அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Monday, September 1, 2008

வாசகர்களுக்கு ஓர் பணிவான வேண்டுகோள்

எனது கிருத்தியப் பதிவுகளுக்குப் பின்னூட்டமிடும் சகலருக்கும் ஒரு தாழ்மையான வேண்டுகோள். மனிதர்களாகப் பிறந்த நாம் சிந்தனை என்ற ஆறாவது அறிவை நல்லமுறையில் பயன்படுத்த வேண்டும் என நான் விரும்புகின்றேன். எனவே பதிவிடுபவர்களும் கருத்துத் தெரிவிப்பவர்களும் தமது கருத்துக்களை மற்றவர்களின் மனது புண்படாத விதத்தில் இடுவது நலமென நான் கருதுவதால் எனது பதிவில் எவரையும் நான் கீழ்த்தரமான முறையிலோ அல்லது அவர்களைத் தாக்கியோ அவர்களது மனதைப் புண்படுத்தும்படியான கருத்துக்களைத் தெரிவிக்க முடியாது என்பதை மிகவும் தாழ்மையுடன் தெரிவித்தக் கொள்கின்றேன்.

குறிப்பாக கடந்த காலங்களில் எழுதப்பட்ட எனது கடிதங்களில் அல்லது எனது கட்டரைகளில் அல்லது எனது அறிக்கைகளில் மனிதப் படுகொலைகளுக்கு எதிராக மனிதப் பண்பற்ற செயல்களை நான் பகிரங்கமாகக் கண்டித்திருப்பதையும் அவை இதற்கு விதி விலக்கெனவும் நான் குறிப்பிட விரும்பகிறேன்.

அப்படியான கருத்துக்கள் பதிவிலிருந்து நீக்கப்படும் என்பதை தாழ்மையுடன் தெரிவிக்கின்றேன்.

இதற்காக நான் மிகவும் மனவருத்தம் அடைகின்றேன்.

No comments: