அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Saturday, September 6, 2008

மூளாய் வதிரன்புலோ ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான தீர்த்தத் தடாக புனருத்தாரணம்












எமது ஊரிலுள்ள பிள்ளையார் கோவில் தீர்த்தக் கேணிகள் இரண்டும் மிகவும் பழமை வாய்ந்தன. வடக்குப்புறம் அமைந்த திரிவோண சங்கமம் எனப்படும் தீர்த்தத் தடாகத்தையே நீங்கள் படங்களில் காண்கிறீர்கள். இப்புண்ணிய தீர்த்தக்குளம் புனரமைக்கப்பட்டு திருவிழாக் காலத்தில் தீர்த்தமாட எம்பெருமான் வீற்றிருக்க மண்டபமும், தூர்ந்த நிலையிலுள்ள சுவர்களைச் செப்பனிட்டு விரிவாக்கப்பட வேண்டியுமுள்ளது.
இதே நேரத்தில் தென்மேற்குப்புறமாக தூர்ந்த நிலையிலுள்ள வேத சாகரம் என்ற பெயர்கொண்ட தீர்த்த நிலை 1961ல் போர்த்தக்கேயரின் ஆட்சிக் காலத்தில் துரவாக வெட்டப்பட்டது. புpன்னர் கேணியாக மாற்றப்பட்ட போதிலும் தற்போது அது தூர்ந்த நிலையில் பள்ளமாக இருக்கிறது. இதில் ஆலய ஆரம்ப சரித்திரம் அடங்கியிருப்பதால் இதனையும் புதுப்பித்து பழமையை பேணவேண்டியுள்ளது.
எமது ஆலயத்தில் பழமைகளைப் பேணும் பணியில் இன்றும் ஆலயச் சூழலில் சுமைதாங்கி, கால்நடைகள் தாகம் தீர்க்கும் நீர்த்தொட்டி, பொது மக்களுக்கான குடிநீர் வசதி, பெருந்தெருவில் நெடுந்தூரம் வருவோருக்கு இளைப்பாற இருக்கும் மடம், ஆலயத்தின் சொந்தக் கட்டிடத்தில் இயங்கிவரும் பல நோக்குக் கூட்டுறவுச் சங்கக் கடை, பாதசாரிகளுக்கு நிழல் தரும் பெரிய ஆல் அரசு வாகை கொண்டல் மரங்களும் இருக்கின்றன. தற்போதைய நிலையில் இந்த கேணியைப் புனரமைக்கவும், தூர்ந்து பள்ளமாயுள்ள வேத சாகரத்தை ஒரு தீர்த்தக் கிணறாகப் புதுப்பிக்கவும் பத்து லட்சம் ரூபா செலவாகும் என மதிப்பீடு செய்யப்பட்டு தற்போதைய ஆலய பரிபாலன சபையினர் இத்திருப்பணிகளை தொடக்கியுள்ளனர்.
ஏற்கனவே பலருடைய பெருநிதியுதவியால் அழகான இராஜ கோபுரமும், அழகிய சித்திரத்தேரும் அது தரித்திருப்பதற்கு தேர்க்கொட்டகையும், ஆலய தளம் முழுமையாக வர்ண பளிங்குத்தள தகடுகளால் பதிக்கப்பட்டும் பெரிய தூண்கள் சிறிய தூண்களாக மாற்றப்பட்டும், புனரமைக்கப்பட்ட சமய குரவர் திருமுறை மடமும், வெளிவீதியில் மின்சார வெளிச்ச வசதிகளும், தினசரி பூசைக்கு நந்தவனத்திற்கு நீர் இறைக்கும் வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
எனவே அடியார்கள் தங்களாலியன்ற நிதியுதவியைச் செய்ய வேண்டும் என பரிபாலன சபையினரும் ஆலய பிரதம அர்ச்சகரும் வேண்டுகோள் விடுத்தள்ளனர்.
நிதியுதவி வழங்கும் அன்பர்கள் தேவஸ்தான பரிபாலன சபையின் பொருளாளர் திரு. மு. முத்துக்குமாரசூரியர் அவர்களிடம் பணத்தைச் செலுத்தி பற்றுச்சீட்டைப் பெற்றுக் கொள்ளலாம் அல்லது கீழேயுள்ள முகவரியிலுள்ள வங்கிக் கணக்குக்கு அனுப்புவதுடன் இவ்விபரங்களை சபையினருக்கும் அறிவித்தால் அவர்கள் அதற்கான பற்றச்சீட்டை அனுப்பி வைப்பார்கள் எனவும் தெரிவிக்கின்றேன்.
கணக்கு இல. C/A 1094433 அல்லது S/A 1131787 மூளாய் வதிரன்புலோ சித்திவிநாயகர் தேவஸ்தான பரிபாலன சபை, இலங்கை வங்கி, ஸ்ரான்லி வீதி, யாழ்ப்பாணம், இலங்கை என்ற முகவரிக்கு அனுப்பிவைக்கவும்.

No comments: