அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Monday, September 1, 2008

இலங்கை மக்களிடையே ஒற்றுமை பேணப்படல்

கடந்த காலங்களில் ஏற்பட்ட நெருக்கடி நிலைகளை ஆராய்ந்து அணுகும்போது இலங்கையில் மக்களிடையே இன-மத வேறுபாடுகளினால் ஏற்பட்ட மோதல்களே முக்கிய காரணமாக இருக்கின்றது. முக்கியமாக இனங்களைப் பொறுத்தவரை சிங்கள தமிழ் முஸ்லிம் என்று மூன்று பிரிவாக இலங்கை வாழ் மக்கள் பிரிக்கப்பட ணே;டியவர்களாக இருக்கின்றார்கள். இந்த இனங்களிடையே பிரச்சனைகள் தோன்றுவதற்கான காரணம் ஒரு சில அரசியல் கட்சிகளுடைய தலைவர்களின் விபரீதமான நடத்தையே. இலங்கையில் அனைத்துப் பொறுப்பை ஏற்கும் அரசியல் கட்சி ஒருதலைப் பட்சமாக நடக்க வேண்டியிருந்ததாலே இப்பிரச்சனைகள் தோன்ற அடிப்பiடாக இருந்தது எனலாம்.

இலங்கைக உலக அரங்கிலே மிகச் சிறிய நாடு. இந்த நாடு பெரிய பிரச்சனையில் பீடிக்கப்பட்ட வேளையில் எவ்வாறு உலக சமாதானம் அல்லது நாடுகளிடையே ஒற்றுமை ஏற்படும். முதலில் நம்நாடு ஒற்றுமையைப் பேண வேண்டும். அதற்கடுத்ததாக உலக ஒற்றுமையில் தலையிடலாம். இந்த ஒற்றுமை எவ்வாறு பேணப்படும் என்று சிந்தித்தால் சமய அடிப்படையில் எல்லோரும் பின்பற்றும் சமயங்களுடைய ரீதியில் ஒரு ஒற்றுமையை ஏற்படுத்த முடியும் என்பது எமது நம்பிக்கை.

எந்த ஒரு மனிதனும் இலங்கையைப் பொறுத்த வரை ஏதோ ஒரு சமயத்தைச் சார்ந்தவனாக இருப்பதை எவரும் மறுக்க முடியாது. ஓவ்வொருவரும் தத்தமது சமயத்தை அதன் கொள்கைகளை சரியாகப் புரிந்து அதன் கீழ் தமது வாழ்க்கை முறைகளை அமைத்துக் கொண்டால் பிரச்சனைகள் தோன்ற வழியில்லை. வழி ஏற்படாது என்பதும் எமது கருத்தாகும். இந்த ரீதியில் நோக்குமிடத்து மக்கள் தம் சமயத்தின் மீது கொண்ட அவநம்பிக்கையும் ஏனைய சமயங்களைப் பரிகாசம் செய்யும் நிலையையும் மாற்ற அந்த சமயங்களுக்குப் பொறுப்பான தலைவர்கள் குருமார்கள் உரிய நடடிக்கையை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அவர்கள் மேலும் மேலும் சிக்கல்களை ஏற்படுத்தினார்களே அன்றி தீர்ப்பதற்கன எந்த முயற்சியும் பலனளிக்கவில்லை. இந்த வகையில் இலங்கையில் கைக்கொள்ளப்படும் பௌத்தம் இந்து இஸ்லாம் கிறீஸ்தவம் என்ற நான்கு சமயங்களிடையேயும் ஒரு ஒற்றுமை பிணைப்பை ஏற்படுத்துவதன் மூலம் பிர்சனைகள் அறவே ஒழிக்கப்படும் என்பது எமது திடமான கருத்தாகும். இதனை உணர்ந்து அனைவரும் இந்தக் கருத்தை ஒரு மனதாக ஏற்ப்பார்களானால் நாம் நல்வாழ்வு வாழ இனியாவது ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும் என்பதும் இல்லையேல் வாழ்க்கை நிலை பாதிக்கப்படுவதோடு மனித சமுதாயம் அழிக்கப்படுகின்ற ஒரு நிலை ஏற்படலாம் என்பது நாம் காணக் கூடிய அறியக் கூடிய செய்தியாக இருக்கி;றது. இதனை உணர்வது அவசியம்.

இந்து சமய மக்களிடையே ஒற்றுமை பேணப்படுவது அவசியம்

இந்து சமயத்iதைப் பொறுத்தவரை ஏனைய சமயங்களைக் காட்டிலும் பல்வேறு வித்தியாசங்கள் நிறைந்த ஒரு சமயம் என்பது எவராலும் மறுக்க முடியாத ஒன்று. பல்வேறு தெய்வங்களைப் பற் பல உருவங்களில் பல்லாயிரம் பெயர்களில் வழிபடுவது இந்து சமயத்தில் சாதாரணமாகக் காணக் கூடியதொன்று. இதனால் பல தெய்வ வழிபாடும் பல சாதிப் பிரிவினைகளும் இருப்பதையும் அறியக் கூடியதாக இருக்கிறது. இதனால் இந்து சமயிகளுடைய கருத்த வேறுபாடுகளினாலும் இதர பிரச்சனைகளினாலும் இவர்கள் மத்தியில் ஒற்றுமை குன்றி வருகிறது. இதனை அடிப்படையாகக்கொண்டு இவர்களுக்கு மத்தியில் ஒற்றுமைப் பிணைப்பை ஏற்படுத்த ஒரு சபை அல்லது ஒரு சங்கம் அமைக்கப்பட வேண்டும் என்பது எமது பிரதானமான குறிக்கோள். இதே நேரம் ஏனைய சமயத்தவர்களும் தமக்குள் உறுதியான ஒவ்வொரு சபையை ஏற்படுத்த வேண்டும் எனவும் நாம் வேண்டுகின்றோம்.

இந்து சமய ஒற்றுமைப் பேரவை அமைத்தல்

இந்து சமய இயக்கங்கள் வௌ;வேறு பெயரைக் கொண்டிருப்பதாலும் ஆலயங்கள் மடங்கள் போன்றவையும் இணைக்கப்பட வேண்டும் என்ற நோக்கினாலும் இந்த சமய ஒற்றமைப் பேரவை என்ற ஒரு பெயரைச் சூட்டவேண்டிய நிலை எமக்குண்டு. சென்ற கால கட்டங்களில் (1970ஆம் ஆண்டு முதல் 1975ஆம் ஆண்டுவரை) எமது சேகரிப்பின்படி அகில இலங்கை இந்து இளைஞர் சங்கப் பேரவை என்ற அமைப்பும் (இந்த இளைஞர் அமைப்புக்கள் சிலவும்) 1986ஆம் ஆண்டுக்குப் பின் யாழ் மாவட்ட இந்து இளைஞர் பேரவையும் செயற்பட்டிருப்பதை அறியக் கூடியதாக இருக்கிறது. இவற்றில் பல அமைப்புக்கள் ஒரே பெயரைக் கொண்டதாக அமையவில்லை. குறிப்பாக இந்து இளைஞர் அமைப்பாக இருப்பதால் அதனுடைய வரையறை சிலவேளைகளில் பாதிப்புக்கு வழியமைக்கலாம் என்பதால் மேற்படி பெயரைத் தெரிவு செய்துள்ளோம்.

(மேற்படி இந்கக் குறிப்புக்கள் 22.12.1987இல் இந்து கலாச்சாரஅலுவல்கள் அமைச்சின் பணிப்பாளர் சிவத்திரு. பாஸ்கரதாஸ் அவர்களுக்கு முன்னாள் மூளாய் இந்து இளைஞர் மன்றத்தின் செயலாளரும் வாகீசர் சிவத்தமிழ்ப்பணி மன்றத் தலைவருமாகிய த. முகுந்தனால் எழுதப்பட்டது.)

No comments: