கிறார். இவர்களின் நோக்கம் தான் என்ன? நிச்சயமாகப் பாராளுமன்றக் கதிரைகள் தான். இதை நாளடைவிலே நாங்கள் கண்டு சிரிக்கப் போகின்றோம்.
துள்ளி வருகுது வேல் பகையே சுற்றி நில்லாதே போ என்றான் பாரதி. கொள்கையென்ற வேல், குழப்பங்களை மாய்க்கும். இந்தத் தொகுப்பு – அமிரின் கொள்கை விளக்கும் உரைகள். கூர்நெடுவேலாகி தமிழர் பகையை மாய்க்கும் என்பது உறுதி.
- தொகுப்பாளர்.


கொள்கை விளக்கம்

தேர்தல் பகிஷ்கரிப்பால்
உரிமைகள் கிடைக்குமா?


தம்பிமார்கள் சிலர் தேர்தல் வருகிறது: வருகிறார்கள் என்ற துண்டுப் பிரசுரங்களை இங்கு விநியோகித்தார்கள் என அறிந்தேன். தேர்தல் எப்போது வரும், வராது என்று தம்பிமார்களுக்குத் தெரியாது. இப்படித்தான் நாம் கிராம யாத்திரை மேற்கொண்டபோது மாவட்ட அபிவிருத்திச் சபைத் தேர்தலுக்கு வருகிறார்கள் எனக் கூறினார்கள்.
சுற்றிச் சுற்றித் தேர்தல் வரும் அதற்காக நாம் மக்கள் மத்தியில் செல்லாமல் இருக்க முடியுமா?
தேர்தலைப் பகிஷ்கரித்தால் உரிமைகள் கிடைத்துவிடுமென தம்பிமார்கள் தப்புக் கணக்குப் போடுகிறார்கள். சுற்றிச் சுற்றிச் சுப்பற்றை கொல்லை என யாழ்ப்பாணத்தை மட்டும் பார்க்கக் கூடாது. கிழக்கு மாகாண தமிழ்மக்களின் நிலையை எண்ணிப் பார்க்கவேண்டும். ஏன் அங்கு செல்வான். அருகிலுள்ள மன்னார் வவுனியா முல்லைத்தீவு நிலைமையைப் பார்க்க வேண்டும்.
தேர்தலைப் பகிஷ்கரிக்கக் கூடாதென்பதற்கு ஒரேயொரு உதாரணத்தை மட்டம் இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.
கந்தளாய்க் குளத்தில் தமிழர்களான புராதன விவசாயிகள் தண்ணீர் பெற்று வந்தனர். 1953இல் 35 ஆயிரம் ஏக்கர்களுக்கு மட்டும் புராதன விவசாயிகளுக்குத் தண்ணீர் வழங்கவதென்றும் மிகுதித் தண்ணீர் குடியேற்ற வாசிகளுக்கு வழங்குவதென்றும் தீர்மானிக்கப்பட்டிருந்தது. கடைசியாக குடியேற்ற வாசிகள் தண்ணீர்பெற முன்னுரிமை அளிக்குமுகமாக புராதன விவசாயிகள் புறக்கணிக்கப்பட்டனர்.
இது தொடர்பாக தமிழ் விவசாயிகள் திருமலை எம்.பியிடம் புகார் செய்ய, நான் ஜனாதிபதியுடன் தொடர்பு கொள்ள, ஜனாதிபதி காணி அமைச்சருக்கு அறிவித்து தீர்வுகாணும்படி கண்டிப்பான உத்தரவு பிறப்பித்தார்.
ஜனாதிபதியின் கண்டிப்பான உத்தரவினால் காணியமைச்சர் இவ்விவகாரம் தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்த தனது காரில் எனது வீட்டிற்கே வந்துவிட்டார். உடன் மாநாடு கூட்டப்பட்டு இப்போது கந்தளாய்ப் பகுதியில் உள்ள புராதன குடியேற்ற விவசாயிகள் அனைவருக்கும் சமமான முறையில் தண்ணீர் வழங்க முடிவாகியுள்ளது. இதேபோலத்தான் தமிழ்மக்களுக்கென எம்பிக்கள் இல்லாவிட்டால் என்ன நடக்கும்?
தமிழ்மக்கள் என்றும் எப்போதும் சாதி, சமயமின்றி ஒன்றுபட்டு ஒரு இலட்சியத்தில் நின்று சோஷலிஸ சமதர்ம சமுதாயம் அமைக்கப் பாடுபடவேண்டும். ஒற்றுமைதான் கூட்டணி அரசியலில் ஒரு பெரும் சக்தியாகவும், வெளிநாடுகளில் மதிப்புள்ள இயக்கமாகவும் இருக்கக் காரணமாகும். இந்த ஒற்றுமையைக் கட்டிக்காக்க வேண்டும்.
பொதுத் தேர்தலைப் பகிஷ்கரிக்க வேண்டுமென்று சொல்லுகிறார்கள். அப்படி இவர்கள் சொல்வதுபோலக் கேட்டால், யாழ் மாவட்டத்துக்கு வெளியேயுள்ள சிங்கள மக்களும் முஸ்லிம் மக்களும் கணிசமாக வாழும் ஏழு தமிழ் மாவட்டங்களின் நிலை என்னாகும்? அந்தத் தமிழர்களின் நலனை சுதந்திரக் கட்சியும் ஐ.தே.க.வும் கவனிக்கட்டும் என்று விட்டுவிடுவதா? இதனையா ஈழ விடுதலை அணியென்று தங்களை அழைத்தக் கொள்ளும் கோவை மகேசனும், ஈழவேந்தனும், டாக்டர் தர்மலிங்கமும் விரும்புகிறார்கள்?
எமது இலட்சியம் தமிழீழமே. அதனை அடைவதற்கு எம்மிடமுள்ள ஒரே பலம் ஒற்றுமையே. இதை அறியாதவர்கள்பற்றிச் சில விஷயங்களைக் கூறவேண்டிய கட்டம் இன்று தோன்றியுள்ளது. எனவே இங்கு கூறிவைக்கிறேன்.
ஈழவேந்தன் என்ற விடுதலை வீரர் யார் தெரியுமா? தந்தை செல்வாவைப் பிரிந்து சுயாட்சிக் கழகம் நிறுவிய வி.நவரெத்தினம் என்பவரின் கட்சியில் 1966இல் சேர்ந்தவர்தான் இவர்.
இந்தக் கழகத்தில் சேர்ந்துகொண்டு தந்தை செல்வாவை காற்சட்டைக் காந்தி என்று கூறிவந்தவரும் இவர்தான். இப்படிக் கூறியதோடு அவர் நின்றுவிடவில்லை. சுயாட்சிக் கழகத்தின் பத்திரிகையான விடுதலையை விற்றும் வந்தவர்.
பின்னர் 1969ல் எம்முடன் சேர்ந்து உழைத்தார். எம்முடன் சேர்ந்தவர் தலைமைப் பீடத்திற்கு மாறாகச் செயற்பட்டார். இதனால் அவர் nளியேற்றப்பட்டார். இதனைப் பொறுக்க மாட்டாமல்த்தான் இப்பொழுது என்னைத் திட்டிவருகிறார்.
மத்திய வங்கியில் இவர் கடமையாற்றியவந்த காலத்தில், அகலமாபாத்தில் நடைபெற்ற இந்து மாநாட்டுக்குச் சென்றார். அங்கிருந்து திரும்பி வந்தபொழுது இவருக்கு எதிராக வங்கி குற்றம் சுமத்தியது. இதனால் இவரின் வேலைக்கே ஆபத்து நெருங்கிக் கொண்டது. அப்பொழுது என்னிடம் வந்து வேலை பறிபோனால் பென்ஷன் இல்லாமல் போய்விடும். எனவே நிதிமந்திரியுடன் பேசி பென்ஷனை எடுத்துத் தர உதவுங்கள் என்று என்னைக் கேட்டவர். நானும் நிதிமந்திரியுடன் இவர் பற்றிப் பேசி பென்ஷன் கிடைக்க வழி செய்தேன்.
தனது சொந்தப் பிரச்சனை தொடர்பாக அரசாங்க மந்திரியுடன் பேசச்சொன்ன இவர்தான் இன்று தமிழ்மக்களின் பிரச்சனை தொடர்பாக நாங்கள் அரசுடன் பேசுவதா? இது துரோகம் ஆகாதா? என்று திட்டித் தீர்க்கிறார். சொந்தத் தேவையைப்பற்றிப் பேசலாம். தமிழ் மக்களின் பிரச்சனைபற்றித்தான் பேசக் கூடாது. எப்படி நியாயம் கற்பிக்கிறார்கள் கேளுங்கள்.
சுதந்திரன் பத்திரிகையில் என்னால் சேர்க்கப்பட்டவர்தான் இந்தக் கோவை மகேசன். இன்று ஆசிரியராக இருந்துகொண்டு, தந்தை செல்வா வளர்த்த இயக்கத்தையே திட்டித் தீர்க்கிறார். காக்கை திட்டி மாடு சாவதில்லை. எனவே, அவர் நன்றாகத் திட்டட்டும். ஆனாலும் அவர் நினைப்பது ஒருபோதும் நடக்கப்போவதில்லை.
இந்தச்சமயத்தில் எனக்கு மற்றொரு விஷயமும் ஞாபகத்திற்கு வருகிறது.
தேர்தல் தொகுதியொன்றை ஈழவேந்தனுக்கு ஒதுக்கிக் கொடுத்திருந்தால் ஒன்றும் நடந்திருக்காது என்று பின்னர் ஒருதடவை சொன்னவரும் இவர்தான். எனவே, மக்கள் இத்தகைய சந்தர்ப்பவாதிகள்பற்றி உஷாராக இருக்கவேண்டும்.
டாக்டர் தர்மலிங்கம் அவர்கள் வைத்திய சேவையிலிருந்து 1960ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். அப்பொழுது தந்தை செல்வா அவர்கள் டாக்டர் தர்மலிங்கத்திடம் சென்று ஓய்வுபெற்றுவிட்டீர்களே: இனி எங்கள் இயக்கத்தில் சேர்ந்து உழைக்க வாருங்கள் என்று கேட்டார்.
அதற்கு அவர் இப்பொழுதுதான் தென்னங்கன்றுகளை நாட்டியுள்ளேன். அவை இன்னும் காய்க்கவில்லை. அவை காய்க்கத் தொடங்கியவுடன் இயக்கத்திற்குள் வந்துவிடுவேன் என்றார்.
இப்பொழுதுதான் அவர் காய்பறிக்கத் தொடங்கியிருக்கின்றார். நன்றாகப் பறிக்கட்டும்.
தேர்தலைப் பகிஷ்கரியுங்கள் என்று ஒருபுறம் கூறுகிறார்கள். ஆனால் அதேவேளை கடந்த பொதுத்தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கெதிராக விழுந்த வாக்குகள் எத்தனை என்பதை காவலூரிலுள்ள ஒரு அரசியல்வாதியின் வீட்டுக்குள் இருந்து இரகசியமாகக் கணக்கெடுக்கிறார்கள். ஏன் இந்தக் கணக்கெடுப்பு? பொதுமக்கள்தான் கொஞ்சம் விழிப்பாக இருக்கவேண்டும்.
யாழ் மாவட்ட நிலைவேறு: யாழ் மாவட்டத்திற்கு வெளியேயுள்ள தமிழ் மாவட்டங்களின் நிலை வேறு. இவர்கள் கூறுவதுபோல் தேர்தலைப் பகிகரித்தமால் பிறமாவட்டங்களில் வாழும் தமிழர்கள் நலனைப் பாதுகாப்பது யார்? ஐ.தே.க. வா? சு.க. வா? இதனையெல்லாம் அறியாமல் பேசுபவர்கள் பற்றித் தம்பிமாரும் கொஞ்சம் விழிப்பாக இருக்கவேண்டும்.

(மீதி பின் தொடரும்)

Wednesday, September 24, 2008

இசையாழி இசைக்கலைமாமணி மூளாய் அமரர் திருமதி.சாரதா பரஞ்சோதி

இசையுலகின் தாய் மடியில் அழியாத புகழ் படைத்த
இசையாழி இசைக்கலைமாமணி
மூளாய் அமரர் திருமதி.சாரதா பரஞ்சோதி
(ஆசிரியை சங்கானை சைவப்பிரகாச மகாவித்தியாலயம்,
முன்னாள் விரிவுரையாளர் இசைத்துறை யாழ்.பல்கலைக்கழகம்)

(வணக்கம் முகுந்தன் அண்ணா!
சாராதா அக்காவின் ஒராண்டு தினம் 25.09.2008 திகதி ஆகும் அதனை முன்னிட்டு றான் ஒர் கட்டுரை ஏழுதியுள்ளேன் அதனை தங்களின் கிருத்தியத்தில் வெளியிடுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
"நன்றி"
பார்த்தீபன்)

யாழ்ப்பாண வலிகாமம் மேற்கு, மூளாய் என்னும் ஞானபூமியில் வதிரன்புலோ சித்தி விநாயகர், முகத்துக்குமாரசுவாமி ஆலயங்கள் வீற்றிருந்து அருள் பாலித்துவரும், அண்ணனும் தம்பியும் வாழ்ந்தால் இப்படித்தான் வாழவேண்டும் என்று வழிகாட்டிய ஆலயங்களுக்கு அழகு பொழியும் திருவீதிகள், சித்திரத் தேர் கொண்டு அமையப் பெற்ற தலம். ஆலயங்களுக்கு அயலில் குடியமைத்து தனது பாரம்பரிய கலையான சங்கீத கலையினை தேர்ச்சி பெற்று, தான் மட்டும் இசையில் வளராமல் தன்னோடு இணைந்தவர்களையும் அரவணைத்து இசையினை வளர்த்த மேதை திருமதி சாரதா பரஞ்சோதி அவர்களின் ஓராண்டு நினைவு தினம் இன்றாகும்.
வதிரன்புலோ வானின் வாசலிலே வந்துதித்தாய்
பதிகம் பாடியெமை பரவசத்தில் ஆழ்த்தி நின்றாய்
எதிலுமே எளிமையை வாழ்-நாளில் கடைப்பிடித்தாய்
அதிகம் படித்தும் நீ அமைதியாயத்தானிருந்தாய்
நதியாகி இசைக்கடலில் நீ நடந்து வந்தாய்
நதியாகி நம்மிடத்தில் நீ நிறைந்து நின்றாய்
துதிபாடி தும்பிக்கையான் துணையென்று வாழ்ந்தாய்
முதியோரின் ஆசியோடு முத்தமிழும் வளர்த்தாய்
சுதி கலைந்து போனதென்றோ வீணையாக
திசைமாறிப் பறந்தாய்
சங்கீதத்தோடு என்றும் சங்கமித்து நின்றவள்
எங்கெங்கும் இசை முழங்கி ஏற்றங்கள் தந்தவள்
ஆசிரிய தொழிலிலே அடி பணிந்து நின்றவள்
நேசத்தை நேசித்த மாணவர் தம் நெஞ்சத்தில் நின்றவள்
வதிரன்புலோவானை வாழ்த்தியே வாழ்ந்தவள்
கதிர்வேலன் தன்னையுமே இசைமழையால் நனைத்தவள்
உதிர்கின்ற வார்த்தைகளால் உலகத்தை ஆண்டவள்
வரமாக மூளாய்க்கு கிடைத்த ஒரு புத்திரி
பரஞ்சோதி மைந்தன் தன் பாசத்துப் பத்தினி
மதிகமென முத்துக்கள் இரண்டிணை வைத்தாய்
சோதிமைந்தன் தன் பாதியான சாரதாவே
ஆற்று வெள்ளம் என பாடும் ஆற்றலும் பெற்றவள்
நேற்று வரை இருந்தாய் நீ இன்று எங்கு சென்று விட்டாய்.
சங்கீதக் கடல் நீ மறைந்து இன்றுடன் ஓராண்டு ஆனாலும் உனது வதிரகானம் எம் காதுகளில் ஒலித்தவண்ணம் உள்ளது, நீ என்றும் எங்களுடன் தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றாய் உன் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல மூளாய் வதிரன்புலோ சித்திவிநாயகப் முத்துக்குமாரசாமி பாதார விந்தங்களில் சமர்ப்பிக்கின்றோம்.

Sunday, September 21, 2008

தொல்லை தீர்ந்ததென்று போய்விடுவேன் - பகுதி 2

ஏற்கனவே இவர்களுக்கு யாரும் அதிகாரம் கொடுக்கவில்லை. தாமாக கையில் எடுத்தக் கொண்ட ஒரு உலோகத் துப்பாக்கியை வைத்துக்கொண்டு எத்தனை ஆரவாரம். அட்டகாசம். மிரட்டல். மிஞ்சினால் சுட்டுக் கொலை. யாரும் கேட்கத் தைரியமில்லை. கேட்டால் அவருக்கும் அதே கதி. அதோ கதி.
ஆனால் இன்று கடந்த 2004 பொதுத் தேர்தலில் மக்கள் வழங்கிய ஆணை என்ன?
ஏகப்பிரதிநிதிகள் - இதனால்தான் தமிழர் விடுதலைக் கூட்டணிக் கட்சிக்குள்ளே பிளவு ஏற்பட்டது. சரி மக்கள் தான் ஏற்றுக் கொண்டு விட்டார்களே! இனி அவர்கள் எது செய்தாலும் மக்கள் அதற்கு ஆதரவுதானே என்று எல்லோரும் பேசாமல் இருக்கலாம்தானே! அதுதானே மக்கள் ஆணையளித்துவிட்டார்களே!
சில பழைய சம்பவங்களை நான் மீட்டுப் பார்க்க வேண்டியவனாக இருக்கின்றேன்.
கோயிலுக்குக் கும்பிடப் போன துரையப்பாவும் சுட்டுக்கொலை. கிறிஸ்மஸ் ஆராதனைக்குச் சென்ற ஜோசப் பரராஜசிங்கமும் கொலை. புதுவருடத்தன்று கும்பிடப்போன மகேஸ்வரனும் கொலை.
அரசன் அன்று கொல்வான். தெய்வம் நின்று கொல்லும். ஆண்டவனை தரிசிக்கச் சென்றவர்களைக் கொன்றது நியாயமானதெனச் சொன்னாலும் - நீதி என்று ஒன்றிருக்கிறது அல்லவா? அது தன்கடமையைச் செய்ய நாம் இடம் தரத்தானே வேண்டும்.
தமது விடுதலைப் புலி உறுப்பினர்கள் 9 பேரை புளொட் கொலை செய்தமைக்கு ஒரு உண்மைகள் உறங்கவதில்லை கையேடு வெளியிட்டவர்கள், தங்களால் கொல்லப்பட்டவர்களுக்கு யாராவது ஏதாவது செய்தால் துரோகம்! இது எங்கு உருவாகிய சட்டம்?
தொழுகையிலே இருந்தவர்கள் கொல்லப்பட்டார்கள்? யாத்திரை செய்து மீண்டவர்கள் கொல்லப்பட்டார்கள்? ஏன்?
உண்ணாவிரதம் கூட்டணி செய்தால் குழப்பம். பல்கலைக் கழக மாணவன் விஜிதரனும் அவரது நண்பர்களும் செய்தால் கடத்திக் கொலை. அது எப்படி திலீபனும் அன்னை பூபதியும் உண்ணாவிரதமிருந்து வீரச்சாவடையலாம் இது எங்கு எழுதப்பட்ட நீதி?
கேட்டது தமிழீழம் வாங்கினது ஜப்பான் ஜீப், என்று நான் பார்த்தது தெல்லிப்பழை அரச வைத்தியசாலைச் சுவரில். இன்று ஏகப் பிரதிநிதிகள் என்று தமது பிரதிநிதிகள் வைத்திருக்கும் இன்டர்கூலர் எப்படி? அரசாங்கத்தடன் கூட்டணி பேசுவது துரோகம்! தாங்கள் பேசினால் அது எப்படி?
திம்புவில் பேச்சுவார்த்தை நடைபெறப் போகும்போதே வில்லுப்பாட்டிலும் தெருக் கூத்திலும் கொச்சைப்படுத்தினால் எப்படி பேச்சுவார்த்தை சரிவரும்.
இந்திய இராணுவம் அமைதிப்படையாக வரும்போது வரவேற்பு. பின்னர் ஏன் ஏற்பட்டது தகராறு? கொலைகளும் கற்பழிப்புக்களும் ஏற்படாமல் தடுத்திருக்கலாம் தானே!
ஒன்றுமேயறியாத யாழ்ப்பாணத்து அப்பாவி முஸ்லிம்கள் தமது உடமைகள் அனைத்தையும் விட்டுவிட்டு 24 மணிநேர அவகாசத்திலே வெளியேறினார்களே! என்ன தருமம் இது? யாரோ ஒருவன் ஏதோ குற்றம் எங்கோ செய்தமைக்காக (நான் இதுவரை உண்மை அறியவில்லை என்ன நடந்தது என்று) இவர்கள் எப்படித் தண்டிக்கப்படலாம்? யாருடைய நீதி?

இன்னும் எத்தனையோ இன்றைக்கு இவ்வளவும்தான். மீதி பின்னர்.

Saturday, September 20, 2008

தொல்லை தீர்ந்ததென்று போய்விடுவேன் - தருமர் ஆலால் நினைவுக் கூட்டத்தில் அமிர்

அமிர்தலிங்கம் சகாப்தம் நூலில் அத்தியாயம் 44ல் இந்தத் தலைப்பில் அமரர்கள் தருமலிங்கம் ஆலாலசுந்தரம் ஆகியோரின் படுகொலைகளுக்கு இரங்கல் தெரிவித்து சென்னையில் நடந்த கூட்டத்தில் பேசிய பேச்சு குறிப்பிடப் பட்டிருக்கிறது. அதில் ஓரிடத்தில்
கொலை புதுடில்லியிலும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. கேரளத்திலும், புதுடில்லியிலும் ஸ்ரீ ராஜிவ் காந்தி அவர்கள் ஆற்றிய உரை, இந்த இருவரது கொலைகளும் அவரது உள்ளத்தில் ஏற்படுத்தி உள்ள தாக்கத்தைக் காட்டுகிறது. சிலர் தமிழர் விடுதலைக் கூட்டணிலைப் பயப்படுத்த இக்கொலை செய்யப்பட்டதாகச் சொல்கிறார்கள். இதனைக் கண்டு நாம் பின்வாங்குவோம் என்று கூறினால் நாம் எப்பவோ ஒதுங்கியிருப்போம். 1972ஆம் ஆண்டு, சிங்கக் கொடியை எரித்த இளைஞர்களைத் துரத்தி வந்த பொலிஸ்காரனைத் தடுத்து சேட் பட்டனைக் கழற்றி என் நெஞ்சைக் காட்டி இயலுமானால் சுட்டுவிட்டுப் போ என்று தெரிவித்தவன் நான். நாங்கள், என்று விடுதலைக் களத்தில் இறங்கினோமோ அன்றே மரணம் வரும் என்றுதான் இறங்கினோம். எனக்கு ஏதும் நடந்தால் என் தொல்லை முடிந்தது என்று போய்விடுவேன். எனக்கு என்ன நட்டம்? தர்மலிங்கம் மரணித்துவிட்டார். அவருக்கு என்ன நட்டம்? ஆலாலசுந்தரத்துக்கு என்ன நட்டம்? மரணத்தைக் கண்டு அஞ்சுவார்கள் என்று எண்ணி எம்மை வெருட்ட நினைக்கக் கூடாது. அங்கே யாழ்ப்பாணத்தில் இலட்சியத்தைக் கடந்து வெறியாட்ட நிலை நடக்கிறது,என்றுள்ளது.
இதைக் குறிப்பிடுவதன் காரணம் இன்று மக்கள் அல்லோல கல்லப்பட்டுக்கொண்டிருக்கும் நிலைக்கும் அன்றைய அவரது பேச்சுக்கும் தீர்க்கதரிசனமான தொடர்பு இருப்பதைக் குறிப்பிடவே!
இது 1985ல் நடந்தது. இந்நிகழ்வுக்குப் பின்னர் 1988ல் செனட்டர் நடராசா (படுத்திருந்த வேளையில் சுடப்பட்டார்) வேல்முருகு மாஸ்டர் எஸ். சம்பந்தமூர்த்தி 1989ல் அ. அமிர்தலிங்கம் வி. யோகேஸ்வரன் 1990ல் சாம். தம்பிமுத்து திருமதி. கலா தம்பிமுத்து 1997ல் அ. தங்கத்துரை (இவருடன் தமிழறிஞர்கள் ஐவர்) 1998ல் திருமதி. சரோஜினி யோகேஸ்வரன் நமசிவாயம் பொன். சிவபாலன் (இவருடன் மாநகரசபை ஊழியர்கள் பலர்) பொன். மதிமுகராஜா 1999ல் கலாநிதி நீலன் திருச்செல்வம் 2000ல் நிமலன் சவுந்தரநாயகம் 2004ல் ஜோசப் பரராஜசிங்கம் அரியநாயகம் சந்திரநேரு 2006ல் ந. இரவிராஜ் சி.சிவமகாராசா போன்றோர் கொல்லப்பட்டது அனைத்துமே என்ன பலனைத் தந்தன. மக்களுக்காக இன்று துணிந்து குரல் கொடுப்பது யார்? மாற்றுக் கருத்தடையவர்களும் கொல்லப்படுகிறார்கள். படித்த சமூகத்தில் வாழும் சான்றோரையும் கொன்றுதீர்க்கிறார்கள்.
விடுதலை இதனால் வருமா? அறிவிலும் மக்களிடத்தில் துணிந்து கருமம் ஆற்றும் ஆற்றலும் அனுபவமும் கொண்ட பலர் இருந்த இடத்தை விட்டு தமதுயிரைக் காக்க வெளிநாடுகளுக்கு ஓடிக்கொண்டிருக்கிறார்கள். யாருக்கான போராட்டம் இப்போது நடைபெறுகிறது? சற்று நிதானமாக ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டிய ஆராயவேண்டிய விடயங்கள்!

ஓவ்வொரு தடவையும் நடைபெற்ற சம்பவங்களை சற்று விபரமாக இனிவரும் தொடர்களில் நான் அப்பாவிப் பொது மக்களின் நன்மைகருதி எழுதவிருக்கின்றேன்.
பத்திரிகைகள் அனைத்துமே ஒருபக்கச் சார்பாக அரசைச் சாடி அரசுக்கு யோசனைகள் சொல்கின்றன.
நான் ஏதோ அரசுக்கு ஆதரவாக கருத்து வெளியிடுகிறேன் என்ற எண்ணம் வாசகர்களுக்கு ஏற்படுமானால் அது ஒரு மிகமிக முட்டாள்தனமான எண்ணமெனவே நான் குறிப்பிடுவேன். இதற்காக நான் எவரையும் கோபிக்க முடியாது. அவரவர் அறிவு அவ்வளவுதான் என்பதை மாத்திரம் என்னால் சொல்ல முடியும்.
இதற்காக நான் சில விடயங்களை ஆதாரங்களுடன் சில மேற்கோள்கள் காட்டி எழுதவிழைகிறேன்.
வாசகர்கள் வெறுமனே கூப்பாடுபோடும் ஒரு தலைப்பட்சமான நபர்களுக்கோ அல்லது பத்திரிகைகளுக்கோ அல்லது பக்கச் சார்புடைய இணைய வலைத் தளங்கள் மற்றும் பதிவுகள் இவற்றுக்குச் செலவிடும் நேரத்தை நியாயமான நடந்த உண்மைகளை எதுவும் திரிக்காமல் எழுதும் என்னுடைய பதிவில் ஒரு சில நிமிடமாவது செலவிட்டுத் தங்கள் கருத்துக்களை பெயர் குறிப்பிட விரும்பாவிடினும் உள்ளத்தைத் தொட்டு மனச்சாட்சிப்படி தமது கருத்தக்களைத் தெரிவிக்க வேண்டும் எனத் தயவாக வேண்டிக் கொள்கின்றேன்.
நான் தவறாக ஏதாவது கருத்துக்களைத் தெரிவிக்கிறேன் அல்லது மேலதிக பொய்யான தகவலைத் திணிக்கின்றேன் எனக் கருதினால் உடனடியாக சுட்டிக் காட்டலாம். இந்த விடயத்தில் நான் கடந்த 01.09.2008 ஆந்திகதி எழுதிய வாசகர்களுக்கு ஓர் பணிவான வேண்டுகோள் என்பதில் எழுதிய சொற்களை மீள நினைவுபடுத்த விரும்புகிறேன். அதில் தமது கருத்துக்களை மற்றவர்கள் மனது புண்படாத விதத்தில் இடுவது நலமென நான் கருதுவதால் என்று குறிப்பிட்டுள்ளேன். நீங்கள் எப்டியானாலும் என்னை விமர்சிக்க நான் இந்தத் தொடரில் வாசகர்களுக்கு முழு உரிமையும் அளிக்கின்றேன். ஆனால் அதற்காக மோசமான வார்த்தைகளைப் பாவிக்காமலிருக்கவும் தயவுடன் வேண்டுகிறேன்.
காரணம் இன்று ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வீரர்களில் பலருக்கு (ஒரு சிலரது நடத்தைகளால் அனைத்து வீரர்களுக்கும் கெட்ட பெயர் ஏற்பட்டது ஒருபுறம் சில வேளைகளில் பொறுப்புமிக்கவர்களாலும் அப்படிப்பட்ட செய்கைகள் நடைபெற்ற சம்பவங்களும் நிறைய உண்டு) மக்களுடன் செவ்வையாகப் பேசவே தெரியாது என்பது எனது கருத்து. அது எந்த இயக்கமாக இருந்தாலும் சரி மேலிடத்திலுள்ளவர்கள் இதுபற்றி அலட்சியமாக இருப்பதே மிகவும் வேதனை. சில வேளை அவர்களும் அப்படியோ தெரியாது.


மீதி பின் தொடரும்

தொடர்ப் பதிவுகளை எழுதுவதற்குத் தாமதம் - மன்னிக்கவும்

வன்னி நிலப்பரப்பில் தற்போது நிலவும் பதட்டநிலைகளாலும், உதவி செய்யும் மனித உரிமை அமைப்புக்களும் ஏனைய நிறுவனங்களும் வெளியேறிய நிலையில் மக்களைப்பற்றியே எனது எண்ணங்கள் இருப்பதால் அவர்களது நிலை மிகவும் பாரதூரமான இடர்களை எதிர்நோக்குவதால் அதுபற்றி ஏதேனும் செய்ய முயற்சிகளை மேற்கொண்டிருக்கம் என்னால் தற்போது எனது கட்சி சார்ந்த பெரியோர்களின் நினைவுகளை எழுத முடியாமலுள்ளது. ஏனெனில் அவர்களது நினைவுகள் என் எண்ணத்தில் இப்போது வரமறுக்கம் காரணத்தால் அவர்களைப்பற்றி எழுதும் பணியை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளேன்.
சில தேவைகள் கருதி வேறு சில விபரங்கள் இணைக்கப்பட வேண்டிய அவசியம் தற்போது இருப்பதால் அவற்றை முதலில் பதிவிடலாம் என எண்ணியுள்ளேன். தயவுசெய்து வாசகர்கள் என்னை இதற்காக மன்னிக்கவும்.

Friday, September 19, 2008

ஈழத் தமிழர்களே ஒன்று பட்டுப் போராடுங்கள்! - கலைஞர் கண்ணீர் பகுதி 3

ஈழத் தமிழினமே!
ஒன்றுபட்டுப் போராடினால்
ஐந்துகோடித் தமிழர் ஆதரவுண்டு

கடந்த ஆண்டு இதே நாளில் வெலிக்கடை சிறைச் சாலையிலே கொல்லப்பட்ட தங்கத்துரையினுடைய தாயார் இங்கே அமர்ந்திருக்கிறார்கள். அந்த வீரமகனைப் பெற்ற அந்த அன்னையினுடைய திருவடிகளைத் தொட்டு வணங்கி, அந்த தியாகப் புதல்வனை பெற்ற அந்தத் தாயினுடைய பாதங்களுக்கு என் கண்ணீரை காணிக்கையாக்கி ஒரு சில கருத்துக்களை உங்கள் முன்னால் எடுத்து வைக்க நின்று கொண்டிருக்கின்றேன்.
கடந்த ஆண்டு இதே நாளில் நமக்குக் கிடைத்த செய்திகள் நம்முடைய செவிகளில் செந்தீயெனப் பாய்ந்தன என்பதையும், அதனைத் தொடர்ந்து தமிழகம் எவ்வாறு கொதித்து, குமுறி, கொந்தளித்து எழுந்தது என்ற நிகழ்ச்சிகளையும் எழுச்சிக் கவிஞராகத் திகழ்கின்ற காசி ஆனந்தன் அவர்கள் அடுக்கடுக்காக இங்கே எடுத்துக் காட்டினார்கள்.
இது கண்ணீர் நாளா? அல்லது செந்நீர் நாளா? என்பதை ஆராய்ந்து-செந்நீர் சிந்தவும் தயாராக இருக்கக் கூடிய ஒரு சூழ்நிலை வரவேண்டும் என்பதை நண்பர் லத்தீப் அவர்கள் மிக உணர்ச்சியோடு இங்கே குறிப்பிட்டார்கள்.
அகில இந்திய மட்டத்திலே எந்தக் கட்சியிலே இருந்தாலும் கூட, தமிழன் என்கிற உணர்வோடு மொழியோடு கலந்த தேசியம்தான் உண்மையான தேசியம், உருப்படியான தேசியம் என்பதை எடுத்துக்காட்டி, அந்த தமிழனுக்குக் குரல்கொடுக்க – தமிழகத்துக்கு குரல்கொடுக்க என்றென்றும் தயாராக இருப்பேன் என்பதை இன்றைக்கு ஜனதா கட்சியிலே இருந்தாலும் கூட, நீண்ட நெடுங்காலம் அண்ணா அவர்களுடைய அருகிலே இருந்த காரணத்தால் அந்த உணர்வு மங்காமல் இன்றைக்கும் இருக்கிறது என்பதை எடுத்துக்காட்டுகின்ற வகையிலே என்னுடைய நண்பர் செழியன் அவர்கள் ஆழமான அழுத்தந் திருத்தமான, ஆணித்தரமான கருத்துக்களை இங்கே எடுத்து வைத்திருக்கிறார்கள்.
தமிழ் ஈழம் பெறவும், செத்துக்கொண்டிருக்கிற தமிழின மக்களைக் காக்கவும் தாய்த் தமிழகத்தினுடைய கொடி, ஐ.நா மன்றத்தினுடைய வாயிற்புறத்திலே பறந்திட வேண்டும்: அன்றைக்குத்தான் தமிழனுக்கு நல்வாழ்வு கிடைக்கும் என்று திராவிடர் கழகத்தினுடைய கொள்கை பரப்புச் செயலாளர் செல்வேந்திரன் அவர்கள் இங்கே முரசு கொட்டினார்கள்.
தமிழ் ஈழத்திலே தங்களுடைய இன்னுயிரையும் தருவதற்குத் தயாராகப் போர்க்கொடி உயர்த்திப் பிடித்துக் கொண்டிருக்கிற வீராங்கனைகளும், வீரர்களும் இந்த மேடையிலே அமர்ந்திருக்கிறார்கள். அவர்களுடைய உரைகளையும் கேட்டீர்கள். நானும் இந்த மேடையிலே அமர்ந்து அவர்களுடைய உரைகளைக் கேட்டபோது, வௌ;வேறு கோணத்திலே அவர்களுடைய கருத்துக்கள் இங்கே வெளியிடப்பட்டன என்றாலும் கூட, அனைத்து கருத்துக்களும் ஒரே குறிக்கோளோடு தமிழ்ஈழம் காண வேண்டும். விடுதலை பெறவேண்டும் என்ற அந்த அடிப்படையிலே தான் ஒலித்தன என்பதை மறந்து விடக்கூடாது.

அன்றைக்கு விடுத்த வேண்டுகோள் இன்னும் அப்படியே உள்ளது!

கடந்த ஆண்டு இலங்கைச் சிறையிலே விடுதலை வீரர்கள் கொல்லப்பட்டு, ஆயிரக்கணக்கான தமிழ்க்குல மங்கையர் மானமிழந்து, மழலைகள் தூக்கி எறியப்பட்டு கொல்லப்பட்டு, தமிழர்களுடைய சொத்துக்கள் சூறையாடப்பட்டு, இலங்கை எரிகிறது என்ற நிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து இதே பெரியார் திடலில் இதே மன்றத்தில் வீரர்களாக – தியாகிகளாக மாண்ட தங்கத்துரை, குட்டிமணி, ஜெகன் மற்றும் ஐம்பதுக்கு மேற்பட்ட விடுதலை வீரர்களுடைய படங்களைத் திறந்து வைத்து நான் உரையாற்றியபொழுது சொன்னதை மீண்டும் நினைவுபடுத்த விரும்புகிறேன்.
இலங்கையிலே தமிழ் ஈழம் அமைவதற்காக பாடுபட்டுக் கொண்டிருக்கிற பணியாற்றிக் கொண்டிருக்கிற, உயிரைத் திரணமாக மதித்து போராடிக் கொண்டிருக்கிற வாலிபர்களே! தமிழ் இளைஞர்களே! உங்களுடைய உறுதியை நான் மெச்சுகிறேன், வாழ்த்துகிறேன், ஆனால் நீங்கள் ஒற்றுமையோடு செயல்பட எப்போது தொடங்கப் போகிறீர்கள்? அந்த தொடக்கத்தை உடனடியாக செயல்படுத்துங்கள் என்று கேட்டுக் கொண்டேன். அன்றைக்குக் கேட்டுக்கொண்ட அந்த வேண்டுகோள் அப்படியே இருக்கிறது.
இதைப் போலவே இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி அம்மையாரைப் பார்த்து, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலே கேட்டுக் கொண்டேன் - நீங்கள் இலங்கையிலே ஏற்பட்டுள்ள இந்தக் கொடுமையை அகற்ற இராணுவத்தை அனுப்பிட வேண்டும்: ராணுவத்திற்குப் பதிலாக வட்ட மேசை மாநாடு: பேச்சு வார்த்தை என்று நீங்கள் திட்டமிடுவீர்களேயானால், அந்த இடைவெளியை பயன்படுத்திக் கொண்டு காலங்கடத்தி மீண்டும் தொடர்ந்து தமிழின மக்களை இலங்கையிலே கொடுமைப்படுத்த, கொன்று குவிக்க ஜெயவர்த்தனே வலு தேடிக் கொள்வார். எனவே அதற்கு இடந்தராதீர்கள் என்று நான் கேட்டுக் கொண்டேன்.
இந்திரா காந்தி காதிலே ஊதிய சங்கும், இளம் தமிழ் விடுதலை வீரர்களுடைய காதிலே ஊதிய சங்கும் ஒன்றாகவே போய்விட்டது என்பதை மிகுந்த மனவேதனையோடு நான் இந்த மன்றத்திலே எடுத்துக் கூற கடமைப்பட்டிருக்கின்றேன்.
இங்கே நான் கொஞ்சம் பட்டவர்த்தனமாக பேச விரும்புகிறேன். உரிமையோடு பேச விரும்புகிறேன். மேடையில் இருக்கிற யாரும் தவறாகக் கருதமாட்டார்கள் என்கிற எண்ணத்தோடு பேச விரும்புகிறேன்.
ஒரு குடும்பத்திலே இருக்கிற மூத்தவனோ அல்லது பாசத்திற்குரியவனோ ஒன்றைச் சுட்டிக்காட்டி குற்றத்தை குற்றம் என்று கோடிட்டுக் காட்டினால் உண்மையிலே ரத்தபாசம் உள்ளவர்கள் எப்படி கோபித்துக் கொள்ள மாட்டீர்களோ அதைப் போல நீங்களும் கோபித்துக் கொள்ள மாட்டீர்கள் என்ற நம்பிக்கையோடு சொல்கிறேன்.
இங்கே நண்பர் கோவை மகேசன் பேசும் போது இலங்கையிலே அமைதியான முறையில் அமிர்தலிங்கம் அவர்களும், மற்றவர்களும் இப்போது நடத்துகின்ற போராட்டம் தேவையற்றது: அது பலனளிக்கக் கூடியதல்ல என்ற வகையில், அங்கேயுள்ள விடுதலை வீரர்கள் அல்லது புலிகள் குறுக்கிட்டு அவர்களைத் தூக்கி எறிந்து விட்டார்கள் என்று இங்கே சொன்னார்.
அதை நேரடியாக மறுக்காவிட்டாலும் திருமதி. மங்கையற்கரசி அமிர்தலிங்கம் அவர்கள் வன்முறை – அமைதியான முறை இவைகளுக்குள்ள வேறுபாடு, முரண்பாடு இவைகளையெல்லாம் விளக்கி – தாங்கள் எடுத்த நிலைக்கு எது காரணம் என்பதை விளக்க வேண்டிய அவசியம் அவர்களுக்கு ஏற்பட்டது.
என்னைப் பொறுத்தவரையில் திரு. அமிர்தலிங்கம் அவர்களுடைய தலைமையில் இயங்குகிற தமிழர்களுடைய ஐக்கிய கூட்டணியானாலும் அல்லது தீவிர இளைஞர்களுடைய – விடுதலைப் போராளிகளுடைய தலைமையில் இயங்குகிற ஐந்தாறு விடுதலை பேரியக்கங்களானாலும் - அவைகளை நான் வேறுபடுத்திப் பார்ப்பதில்லை.
உணர்வுபூர்வமாக எல்லோரும் ஒரே குறிக்கோளோடு தான் பாடுபடுகிறார்கள் என்பதில் எனக்குக் கிஞ்சிற்றும் ஐயமில்லை.
ஆனால் ஒற்றுமையாகச் செயற்படவில்லையே! தமிழீழம் சுதந்திரம் பெற்ற பிறகு ஒருவருக்கொருவர் யார் ஆட்சிப் பொறுப்பில் அமர்வது என்பதில் வேண்டுமானால் போட்டிபோட்டுக் கொள்ளுங்கள், யார் விடுதலையைப் பெறுவது என்பதில் போட்டி இருந்தால் கூட வரவேற்கலாம். ஆனால் விடுதலை பெறுகிற நேரத்தில் இவன் உயிரோடு இருக்கலாமா என்று எண்ணுகின்ற அளவிற்கு உங்கள் உள்ளத்திலே வெறுப்புக் கோட்டை கட்டப்பட்டு விடுமேயானால் எங்களிடம் நீங்கள் உதவியை எதிர்பார்க்கிற நேரத்திலே நாங்கள் குழப்பத்திற்காளாகி உங்கள் முன்னால் நிற்கிறோம் என்பதை தயவுசெய்து நீங்கள் மறந்துவிடக் கூடாது.
அரும்பாடுபட்டு நான் பலமுறை சந்தித்து சந்தித்து இந்த விடுதலை இயக்கங்களின் இளம் தோழர்களிடம் பேசி, பேசி ஒருவேளை என்னுடைய முயற்சியினாலோ அல்லது என்னைப் போல வேறு பலருடைய முயற்சியினாலோ – எனக்குத் தெரியாது: அல்லது அந்த இளைஞர்களே மனப்பக்குவம்பெற்று அந்த முடிவுக்கு வந்தார்களோ தெரியாது: அந்த இயக்கங்களில் ரெலோ(வுநுடுழு) என்கிற ஸ்ரீசபாரத்தினம் தலைமையில் இயங்குகிற இயக்கமும், பாலகுமார் தலைமையிலே இயங்குகிற (நுசுழுளு) என்கிற இயக்கமும், பத்மநாபா தலைமையிலே இயங்குகிற (நுPசுடுகு) இயக்கமும் - இந்த மூன்று இயக்கங்களும் ஓரணியில் திரண்டு – அவர்கள் தனித்தன்மை வாய்ந்தவர்களாக இருந்தாலும் ஒரு கூட்டணியாக உருப்பெற்று – தமிழ் ஈழத்தை முழுமையான சுதந்திர நாடாக ஆக்குவது – உழைக்கும் மக்களைக் கொண்ட அரசை உருவாக்குவது – முதலாளிகளுக்குச் சொந்தமான வங்கிகளை, நிறுவனங்களை, தொழிலாள விவசாய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ்கொண்டு வருவது என்கிற ஒரு சமதர்ம சமதத்துவ நோக்கோடு சுதந்திர தமிழ் ஈழத்தைப் பெற்றெடுக்க வேண்டும்: ஈன்றெடுக்க வேண்டும் என்ற நிலையிலே இன்றைக்கு ஒன்றுகூடியிருக்கிறார்கள்.
இன்னும் இரண்டு பேரணிகள் இருக்கின்றன. ஒன்று முகுந்தன் அவர்கள் தலைமையிலே இயங்குகிற தமிழ் ஈழ மக்கள் விடுதலைக் கழகம் (Pடுழுவுநு) இன்னொன்று பிரபாகரன் அவர்கள் தலைமையிலே இயங்குகிற விடுதலைப் புலிகள் இயக்கம் (டுவுவுநு) அந்த இரண்டு இயக்கங்களும் இந்த மூன்று இயக்கங்களோடு இணைந்து – அல்லது அவர்கள் விரும்பினால் அந்த இரண்டோடு இந்த மூன்று இயக்கங்களும் இணைந்து – யார் யாரோடு இணைவது என்று பார்க்காமல் இந்த ஐந்து பெரும் இயக்கங்களும் ஒன்றாக இணைய வேண்டும் என்பது தான் பிரச்சினை. அது என்னுடைய கோரிக்கை! ஆசை! அவா! அது நிறைவேற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
நீங்கள் கேட்கலாம், கருணாநிதி அவர்களே! தமிழகத்திலே உங்களுக்கும் எம்.ஜி.ஆருக்கும் போட்டியில்லையா? என்று கேட்கலாம்.
நான் இலங்கைத் தமிழர்களின் நல்வாழ்வை மையமாக வைத்துச் சொல்லுவேன்.அந்தப் போட்டிகூட எனக்கும் எம்.ஜி.ஆருக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு உதவுவதிலே யார் முந்தி என்ற போட்டி எங்களுக்குள்ளே இருக்கலாமே தவிர இலங்கைத் தமிழர்கள் வீழ்ந்துவிட வேண்டும் என்ற நிலையிலே போட்டி இல்லை என்பதை இன்றைக்கு நான் பகிரங்கமாகப் பிரகடனப் படுத்துகிறேன்.
ஒருவேளை இதில் எம்.ஜி.ஆரை முந்த விடுவதா என்று நான் கருதியிருந்தால் இன்று முதல் அந்த எண்ணத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்கிறேன்.
அதைப் போல கருணாநிதி என்னை மிஞ்சி விடுவதா? என்று
எம்.ஜி.ஆர் எண்ணியிருப்பாரேயானால் அவரும் அந்த எண்ணத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று அவரை நான் யாசித்துக் கொள்கிறேன்.

ஒற்றுமையோடு செயல்படுங்கள்

எனவே தமிழகத்தில் இருக்கின்ற எல்லா தமிழர்களின் நலத்திலே அக்கறை உள்ள கட்சிகளின் சார்பாக, தமிழ் இளைஞர்களையும், தமிழ் விடுதலை இயக்கத்தை நடத்துகின்ற ஈழத்திலே இருக்கின்ற அமிர்தலிங்கம் போன்ற பெரியவர்களையும் நான் இறைஞ்சிக் கேட்டுக் கொள்வதெல்லாம் - வணங்கிக் கேட்டுக் கொள்வதெல்லாம் - பணிந்து கேட்டுக்கொள்வதெல்லாம் ஒற்றுமையாக இருக்கக் கற்றுக் கொள்ளுங்கள்! ஓற்றுமையோடு செயல்படுங்கள்! அப்படிச் செயற்படுவீர்களேயானால் ஐந்து கோடித் தமிழ் மக்களும் உங்கள் பின்னால் வருவதற்குத் தயாராக இருக்கிறார்கள் என்பதுதான்!
மங்கையற்கரசி அம்மையார் இங்கே பேசும்போது காலைப் பத்திரிகைகளைப் பார்த்துத் திகைத்துப் போனேன் என்று குறிப்பிட்டார்கள்.
நானும் கூட திகைக்கவில்லை. ஆத்திரப்பட்டேன். ஆத்திரப்பட்டது யாரிடம் என்றால் முரசொலி துணையாசிரியர் மீது!
அவர்களை உடனடியாக அழைத்து இந்தச் செய்தியை இவ்வளவு பெரிய தலைப்பு போட்டு ஏன் போட்டீர்கள்? செய்தியைப் படிக்கும் போது ஆயுதத்தினால்தான் விடுதலை பெறமுடியும் எனத் தலைப்புப் போட்டிருந்தாலும் கூட முழுச் செய்தியைப் படிக்கிற நேரத்தில் இலங்கையிலே விடுதலை கோருகின்ற பெரியவர்களுக்கம் - இளைஞர்களுக்கும் இடையிலே ஒரு பெரிய கலகம் மூண்டுவிட்டதைப் போல அல்லவா செய்தி அமைந்து விட்டது! இதை ஏன் போட்டீர்கள் என்று கேட்ட போது, நாங்கள் போட்ட செய்தியாக அதை வெளியிடவில்லையே! யு.என்.ஐ நிறுவனம் கொடுத்த செய்தியை அல்லவா வெளியிட்டிருக்கிறோம் என்று சொன்னார்கள்.

கருநாக எண்ணக்காரர்களுக்கு கடுகளவும் இடம் தரலாகாது!

நான் அவர்களிடத்தில் செய்திகளை மாத்திரம் போடுகின்ற பத்திரிகையாக முரசொலி இருந்தால் நீங்கள் அப்படிப் போடலாம். ஆனால் நம்முடைய சிந்தையிலே இலங்கைத் தமிழர்களின் பிரச்சினையும் குடிகொண்டிருக்கின்ற காரணத்தினால் நீங்கள் அந்தச் செய்தியை அப்படிப் போட்டிருக்கக் கூடாது என்று சொல்லி வெளியூருக்குப் போகின்ற முரசொலி பதிப்பில் இதை மாற்றி, தலைப்பில் வேண்டுமானால் வேகம் இருக்கலாம். ஆனால் உள்ளே இருக்கின்ற செய்தியில் விடுதலைப் போராளிகளிடையே மனக்கசப்பு இருப்பது போன்ற செய்தியை வெளியிடாதீர்கள் என்று
கூறிவிட்டுத்தான் இங்கே வந்தேன்.
ஏன் இதைச் சொல்லுகிறேன் என்றால் தமிழீழ விடுதலைக்காகப் பாடுபட்டுக் கொண்டிருப்பவர்களிடத்திலே பகை தோன்றாதா அவர்களது பாசறையிலே பிளவு ஏற்படாதா? அவர்கள் ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டு நிற்க மாட்டார்களா? என்றெல்லாம் கருதுகின்ற கருநாக எண்ணமுடையவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு இப்படிப்பட்ட செய்தி செந்தேனாக இனிக்கின்றது: செங்கரும்பாகச் சுவைக்கின்றது.
எனவேதான் அந்தச் செய்திகளை வைத்துக்கொண்டு அவர்கள் விளையாடுகிறார்கள்.

இருதரப்பையும் ஆதரிக்கின்றேன்!

ஒரு நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் அமைதி வழியில் போராட்டத்தை நடத்துகின்றவர்களும் உண்டு. அதே நேரத்தில் தீவிரமான முறையிலே போராட்டத்தை நடத்துகின்றவர்களும் உண்டு.
நீ எந்தப் பக்கம்? என்று கேட்டால், நான் இரண்டு பக்கமும்தான்! இதுதான் இலங்கைத் தமிழர்களைப் பொறுத்தவரையில் என்னுடைய நிலை!
அவர்கள் தாங்கள் விடுதலைக்காக மேற்கொண்டிருக்கின்ற அமைதி வழியையும் நான் வரவேற்கின்றேன். அதே நேரத்தில் வன்முறை வழியை தேர்ந்தெடுத்தார்கள் என்றால் அதற்கு அவர்கள் காரணமல்ல! வன்முறையைத் தேர்ந்தெடுப்பதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியில்லாமல் போய் விட்டது. ஆகவே தேர்ந்தெடுத்தார்கள். எனவே அதையும் நான் வரவேற்கின்றேன். இந்தியத் துணைக் கண்டத்தின் விடுதலைக்காக உத்தமர் காந்தியடிகள் அகிம்சா வழியை மேற்கொண்டார். அதே நேரத்திலே பகத்சிங் பலாத்கார வழியை மேற்கொண்டார். நேத்தாஜி, வன்முறைதான் - ஆயுதப் புரட்சிதான் உகந்தமுறை என்று அறைகூவல் விடுத்தார்.
தீவிரவாத இளைஞர்களுக்குச் சொல்லிக் கொள்கிறேன். இலங்கைத் தமிழர்கள் விடுதலை பெற ஆயுதம் தான் பரிகாரம் என்று எண்ணிக் கொண்டிருக்கின்ற – நம்பிக் கொண்டிருக்கின்ற என்னுடைய அன்புக்குரிய தம்பிமார்களுக்கு – உடன்பிறப்புகளுக்கு சொல்லிக் கொள்கிறேன். ஒன்றை மறந்து விடாதீர்கள்! இன்றைக்கு வந்த செய்தி உண்மையாக இருக்குமானால் - கோவை மகேசன் அது உண்மைதான் என்பதைப்போல: அது நடந்திருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டதைப் போல: அந்தச் செய்தி உண்மையாக இருக்குமானால் சிறிது சிந்தித்துப் பாருங்கள்.
இந்திய நாட்டின் விடுதலைக்காக வெள்ளையனே வெளியேறு என்று உத்தமர் காந்தியடிகள் உண்ணாவிரதம் இருந்த போதுவன்முறையில் நம்பிக்கை கொண்ட தேசத் தலைவர்கள் யாரும் உண்ணாவிரதத்தால் இந்தியா விடுதலை பெறாது என்று சொல்லியிருப்பார்கள் - ஆனால் காந்தியடிகள் உண்ணாவிரதம் இருந்த இடத்திற்குச் சென்று கலகம் விளைவித்திருக்க மாட்டார்கள். அது இந்திய நாட்டின் சரித்திரம்!
நான் இதைச் சொல்வது சில பேருக்குக் கசப்பாக இருக்கலாம். சிலபேருக்கு விரும்பத்தக்க ஒன்றாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் எங்களுக்கத் தோன்றுவதெல்லாம் தமிழ்நாட்டு மக்களுக்குத் தோன்றுவதெல்லாம் விடுதலைக்காகப் பாடுபடுகிநார்கள் சரி! நாமும் அவர்களுக்காக நம்முடைய நினைவையெல்லாம் தேக்கி வைத்திருக்கிறோம். இல்லையென்று யாரும் கூறமுடியாது. அவர்களுக்காக நாம் ஏற்றுக் கொண்டிருக்கின்ற இன்னல் சாதாரணமானதல்ல. எத்தனையோ கஷ்டங்களை அனுபவித்திருக்கின்றோம். இந்தத் தாய்த் தமிழகத்திலே உள்ள இளைஞர்கள் பலர் தீக்குளித்து மாண்டிருக்கின்றார்கள். இலங்கைத் தீவினிலே தமிழனின் கதி இப்படியாகிவிட்டதே என்று!
இவ்வளவும் தமிழ் நாட்டின் சார்பாக இலங்கையில் வாடிக்கொண்டிருக்கின்ற மக்களுக்காக காட்டப்படுகின்ற ஆதரவாக இருக்கின்ற நிலையில், நாங்கள் மனம் வெதும்புகின்ற அளவுக்கு இவ்வளவுதானா? இவர்களிடம் ஈழத் தமிழகத்தை ஒப்படைத்தால் எதிர்காலத்தில் என்ன செய்யப் போகிறார்கள்? என்கின்ற அவநம்பிக்கையை எங்களுக்கு உருவாக்குவார்களேயானால் நிச்சயமாக அப்படி ஒரு ஈழத்தமிழகம் வேண்டுமா? என்று சலிப்போடு கேட்கின்ற நிலை எங்களுக்கு ஏற்பட்டுவிடும்.
எங்கள் பின்னால் யார் நிற்கிறார்கள் என்று கவலையில்லை. நாங்கள் யாரையும் எதிர்பார்க்கவில்லை என்றெல்லாம் இங்கு பேசிய காசி ஆனந்தன் குறிப்பிட்டார்.
அப்படிச் சொன்னாலும் கூட யார் நிற்கிறார்கள் என்ற கவலை அவருக்கு இருப்பது எனக்குத் தெரியும். யாரையும் எதிர்பார்க்கவில்லை என்று சொன்னாலும் கூட அவர் யாரை எதிர்பார்க்கிறார் என்பதும் புரியும்.
எனவே எங்களுக்குக் கவலையில்லை – யாரையும் எதிர்பார்க்கவில்லை என்று அவர் சொன்னது ஒரு போர் வீரன், களத்திலே கையிலே கட்கம் ஏந்தி செல்லுகிற நேரத்தில் தனக்காக வாதாட ஆதரவு தர யார் வருகிறார்கள் என்றெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தால் அவன் அந்தப் போரில் வெற்றியடைய முடியாது.
வேலும் வாளும் உண்டாக்கிய இரத்தக் கடலில் பயங்கர மூச்சு விட்டுக்கொண்டு மிதந்து செல்லும் வீரர்களின் மண்டை ஓடுகளை முத்தமிட்டபடி, பயணம் நடத்தும் முறிந்த எலும்புகளையும், அறுந்த நரம்புத் துகள்களையும் கண்டு முகாரிபாடாமல், முதுகு காட்டாமல், முகம் சுளிக்காமல் முன்னேறு நீ! முன்னேறு நீ! என்று முரசொலித்து, எஞ்சிய வீரர்களை நெஞ்சுரம் கொள்ளச் செய்து, எந்த நேரத்தில், எந்தப் பக்கமிருந்து ஈட்டி பாயுமோ எதிரியின் கணைபாயுமோ என்று சாவு முகட்டிலே வினாடிகளைக் கணக்குப் பார்ப்பது வீரர்களுக்கு அழகில்லை என்ற போர்க்களத்து அரிச்சுவடியைத் தவறியும் மறந்து விடாமல் மரணம், மாவீரனுக்குத் தரப்படும் மலர்ச்செண்டு மங்கையின் இதழைவிடச் சுவையானது என்ற மனோபலத்தோடு படையை நடத்திச் செல்பவனே பராக்கிரமசாலி! பைந்தமிழன்!
எனவே களத்தில் நிற்கும் வீரன் எதற்கும் கவலைப்படக் கூடாது என்ற கருத்திலே சொல்லியிருப்பாரேயானால் கவிஞர் காசி ஆனந்தன் கருத்தை நான் ஏற்றுக் கொள்கிறேன்.
ஆனால் தாய்த் தமிழர்கள் ஐந்துகோடி பேருடைய ஆதரவு எங்களுக்குத் தேவையில்லையென அவர் கூறியிருக்க மாட்டார். இந்த ஆதரவைப் பற்றி எங்களுக்குக் கவலையில்லை என நிச்சயமாக அவர் சொல்லியிருக்க மாட்டார்.
இந்த ஆதரவு தேவையென்றால், எங்களது ஆதரவுக்காக நீங்கள் கவலைப்படுவது உண்மையானால் நான் உங்களுக்கு உறுதியாகவும் இறுதியாகவும் சொல்லுகிறேன்.
நீங்கள் ஒற்றுமையாக இருந்தால், எங்களது அத்தனை பேருடைய ஒத்துழைப்பும் - ஐந்து கோடி தமிழர்களின் ஒத்துழைப்பும் உங்களுக்கு நிச்சயமாகக் கிடைக்கும் - நிச்சயமாகக் கிடைக்கும் என்று கண்ணீரால் எழுதி கையெழுத்திட்டுத் தருகிறேன்.

Thursday, September 18, 2008

யாராவது முன்வருவீர்களா?

தமிழர்களுக்கு எதிரான அரசின் தற்போதைய செய்கைகளுக்கு எதிராக ஒட்டுமொத்த இலங்கையரும் ஐக்கிய நாடுகள் சபைக்கு கையெழுத்திட்டு ஒரு கடிதத்தை அனுப்பிவைக்க பொது மக்களில் ஈடுபாடுடைய ஒருவராவது இலங்கையில் (நான் தற்போது வெளிநாட்டில் இருப்பதால்) யாராவது ஒருவர் முன்வந்து உடனடியாக முயற்சி எடுக்கவேண்டும் என பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் சார்பாகவும் இலங்கையில் சமாதானத்தை விரும்பும் ஒருவன் என்ற வகையிலும் மிகவும் குறிப்பாக மனிதன் என்ற ரீதியில் தாழ்மையாக வேண்டுகிறேன்.
ஐக்கிய நாடுகள் சபையும் வெளியேறிய காரணத்தால் எமக்கு ஒரு சாதகமான முடிவை வெளிப்படுத்த சந்தர்ப்பம் தானாக வரும் வேளையில் தற்போது புதிதாக ஒரு செய்தியைக் கேள்விப்படும் பொழுது எமக்கு நெஞ்சில் புளிவாரத்தது போன்ற நிலை ஏற்படுகிறது. இரசாயன ஆயுதங்கள் பாவிப்பது பற்றிய இச்செய்தி உண்மையாக இருந்தால் எமக்குப் பாதகமானதாயிருக்கும். எது எப்படியாயிருந்தாலும் தற்போது எமது மக்களுக்கு நிவாரணத்தையும் பாதுகாப்பையும் வழங்க எவருமில்லாத காரணத்தால் உடனடியாக இந்த வேண்டுதலை சகல நாடுகளின் தூதுவராலயங்களிடமும் சர்வதேச மன்னிப்புச் சபை ஐ.நா.சபையின் இலங்கைத் தூதுவராலயம் போன்ற அமைப்புக்களுக்கும் அனுப்பி திக்கற்ற எமது மக்களுக்கு விடிவு ஏற்படுத்தித் தரவேண்டும் என கோரிக்கையை எழுதி கையெழுத்திட்டு சமர்ப்பிக்க உடன் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இலங்கைத் தமிழர்களைக் காப்பாற்றுங்கள்! அமிர்தலிங்கம் அவர்கள் அன்று கோரியதுபோல இன்று யாராவது தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்க முன்வரவேண்டும்.

புள்ளி விபரங்களின்படி அன்று யாழ்ப்பாணத்தைக் கைப்பற்ற இலங்கை அரசு தாக்குதல்களை மேற்கொண்டபோது அமரர் அமிர்தலிங்கம் அவர்கள் கீழ்க்கண்ட கடிதத்தைத் தயாரித்து அனுப்பியது வரலாற்றுச் சிறப்புடையது. அதன் பின்னரே இந்திய அரசு விமானம் மூலம் உணவுப் பொருட்களைப் போட்டு எமது நாட்டுப் பிரச்சனையில் அதீத ஈடுபாடு காட்டி இலங்கை இந்திய ஒப்பந்தம் ஏற்பட்டது.
இன்றைய மிகவும் ஒரு இக்கட்டான நிலையில் யார் தமிழர்களுக்காக குரல் கொடுக்க இருக்கிறார்கள் என்பதே கேள்வி?
அவர் அன்று எழுதிய கடிதத்தை இத்துடன் இணைத்துள்ளேன்.

The Tamil People in Sri Lanka presently face the most critical period in their long history.
The only silver lining in this catastrophic situation, ist he hope that they may yet be redeemed from the brutal repression they face through the just efforts of India. It is in this hope that we write to you.

Besides, Shri Tiwari, the Minister of Foreign Affairs has stated in Parliament that he will meet with you soon, to discuss the Sri Lankan ethnic problem, and to make the discussion full and meaningful we wish to place before you the relevant facts.

India first expressed concern fort he oppressed Tamil People, When Shri P V Narasimha Rao, the then Minister for External Affairs was sent to Colombo by the late Prime Minister Shrimathi Indira Gandhi on the 29th JUly 1983, at the height of the anti-Tamil racial pogrom of June-July 1983.

August 1983 witnessed the offer and acceptance of India’s good offices, and the commencement of the negotiatory process, to find a final solution to the Tamil ethnic problem with India’s good offices.

The period between August and December 1983 witnessed the evolution after concerted efforts of certain written proposals later entitled Annexure ஷC“, as a basis fort he commencement of negotiations, at the All Partes Conference convened by the Sri Lankan Government for 10th January.

The TULF representing the Tamils, attended the All Parties Conference, on the basis of the solemn assurance given by President Jayawardene to Shrimathi Indira Gandhi at New Delhi in November 1988, that he would, at the All Parties Conference, extend his fullest support to the said proposals, and also not obstruct any suggestions made by the TULF at the conference, fort he creation of a single Tamil Lingustic Unit.

1984 witnessed the prolonging of the conference throughout the whole year, the total retraction by the Sri Lankan governemnt from even the most basis elements in the said proposals, and ultimately ist total abandonment.

1985 witnessed the Tamils being offered nothing more in substance, than what was offered in 1984, which the TULF had already declared to be totally inadequate. Though in 1985, through the intense efforts of the Indian Government, the Tamil militant organisations, albeit with genuine misgivings, participated in the negotiatory process at Thimpu, so as to ensure the durability of any peace package, the Sri Lankan Government continued to be intransigent, demonstrating its total lack of sincerity in the evolution of a just and peaceful political solution.

In a situation of impasse, the TULF submitted to the Indian Government in December 1985, a detailed set of proposals based substantially on the pattern of a state in India. The Sri Lankan Government’s response in January 1986, was a rude rejection of the said proposals.

Consequent to further Indian mediatory efforts with ministerial participation, in April – May 1986, and based on certain proposals that emanated the TULF again held detailed negotiations with President Jeyawardene and his Ministries in July and August 1986. Despite a measure of progress, the negotiations remained inconclusive in vital areas.

In September – October 1986, the TULF delivered to the Indian Government, ist full response, based on the negotiations held in Colombo in July and August, to certain draft formulations, received from the Sri Lankan Government. The draft formulations received from the Sri Lankan Government revealed retractions even from positions accepted in Colombo, and discrepancies between accepted positions and new formulations. The response of the TULF outland the minimum Tamil position.

In pursuance of India’s efforts, Prime Minister Rajiv Gandhi held several rounds of discussions with President Jeyewardene at Bangalore in November 1986. Both prior to, and after the meeting between Prime Minister Ragiv Gandhi and President Jeyewardene, an Indian Ministerial team visited Colombo and held discussions with President Jeyewardene and his Ministers. At the final discussions held with President Jeyewardene on 19th December, certain proposals emerged.

Almost immediately after the return of the Ministerial delegation to New Delhi, President Jayawardene resiled from the said proposals. India has since sought an unequivocal commitment from the Sri Lankan Government to the said proposals, as ஷa basis and starting point“ for further negotiations.

Despite the most strenuous efforts of the Indian Government, with which efforts, the TULF has always actively co-operated, the Sri Lankan Government, while maintaining a pretence of negotiating, has procrastinated, evaded and repeatedly reneged on accepted positions, so as to gain time, and utilise the time so gained to prepare itself to deal with the Tamils militarily.

While the tortuous process of negotiations have continued during the past three and a half years, the Sri Lankan Government has since the formations of the Ministry of National Security under Minister Lalith Athulathmudali in March 1984, unleashed unbridled state terror and violence against the Tamil People in both the Northern and Eastern Provinces. In support of ist policies of State repression of the Tamil People, the Sri Lankan Government has inducted Israeli and Pakistani Military personnel, and mercenaries from the United Kingdom and the United States in addition to the purchase of an assortment of sophisticated military hardware, including Helicopter Gun Ships, Bomber Planes and Naval Gun-Boats, from various sources mainly South Africa.

In brief, the Sri Lankan Government is waging a war against the Tamil people of the Northern and Eastern Provinces. The victims of this aggression have mainly been the non-combatant Tamil civilian population.

While the death toll in the anti-tamil racial pogrom of June/July 1983, which propted India’s diplomatic intervention was estimated to be in the region of three thousand, (3000), the number of non-combatant Tamil civilians killed since the formation of the Ministry of National Security and up to now, on the basis of a realistic assessment, is in the region of eight to nine Thousand ( 8000 to 9000), Since June / July 1983, more than eleven thousand (11,000) innocent Tamil civilians, men, women and children, have been mercilessly massacred in Sri Lanka.

While in the period June/July 1983, Tamil civilians were massacred by Sinhala thugs and hoodlums, in the period since the formation of the Ministry of National Security, Tamil Civilians have been killed by the racially constituted Armed Forces, and Para-military forces specially trained and armed by the Government. Aerial and Naval attacks have been persistently carried out against civilian targets. Thickly populated habitations, have been shelled through heavy artillery from the Army Camps and Naval Gun Boats, and strafed and bombed from the air.

Over Two hundred (200) Tamil villages in the Northern and Eastern Provinces have been devastated and destroyed. More than Twenty five thousand houses and other buildings owned by Tamils have been destroyed in the said two provinces. In every one of the ravaged areas, Hindu Temples, and in some areas Churches, have either been destroyed or desecrated.

No less than Five hundred thousand ( 500 000) Tamils have been rendered homeless and destitute. In many areas, Tamil civilians attempting to return to their villages have either been killed or driven out.

Foreign military personnel and mercenaries have participated in these attacks along with the Sri Lankan Armed Forces, and Para-military personnel.

It is in this background and shortly after President Jayawardene resiled from the proposals of 19th December that the Sri Lankan Government imposed, in early January 1987, an economic and communications blockade of the Jaffna peninsula. The communications blockade has since been extended to other districts in the Northern Province.

Meanwhile the military operations continued in the Northern and Eastern Provinces. In late January 1987, the Sri Lankan Armed Forces without any cause, suddenly launched major military offensives including Aerial attacks in the Batticaloa and Trinomalee districts in the Eastern Province killing over two hundred ( 200) Tamil civilians, and destroying substantial civilian property. This was followed by further major military offencives including Naval and Aerial attacks in early February 1987, in the mainland of the Northern Province, in the Mannar, Kilinochchi and Mullaitheevu districts. Over a further three hundred ( 300) Tamil civilians were killed in these attacks and there was immense destruction of civilian property. More than five hundred (500) Tamil civilians were wantonly killed by these military offensives within the short space of a fornight.

In the context of the on-going peace efforts pursued by the Indian Government, these military offensives were unwarranted and unjustified and clearly establish the mala-fides of the Sri Lankan Government. In further proof of ist real intention to beat down the Tamils, and impose what in effect would be a military solution, the Sri Lankan Government continues with ist military offensive, particularly within the Jaffna peninsula. Tamil civilians continue to be killed every day.

By all reports over twenty thousand (20,000) troops have been massed within and on the periphery of the Jaffna peninsula, so heavily armed as to engage at very short notice in a swift and ferocious operation aided by aerial attacks from helicopter gun-shipsand bomber planes and Naval attacks from Gun boats.

All circumstances point to the imminence of a massive military offensive within the Jaffna peninsula, the civilian casualties , in which event, would be unprecedentedly high.

Meanwhile, the economic and communications blockade, which has been in force within the Jaffna peninsula fort he past two months, has subjected the civilian population to immense deprivation and suffering. Starvation stalks the peninsula, and people have have already been compelled to skip at least one meal a day. The fuel embargo gas paralysed all transport and economic activity. Hospitals, Co-operatives, Schools and other institutions have all been crippled.

Despite the intimation of the Government of India of 9th February that the economic and communications blockade be lifted, and that the military operations be suspended, the Sri Lankan Government has persisted with ist actions. Statements attributed to President Jayawardene, the Minister of National Security, and other Military sources indicate that both the military operations, and the Economic and Communications blockade will continue.

To demand that Tamil militants abandon their struggle and lay down arms in the face of the Government’s continued tyranny oppression without redressing the causes, that have fuelled revolt amongst a peaceful people, is to expect surrender, The Tamil militants have always expressed a willingness to participate in evolving an acceptable political solution.

The population of Eight hundred thousand (800,000) Tamils within the Jaffna peninsula, face imminent danger and are in grave peril. We earnestly plead that they should be saved. It would be doubly tragic if the fate that has already befallen the Tamil population in most of the areas of the Eastern Province, and the mainland of the Northern Province, was to overtake the bulk of the Tamil population who live within the Jaffna peninsula.

We respectfully, contend that the Sri Lankan Government should not be permitted while continuing to abuse India’s good offices, to steadily and surely thrust upon the Tamils a military solution. The Tamil people have saffered immeasurably through the manoeuvres and manipulations of President Jayawardene and his Government. Several reports of International Groups bear ample testimony to the sad plight of the Tamils.

While we deeply appreciate the Stepps, that have been taken by the Prime Minister and Government of India, we desire to keep you informed that we have, in a letter addressed to the Prime Minister, appealed that the following Stepps also be taken:

1. that as a humanitarian measure, food and fuel be provided to the deprived and suffering Tamil populace through the good offices of the Indian Government.
2. that the continuous gross violations of human rights, and genocidal attacks, against the Tamil people in Sri Lanka be appropriately raised at International Fora, and an International campaign be launched fort he taking of such measures and staps, as would compel Sri Lanka to comply with ist national and international obligations, in respect of ist own Tamil civilian population.
3. that the Government of India consider on humanitarian grounds the taking of such action, as would ensure the physical protection and survival of the Tamil people in the Northern and Eastern Provinces pending a final solution.

All that has continuously happened, lead us to the irresistable conclusion, that the real aim of the Sri Lankan Government ist he total suppression and annihilation of the Tamil people in Sri Lanka.

We are deeply convinced that it is only through the efforts of the Prime Minister, the Government and the people of India, that the Tamils of Sri Lanka can be saved from their tragic plight.

We earnestly solicit your kind co-operation.

Thanking you,

Yours sincerely,

M. Sivasithamparam President
A. Amirthalingam Secreatry General

TULF ( Tamil United Liberation Front)