அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Thursday, September 18, 2008

யாராவது முன்வருவீர்களா?

தமிழர்களுக்கு எதிரான அரசின் தற்போதைய செய்கைகளுக்கு எதிராக ஒட்டுமொத்த இலங்கையரும் ஐக்கிய நாடுகள் சபைக்கு கையெழுத்திட்டு ஒரு கடிதத்தை அனுப்பிவைக்க பொது மக்களில் ஈடுபாடுடைய ஒருவராவது இலங்கையில் (நான் தற்போது வெளிநாட்டில் இருப்பதால்) யாராவது ஒருவர் முன்வந்து உடனடியாக முயற்சி எடுக்கவேண்டும் என பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் சார்பாகவும் இலங்கையில் சமாதானத்தை விரும்பும் ஒருவன் என்ற வகையிலும் மிகவும் குறிப்பாக மனிதன் என்ற ரீதியில் தாழ்மையாக வேண்டுகிறேன்.
ஐக்கிய நாடுகள் சபையும் வெளியேறிய காரணத்தால் எமக்கு ஒரு சாதகமான முடிவை வெளிப்படுத்த சந்தர்ப்பம் தானாக வரும் வேளையில் தற்போது புதிதாக ஒரு செய்தியைக் கேள்விப்படும் பொழுது எமக்கு நெஞ்சில் புளிவாரத்தது போன்ற நிலை ஏற்படுகிறது. இரசாயன ஆயுதங்கள் பாவிப்பது பற்றிய இச்செய்தி உண்மையாக இருந்தால் எமக்குப் பாதகமானதாயிருக்கும். எது எப்படியாயிருந்தாலும் தற்போது எமது மக்களுக்கு நிவாரணத்தையும் பாதுகாப்பையும் வழங்க எவருமில்லாத காரணத்தால் உடனடியாக இந்த வேண்டுதலை சகல நாடுகளின் தூதுவராலயங்களிடமும் சர்வதேச மன்னிப்புச் சபை ஐ.நா.சபையின் இலங்கைத் தூதுவராலயம் போன்ற அமைப்புக்களுக்கும் அனுப்பி திக்கற்ற எமது மக்களுக்கு விடிவு ஏற்படுத்தித் தரவேண்டும் என கோரிக்கையை எழுதி கையெழுத்திட்டு சமர்ப்பிக்க உடன் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

1 comment:

ஈழவன் said...

பூனைக்கு மணி கட்டுபவர் யார் என்பது போல இருக்கின்றது முகுந்தன் உங்களது வினா?

இன்றைய இலங்கைச் சூழ்நிலையில் யார் தான் முன் வருவார்கள் முகுந்தன், எத்தனையோ முதலாளிமார்கட்குப் பதில் சொல்ல வேண்டும் அல்லவா, உங்களுக்கு துப்பாக்கி வேட்டின் சுவை தெரியும் தானே, இதைச் சுவைக்க எந்த அப்பாவி தான் முன் வருவான்.

உயிர் மேல் ஆசை இல்லாதவன் இவ்வுலகில் யார் உளன்?