அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Saturday, September 6, 2008

இந்திய அரசின் யாழ் பொது நூலகத்துக்கான உதவிகள்


25.03.2003.
அதிஉத்தம இந்திய ஸ்தானிகர் ஸ்ரீ நிரூபம் சென் அவர்களே!
தங்களுக்கு முதலில் எனது இதய பூர்வமான நன்றியைத் தெரிவித்துக்கொண்டு இந்தக் கடிதத்தை எழுதத் தொடங்குகின்றேன்.
தாங்கள் - தங்கள் அரசு – எனது கட்சியின் தலைவர் தனது பேச்சின்போது குறிப்பிட்டவாறு எமது தாய்நாட்டைப் பிரதிநிதிப்படுத்தபவர்கள. எமது மாநகர சபை நிர்வாகத்திற்குப் பொறுப்பாக ஜனநாயக ரீதியில் தெரிவுசெய்யப்பட்ட சபையின் அடக்கி ஒடுக்கப்பட்ட ஒரு சம்பிரதாயத்தினை தாயின் ஸ்தானத்திலிருந்து அந்த சம்பவத்தை உயிரூட்டி எமக்கு நூலகத் திறப்பு விழா நடைபெற்றிருந்தால் ஏற்படும் மகிழ்வைக் காட்டிலும் கூடிய மன நிறைவை அளிக்கத் தக்கதாக நேற்றைய நிகழ்வை ஏற்படுத்தியமைக்கு எமது சபையினர் சார்பாக, யாழ் மாநகரத்தில் நேர்மையையும் தர்மத்தையும் கைக்கொண்டுவாழும் மக்களின் சார்பாக நன்றியைத் தெரிவித்துக்கொள்ள ஆசைப்படுகின்றேன்.
முதல்வர் அவர்கள் பேசுகையில் அவர் கண்ணீர் சிந்தினார். ஆந்த நிகழ்வு முடிவடைந்ததும் இயற்கையும் கண்ணீர் சிந்தியது. நடப்பவை எல்லாம் நல்லபடியாக நடக்கும் என்பது ஆன்றோர் வாக்கு.
தூங்கள் தங்கள் பேச்சின்போது மகாகவி பாரதியாரையும் சோமசுந்தரப் புலவர் துரையப்பாபிள்ளை போன்ற பலரையும் நினைவுபடுத்தியிருந்தீர்கள். நான் கல்விகற்ற தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரியைத் ஸ்தாபித்தவர் துரையப்பாபிள்ளை அவர்கள். எமது கல்லூரிக் கீதம் இந்திய நாட்டின் தேசிய கீதத்தின் மெட்டிலமைந்தது. இந்திய நாட்டின் மீதும் இந்திய தேசபிதா மகாத்மா மீதும் நான் உயிரையே வைத்திருப்பவன். குhந்தி ஆங்கில திரைப்படத்தை குறைந்தது 20 தடவைகளுக்கு மேல் பார்த்துவிட்டேன். தோடர்ந்தும் பார்க்க ஆவலாயுள்ளேன்.
எமது காலத்தில் (கடந்த 5 வருடங்களில்) இணர்டு முதல்வர்களையும் ஒரு உறுப்பினரையும் இழந்து மிகவும் ஒரு அசாதாரண நிலையில் பல்வேறு விமர்சனங்களக்கு மத்தியில் பலர் உயிருக்குப் பயந்து பதவி விலகிய நேரத்தில் துணிந்து சபையை நடத்தியதுடன் அழிந்த நிலையிலிருந்த பொது நூலகத்தை மீளக் கட்டி எழுப்பப்பட்ட அந்த காலத்தில் நாம் செய்த சேவை நியாயமானது என்ற அறத்தை மெய்ப்பித்த இந்திய அரசின் தீர்க்க தரிசனத்தை நாம் மனதாரப் போற்றுகின்றோம்.
பொது நூலகத்தின் வரலாற்றில் இந்தியாவுக்கு முக்கிய பங்குண்டு. 1952ம் ஆண்டில் டெல்லிப் பல்கலைக் கழகத்து நூலகர் பேராசிரியர் கலாநிதி எஸ். ஆர். ரங்கநாதன் அவர்கள் யாழ்ப்பாணத்திற்கு வந்து நூலக ஆரம்பப் பணிகளுக்கு கலந்துரையாடலைச் செய்தவர் வணக்கத்திற்குரிய பாதிரியார் லோங் அடிகள். அதேபோல முற்றவெளியில் கட்டடம் கட்டுவதை இடம்பார்த்து ஆமோதித்தவர் தமிழ்நாட்டுக் கட்டடக்கலை நிபுணர் நரசிம்மன் அவர்கள். இவர்களுக்கு மேலாக 29.05.1954ல் நகரபிதா சாம். சுபாபதி, வண. லோங் பிதா, பிரித்தானிய தூதுவர் செசில் சையேஸ், அமெரிக்கத் தூதுவர் பிலிப் குறோஸ், இந்தியத் தூதுவரின் முதற்காரியதரிசி சித்தார்த்த சாரி ஆகிய ஐவரும் அடிக்கல் நாட்டி வைத்ததும் இந்திய அரசின் நன்கொடையாக அன்றைய தினம் ரூபா 10,000.00 அன்பளிப்புச் செய்யப்பட்டதும் வரலாறு.
ஆந்த அடிப்படையில் இன்றைய நூலஇகள் வழங்கும் வைபவமும் வரலாறாகிவிட்டது.
எமது வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவமாக மனநிறைவை அளித்த விழாவாக இதை நான் நோக்குகின்றேன். 14.02.2003ல் திறக்கப்படவிருந்த நூலகத்திற்கு பங்காளியாக இருந்த எம்மை நேற்றைய விழாவில் முதன்மைப் படுத்தி கௌரவித்தமைக்காக எமது மனம் நிறைந்த நன்றிகளை மீண்டும் தெரிவித்து இதனை நிறைவு செய்கின்றேன். நன்றி. வுணக்கம்.
என்றும் உண்மையுள்ளதங்க. முகுந்தன்முன்னாள் மாநகர சபை உறுப்பினன்யுhழ்ப்பாணம்
குறிப்பு – 1. யாழ் பொது நூலகத்துக்கு பல அரிய நூல்களை அன்பளிப்பாக வழங்க முதல்வர் எம். ஜி. ஆர் ஏற்பாடு(ஈழநாடு 12.10.1981)2. From India – With Love (Saturday Review Sri Lanka 1985-7-6)3. யாழ் நூலகத்துக்கு இந்திய மத்திய, தமிழக அரசு நூல்கள் அன்பளிப்பு (வீரகேசரி 18.01.1998)

