அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Monday, September 8, 2008

பத்திரிகைகள் புறக்கணித்த செய்திகள் பற்றியது

20.07.2000
ஆசிரியர
்வீரகேசரி
கொழும்பு
அன்புடைய ஆசிரியருக்கு
வணக்கம். இன்றைய 20ந்திகதி வீரகேசரியின் 11ஆம் பக்கத்தில் வெளியான இளம் வேட்பாளர்கள் கூட்டணி சார்பில் போட்டியிட விருப்பம் என்ற தலைப்பிலான செய்தியில் எனது பெயரும் இடம்பெற்றிருப்பதால் இந்தச் செய்தியை அனுப்புகின்றேன். தயவுசெய்து முழுமையாகப் பிரசுரிக்கவும்.
தமிழர் விடுதலைக் கூட்டணி எதிர்வரும் பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் போட்டியிடும். அதில் வேட்பாளர்களாக யார்யாரை நியமிக்கும் என்பதையெல்லாம் நியமிக்க ஒரு நடைமுறை காலம்காலமாக இருந்துவருகிறது. அந்த நடைமுறை தொடர்ந்தும் பின்பற்றப்படும் என்பதில் எதுவித மாற்றமும் இருக்காது என்பது எனது நம்பிக்கை.
கடந்த பொதுத்தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் சுயேட்சைக்குழுவில் முதன்முதல் போட்டியிட்டுப் படுதோல்வியடைந்து பல அனுபவங்களைப் பெற்ற நான் எதிர்பாராத விதமாக யாழ் மாநநகர சபையின் உறுப்பினராகினேன். எதிர்வரும் பாராளுமன்றப் பொதுத்தேர்தலில் யாழ் மாவட்டத்தில் போட்டியிடும் எண்ணம் எனக்கு துளியளவும் இல்லை என்பதைத் தெரிவிக்கின்ற அதேவேளை கட்சியின் பணிகளில் என்னை முழுமையாக அர்ப்பணிக்க உறுதிகொள்கின்றேன்.
வணக்கம்.
தங்களுண்மையுள்ள
தங்க. முகுந்தன்.

20.09.1999.
பிரதம ஆசிரியர்
தினகரன்
கொழும்பு
அன்புடையீர்
தங்களின் இன்றைய கொழும்பு பதிப்பில் ஆசிரியர் தலையங்கத்தில் மீண்டுமொரு மனிதப் படுகொலைகள் என்ற கட்டுரையில் 15.09.1999 புதுக்குடியிருப்புப் பகுதியில் நடைபெற்ற தாக்குதலைக் குறிப்பிட்டு அவற்றுக்கு எதிராகப் பதிலடி கொடுக்கும் வகையில் விடுதலைப் புலிகள் இப்படுகொலைகளைச் செய்திருக்கலாமா என்ற கேள்விக்குப் பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் நல்ல பதிலொன்றை அளித்துள்ளார் என்று குறிப்பிடப்பட்ட செய்தியைக் கண்ணுற்றேன்.
தங்களுடைய பத்திரிகையில்(கொழும்புப் பதிப்பில்) இன்றுவரை புதுக்குடியிருப்பில் நடைபெற்ற சம்பவம் குறித்த ஒரு விபரமான செய்தியும் வெளிவரவில்லை. 15.09. புதன்கிழமை நடைபெற்ற சம்பவத்திற்கு 17.9 வெள்ளிக்கிழமை புலிகள் இலக்குகள் மீதே புதுக்குடியிருப்பில் விமானத் தாக்குதல் இராணுவப் பேச்சாளர் என்ற தலைப்பிலும் முல்லைத் தீவு விமானத் தாக்குதல்குறித்து பாரபட்சமற்ற விசாரணை நடத்த வேண்டும் ஜோசப் பரராஜசிங்கம் ஜனாதிபதியிடம் கோரிக்கை என்ற தலைப்பிலும் 18.9 பத்திரிகையில் புதக்குடியிருப்பு விமானத் தாக்கதல் குறித்து விசாரிக்க ஆணைக்குழு நியமிக்க வேண்டும் ஜனாதிபதியிடம் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை என்ற தலைப்பிலும் மாத்திரமே செய்திகள் வெளிவந்திருப்பதைத் தங்களின் கவனத்திற்குத் தெரிவிக்க விரும்புகிறேன்.
தமிழ்ப் பேசும் மக்களின் தேசியக் குரல் தினகரனே என்ற முற்பக்க வாசகத்திற்கு ஏற்ப உண்மையாக நடந்த ஒரு செய்தியை தினகரன் இருட்டடிப்புச் செய்ததற்கான காரணம் என்பதை தினகரன் வாசகன் என்ற முறையிலும் இந்நாட்டின் பிரஜை என்ற வகையிலும் தங்களிடம் வினவுகின்றேன்.
அப்பாவித் தமிழ்மக்களாயினும்சரி சிங்கள மக்களாயினும் சரி முஸ்லிம்களாயினும்சரி எவர்களது உயிரையும் அழிக்க எவருக்கும் உரிமையில்லை என்பதை அரசும்சரி அரச படையினரும் சரி விடுதலைப் புலிகளும் சரி உணர வேண்டும்.
விடுதலைப் புலிகளின் கொலைகளைக் கண்டிக்க முன்னர் ஒரு அரசினதும் அரச படையினதும் செய்கைகளை நாம் நோக்க வேண்டும். ஜனாதிபதி சந்திரிகா அம்மையாரும்சரி அதற்கு முன்பிருந்த ஜயவர்தனா பிரேமதாசா ஐயாமார்களும் சரி ஏன் டிங்கிரி பண்டா விஜேதுங்காவும் சரி தமிழ் மக்களை நடத்திய நடத்திவருகின்ற முறை உலகறிந்த உண்மை.
கடந்த 15.09.99 நடைபெற்றது போன்றதொரு விமானத் தாக்குதல் 1991ஆம் ஆண்டு அன்றைய ஜனாதிபதி பிரேமதாச ஐயா அவர்களின் காலத்திலும் புதக்குடியிருப்பில் நடைபெற்றது. அன்று 23 பொது மக்கள் கொல்லப்பட்டதுடன் 14 பொதுமக்கள் காயமடைந்தனர். இச்சம்பவம் மட்டுமல்ல பல சம்பவங்களில் பல நூற்றுக்கணக்கான தமிழ்மக்கள் மாத்திரம் அரச படையினரின் குண்டுத்தாக்குதல்கள் விமான மற்றும் பீரங்கிகளால் அழிக்கப்பட்டு வருவதை எல்லோரும் அறிந்திருக்கிறார்கள். இவை மிருகத்தனமான செயல்கள். இவை கண்டிக்கப்பட வேண்டியவை. இவற்றை விடுத்து புலிகள் மாத்திரம் மேற்கொள்ளும் வெறித்தனமான கொலைகளைச் செய்திகளாக வெளியிடுவது தேசியப் பத்திரிகை ஒன்றின் கடமையாகாது. நடுவுநிலை நின்று செய்திகளைப் பிரசுரிக்க வேண்டும் என்பதே எமது வேண்டுகோள்.
விடுதலைப் புலிகளைக் கண்டிக்காமல் இருக்க முடியாது. எனினும் அவர்களின் கொலைவெறியானது அப்பாவிச் சிங்கள முஸ்லிம் மக்கள் மீது மாத்திரமல்ல தமிழ் மக்களின் மீதும் இருப்பதுதான் வேதனையையும் வெட்கத்தையும் அளிக்கிறது. போர் வீரனுக்குரிய திறமையாதெனில் ஆயுதம் தரித்திருக்கும்போதுதான் மட்டுமே போர்புரிவது. எதிரியிடத்தில் ஆயுதமற்றிருந்தால் மல்யுத்தம் அல்லது ஆயுதத்தை மீண்டும் எடுக்கச்சொல்லி அவன் ஆயுதத்தை கையிலெடுத்த பின் போர்புரிவது. இவை போர்க்கால தர்மம். இவையெல்லாம் நான் கூறி ஏற்கப் போவதுமல்ல. இவர்கள் இதுவரை கடைப்பிடித்து வந்ததுமல்ல. இன்றைய சூழ்நிலையில் அப்பாவிப் பொதுமக்கள் அவர்கள் யாராயிருந்தாலும்சரி தாக்கப்படுவதும் கொல்லப்படுவதும் முற்றாக நிறுத்தப்பட வேண்டும்.
செய்திகள் மறைக்கப்படாமல் முழுமையாகப் பிரசுரிக்கப்படவேண்டும். தங்களின் பத்திரிகையில் அப்பாவித் தமிழ்மக்களுடைய கொலைகளைப் பற்றி ஒரு நிருபர்கூட செய்தியைப் பிரசுரிக்கா விட்டிருப்பினும் சரி இராணுவப் பேச்சாளர் ஜோசப் பரராஜசிங்கம் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் செய்திகளின் பின்னராவது ஒரு ஆசிரியர் தலையங்கத்தை எழுதியிருக்கலாம் என்பதே எனது பெரும் எதிர்பார்ப்பு. அதை சம்பவம் நடந்து 5 நாட்களின்பின் மனவருத்தத்துடன் தங்களுக்கு எழுதுகிறேன். இன்றும் கூட சிங்கள மக்களின் உயிருக்கும் தமிழ் மக்களின் உயிருக்கும் வேற்றுமைபாராட்டும் ஜனாதிபதி உட்பட பலர் உள்ளபோதும் தமிழ்ப்பேசும் மக்களின் தேசியக்குரல் தினகரனும் வேற்றுமை பாராட்டவதுதான் பொறுக்கமுடியாமலுள்ளது.
மிகவும் மனவேதனையுடன்
தங்க. முகுந்தன்
இத்துடன் கடந்த 17.09.1999 என்னால் அனுப்பப்பட்ட கடிதத்தின் பிரதியையும் 1991.02.11ல் வெளியான வுhந ஐளடயனெ பத்திரிகைச் செய்தியையும் அனுப்பியுள்ளேன். அன்றைய தமிழர் விடுதலைக் கூட்டணியின் அறிக்கையையும் இணைத்துள்ளேன்.

17.09.1999.
கௌரவ மங்கள சமரவீர பா.உ. அவர்கள்
தபால் தந்தி தொலைத்தொடர்புகள் மற்றும் வெகுஜன ஊடகஅமைச்சர்
கொழும்பு 1.
மதிப்புக்குரிய அமைச்சர் அவர்களுக்கு
அரச பத்திரிகைகளில் செய்திகள் இருட்டடிப்பு
கடந்த 15.9.99 முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் இடம்பெற்ற விமானக் குண்டு வீச்சில் 22 அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்ட செய்தியும் 41பேர் படுகாயமடைந்த செய்தியும் தினகரன் மற்றும் னுயடைல நேறள பத்திரிகைகளில் இருட்டடிப்புச் செய்த விடயத்தை தங்கள் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகின்றேன்.
போரை நிறுத்தி சமாதானப் பேச்சுவார்த்தைகள் மூலம் இனப்பிரச்சனைக்குத் தீர்வு காணப் போவதாகக் கூறி ஆட்சிபீடமேறி 5 ஆண்டுகளுக்குப் பின்னரும் போரைத் தொடர்வதும் அப்பாவிப் பொதுமக்களைக் குண்டு வீசி அழிப்பதும் அவர்களது சொத்துக்கள் நாசமாகஇகப்படுவதும் போன்ற மனிதாபிமானமற்ற அநாகரிகமான செயல்கள் வன்மையாகக் கண்டிக்கப்படவேண்டிய கொடுரமான செயல்களாகும். பேளத்த தர்மவாதிகள் என தம்மை வர்ணிப்போர் செய்யும் செயல்களா இவை என வினா எழுப்பத் தோன்றுகிறது. நூம் இவற்றை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
இன்றைய 17.9.99 தினகரன் பத்திரிகையில் இராணுவப் பேச்சாளரின் செய்தி மறுப்பாக வெளியிடப்பட்டுள்ளது.
பத்திரிகைச் சுதந்திரம் பற்றி பெரிதாகத் தம்பட்ட மடிக்கும் அரசு தனது படையினரின் அடாவடித்தனத்தால் பாதிக்கப்படும் தமிழ் மக்களின் உணர்ச்சிகளை உதாசீனம் செய்வது மனவேதனையை அளிக்கிறது என்பதை மட்டம் தஙஇகளுக்கத் தெரிவிக்கின்றேன்.
சிங்கள அரசும்சரி பத்திரிகைகளும் சரி தமிழ்மக்கள்மீது டிபஇபடியான எண்ணங்களைக் கொண்டிருக்கின்றார்கள் என்பது உலகமறிந்த உண்மை.
அரச பத்திரிகைகளுடன் ஏனைய பத்திரிகைகளும் இவ்வாறே. இன்றைய ஐளடயனெ பத்திரிகையில் ஐஊசுஊயினது அறிக்கை முன்பக்கத்தில் இடம்பெற்றுள்ளதையும் குறிப்பிட விரும்புகின்றேன்.
தங்களுண்மையுள்ள
தங்க. முகுந்தன்.
பிரதிகள் கௌரவ எம் எல் ஏ எம் ஹஸ்புல்லா பா.உ. கௌரவ அனுர பிரியதர்சன யாப்பா பா.உ. பிரதி அமைச்சர்கள் தகவலுக்காக

No comments: