27.10.2003
பத்திரிகை ஆசிரியருக்கு
இத்துடன் இணைத்துள்ள செய்தியைப் பிரசுரிக்கும்படி தயவாக வேண்டுகின்றேன்.
தங்க. முகுந்தன்.
செய்தி
காலம் கடந்த நிலையில் எல்லோரும் மறந்த சிலரால் மறைக்கப்பட்ட செய்தியை மீண்டும் கிளற வேண்டிய கட்டாய நிலை – வாசிக்கும் பழக்கத்தையுடைய எனக்கு ஏற்படுத்தியுள்ளது. காரணம்இன்று யாழ் நூலகத்தைப் பற்றி எவரும் அக்கறைப்படாததே. துற்போது இந்த நூலகத்தைப் பயன்படுத்தாமலிருப்பதனால் அதற்கு கிடைக்க இருக்கின்ற அரச சார் பற்ற நிறுவனங்களின் மேலதிகமான உதவிகள் இடைநிறுத்தப்படவுள்ளதாக யுனெஸ்கோ அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக நான் அறியக் கூடியதாக இருக்கிறது. சுங்கங்கள் நடத்துவோரும் அறிக்கைகள் விடுத்தோரும் இன்று சும்மா இருப்பதால் நாம் 14.02.2003ல் எந்த வேலைகளை முன்னெடுக்க திறப்பு விழாவை நடாத்த இருந்தோமோ அவையெல்லாம் நிறைவேறிய(யாருக்கும் தெரியாமல் குடிபுகுதல் வாஸ்து சாந்தி என்பன ) பின்னரும் நூலகம் திறக்கப்படாமலிருப்பதை எவரும் ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே மாநகர சபை நிர்வாகம் இயங்கிய வேளையில் திறக்கப்படவிருந்த நிகழ்வை தடுத்துநிறுத்திய பெருமையுடையவர்கள் இனியாகிலும் பூட்டப்பட்டிருக்கின்ற நூலகத்தைத் திறந்து மாணவர்களின் அறிவை விருத்தி செய்ய முன்வரவேண்டும் என வேண்டுகின்றேன். வாசிப்பதால் மனிதன் பூரணம் அடைகின்றான் என்பது ஆன்றோர் வாக்கு. முன்னர் மில்க்வைற் அதிபர் அமரர் க. கனகராசா அவர்கள் இலவசமாக நூல் நிலையங்களுக்கு அன்பளிப்பாக வழங்கியது. இவ்வார்த்தைகளடங்கிய அட்டை இன்றும் எமது ஊரிலுள்ள (என்னால் ஓரிரு வருடங்கள் தலைவராகவும் செயலாளராகவும் பொறுப்பிலிருந்த இந்து இளைஞர் மன்றத்தினால் பரிபாலிக்கப்பட்டுவரும் மூளாய் இந்து இளைஞர் மன்ற) நூலகத்தில் இருப்பதை நினைவுபடுத்தி - பூரணமான மனித சமுதாயம் தோன்ற வழி ஏற்படுத்த கல்வியறிவை வளர்க்கும் பணியிலீடுபட்டவர்கள் முன்வரவேண்டும் என கல்விக்கு ஏற்றம் கொடுத்த யாழ்ப்பாணச் சமூகத்தின் சார்பில் தயவாகக் கேட்டுக்கொள்ளுகின்றேன். நூலக ஆலோசனைக் குழுவினரும் இந்த விடயத்தை துரிதமாக ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும் எனவும் தாழ்மையுடன் வேண்டுகின்றேன்.
செய்தி ஊடகங்கள் சம்பந்தமாக சில தகவல்களையும் தெரிவிக்க வேண்டிய கட்டாயம் எனக்கு இருக்கிறது.
1. பொதுவாகவே பல செய்தி ஊடகங்கள் கடந்த வருடம் தொடக்கமே நூலகத் திறப்பு விழா சம்பந்தமாக செய்திகளை வெளியிட்டன. குறிப்பாக வீரகேசரி 25.08.2002 யாழ் தீபம் என்ற சிறப்பு வெளியீட்டில் (திறப்பு விழாவுக்கு சுமார் 6 மாதங்களுக்கு முன்னரே) அழகுற புனரமைக்கப்பட்டிருக்கும் யாழ் நூலகம் அன்றுவரை திறக்கப்படாதது ஏன்? ஏப்போதுதான் திறக்கப்படுமோ? ஏன்று அழகான படத்துடன் செய்தி வெளியிட்டுவிட்டு 30.03.2003 ஞாயிறு வீரகேசரி வெளியீட்டின் முற்பகுதியில் புனரமைக்கப்பட்டு திறக்கப்படாதுள்ள யாழ் நூலகத்தின் உட்பக்க தூண்களில் பாரிய வெடிப்புக்கள் ஏற்பட்டிருப்பதையும் நூலகத்தின் வெளிப்புற வேலைகள் பூர்த்தியடையாது இருப்பதையும் படங்களில் காணலாம் என்றும் படத்துடன் செய்தி வெளியிட்டிருக்கின்றது. மீண்டும் 28.06.2003ல் புதிதாகக் கட்டி முடிக்கப்பட்ட யாழ் நூலகத்திற்கு முன்னால் தமிழ் மாணவர்கள் துவிச்சக்கர வண்டிகளில் செல்வதை படத்தில் காணலாம். இரண்டு தசாப்த காலத்திற்கு முன்னர் அழிக்கப்பட்ட இந்நூலகத்தைத் திறப்பதற்கு யாழ்ப்பாணம் மீண்டும் தயாராகின்றது என்றும் எழுதியது.
2. 22.05.2001ல் நடைபெற்ற நூலக ஆலோசனைக்குழு அறிக்கையில் பிரதம பொறியியலாளர் 80மூமான வேலைகள் முடிவடைந்ததாகக் குறிப்பிட்டிருக்கிறார். கூட்டம் திறப்பு விழாவுக்கு முன்னர் சுமார் 9 மாதங்களுக்கு முன்னர் நடைபெற்றிருப்பதை அவதானிக்கவும். ஊங்களிடம் யாழ்ப்பாண மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியம், சர்வதேச தமிழீழ மாணவர் பேரவை என்பவற்றின் அறிக்கைகள் இருக்கும் என எண்ணுகின்றேன். இல்லாவிட்டால் என்னிடத்தில் இவற்றின் பிரதிகள் உண்டு.
3. சக்தி தொலைக் காட்சியில் 04.07.2003 இரவு செய்தியின் நடுவில் வெளிவந்த யாழ் நூலகம் பற்றிய தேடுதல் நிகழ்வைக் கண்ணுற்றபின்னர் எழுதிய கடிதத்தின் பிரதியையும் இணைத்தள்ளேன்.
4. எனது இராஜினாமாக் கடிதம் 13.02.2003 திகதியிட்டு 14.02.2003 நண்பகலில் ஆணையாளருக்கும் தேர்தல்கள் அலுவல்கள் யாழ்ப்பாண அலுவலகத்திற்கும் சென்று நேரில் கையளித்தேன்.
5. என்னால் சகல பத்திரிகைகளுக்கம் அனுப்பி வைக்கப்பட்ட கடிதங்களில் தினமுரசு பத்திரிகையும் ஒரு சில விடயங்களை மாத்திரம் தவிர்த்தும் வலம்புரி பத்திரிகை கால்பங்கினையும் மாத்திரம் பிரசுரித்தன. சுகல பத்திரிகைகளுக்கும் அனுப்பியிருந்தும் பிரசுரிக்காமை வருத்தத்திற்குரியதே. ஆத்தடன் முன்னர் அனுப்பிய கடிதப்பிரதிகள் தேவையாயின் 2347721 என்ற தொலைபேசியுடன் தொடர்புகொள்ளவும்.
பிரதிகள் 1. வீரகேசரி 2. தினக்குரல் 3. தினகரன் 4 . சுடர்ஒளி 5. தினமுரசு 6. வலம்புரி 7. நமது ஈழநாடு 8. உதயன ் 9. யாழ் தினக்குரல் 10. சக்தி ஒலிபரப்பு 11. சக்தி ஒளிபரப்பு 12. சூரியன் ஒலிபரப்பு
No comments:
Post a Comment