27.03.2003.
(This ist he actual translation of the letter dated on 25.03.2003)

His Excellency Nirupam Sen,
The High Commissioner of India in Sri Lanka,
No. 36 - 38, Galle Road,
Colombo -3.
Your Excellency,
I wish to express my sincere and heartiest gratitude to you at the very outset of addressing this letter to you.
As stated by our Leader Mr. V. Anandasangaree, MP during his speech, We endorse that Your Excellency and Your esteemed Nation are representing our motherland. I also tp avail of this opportunity to express my sincere thanks to you once again on behalf of the Jaffna Municipal Council and the people of Jaffna who lead a sincere life honesty and integrity for having come forward to conduct a unique function yesterday(24.03.2003) thus providing better mental satisfaction to all of us who were elected democratically for the administration of the Jaffna Municipal Council, than conducting the opening of the Library with your intervention in the capacity of Maternal Capacity, When our genuine attempts to open the Library were suppressed and oppressed.
When our former Mayor of the Jaffna Municipal Council delivered his speech he was moved by emotion thus could not control himself of shedding of tears. Immediately on conclusion of the function, nature too started shedding tears as per sayings of greatman, everything would conclude favourably.
During Your Excellency`s speech you called `Mahakavi Bharathi`, `Somasundarappulavar`Thuraiyappapillai`and others of this category. The Tellippalai Mahajana College, where I was educated was established by Thuraiyappapillai. I am proud to mention that our College anthem rhythms similar to that of Indian National Anthem.
It is indeed not an exaggeration to mention at this function that I love Mother India and Mahathma Gandhiji, the National Father of the Indian Nation more than my life. Through such love I had seen the English film Gandhi more than 20 times and still anxious to see that film more and more.
During our tenure of office as MMC, we lost two Mayors one after the other and a Member under tragic circumstances and when number of Members left their Membership due to uncertain and fear of adverse consequences, we stood steadfastly and continued the function of the Jaffna MC and engaged ourselves unremittingly to reconstruct the Library Building. We really appreciate the gesture of the farsightedness of the Indian Government in justifying our relenting service.
In the history of the Jaffna Library, India has a prominent contribution. During the year 1952 Prof. Dr. S R Ranganathan, Librarian of the Delhi University came to Jaffna and conduct a Seminar regarding preliminary Library service. Similarly Rev. Fr. Long too identified the location fort he constuction of the Library at the Jaffna Esplanade. Apart from the foregoing facts the Tamil Nadu Architect Mr. Narasimman joined. His Lordship the Mayor of Jaffna Sam Sabapathy, Rev. Fr. Long, His Excellency Sisil Cyes the HC of Gt. Britain, His Excellency Phillip Cross the Ambassador of USA, Shri Siththartha Shari the First Secretary of Indian High Commission jointly laid the foundation stone and the contribution of Rs. 10,000.00 made by the Indian Govt. is also a significant historical event.
It is on this basis the donation of books to the Library by the Indian Govt. also was become a historical event.
I observe this occasion as an unforgettable event which has brought great contentment. We who were expected to be the participants of the opening of the Library scheduled to be held on 14.02.2003, have been provided prominence at the function and for which kind gesture I once again express my whole hearted gratitude and wish to conclude this letter.
Thanking you,
Yours truly,Thanga. Mukunthan.Ex. MMC Jaffna.
Note 1. Arrangements of the CM, MGR to donate number of rare lot of books(Elanadu 12.10.1981) 2. From India with Love (Saturday Review, Sri Lanka 06.07.1985) 3. Donation of Books to Jaffna Library by the Central Govt. of India and the Govt. of Tamil Nadu(Veerakesari 18.01.1998)

மேலதிக செய்தி

அமெரிக்கத் தகவல் நூலகமும் யாழ்ப்பாணப் பொதுசன நூலகமும் ஒன்று கலந்தமையையும் - அறிவுத் திறமைக்கு வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் ஸ்தாபிதமும் சிறப்பான பலனைக் கொடுத்திருக்கிறது. இன்றும் தொடர்கிறது. அமெரிக்க யாழ்ப்பாண நட்புறவு 140 ஆண்டுகளுக்கு மேலாக வந்த தொடர்பை மூதறிஞர் க. சி. குலரத்தினம் ஐயா அவர்கள் யாழ்ப்பாண நூல் நிலையம் என்ற நூலில் மிகச் சிறப்பாக எடுத்துக்காட்டியுள்ளார்.வீணாக அழிவைப்பற்றி எண்ணாது – ஆக்க பூர்வ அறிவின் அடிப்படையில் நோக்கும்போது அன்றைய அமெரிக்க ஸ்தானிகர் 104,000 ரூபாவையும் பின்னர் 1966ல் 11,000 ரூபாவையும் வழங்கியிருந்தார். இதைவிட இந்திய அரசும் பிரித்தானிய அரசும் கூடவே நன்கொடையளித்திருந்தன.எனவே யாழ்ப்பாண நூலக விடயத்தில் அனாவசியமான அரசியல் தலையீடுகளைத் தவிர்த்து அறிவு பூர்வமாக சிந்தித்து செயற்படுவதே சிறந்தது. இன்று யாழ் பொது நூலகம் கணனி மயப்படுத்தப்பட்டு புதுப்பொலிவுடன் செயற்படுவதுடன் தொடர்ந்தும் நவீன வசதிகளைப் பெறவும் வளரும் விஞ்ஞான தொழில்நுட்ப அறிவினை யாழ்ப்பாணத்திலும் ஊன்றச் செய்யும் நடவடிக்கையை ஊக்கம் அளித்து வெறுமனே கொழும்பில் மட்டும் எல்லா வசதிகளும் இருக்கின்றது என்ற நிலையை மாற்றி சகல பகுதிகளிலும் நவீனம் ஊடுருவ வகை செய்ய வேண்டும். இதுவே இன்றைய அறிவுத் தேவையாகும். இன்று இந்நாட்டில் சிங்களப் பகுதிகளில் இருக்கும் வசதிகளின் அடிப்படையில் யாழ்ப்பாணமோ அல்லது வவுனியா திருமலை மட்டக்களப்பு பகுதிகள் சரி கொழும்பு காலி மொரட்டுவை பேராதனை இறாகம போன்ற பகுதிகளுடன் ஒப்பிடுகையில் எந்த அளவு என்பதை நோக்கலாம்.
(இது ஒரு சிறு குறிப்பாக எழுதி 2003.02.22 அறிக்கையுடன் இணைத்து அனுப்பப்பட்டது.)

No comments: