யாழ் குடாநாட்டில் வலிகாமம் மேற்கு "மூளாய்" என்னும் புண்ணிய பூமியில் இரு கண்களாக விளங்குபன ஒன்று மூளாய் வதிரன்புலோ சித்திவிநாயகர் முத்துக்குமாரசுவாமி திருக்கோயில்கள் இரண்டாவதாக விளங்குவது தான் "எங்கள் வித்தியாலயம்". எமத மூளாயில் சைவப்பிள்ளைகள் கல்விகற்க சைவப்பாடசாலை ஒன்று இல்லையே என்ற எண்ணம் கந்தையாபிள்ளை அவர்களின் மனதில் உதித்ததன் விளைவே எம் வித்தியாலம் 1908 ஆம் ஆண்டு மூளாய் சித்திவிநாயகர் ஆலய மடத்திலும் பின்பு பூசகர் மடத்திலும் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டு வகுப்பக்கள் நடைபெற்றன படப்படயாக மாணவர்களின் தொகை அதிகரித்தது தொழ'புரம் வைரமுத்து வேலுப்பிள்ளை வழங்கிய நிலத்துடன் தனது நிலத்தினையும் இணைத்து கந்தையாபிள்ளை அவர்கள் 1912ஆம் ஆண்டு ஒலைக் கொட்டிலமைத்து சொந்த நிலத்தில் பாடசாலையினை இடம்மாற்றினர்.1924 ஆம் ஆண்டு வைரக்கல்லினால் முதல் முதலாக கட்டிடம் அமைத்து கல்வி வழங்கும் நிலை உருவானது எமது அயல் கழராமங்களான பொன்னாலை தொல்புரம் சுழிபுரம் பண்ணாகம் சித்தங்கேணி வட்டுக்கோட்டை சங்கானை சண்டிலிப்பாய் காரைநகர் போன்ற இடங்களிலிருந்நு மாணவர்களட இடங்களிலிருந்து மாணவர்கள் வருகை தந்து கல்வி கற்றார்கள்.பாடசாலை ஆரம்பிக்கின்ற பொழுது 12 பரப்பு 3 குழியுடன் இருந்த பாடசாலை இன்று போதிய நிலப்பரப்புக்களையும் கட்டிடங்களையும் கொண்டதாக விளங்குவதோடு மாணவர்கள் போதிய இடவசதியுள்ள மைதானம் இல்லாத விடத்திலும் மாணவர்கள் தங்களின் திறமைகளை கல்வியிலும் சரி விளையாட்டிலும் சரி பாடசாலை கோட்ட்ம் வலைய மாவட்ட அகில இலங்கை மட்டங்களில் போட்டிகளில் கால் பதித்து வருவதை நாமனைவரும் அறிந்து பெரும் மகிழ்வடைகிஜன்றோம் பாடசாலையில் வருடம் தோறும் பரிசளிப்பு விழா ஆசிரியர் தின விழா, நவராத்திரி விழா, தமிழ்தின விழா, இல்ல மெய்வ்லுனர் போட்டி என்பன சிறப்பாக நடைபெற்று வருகின்றன. பாடசாலையின் வளர்ச்சிக்கு பாடசாலையில் கடமையாற்றிய அதிபர்கள் ஆசிரியர்கள் பழைய மாணவர்கள், பெற்றோர்கள் நலன் விரும்பிகள் போன்றோர்களின் ஒத்துழைபினாலும் பாடசாலை வளர்ச்சி பாதையை நோக்கி சென்று கொண்டிருப்பதை நாம் வெளிநாடுகளில் வசித்தாலும் கண்டும் கேட்டும் அறிந்தும் பெருமகிழ்வடைகின்றோம். பாடசாலையின் பழைய மாணவர் சங்கம் ஆரம்பிக்கப்பட்டு செயல்ப்பட்டு வருகின்றது அதன் மூலமாக பழைய மாணவர்களாகிய நாங்கள் பாடசாலையினை விட்டு விலகினாலும் பழைய மாணவர்களுக்கென்ற விழாவாக வருடாவருடம் நவராத்திரி விழா மிக சிறப்பாக நடாத்தி வருகின்றோம்.பாடசாலையின் நூற்றாண்டு விழா 18.05.2008ம் அன்று பாடசாலையில் சிறப்பாக நடைபெற்றது. பாடசாலையின் நூற்றாண்டு விழா ஞாபகார்த்த சின்னமாக வெளிநாட்டிலும் உள் நாட்டிலும் உள்ள பழைய மாணவர்களின் உதவியுடன் சரஸ்வதி சிலை வித்தியாலய திறந்த வெளி அரங்கு மற்றும் துவிச்சக்கர வண்டி பாதுகாப்பு இடம் என்பன அமைக்கப்பட்டுள்ளது. "கற்றுணர்ந்தொழுகு" என்ற மகுட வாசகத்தினைக்கொண்டு பாடசாலையின் வளர்ச்சிப்பாதைக்கும் மாணவர்களின் கல்வித் திறண்மைக்கும் கற்பித்தல் செயற்பாட்டினை தற்போதைய அதிபர் செல்வி சி. சிவமலர் அவர்களின் வழிகாட்டலில் ஆசிரியர் குழாங்களினால் கல்விச் செயற்பாடுகள் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. மேலும் பாடசாலை மாணவர்கள் வெள்ளிக் கிழமை தோறும் காலையில் முளாய் வதிரன் புலோ சித்திவிநாயகர் முத்துக்குமாரசுவாமி திருக் கோயில்களில் கூட்டுப்பிராத்தனையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.அத்தோடு அல்லாது திருக் கோயிகளின் வருடாந்த உற்சவங்களின் போது சிரமதானப் பணிகளையும் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது. பாடசாலையினை மேலும் விருத்தி செய்யும் நோக்குடன் கொழும்பில் பழைய மாணவர் சங்கக் கிழையும் ஆரம்பிக்கப்பட்டு செயற்பட்டு வருகின்றது. அதன் பொதுக் கூட்டம் 17.08.2008 அன்று மாலை நான்கு (04) மணிக்கு கொழும்பில் நடைபெறவுள்ளது என்பதையும் சகல பழைய மாணவர்களுக்கும் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.நன்றிகா. பார்த்தீபன்,பழைய மாணவன்.
Monday, September 1, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment